Prof T Vijay பேரா தி விஜய்

Sivayanama Siva
Our channel shows the significant heritage olden age temples with its festival and gives knowledge about tamil veda thirumurai and it's recital.
All are welcome to join and blessings of the Lord Siva.
Astrological prediction and solutions are also provided.
Thanks for all
Contact
Dr. Siva Vijay, Ph. D.,
9787511957


Prof T Vijay பேரா தி விஜய்

#பதினொன்றாம்_பாவகத்தில்_ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் பதினோராம் வீடு என்பது அவருடைய வாழ்க்கையில் லாப ஸ்தானத்தை குறிக்கின்றது. ஒருவருக்கு வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும் இந்த பதினோராம் வீட்டை வைத்து தான் நிர்ணயிக்க முடியும். உங்களின் மூத்த சகோதரரைப் பற்றி இந்த வீட்டை வைத்து கூறலாம். உங்களின் நண்பர்களை நிர்ணயிப்பதும் இந்த 11ஆம் வீடுதான்.

பதினோராம் வீட்டில் ராகுவை கொண்டவர்கள் பொதுவாக பிரபலமானவர்களாக இருப்பார்கள். நீங்கள் வசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தால் உங்களை, தெரியாது என்று யாரும் கூற மாட்டார்கள். அந்த அளவிற்கு நீங்கள் உங்களுக்கும் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் உதவி செய்தவராக இருப்பீர்கள். சூழ்நிலை காரணமாக உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றவறாக இருந்தாலும் கூட, உங்கள் சொந்த ஊரில் வசிப்பவர்கள் உங்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள். உங்கள் ஊரில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் தலைவர்களுக்கு நீங்கள் மிகவும் நெருக்கமானவராக தான் இருப்பீர்கள். இதேபோன்று அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் உங்களுக்கு சுலபமாக நண்பர்களாகி விடுவார்கள்.

நீங்கள் விவசாயம் செய்வதில் அக்கறை காட்டினால் அதிகமான லாபம் கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட தொழில் செய்தாலும் நல்ல பலன் கொடுக்கும். சொந்த வீடு வாகனம் வைத்துள்ளவர்களாகதான் இருப்பீர்கள். சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்ப காலமானது கஷ்டமாக இருந்தாலும், பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டமானது வந்து உங்களை புகழின் உச்சியில் அமர்ந்தி விடும்.

உங்கள் வாழ்க்கையானது, உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையாக தான் அமைந்திருக்கும். பரம்பரை பரம்பரையாகவே மிகுந்த செல்வாக்குப் படைத்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு வரப்போகும் மனைவியின் மூலம் அதிக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

11இல் ராகுவால் ஏற்படும் பிரச்சினைகள்
உங்களுக்கு மூத்த சகோதரர் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுடன் உங்களுக்கு சுமுகமான உறவானது ஏற்படாது. மூத்த சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவானது உங்களுக்கு ஏற்படும்.

நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் அதிக அக்கறை காட்ட மாட்டீர்கள். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது உங்கள் பங்குதாரர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உங்கள் தொழிலை நீங்கள் தனித்து செயல்படுவது தான் நல்லது. மற்றபடி பதினொன்றில் ராகு உங்களுக்கு நல்லதுதான் கொடுப்பார்.

அப்படி ராகு திசை நடப்பில் இருந்தால் அலைச்சல் அதிகமாக இருக்கும் வருமானம் அதிகரிக்கும் தண்ணீர் போல காசு பணம் செலவு செய்வீர்கள் கூறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் அரசுக்கு புறம்பான தொழிலில் கொண்டு செல்லவும் வாய்ப்பு உருவாகும்.

குடிசையில் இருக்கும் உங்களை கோபுரத்தில் அமர வைக்கும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் செல்வந்தராக மாறும் நிலை ஏற்படும். இறுதியில் எப்போது வேண்டுமானாலும் சரிவுக்கு தள்ளப்படும் கவனமாக இருப்பது நல்லது.

