politicals,news.live,and entertainment,cinima,motors,travelling,spotrs,vlogs,tv,arasiyal,அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
விவாதத்திற்கு நேரமில்லை;சினிமாவுக்கு நேரமா?” – முதல்வரை கோவையில் கடுமையாக சாடிய தமிழிசை சவுந்தர்ராஜன்..
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், “நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தால் நேரமில்லை என கூறும் முதல்வருக்கு, சினிமா பார்ப்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
பேராசிரியர்கள் தேர்வில் திமுக தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் நடைமுறை பாரபட்சமானது எனவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். பெண்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றாலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தற்போது “கலாச்சார போர்” நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்துள்ளதாகவும் கூறினார். ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டண உயர்வை குறித்து பேசுகையில், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும் ஆம்னி பேருந்து கட்டணம் மூண்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதன்மையாக கவனிக்க வேண்டும் என்றார்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்படுவதாகவும், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார். “தமிழை கொண்டாடுவது பாஜக; தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு” என அவர் விமர்சனம் செய்தார்.
ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் திமுக சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இது வெளிப்படையான பாரபட்சம் எனக் கண்டித்தார். பெண்கள் மாநாடு நடத்தும் அரசு, அதே நேரத்தில் செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டின் கடன் சுமையை சுட்டிக்காட்டிய அவர், ஒருவருக்கு ரூ.1.27 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும், மாதம் ரூ.8,000 வட்டி சுமை ஏற்படுவதாகவும் கூறினார். ரூ.1,000 உதவித் தொகை வழங்கி பெரிய கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது “திராவிட மாடல் ஆட்சி” என விமர்சித்தார்.
மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்களை அவ்வாறு அழைப்பது தவறு என்றும் கூறினார். வலதுசாரி கருத்துகள் தமிழகத்தில் விரிவடைந்து வருவதாகவும், இடதுசாரிகளுக்கு இனி இடமில்லை என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில், தற்போதைய திமுக அரசு பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, பொருளாதாரம், கல்வி, அரசு ஊழியர் நலன் உள்ளிட்ட பல துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் கடுமையாக விமர்சித்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் உருவாகி வருவதாக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றிருந்த தமிழக வெற்றி கழகத் தலைவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி அண்டை நாடுகளும் உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்திருந்ததாக தெரிவித்தார். இதுவரை மலேசியாவில் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ரோட் ஷோ அனுமதி, இம்முறை விஜய்க்கு வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் விஜய் வரலாற்று நாயகனாக பவனி வருவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுவதாகவும் கூறினார்.
குறிப்பாக 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு தமது தலைமை அவசியம் என ஒருமனதாக குரல் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மக்கள் அலைமோதும் காட்சிகள், 1972-ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் 1988-ல் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை மக்கள் வரவேற்றதை நினைவுபடுத்துவதாகவும், தற்போது தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் தாம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்துடன் இணைய வேண்டும் என்ற கருத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த கருத்துகள் இதுவரை தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும், வந்தால் அதற்கேற்ற பதில் அளிக்கப்படும் என்றும் கூறினார். “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என்ற திருமாவளவனின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாக கூறப்படும் சீமான், இலங்கையில் விருந்து உண்டு பரிசு பெற்ற காலத்தை மறக்கக் கூடாது என்றும் விமர்சித்தார்.
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். புதிய இயக்கமாக தொடங்கியுள்ள கட்சி என்பதால், மக்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விளக்கினார்.
அதிமுக, பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு தெளிவானது என்றும், தம்மை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் தரப்பினரே கூட்டணியில் இணைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சனம் செய்யவில்லை என்ற திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்த அவர், திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது எடுத்த நிலைப்பாட்டை திருமாவளவனே விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் பொங்கலுக்கு முன் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து விவரங்களும் வெளிப்படும் என்றும் தெரிவித்தார். புதிய 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து, அனைவரும் வாழ வேண்டும், அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.
திமுகவை எதிர்க்கும் அளவிற்கு பாஜகவை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விக்கு, ஈரோடு பொதுக்கூட்டத்தில் மக்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் கொள்கை ரீதியான எதிர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு குரல் கொடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் GEM Cancer Institute & GEM Hospital, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து GEM மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பழனிவேலு, மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் சாய் தர்ஷினி, மற்றும் HIPEC நிபுணர் டாக்டர் பரத் ரங்கராஜன் ஆகியோர் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களைச் சந்தித்து விரிவாக விளக்கினர்.
பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் என்பது மேம்பட்ட கருப்பை, குடல் மற்றும் வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் கடுமையான நிலையாகும். இதற்கு முன், இந்த நிலையில் கீமோதெரபி மற்றும் திறந்த (Open) அறுவை சிகிச்சைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததாக டாக்டர் பழனிவேலு தெரிவித்தார். ஆனால், பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் அதிக ரத்த இழப்பு, நீண்ட மீட்பு காலம் மற்றும் அதிக சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இன்றைய நவீன லேபரஸ்கோபிக் (Keyhole) தொழில்நுட்பம், உயர் தெளிவு பெரிதாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ICG ஃப்ளூரசென்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன், வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியத்தையும் மிகத் துல்லியமாக அகற்ற முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை ஐந்து நோயாளிகளில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி பெற்ற பின்னர், லேபரஸ்கோபிக் சைட்டோரெடக்டிவ் சர்ஜரி, ராடிக்கல் ஹிஸ்டெரெக்டமி மற்றும் முழுமையான பெரிட்டோனெக்டமி ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சில நோயாளிகளுக்கு, இதனுடன் லேபரஸ்கோபிக் HIPEC முறையும் வழங்கப்பட்டது.
இந்த குறைந்த துளை அறுவை சிகிச்சை முறையால், விரைவான மீட்பு, குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது. இந்த சிகிச்சை, மேம்பட்ட கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும் மேம்பட்ட சிகிச்சை வாய்ப்பையும் வழங்குகிறது என அவர்கள் கூறினர்.
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை!
கோயம்புத்தூரின் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறியதாவது :
கடந்த 9 ஆண்டுகளாக 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுவருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருவதாகவும் தெரிவித்தனர்.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பாதகங்களை குவித்துள்ளனர்.
ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வில் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், ஈக்வைன் ட்ரீம்ஸ் வீரர்கள் தங்களது நுட்பமான துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். மிக இளம் வயதினராக இருந்தபோதிலும், மைதானத்தில் அவர்கள் காட்டிய தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் அவர்கள் போட்டியை எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டது.
இவர்களின் இந்த வெற்றி, தனிப்பட்ட திறமையை மட்டுமின்றி, ஈக்வைன் ட்ரீம்ஸ் வழங்கிய கடுமையான பயிற்சி மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை வீரர்களின் அர்ப்பணிப்பு, அதிகாலை நேரப் பயிற்சிகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குழுவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், தமிழக இளம் விளையாட்டு வீரர்களிடையே குதிரையேற்ற விளையாட்டு அதிகரித்து வருவதையும், தேசிய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு கூடி வருவதையும் இந்தப் பதக்கங்கள் பறைசாற்றுகின்றன.
இந்த வெற்றியின் மூலம் ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் எதிர்காலப் போட்டிகளுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய சக்தி பாலாஜி மற்றும் பாரதி, குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவதிலும், பதக்கங்களை குவிப்பதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை ஈக்வைன் ட்ரீம்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருவதாக அவர்கள் கூறினர்.
கோவை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவக்கம்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானத்தை ரெட் கிராஸ் சொசைட்டி சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி துவக்கி வைத்தார்..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக (DANA) தானா ரெட் கிராஸ் இரத்த சேகரிப்பு மையம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் அண்மையில் துவங்கப்பட்டது..
DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் மிக அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்களை கொண்டு , இரத்தம் சேகரிக்கப்பட்டு, அதனை பாதுகாப்பாக சேமித்து வைத்து பல மருத்துவமனைகளின் இரத்த விநியோகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக துவங்கப்பட்டுள்ளது..
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் இலாப நோக்கற்ற அடிப்படையில் நோயாளிகளுக்கு இரத்தத்தை DANA (தானா) சேகரிப்பு மையம் வழங்க உள்ளது..
இந்நிலையில் DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவங்கப்பட்டது..
