Time to Tips

பூச்சிவிரட்டி (அ) பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு ஏற்ற நேரம்

மாலை நேரம் தான் மருந்து தெளிப்பதற்கு மிகவும் சிறந்த நேரமாகும். அதாவது மாலை மூன்று மணிக்கு மேல், காலை நேரமாக இருந்தால் ஒன்பது மணிக்குள்ளாக முடித்துக்கொள்ள வேண்டும். எனினும் மாலை நேரமே சிறந்தது. காரணம் இரவு நேரம் முழுவதும் மருந்தின் வேகம் வயலில் இருக்கும். அது மறுநாள் காலை சூரிய வெப்பம் ஏறும் வரை தொடரும். காலை வேளையில் ஒன்பது மணிக்கு மேலாக காற்று வீசத் தொடங்கிவிடும்.

மருந்து நாம் எண்ணிய இடத்தில் விழாது காற்று வேகத்தில் போய்விடும். மேலும் அதிக வெப்பத்தால் மருந்து விரைவில் ஆவியாகி பயன்தராமல் போய்விடும். மருந்து அடிக்கும் நாளில் மாலை அல்லது இரவு மழைவரும் அறிகுறிகள் தெரிந்தால் அன்றைய தினம் மருந்து தெளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

1 year ago | [YT] | 8