motivation picture Time travelar Para Brahmacharar
AA ShivanTrust youtobe chenal✅
free yoga meditation resources, such as guided sessions, apps, or videos & free yoga meditation healing /
Astrology, Yoga & Kundalini Meditation Methods
Key Topics Covered:
🔹 Methods to Open the Third Eye
🔹 Kundalini Meditation Practices
🔹 Yoga Asanas & Postures
🔹 Meditation Techniques & Guidelines
🔹 Spiritual Methods & Siddha Practices
Astrology Insights:
🔹 Horoscope Predictions – Daily, Weekly, Monthly, and Yearly Forecasts
🔹 Planetary Effects & Remedies – How celestial influences shape your life
🔹 Dasha & Bhukti Analysis – Understanding major life changes
🔹 Astrology for Investments, Career, Marriage & Education
If you're interested in spiritual growth and self-discovery, don’t forget to subscribe to the channel! 🧘♂️✨
📢 Hit the Bell Icon to stay updated with new videos!
Aa ShivanTrust
https://youtu.be/-bBEE2KdguI?si=QgSDg...
5 months ago | [YT] | 6
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/7NQOu3wNWjk?si=uP_Ch...
6 months ago | [YT] | 1
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/86FVuRyKnZs?si=-9TxJ...
6 months ago | [YT] | 1
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/egorw3d5YOE?si=jLJN3...
6 months ago | [YT] | 2
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/Rd62D_3zR-E?si=ykj9U...
7 months ago | [YT] | 0
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/d_Cl47J8kjc?si=slNSD...
7 months ago | [YT] | 3
View 0 replies
Aa ShivanTrust
https://youtu.be/d_Cl47J8kjc?si=slNSD...
7 months ago | [YT] | 1
View 0 replies
Aa ShivanTrust
முருகன் அருள் பெரும்முருகன் அருள் பெரும் மந்திரம் & சித்தர் கருவூரார் கூறிய https://youtu.be/SGwto2SAMd4?si=a1-8T...
8 months ago (edited) | [YT] | 2
View 0 replies
Aa ShivanTrust
வீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா?...
https://youtu.be/m47JgdGiP0Y?si=inpl7...
பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும்.
வீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா?... அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க...
வீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் தங்காது என்று புலம்புகிறவர்கள் தான் அதிகம். பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும்.
காலையில் எழுந்ததும் வீட்டுக்கதவை திறக்கும் போது, மகாலஷ்மியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
பெண்கள் அதிகாலை நேரத்தில் படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, தண்ணீர் எடுத்து இரண்டு மடக்கு குடிக்க, லஷ்மி கடாட்சம் கிடைக்கும், கோபம் வராது.
சந்தோச ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். முதலில் பெண்குழந்தை பிறந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.
செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் கொஞ்சம் மஞ்சள் எடுத்து ஒரு செம்பு தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை வீட்டை சுற்றி தெளியுங்கள். மஞ்சளுக்கு துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. கண்திருஷடி நீக்கும், மஞ்சள் மகாலஷ்மியின் சொரூபம் என்பதால் செல்வத்தை அதிகமாக ஈர்க்கும்.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இரவு 8-9 மணிக்குள் மூன்று வெள்ளை சூடங்களை கையில் எடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்ட்டி சுற்றி, வீட்டின் முற்றத்தில் வைத்து ஏற்றுங்கள். குடும்பத்தின் மீதும், குடும்ப உறுப்பினர் மீதும் உள்ள கண்திருஷ் விலகி விடும். இதை தொடர்ந்து செய்து வரும்பொழுது குடும்பத்தில் செல்வ பெருக்கு ஏற்படுவதை பார்க்கலாம்.
வீட்டு பூஜை அறையில் வெண்கல தட்டு ஓன்று வையுங்கள். அந்த தட்டில் ஒரு குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைத்து அந்த தட்டில் சில்லறை நாணயங்களை போட்டு வையுங்கள். வியாழக்கிழமை அன்று மாலை 4-5 வரை உள்ள நேரத்தை குபேர காலம் என்பார்கள்.
குபேர காலத்தில் தாமரை திரையில் நெய் விளக்கேற்றி குபேரனை வழிபடும் போது, தட்டில் உள்ள சில்லறை நாணயங்களை இரு கைகளாலும் அள்ளி, தட்டில் சத்தம் வருகிற மாதிரி மீண்டும் போட வேண்டும். ஏனென்றால் நாணய சத்த ஒலி குபேரனுக்கு பிடித்த ஒன்றாகும். இதை குளித்து சுத்தமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.
