Deep Talks Tamil
உலகம் அளந்த பெருமைகள்எனக்கேதும் இல்லை.இமயத்தின் உச்சி மிதித்தசரிதமும் இல்லை.ஆனால்…என் மனதின் சரிபாதிக்கு,என் மொத்த ஆயுளையும்தாலி கட்டிய திமிர் ஒன்றுநெஞ்சுக்குள் உண்டு.அந்தத் திமிரின் திருநாள் இன்று!என் வார்த்தைகளுக்குஅவள் தந்தாள் உயிர்.என் மௌனங்களுக்குஅவள் தந்தாள் அர்த்தம்.Deep Talks Tamil என்பதுஎன் குரல் அல்ல;எனக்குள் அவள் விதைத்தநம்பிக்கையின் வேர்கள்ஆண்டுகள் ஆறுஅரை நொடியில் கரைந்தனவோ?காலதேவன் என் காதலுக்குப் பயந்துகடிகாரத்தை வேகமாய் சுற்றினானோ?ஆம்… இந்த ஆறு வருடப் பயணம்ஒரு பேருந்தின் ஜன்னலோரப்பயணம் போலத்தான்.ஆனால், ஒவ்வொரு நிமிடத்திலும்ஒரு யுகத்தைக் கடந்து வந்தேன்.அவள் பார்வையில் மூழ்கிநான் மூச்சுத் திணறிய நொடிகள்,என் ஆயுளின் ஆகச்சிறந்த வரிகள்.என் திருமண நாள்,நான் ஆணவமாய்க் கொண்டாடும்ஒரே அகிம்சைத் திருநாள்!#6thyearweddinganniversary #DK
3 weeks ago | [YT] | 932
Deep Talks Tamil
உலகம் அளந்த பெருமைகள்
எனக்கேதும் இல்லை.
இமயத்தின் உச்சி மிதித்த
சரிதமும் இல்லை.
ஆனால்…
என் மனதின் சரிபாதிக்கு,
என் மொத்த ஆயுளையும்
தாலி கட்டிய திமிர் ஒன்று
நெஞ்சுக்குள் உண்டு.
அந்தத் திமிரின் திருநாள் இன்று!
என் வார்த்தைகளுக்கு
அவள் தந்தாள் உயிர்.
என் மௌனங்களுக்கு
அவள் தந்தாள் அர்த்தம்.
Deep Talks Tamil என்பது
என் குரல் அல்ல;
எனக்குள் அவள் விதைத்த
நம்பிக்கையின் வேர்கள்
ஆண்டுகள் ஆறு
அரை நொடியில் கரைந்தனவோ?
காலதேவன் என் காதலுக்குப் பயந்து
கடிகாரத்தை வேகமாய் சுற்றினானோ?
ஆம்… இந்த ஆறு வருடப் பயணம்
ஒரு பேருந்தின் ஜன்னலோரப்
பயணம் போலத்தான்.
ஆனால், ஒவ்வொரு நிமிடத்திலும்
ஒரு யுகத்தைக் கடந்து வந்தேன்.
அவள் பார்வையில் மூழ்கி
நான் மூச்சுத் திணறிய நொடிகள்,
என் ஆயுளின் ஆகச்சிறந்த வரிகள்.
என் திருமண நாள்,
நான் ஆணவமாய்க் கொண்டாடும்
ஒரே அகிம்சைத் திருநாள்!
#6thyearweddinganniversary #DK
3 weeks ago | [YT] | 932