VIDHURAN MEDIA

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பதாகையை வைத்ததற்கு திராவிட துந்துபிகள் கதறுகிறது இணையமெங்கும்..

உண்மையில், இதை என்றோ செய்திருக்க வேண்டும் விசிகே போன்ற கட்சிகள்..வெறும் மதுஒழிப்பு என்கிற புள்ளியில் மட்டுமே ராஜாஜியை உயர்த்திப் பிடிப்பது அறிவீனம்..தமிழகத்தில் மெய்யான சமூகநீதி உருவாக அரும்பாடுபட்டவர் ராஜாஜி அவர்கள்.

ஆலயநுழைவு, நிலச்சீர்த்திருத்தம், சமபந்தி போஜனம், பட்டியல் சமூகத்தினருக்கு அதிகாரப் பகிர்வு என்பதில் எல்லாம் தமிழகத்தில் ஒரு முன்னோடி என்றால் அது ராஜாஜி அவர்கள் மட்டுமே.அதை அரசியல் பிரதிபலன் இல்லாமல் சமூக இயக்கமாக முன்னெடுத்தார்.

மாகாண சுயாட்சி அடைந்து 1937 ல் மதராஸ் மாகாண முதல்வரான ராஜாஜி அவர்களின் அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த வி.ஐ முனியசாமிப்பிள்ளை பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது மதராஸ் மேயராகவும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிவசண்முகம்பிள்ளையே ஆக்கப்பட்டார்..

ருக்மணி லட்சுபதி அவர்களை துணை சபாநாயகராக அறிவித்தார்.முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தில் ஆங்கிலேய அரசால் தண்டனை பெற்ற பெண்மணியும் இவரே..

இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்த ராஜாஜியை புறக்கணிப்பதே அரசியல் அயோக்கியத்தனம்..இதை நீண்டகாலமாக செய்து வரும் தமிழக களத்தில் ராஜாஜி படத்தை விசிகே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை..ராஜாஜியோடு கூட்டணி வைத்து அதிகாரத்தை பிடிக்க தயங்காத திமுக, தற்போது விசிகவை விமர்சிப்பது கேவலமான அரசியல்.ஆகவே, இந்த திராவிட கூச்சலுக்கு பயந்து இதில் பின்வாங்காமல் விசிகே இருந்தால் மகிழ்ச்சியே.. - சுந்தர் ராஜ சோழன்

7 months ago | [YT] | 4