இதற்கான துவக்க நிகழ்ச்சியில், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்பெர்சன் இரத்த தானத்தை துவக்கி வைத்தார்..
இதில் அவருடன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மோகன் சங்கர்,பொருளாளர் கலாவதி, செயலாளர் பூங்கோதை உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
முதல் நாளாக துவங்கப்பட்ட இரத்த தான நிகழ்வில், கோவை ஜி.ஆர்.ஜி.கல்வி நிறுவனம், சந்திரா குழும நிறுவனம், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி, லட்சுமி கிரஹா எண்டர்பிரைசஸ்,சந்திரா ஹுண்டாய் மற்றும் சந்திரா ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்..
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ள இந்த இரத்த மையத்தில், ஒவ்வொரு மாதமும் சுமார் 500 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம்
கூட்டமைப்பின் தேசிய மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இதில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வரவேற்பு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 2026-27 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜே.ஆர். அரங்கில் நடைபெற்றது...
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஹென்றி மற்றும் தேசிய ஆலோசனை குழு தலைவர் நேரு நகர் நந்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எட்டாவது நிர்வாக தேர்வாக நடைபெற்ற இதில்,தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் தலைமை தாங்கினார்..
தேசிய இணை செயலாளர் கண்ணன் என்கிற பாலசண்முகம் மற்றும் தேசிய துணை செயலாளர் பாலசுப்ரமணி,ஆலோசனை குழு உறுப்பினர் நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
முன்னதாக ஃபெயிரா கூட்டமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் அறிமுகம் செய்து வைத்தார்..
தொடர்ந்து நிகழ்ச்சியில் ,ஃபெயிரா கூட்டமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து புதிதாக இணைந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பேசினார்..
இதில், ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வரும் தொழில் துறையினருக்கு ஃபெயிரா எப்போதும் உடன் இருக்கும் என உறுதி தெரிவித்தார்..
தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கையேடு வழங்கப்பட்டது…
கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக மாவட்ட தலைவர் அந்தோணி சாமி,பொது செயலாளர் மெடிக்கல் நாராயணன்,மாவட்ட செயல் செயலாளர் ஜெகந்நாதன் ,செயலாளர் மாவட்ட வளர்ச்சி சண்முகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...
நிகழ்ச்சியை ஃபெயிரா கூட்டமைப்பின் ஆர்க்கிடெக்ட் மற்றும் பொறியாளர் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறியாளர் தேஜஸ்வினி தொகுத்து வழங்கினார்..
கூட்டத்தில் மாநில துணை தலைவர் சுரேஷ்குமார்,மாநில செயற்குழு தலைவர் ராமநாதன்,கோவை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,கனலி என்கிற சுப்பு செந்தில் குமார் உட்பட தேசிய,மாநில,மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் வள்ளி ஜோதிட அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா
இராமநாதபுரம் மாவட்டம், ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வள்ளி ஜோதிட அறக்கட்டளை நிறுவனரும், ஸ்ரீ வல்லபை நகர் குடியிருப்போர் சங்க தலைவருமான டாக்டர். தனசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வள்ளி ஜோதிட அறக்கட்டளை ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டினர். ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் உள்ள 9 தெருக்களிலும் முதற்கட்டமாக 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
வள்ளி ஜோதிட அறக்கட்டளையும், ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்களும் இணைந்து முதற்கட்டமாக இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், இனி, இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை நகராமாக மாற்றுவதே எங்கள் பணி என்று டாக்டர். தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த மரக்கன்று நடும் விழாவில், சங்கத்தின் பொருளாளர் சங்கு குமார், துணைத்தலைவர் சேகர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 140 ஆவது அகில இந்திய காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாட்டம்
கோவை காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவனில் காங்கிரஸ் கட்சியின் 140 ஆவது அகில இந்திய காங்கிரஸ் நிறுவன தினமான இன்று மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு அம்பேத்கர் காமராஜர் அன்னை இந்திரா காந்தி ஆகிய புகைப்படங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுகாங்கிரஸ் மாநகர மாவட்ட கமிட்டி தலைவர் பீளமேடு விஜயகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றி அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் புகழ் பாடப்பட்டது பின்னர் இனிப்புகளை வழங்கினார் அதன் பின்னர் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பாலு யாதவ் என்கின்ற பாலகிருஷ்ணன். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ். சாய் சாதிக். ராம்கி. ராம நாகராஜன். பலர் விருப்ப மனுவை கொடுத்தனர் இதில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் எம் என் கந்தசாமி எக்ஸ் எம்எல்ஏ.ஐ என் டி சி தலைவர் கோவை செல்வம். பொருளாளர் சௌந்தர குமார். பி வி மணி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிக ள் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கலந்து கொண்டார்கள்