செவ்வாய், வெள்ளிக்கு கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு குங்குமம் கொடுக்கும் முன் தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும். நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாலையில் இருட்டுவதற்கு முன்பதாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு, தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பைகூளங்களை வெளியே வீச கூடாது. பால், தயிர், பச்சைக்காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது.
ஒவ்வொரு பெளர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை செண்பக மலர், துளசி இவைகளால் அர்சித்து கல்கண்டு, பால், பாயாசம் மற்றும் கனிவகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
வெள்ளிக் கிழமையன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது, அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது ஆகியவை செய்யக் கூடாது.
செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. தண்ணீரும், நெருப்பும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லஷ்மி கடாட்சம் உண்டு.
அன்றாடம் ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய) என்று போட்டால் தான் லஷ்மி கடாட்சம் உண்டாகும். மட்டுமல்லாது லஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
தினம் தோறும் மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றும் பொழுது, வீட்டின் தலை வாசல் இருபுறமும் மணல் அகல்விளக்கு ஏற்றி வையுங்கள். இது செல்வத்தை ஏற்கும் சக்தி வாய்ந்தது. இதை நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த நடைமுறையாகும்.
11 months ago (edited) | [YT] | 4
View 0 replies
Aa ShivanTrust
பிராணாயாமம் என்கிற வாசியோகம்!
https://youtu.be/0MJmGulg1C0
share
calling no 9626113916
நாம் யாவரும் அறிந்த ஆனால் கவனிக்க தவறிய சில விஷயங்களை பார்ப்போம்
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. எல்லா உயிர்களிலும் உயிரை உறுதியோடு நிலைக்க செய்வது உயிர்ப்பாகிய காற்றே! காற்றை உட்கொள்வதும், வெளிவிடுவதும் சுவாசமாகும். இந்த நிலையை கூட்டியோகுறைத்தோ இயங்க வைக்கலாம்! மூச்சு பயிற்சி இதற்கு தேவை!
சுவாசிக்கும் காற்றை கட்டுபடுத்துவதை பிராணாயாமம் என்று சிலரும், வாசி யோகம் என்று சித்தர்களும், அழைத்தனர்!
பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் பயின்று சகல சித்திகளையும் பெற்றனர்!
காற்றை வேகமாக உள்ளிழுத்து விடுவது மூச்சு பயிற்சி. ஆனால் பிராணாயாமத்தில் காற்றை மெதுவாக உள்ளிழுத்து, இருத்திவைத்து, பின்னர் மெதுவாக வெளி விடுவது என்று மூன்று நிலைகள் உண்டு. ஒரு கால அளவில் மூச்சு பயிற்சி கட்டுபாட்டுடன் நிகழ்வதே பிராணாயாமம் அல்லது வாசி யோகம்!
வாசி யோகம் என்பது உயிர் உட்கொண்டு வெளி விடும் வாயுவை கட்டுபடுத்தும் உயர்ந்த யோகமாகும். உடல் உணவை உட்கொள்வதுபோல உயிர், காற்றை உட்கொள்கிறது. இங்கே உள்ளே உயிருக்காக இழுக்கப்படும் வாயு பிராணவாயு, வெளியே மூச்சாக வெளிவிடும் வாயு அபானவாயு. இந்த இரண்டின் போக்கையும் கட்டுபடுத்தி பிராணவாயுவில் அபானவாயுவையும், அபான வாயுவில் பிராண வாயுவைய்ம் கூட சித்தர்கள் கட்டுபடுத்துகின்றனர்!
பிராணாயாமத்தால் உள்ளம் ஒருமை பெறுகிறது, உயிர் திண்மை பெறுகின்றது. நினைத்ததை நினைத்தபடி எய்தும் உள்ளம் அமைகிறது.
உயிர்ப்பு அடிப்படையில் தான் அனைத்து உயிர்களுக்கும் ஆயுள் அமைகிறது. விரைந்து சுவாசிக்கும் உயிர்களுக்கு வயது குறைவு (ஆடு, மாடு, நாய் போன்றவை). மெல்ல உயிர்த்து, இழுத்து, இருத்தி மெல்ல மூச்சு விடும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்வதை காணலாம்(மனிதன், ஆமை, யானை போன்றவை).
நமது உடலிலுள்ள 72000 நரம்புகளும் பத்து நாடியில் அடங்கும். இதனை தச நாடி என்பர். இந்த பத்தும் மூன்று நாடியில் ஒடுங்கும். சந்திர நாடி மூக்கின் இடது பக்கத்தில் பொருந்தி உள்ளது. சூரிய நாடி மூக்கின் வலது பக்கம் பொருந்தி உள்ளது. சுழுமுனை நாடி புருவநடுவில் அமைந்துள்ளது.
