நீ என்ன செய்யவேண்டும் என்ற
திட்டமிடுதலை யாரிடமும் கொடுத்து விடாதே.
இங்கே உரிமை என்ற பெயரில் தான்
நிறைய அத்துமீறல்கள் நடக்கிறது
நீ சிரிக்க வேண்டும் என நினைத்தால்
உனக்காகச் சிரி
பிறர் என்ன நினைப்பார்களோ
என்ற கவலை உனக்கு வேண்டாம்
நீ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது
உன் வலியை யாரும் தாங்கிக் கொள்ளப் போவதில்லை
நீ அழ வேண்டும் என நினைத்தால்
அழுது விடு
ஏனென்றால், உன் கவலைகளைக் கரைக்கும் சக்தி
உன் கண்ணீருக்குத் தான் உண்டு
உன் கோபத்தை ஒருபோதும்
மனதில் வைத்துக் கொள்ளாதே
உன்னுள் எரியும் நெருப்பு என்றாவது
நிச்சயம் உங்களையேச் சுடும்
எல்லா இடங்களிலும்
மௌனித்தே பழகி விடாதீர்கள்
உங்கள் மௌனமே சில சமயங்களில்
பலரைப் பேச்சாளர்களாக மாற்றிவிடும்
வானத்தை தொட்டு விட நினைத்தால்
பறந்துச் செல்வதைப் பற்றி
பயம் இருக்கக்கூடாது
எதுவுமே இல்லை என்று
ஏளனம் செய்பவர்கள் முன்
வாழ்ந்து காட்ட முடியவில்லையே என்று
வருந்தி நின்று விடாதீர்கள்
ஆலமரம் என்பது
அவ்வளவு எளிதில் விருட்சமாகி விடாது
வாழ்ந்து பாருங்கள்
உங்களைப் பார்த்துச் சிரித்தவர்களும்
வியந்து பார்க்கட்டும்
கனி ராஜா