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த எம் என் கந்தசாமி கோவையில் ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை உள்ள சி சுப்பிரமணியம் மேம்பாலத்தின் பெயரை தமிழக முதல்வர் அறிவித்ததை கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி வரவேற்கின்றது என்று கூறினார்
சங்கர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாகரன் பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி ராம்கி பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் ராஜமாணிக்கம் பேக்கரி முருகேசன் ஈஸ்வரமூர்த்தி பாலு யாதவ் ஜெர்ரி லூயிஸ் ஜிகே கோட்டை செல்லப்பா பாலச்சந்தர் கிருஷ்ணசாமி ஜனார்த்தனன் சௌந்தர்ராஜன் மோகன்ராஜ் தனபால் சின்னு ராமகிருஷ்ணன் வி வி சிவா பறக்கும்படை ராஜ்குமார் பிரபு இளைஞர் காங்கிரஸ் மணிகண்டன் காமராஜ் மாணிக்கம் பிரகாஷ் ஜோசப் ஜீவானந்தம் குமார் மணிகண்டன் காமராஜ்துல்லா குழந்தைவேலு ராமச்சந்திரன் வசந்தமணி ரவி
kalam tv
விவாதத்திற்கு நேரமில்லை;சினிமாவுக்கு நேரமா?” – முதல்வரை கோவையில் கடுமையாக சாடிய தமிழிசை சவுந்தர்ராஜன்..
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், “நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தால் நேரமில்லை என கூறும் முதல்வருக்கு, சினிமா பார்ப்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
பேராசிரியர்கள் தேர்வில் திமுக தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் நடைமுறை பாரபட்சமானது எனவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். பெண்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றாலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தற்போது “கலாச்சார போர்” நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்துள்ளதாகவும் கூறினார். ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டண உயர்வை குறித்து பேசுகையில், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும் ஆம்னி பேருந்து கட்டணம் மூண்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதன்மையாக கவனிக்க வேண்டும் என்றார்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்படுவதாகவும், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார். “தமிழை கொண்டாடுவது பாஜக; தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு” என அவர் விமர்சனம் செய்தார்.
ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் திமுக சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இது வெளிப்படையான பாரபட்சம் எனக் கண்டித்தார். பெண்கள் மாநாடு நடத்தும் அரசு, அதே நேரத்தில் செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டின் கடன் சுமையை சுட்டிக்காட்டிய அவர், ஒருவருக்கு ரூ.1.27 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும், மாதம் ரூ.8,000 வட்டி சுமை ஏற்படுவதாகவும் கூறினார். ரூ.1,000 உதவித் தொகை வழங்கி பெரிய கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது “திராவிட மாடல் ஆட்சி” என விமர்சித்தார்.
மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்களை அவ்வாறு அழைப்பது தவறு என்றும் கூறினார். வலதுசாரி கருத்துகள் தமிழகத்தில் விரிவடைந்து வருவதாகவும், இடதுசாரிகளுக்கு இனி இடமில்லை என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில், தற்போதைய திமுக அரசு பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, பொருளாதாரம், கல்வி, அரசு ஊழியர் நலன் உள்ளிட்ட பல துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் கடுமையாக விமர்சித்தார்.
16 hours ago | [YT] | 0
View 0 replies
kalam tv
கோவை
எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் உருவாகி வருவதாக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றிருந்த தமிழக வெற்றி கழகத் தலைவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி அண்டை நாடுகளும் உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்திருந்ததாக தெரிவித்தார். இதுவரை மலேசியாவில் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ரோட் ஷோ அனுமதி, இம்முறை விஜய்க்கு வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் விஜய் வரலாற்று நாயகனாக பவனி வருவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுவதாகவும் கூறினார்.