சந்திர நாடியை இடகலை என்பர். சூரிய நாடியை பிங்கலை என்பர். சந்திர நாடி - சக்தி, சூரிய நாடி சிவம், பூரணம், சூன்யம்
பிராணாயாமத்தில் வெளி வாயுவை உட்கொள்வது பூரகம். அவ்வாயுவை உள்ளே நிறுத்துதல் கும்பகம், கும்பித்த வாயுவை வெளி விடுதல் ரேசகம் எனப்படும்!
ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும் கணக்கரிவாரில்லைகாற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றைஉதிக்கும் குறியதுவாமே"
என்கிறார்.
நமது உடலை சித்தர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை, ஆதவன், அக்னி, சந்திரன் என்பவை.
த்யானத்த்தால் அக்னியை மூலாதாரத்தில் நிறைய செய்து, குண்டலினியை எழுப்புகின்றனர். இதற்கு வாசி யோகம் நிறையவே உதவி பண்ணுகிறது. குண்டலினியை உசுப்பி நாகமாக படமெடுக்க செய்து அதன் சஞ்சாரத்தை மேல் நோக்கி அனுப்பிட வாசி யோகம் உதவி செய்கிறது. இப்படி மேல் எழும்பும் குண்டலினி இந்த பயணத்தின் போது பல இதழ்களையுடைய ஆறு ஆதாரங்களிலும் ஒவ்வொன்றாய் பொருந்தும்போது ஏற்ப்படும் அதிர்வு காரணமாக ஒலி தோன்றுகிறது. இந்த ஒலியை கேட்ட பின்னரே குண்டலினி சஹஸ்ராரத்தை அடைகிறது. சஹாஸ்ராரத்தில் உள்ள சிவம் எனப்படும் விந்துவுடன் நாத தத்துவமாகிய குண்டலினி அல்லது வாலை (சக்தி) இணையும். இந்த நிலையே சிவசக்தி ஐக்கியம் எனப்படும்.இந்த நிலையில் சுரக்கும் ஊற்றை வானாறு என்றும், சந்திர அமிர்தம் என்றும், மாங்காய் பால் என்றும் கூறுவார். இந்த சந்திர வட்டத்து அமுத தாரையை உண்டார்க்கு உணவு தேவை இல்லை. உடம்பு உணவின்றியே அழியாமல் இருக்கும் என்று சாகா கலைக்கு சாதனமாக இந்த குண்டலி யோகத்தை கூறுகின்றனர்.
தூய காற்றை போலவே தூய நீரும் உடலை வளர்த்தும். நாளும் விடிகாலை பொழுதில் மூச்சு பயிற்சிக்கு முன் வெறும் வயிற்றில் எவ்வளவு தண்ணீர் அருந்த இயலுமோ அவ்வளவு அருந்த வேண்டும். தொடக்கத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூன்று அல்லது ஐந்து குவளை அளவு வரை அருந்தவேண்டும். இவ்வாறு விடிகாலை பொழுதில் ஒரே காலத்தில் அருந்தும் நீர் அமுதமாகி உடலை நோயின்றி நீண்ட நாள் வாழ வைக்கும்.நீர் அருந்துகின்ற அளவிற்கும் நீர் அருந்துகின்ற காலத்திற்கும்ஏற்ப பொருந்தி அமுத தன்மை மிகும்.
இவ்விதம் செய்யும் நீர் பயிற்ச்சியால் குட்ட நோய் கூட மருந்தின்றி குணமாகும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது.
வாழ்க்கை/உணவு முறை உடலின் நோயற்ற தன்மையை நிறைய அளவுக்கு பாதிக்கிறது. அரை வயிறு உணவு, கால் வயறு நீர், கால் வயிறு காற்று உலவிட சிறிய இடம் என்ற முறையில் உண்ணுதலே சிறந்தது. வயதுக்கு தக்க அளவு, செரிமான அளவு அறிந்து அரை வயிறு உண்ணுவதையே அளவறிந்த உணவாக கூறுகின்றனர்.
உண்ட பின்னே உறங்குவதும், நீராடுவதும், உடலுறவு கொள்வதும் உடல் கேட்டிற்கு வழிவகுக்கும். உணவில் கல், மயிர், உமி சேர்வதாலும் நோய் வரும். பனியில் திரிவதாலும், மிகுந்த உணர்ச்சிகளாலும், பால்தயிர் ஒரு சேர உண்பதாலும் நோய் வரும்.
