திருக்கோவில்கள் YouTube சேனல், 01-Aug-2022 அன்று Vaikal Creation என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஆலய தரிசனம், விழாக்கள், பயணங்கள், கலாசாரம், பாரம்பரியம், கல்வி மற்றும் பொழுது போக்கு சம்பந்தமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.




Vaikal Creation

அனைத்து மக்களின் நல்ல உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுத்து, யாருடைய மனதும் புண்படாத படி நடந்து , அனைவரையும் அரவணைத்து அதே சமயத்தில் அவரவருக்குரிய நல்ல நம்பிக்கைகளையும் தர்மத்தையும் முறையாக கடைபிடித்து, நல்ல வாழ்க்கை வாழ்வதே உண்மையான ஆன்மீகம் காட்டும் வழி! வாழ்க பாரதம். வளர்க நம் ஒற்றுமை!

1 year ago (edited) | [YT] | 12

Vaikal Creation

தினமலரில் (16-02-2024) செய்தி.

அனைவருக்கும் வணக்கம்

உண்மையான ஆன்மீக வாதிகள் எல்லோரையும் மதிக்கின்றனர். பிறரின் நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுத்து யாரும் யாரையும் நிந்திக்காமல் ஒற்றுமையாக வாழ்வதே சிறப்பு.

1 year ago | [YT] | 9

Vaikal Creation

முஸ்லீம் சகோதரர்களை பாராட்டலாமே !. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

1 year ago | [YT] | 20

Vaikal Creation

அனைவருக்கும் வணக்கம்

தினமலரில் இன்று (23-08-2023) வந்த செய்தி.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மணலோடை தெருவில் நடந்த கும்பாபிஷேக விழாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அப்பகுதி இஸ்லாமியர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் சார்பில் ஒரு கடிகாரத்தையும் அன்பளிப்பாக கொடுத்து இருக்கின்றனர். நம்முடைய சேனல் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றோம் !

சிந்தனைக்கு சில விசயங்கள் !
------------------------------------------------------------

நம் மொழி, இனம், நாடு , மதம் என்று சில விசயங்களை நம் பிறப்பு தீர்மானிக்கிறது. அதன் பிறகு வாழ்க்கையும் சூழலும் அதில் சிலவற்றை மாற்றவும் செய்கிறது !

எது எப்படி இருந்தாலும் !

நாம் ஒவ்வொருவரும் அவரவர் பின்பற்றும் விசயங்களையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நேசிப்போம்! அதே சமயத்தில் எல்லோருடைய நல்ல செயல்பாடுகளுக்கும் மரியாதை கொடுப்போம் !

ஒவ்வொருவரும் அவரவர் கலாச்சாரமும் பண்பாடும் உயர்ந்தது என்று பெருமை கொள்வதிலும் அதன்படி நடப்பதிலும் தவறில்லை அதே சமயத்தில் மற்றைவைகளை தாழ்ந்தது என்று சிறுமைப் படுத்தும் எண்ணத்தையும், செயலையும் அறவே தவிர்ப்போம்! அப்படி செய்பவர்களையும் தவிர்ப்போம் !

என்னுடையது மட்டுமே உயர்ந்தது என்ற அகங்காரமும் தேவையில்லை ! அது போல் என்னுடையது தாழ்ந்தது என்ற தாழ்வு மனப்பான்மையும் தேவையில்லை !

ஒற்றுமையாக எல்லோரும் அன்புடனும், மரியாதையுடனும் வாழ்வோம் !

வாழ்க இந்தியா ! வாழ்க நம் மக்கள் !

1 year ago | [YT] | 7