குறிப்பாக 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு தமது தலைமை அவசியம் என ஒருமனதாக குரல் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மக்கள் அலைமோதும் காட்சிகள், 1972-ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் 1988-ல் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை மக்கள் வரவேற்றதை நினைவுபடுத்துவதாகவும், தற்போது தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் தாம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்துடன் இணைய வேண்டும் என்ற கருத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த கருத்துகள் இதுவரை தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும், வந்தால் அதற்கேற்ற பதில் அளிக்கப்படும் என்றும் கூறினார். “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என்ற திருமாவளவனின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாக கூறப்படும் சீமான், இலங்கையில் விருந்து உண்டு பரிசு பெற்ற காலத்தை மறக்கக் கூடாது என்றும் விமர்சித்தார்.
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். புதிய இயக்கமாக தொடங்கியுள்ள கட்சி என்பதால், மக்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விளக்கினார்.
அதிமுக, பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு தெளிவானது என்றும், தம்மை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் தரப்பினரே கூட்டணியில் இணைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சனம் செய்யவில்லை என்ற திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்த அவர், திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது எடுத்த நிலைப்பாட்டை திருமாவளவனே விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் பொங்கலுக்கு முன் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து விவரங்களும் வெளிப்படும் என்றும் தெரிவித்தார். புதிய 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து, அனைவரும் வாழ வேண்டும், அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.
திமுகவை எதிர்க்கும் அளவிற்கு பாஜகவை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விக்கு, ஈரோடு பொதுக்கூட்டத்தில் மக்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் கொள்கை ரீதியான எதிர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு குரல் கொடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
16 hours ago | [YT] | 0
View 0 replies
kalam tv
கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் GEM Cancer Institute & GEM Hospital, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து GEM மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பழனிவேலு, மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் சாய் தர்ஷினி, மற்றும் HIPEC நிபுணர் டாக்டர் பரத் ரங்கராஜன் ஆகியோர் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களைச் சந்தித்து விரிவாக விளக்கினர்.
பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் என்பது மேம்பட்ட கருப்பை, குடல் மற்றும் வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் கடுமையான நிலையாகும். இதற்கு முன், இந்த நிலையில் கீமோதெரபி மற்றும் திறந்த (Open) அறுவை சிகிச்சைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததாக டாக்டர் பழனிவேலு தெரிவித்தார். ஆனால், பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் அதிக ரத்த இழப்பு, நீண்ட மீட்பு காலம் மற்றும் அதிக சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இன்றைய நவீன லேபரஸ்கோபிக் (Keyhole) தொழில்நுட்பம், உயர் தெளிவு பெரிதாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ICG ஃப்ளூரசென்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன், வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியத்தையும் மிகத் துல்லியமாக அகற்ற முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை ஐந்து நோயாளிகளில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி பெற்ற பின்னர், லேபரஸ்கோபிக் சைட்டோரெடக்டிவ் சர்ஜரி, ராடிக்கல் ஹிஸ்டெரெக்டமி மற்றும் முழுமையான பெரிட்டோனெக்டமி ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சில நோயாளிகளுக்கு, இதனுடன் லேபரஸ்கோபிக் HIPEC முறையும் வழங்கப்பட்டது.
இந்த குறைந்த துளை அறுவை சிகிச்சை முறையால், விரைவான மீட்பு, குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது. இந்த சிகிச்சை, மேம்பட்ட கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும் மேம்பட்ட சிகிச்சை வாய்ப்பையும் வழங்குகிறது என அவர்கள் கூறினர்.
17 hours ago | [YT] | 0
View 0 replies
kalam tv
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை!
கோயம்புத்தூரின் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறியதாவது :
கடந்த 9 ஆண்டுகளாக 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுவருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருவதாகவும் தெரிவித்தனர்.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பாதகங்களை குவித்துள்ளனர்.
ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வில் 'ஈக்வைன் ட்ரீம்ஸ்' மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், ஈக்வைன் ட்ரீம்ஸ் வீரர்கள் தங்களது நுட்பமான துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
மிக இளம் வயதினராக இருந்தபோதிலும், மைதானத்தில் அவர்கள் காட்டிய தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு உணர்வுடன் அவர்கள் போட்டியை எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டது.