தேரையர் இதை
திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்நீர்சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம்பேருரைக்கில் போமே பிணி"
என்கிறார். அதாவது மலம், சிறுநீர் அடக்காமல், புணர்ச்சியை அதிகம்கொள்ளாமல், உண்ணும் நீரை காய்ச்சி வடித்து அருந்தலாம். நெய்யை உருக்கியே உணவில் சேர்த்தல் வேண்டும். மோரை மிகுதியாக அருந்த வேண்டும். இதை கடைபிடித்தால் நோய் நம்மை அணுகாது.சித்தர்கள், இந்த பிராணாயாம யோகத்தை நன்கு கவனமுடன், அதி ச்ரத்தையுடன் பயில வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். காரணம் எல்லா யோக சித்தியையும் அடைவதற்கு இதுவே முதல் படி.
பிராணாயாமத்தில் முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்துபழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும் பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடல் வேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். பின் பிரணாயாமத்தை தொடங்க வேண்டும்.
சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல நிரப்பி, விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையில் ரேசிக்கவேண்டும். பின்னர் சந்திர நாடியாகிய இடைகளில் பிராணனை பூரித்துக் கும்பிக்கபட்ட பிராணனை பிங்கலையில் ரேசிக்கவேண்டும்.சூரிய சந்திர கலைகளில் பிராண வாயு செல்லுங்கால் பிரிதிவி, அப்பு,தேயு, வாயு என்னும் நன்கு தத்துவங்களும் வந்து விலகும். இவை அனைத்தும் ஆகாய தத்துவத்தில் சென்று அமரும். அந்த நேரத்தில் சுவாசம் குறைந்து வரும். இதை சுவாச பந்தனம் என்பர்.
சுவாச பந்தனத்தின் போது ஒரு அங்குலம் குறைந்தால் யோகியானவன் இவ்வுலகத்தினின்று சுவாதீன படுவான். இரண்டு அங்குலம் குறைந்தால் - மனம் ஆனந்திக்கபட்டு ஞான செல்வம் உண்டாகும். மூன்று அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகள் அவனுக்கு புலனாகும். நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். அயிந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான். எழங்குலம் குறைந்தால் அவன் சரீரம் காய சித்தி பெறுவான். எட்டங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். ஒன்பது அங்குலம் குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவை கண்டுஉணர்வான். பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டு இருக்கிறபடியால் யோகியானவன் நெடும்காலம் அன்ன பானாதிகளை நீக்கி அசைவற்றிருப்பன்.
இந்த யோகத்தின் போது முதல் தீக்ஷையில் ரோம த்வாரங்கள் வழியாக கெட்ட நீர் வியர்வையாய் வழியும். இரண்டாவதில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும். மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள்கசியும். நான்காவதில், சர்ப்பம் தோலுரிப்பதுபோல் சரீரத்தில் தோல் உரியும். aint சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்சமூர்த்திகள் கோரியதை தருவார்கள்.
ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து, தூர திருஷ்டி தெரியும். ஏழாவதில், எட்டவதில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல பிரகாசிக்கும், வச்யமாகும்.
இந்த தலைப்பு போகிற போக்கை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்! ஆனால் இவை அனைத்தும் சித்தர்கள் ஏடுகளில் சொல்லப்பட்ட உண்மைகள்.அவற்றை சொல்வது மட்டும் தான் எனது வேலை. சித்த மார்கத்தில் செல்லவேண்டும் என்றால் எத்தனை விஷயங்களை பொறுத்து கொள்ளவேண்டி வரும் என்று புரியும். ஆம்! சாதாரண மனிதனாக வாழ்ந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றி கொள்ளவேண்டிவரும் என்பது தெளிவாகும். இதனால் தான், பல பெரியவர்களிடம் நாம் என்ன பேச முனைந்தாலும், அவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாக செல்கிறார்கள். "வேற வேலை இல்லையா?" என்று கேட்டு நம்மை விரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். நம்மை இழுத்து விட்டால் பாதி வழியில் வருத்தப்பட்டு திரும்ப நினைக்க, முடியாமல் தவித்துவிடுவோம் என்று. முன்னரே சொன்னது போல் பெரியவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும்! அதை புரிந்துகொண்டு சரி என்று விலக தெரிய வேண்டும்! இனி தலைப்புக்கு வருவோம்!
ஒன்பதாவதில் தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய் தேவர்கள் ஏவல் புரிவர். பத்தாவதில் தேகம் தீபம் போல பிரகாசிக்கும். பதிநோன்றாவதில் தேகத்தை வெட்ட கத்தி ஓடும். பன்னிரெண்டாவதில் சொருஒப சித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது!
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சேரில் ஐம்பூபுலனும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சந்திரன் ஒன்றாய் கூடி சுழு முனையில் ஒடுங்கில் அறிவும்தச வாயுவும் ஒடுங்கும்.
11 months ago | [YT] | 4
View 0 replies
Load more