single reel

முடிந்தால் படியுங்கள்👇
நான் அகவணக்கம் செலுத்திக்கொண்டு இருந்தேன் அப்போது ஒருவர் வந்தார் தம்பி அந்த போட்டோவில் இருக்கும் பெடியனை தெரியுமா என்று கேட்டார் அதற்கு நான் இதில் படுகொலை செய்யப்பட்ட ஒருவர் என்று கூறினேன் அதற்கு அவர் ஓம் படுகொலை செய்தார்கள் ஆனால் அதை அப்படி கூறிவிட முடியாது.

எனது பெரியம்மாவையும் எனது தங்கையையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்றார்கள் பின்பு இந்த சிறுவனை உயிரோடு ஒற்றைகாலை வாய்க்கால் கானுக்குல் புதைத்துக்கொண்டு மற்றய காலை இழுத்து பிழந்து உடல்களை இரண்டாக பிரித்து கொலை செய்தார்கள் என்றார்.

நாங்கள் படுகொலை என்று சாதாரணமாக கடந்து போகமுடியாது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான பொது மக்களைக் கொலை செய்த நினைவு நாள் இன்று

அமைதி காக்கும் படை என்ற முகமூடியுடன் வந்த பாரத தேசத்தை கைகூப்பி தோரணம் கட்டி வரவேற்ற அதே மக்களை இந்திய இலங்கை இராணுவம் சேர்ந்து நடுவீதியிலும் இரயில் தண்டவாளத்திலும் படுக்க வைத்து உயிருடன் கவச வாகனங்களால் ஏற்றி கொலை செய்தது வீதியால் சென்றவர்களை மறித்து சுட்டும் அடித்தும் கொடூரமாக கொலை செய்தது.

தேசிய தலைவர் கூறியது படி இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி வைத்ததுதான் மிகப்பெரிய அவலங்களை எமது மக்கள் சந்தித்தார்கள் என்று.

இன்று ஸ்ரீலங்கா இந்திய கூட்டுப்படையால் வன்புணர்வு செய்யப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இழந்த வரலாறுகளை எமது சந்ததியிற்கு சொல்லிக்கொடுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் மறந்துவிட்டு அவர்களும் சிங்களவனை தலைவனாக கொண்டாடுவார்கள்.

வரலாற்றை படியுங்கள்
வரலாற்றை படையுங்கள்
வராற்றை மறந்த இனம் வாழாது
வரலாறே எங்கள் வழிகாட்டி.

செந் தமிழன்

2 months ago | [YT] | 9