இவர்களின் இந்த வெற்றி, தனிப்பட்ட திறமையை மட்டுமின்றி, ஈக்வைன் ட்ரீம்ஸ் வழங்கிய கடுமையான பயிற்சி மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை வீரர்களின் அர்ப்பணிப்பு, அதிகாலை நேரப் பயிற்சிகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குழுவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், தமிழக இளம் விளையாட்டு வீரர்களிடையே குதிரையேற்ற விளையாட்டு அதிகரித்து வருவதையும், தேசிய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு கூடி வருவதையும் இந்தப் பதக்கங்கள் பறைசாற்றுகின்றன.
இந்த வெற்றியின் மூலம் ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் எதிர்காலப் போட்டிகளுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய சக்தி பாலாஜி மற்றும் பாரதி, குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவதிலும், பதக்கங்களை குவிப்பதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை ஈக்வைன் ட்ரீம்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருவதாக அவர்கள் கூறினர்.
17 hours ago | [YT] | 0
View 0 replies
kalam tv
கோவை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவக்கம்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானத்தை ரெட் கிராஸ் சொசைட்டி சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி துவக்கி வைத்தார்..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக (DANA) தானா ரெட் கிராஸ் இரத்த சேகரிப்பு மையம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் அண்மையில் துவங்கப்பட்டது..
DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் மிக அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்களை கொண்டு , இரத்தம் சேகரிக்கப்பட்டு,
அதனை பாதுகாப்பாக சேமித்து வைத்து பல மருத்துவமனைகளின் இரத்த விநியோகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக துவங்கப்பட்டுள்ளது..
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் இலாப நோக்கற்ற அடிப்படையில் நோயாளிகளுக்கு இரத்தத்தை DANA (தானா) சேகரிப்பு மையம் வழங்க உள்ளது..
இந்நிலையில் DANA (தானா) இரத்த சேகரிப்பு மையத்தில் இரத்த தானம் துவங்கப்பட்டது..
இதற்கான துவக்க நிகழ்ச்சியில், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்பெர்சன் இரத்த தானத்தை துவக்கி வைத்தார்..
இதில் அவருடன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மோகன் சங்கர்,பொருளாளர் கலாவதி, செயலாளர் பூங்கோதை உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
முதல் நாளாக துவங்கப்பட்ட இரத்த தான நிகழ்வில், கோவை ஜி.ஆர்.ஜி.கல்வி நிறுவனம், சந்திரா குழும நிறுவனம், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி, லட்சுமி கிரஹா எண்டர்பிரைசஸ்,சந்திரா ஹுண்டாய் மற்றும் சந்திரா ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்..
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி வளாகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ள இந்த இரத்த மையத்தில், ஒவ்வொரு மாதமும் சுமார் 500 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
17 hours ago | [YT] | 0
View 0 replies
kalam tv
https://youtu.be/Pz4wvs4x8Y8
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம்
கூட்டமைப்பின் தேசிய மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இதில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வரவேற்பு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 2026-27 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜே.ஆர். அரங்கில் நடைபெற்றது...
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஹென்றி மற்றும் தேசிய ஆலோசனை குழு தலைவர் நேரு நகர் நந்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எட்டாவது நிர்வாக தேர்வாக நடைபெற்ற இதில்,தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் தலைமை தாங்கினார்..
தேசிய இணை செயலாளர் கண்ணன் என்கிற பாலசண்முகம் மற்றும் தேசிய துணை செயலாளர் பாலசுப்ரமணி,ஆலோசனை குழு உறுப்பினர் நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
முன்னதாக ஃபெயிரா கூட்டமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் அறிமுகம் செய்து வைத்தார்..
தொடர்ந்து நிகழ்ச்சியில் ,ஃபெயிரா கூட்டமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து புதிதாக இணைந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பேசினார்..
இதில், ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வரும் தொழில் துறையினருக்கு ஃபெயிரா எப்போதும் உடன் இருக்கும் என உறுதி தெரிவித்தார்..
தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கையேடு வழங்கப்பட்டது…
கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக மாவட்ட தலைவர் அந்தோணி சாமி,பொது செயலாளர் மெடிக்கல் நாராயணன்,மாவட்ட செயல் செயலாளர் ஜெகந்நாதன் ,செயலாளர் மாவட்ட வளர்ச்சி சண்முகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...
