தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த விருந்தோம்பல், பழக்க வழக்கம், கடவுள் வழிபாடு, பாரம்பரிய மருந்துவம், விவசாயம் உள்ளிட்ட மாண்புகள் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் காரணமாக இன்று மதிப்பிழந்து நிற்கிறது. மறந்து போன பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் செய்வதற்கான செயல்பாடுகள் நம்மிடையே போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. "உலகின் முதல் நகர நாகரீக சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள்" என வரலாற்றாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடும் இவ்வேளையில் அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் விழுமியங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவணப்படுத்தி அவற்றை இன்றைய வருங்கால தலைமுறைகள் பயனுற வழங்குவது என்ற உயரிய இலக்கு கொண்டு பாண்டிய பண்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது.
Shared 55 years ago
375 views