LAW IS SUPREME (சட்டம் மேலானது)

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

ஒரு சொத்து குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

அவ்வாறு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை பெற்றவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய முடியுமா?

ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் உ. வி. மு. ச கட்டளை 21,விதி 97 ன் கீழ் அல்லது கட்டளை 21,விதி 98 மற்றும் 102 ன் கீழ் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது..உ. வி. மு. ச கட்டளை 21 விதி 102 ஆனது உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உரிமை மாற்றம் பெற்றவர் இந்த பிரிவின் கீழ் எந்த பரிகாரமும் கோர முடியாது என்று கூறுகிறது.

N. S. S. நாராயண சர்மா மற்றும் பலர் Vs M/s கோல்டு ஸ்டோன் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட் (2001-4-CTC-755) மற்றும் பானுமதி (எ) கருணையம்மாள் Vs A. P. அர்த்தநாரி மற்றும் பலர் (2002-5-CTC-483) மற்றும் உச்சநீதிமன்றம் "உஷா சிம்கா Vs டைனாராம் (2008-7-SCC-144)" ஆகிய வழக்குகளில், ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதில் தீரப்பாணையும் வழங்கப்பட்டிருந்தால், அந்த வழக்கு சொத்து குறித்து ஏதேனும் உரிமை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை அந்த சொத்தை வாங்கியவர்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு தடையை உ. வி. மு. ச கட்டளை 21,விதி 102 ஏற்படுத்தும் என்று தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கினால் அது அந்த தீர்ப்பை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் ஏதும் செய்ய முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

4 months ago | [YT] | 83



@irugurashok637

மதிப்பிற்குரிய வழக்கறிஞர் வணக்கம் வாழ்த்துக்கள் சமூகக் கருவோடு நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்டு உள்ளீர்

2 months ago | 0

@karunagaran2384

இதுபோன்ற கருத்துகள் எங்களுக்கு அடிப்படை அறிவை வளர்க்கிறது. நன்றி சார்

4 months ago | 3

@mehran786my2

பயனுள்ள நல்ல அருமையான தகவல்கள். வாழ்த்துகள்

4 months ago | 0

@sathiyapriyathulasiraman3585

அண்ணே வணக்கம் எனக்கு சொந்த ஊரு உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் எனக்கு ஒரு விளக்கம் தேவை பதிவுத்துறை மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு பத்திர பதிவை நிறுத்தி வைத்துள்ள காலங்களில் நோட்டரி பப்ளிக் மூலம் கிரையம பத்திரம் எழுதியது செல்லுமா

2 months ago (edited) | 0