நிகழ்ச்சியை ஃபெயிரா கூட்டமைப்பின் ஆர்க்கிடெக்ட் மற்றும் பொறியாளர் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறியாளர் தேஜஸ்வினி தொகுத்து வழங்கினார்..
கூட்டத்தில் மாநில துணை தலைவர் சுரேஷ்குமார்,மாநில செயற்குழு தலைவர் ராமநாதன்,கோவை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,கனலி என்கிற சுப்பு செந்தில் குமார்
உட்பட தேசிய,மாநில,மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
1 day ago | [YT] | 0

https://youtu.be/wzV3fHBgctI
இராமநாதபுரம் மாவட்டத்தில் வள்ளி ஜோதிட அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா
இராமநாதபுரம் மாவட்டம், ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வள்ளி ஜோதிட அறக்கட்டளை நிறுவனரும், ஸ்ரீ வல்லபை நகர் குடியிருப்போர் சங்க தலைவருமான டாக்டர். தனசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வள்ளி ஜோதிட அறக்கட்டளை ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டினர். ஸ்ரீ வல்லபை நகர் பகுதியில் உள்ள 9 தெருக்களிலும் முதற்கட்டமாக 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
வள்ளி ஜோதிட அறக்கட்டளையும், ஸ்ரீ வல்லபை நகர் கிராம மக்களும் இணைந்து முதற்கட்டமாக இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், இனி, இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை நகராமாக மாற்றுவதே எங்கள் பணி என்று டாக்டர். தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த மரக்கன்று நடும் விழாவில், சங்கத்தின் பொருளாளர் சங்கு குமார், துணைத்தலைவர் சேகர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
2 days ago | [YT] | 0

https://youtu.be/_mCwNqgNIhQ
கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 140 ஆவது அகில இந்திய காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாட்டம்
கோவை காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவனில் காங்கிரஸ் கட்சியின் 140 ஆவது அகில இந்திய காங்கிரஸ் நிறுவன தினமான இன்று மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு அம்பேத்கர் காமராஜர் அன்னை இந்திரா காந்தி ஆகிய புகைப்படங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுகாங்கிரஸ் மாநகர மாவட்ட கமிட்டி தலைவர் பீளமேடு விஜயகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றி அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் புகழ் பாடப்பட்டது பின்னர் இனிப்புகளை வழங்கினார் அதன் பின்னர் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பாலு யாதவ் என்கின்ற பாலகிருஷ்ணன். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ். சாய் சாதிக். ராம்கி. ராம நாகராஜன். பலர் விருப்ப மனுவை கொடுத்தனர் இதில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் எம் என் கந்தசாமி எக்ஸ் எம்எல்ஏ.ஐ என் டி சி தலைவர் கோவை செல்வம். பொருளாளர் சௌந்தர குமார். பி வி மணி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிக ள் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கலந்து கொண்டார்கள்
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த எம் என் கந்தசாமி கோவையில் ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை உள்ள சி சுப்பிரமணியம் மேம்பாலத்தின் பெயரை தமிழக முதல்வர் அறிவித்ததை கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி வரவேற்கின்றது என்று கூறினார்
சங்கர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாகரன் பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி ராம்கி பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் ராஜமாணிக்கம் பேக்கரி முருகேசன் ஈஸ்வரமூர்த்தி பாலு யாதவ் ஜெர்ரி லூயிஸ் ஜிகே கோட்டை செல்லப்பா பாலச்சந்தர் கிருஷ்ணசாமி ஜனார்த்தனன் சௌந்தர்ராஜன் மோகன்ராஜ் தனபால் சின்னு ராமகிருஷ்ணன்
வி வி சிவா பறக்கும்படை ராஜ்குமார் பிரபு இளைஞர் காங்கிரஸ் மணிகண்டன் காமராஜ் மாணிக்கம் பிரகாஷ் ஜோசப் ஜீவானந்தம் குமார் மணிகண்டன் காமராஜ்துல்லா குழந்தைவேலு ராமச்சந்திரன் வசந்தமணி ரவி
2 days ago | [YT] | 0
View 0 replies
Load more