Jayapataka Swami Tamil

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜாவின் உடல் நிலை குறித்த அறிவிப்பு
முகாம்: ஹிராநந்தனி, சென்னை
செப்டம்பர் 12, 2023


ஹரே கிருஷ்ணா,
தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜாவின் அன்பான சீடர்கள் மற்றும் நலன் விரும்பிகளே!

எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!
எல்லா புகழும் குரு மகாராஜாவுக்கே


இன்று, 45 நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீல குரு மகராஜா நீர் நிலை சிகிச்சையை மீண்டும் தொடங்கினார், மேலும் 40 நாட்களுக்குப் பிறகு ஜன்மாஷ்டமி அன்று அவர் இஸ்கான் சென்னை கோவிலுக்குச் சென்றார்.

முதலில் தரிசனம் செய்ய மட்டுமே திட்டம் இருந்தது ஆனால் வழக்கம் போல் குரு மகராஜர் ஒரு குறுகிய சொற்ப்பொழிவு ஆற்ற முடிவு செய்தார். 15 நிமிடம் பேசிவிட்டு தனது இல்லத்துக்குத் திரும்பினார்.

குரு மகராஜர் தனது உடல் வலிமையின் அளவீடுகள் சீராக ஆனால் மெதுவாக முன்னேறுவதை நன்றாக உணர்கிறார்.

குரு மகராஜாவின் உடலின் கீழ் பாதியில் சுரந்திருந்தத நீர் தற்போது நீர் நிலை சிகிச்சையால் குறைந்துள்ளது.

சிறுநீரகம் தொடர்பான இரத்தப் பரிசோதனைகள் சில லேசான சரிவைக் காட்டியுள்ளன, ஆனால் அவை விரைவில் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

குரு மகராஜாவின் ஆக்ஸிஜன் அளவு இன்னும் எல்லையில் உள்ளது. அவரது இரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்து வருகிறது, இதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

குரு மகராஜாவின் உடல்நிலை விரைவில் குணமடைந்து அவர்
ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளைகளை தொடர்ந்து நிறைவேற்ற நீங்கள் அனைவரும் உங்கள் பிரார்த்தனைகளை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஜேபிஎஸ் மருத்துவ குழு மற்றும் ஜேபிஎஸ் சேவா குழு, சார்பில்

மஹாவராஹ தாஸ்

2 years ago | [YT] | 5



@manimegalai1877

Hare Krishna Guru Maharaj Kamalapathathukku Godana Nasgarankal Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

2 years ago | 0