ஜாதகம் பார்ப்பது மற்றும் ஜாதகம் புதிதாக PDF வடிவில் அனுப்பப்படும் மற்றும் உங்கள் பிரச்சனைக்கு ஏற்ற கோவில் பரிகார தலங்கள் கூறப்படும்.

ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் மட்டுமே

மேலும் தகவல் பெற ஜாதகம் கணிக்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #ஜோதிடம் #astrology #predictions #horoscope #பரிகாரம் #புரோகிதம் #அருள்வாக்கு #மூலிகைமருத்துவம்

17 hours ago | [YT] | 59

Prof T Vijay பேரா தி விஜய்

📣#குருசண்டாளயோகம்🔥...
ஜனன ஜாதகத்தில் மன்னவன்,, பொன்னவன், ராஜா என்று அழைக்கப்படும் குரு பகவானும்,யோக காரகன்,போக காரகன், சண்டாளன் என்று அழைக்கப்படும் ராகு பகவானும் இனணந்து ஓரே வீட்டில் இருக்க அல்லது ராகு பகவானை குருபகவான் பார்க்க ஏற்படுவதே இந்த குருசண்டாள யோகம் ஆகும்..

#பலன்கள்: இந்த குருசண்டாளயோகம் உடைய ஜாதகர்கள் வாழ்க்கையில் தீடீரென பணக்காரர்களாக, கோடீஸ்வரனாக மாறுவார்கள்.. அதிலும் தனகாரகனாகிய குருபகவான் ராகுவுடன் இனணயும் போது ராகு திசையில் ஜாதகரை கோடிகளில் புரள வைப்பார்..ராகு பகவானை குருபகவான் சுபத்துவ படுத்தி யோகங்களை ராகு திசையில் ஜாதகருக்கு ஏற்படுத்துவார்.. ஆனால் அதே சமயம் குருதிசையில் ராகுவுடன் இனணந்த குருவால் சில பிரச்சினைகளும் உண்டு... இந்த குருசண்டாளம் உடைய ஜாதகர்களுக்கு ஆன்மீக நம்பிக்கை இருக்காது .. ஜாதகர் நாத்திகம் பேசுவார்..சில நிலைகளில் ஜாதகருக்கு அதீத ஆன்மீக நாட்டத்தை கொடுத்து விடும்.. சிலர் ராகு திசையில் வெளிநாடு சென்று வேலை அல்லது தொழில் செய்து கோடிகளில் சம்பாதிப்பார்.. இந்த குருசண்டாள யோகம் தீடீர் அதிர்ஷ்டக் களை கொடுக்கும்..over night ல் பிரபலமாகும் ஜாதகருக்கு இந்த குரு சண்டாள யோகம் இருக்கும்..ராகு திசையில் ஜாதகர் பெரும் பணத்தையும், புகழையும் சம்பாதிப்பார்..அதே சமயம் குருதிசையில் சில பிரச்சினைகளையும் சந்திப்பார்.

ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள்
சிவசிவ சித்தர் ஜோதிட ஆராய்ச்சி மையம், திருநின்றவூர் ஆவடி சென்னை
Online astrologer
Online consultation
💥For appointment
📞 097875 11957 / WhatsApp

2 days ago | [YT] | 102

Prof T Vijay பேரா தி விஜய்

எனது ஜோதிட பதிவுகளை வாசிக்கும் அன்பர்களில் சிலர் ஜோதிட சந்தேகங்கள் என்ற அளவில் சில கேள்விகளை இன்பாக்ஸில் அல்லது வாட்ஸ் அப் மெசேஜில் அனுப்பி கேட்பது உண்டு இப்படியானவர்கள் பெரும்பாலும் ஜோதிட பலன் சொல்வதற்கு ஆசைப்படுகின்றவர்களாக இருக்கிறார்கள் ஜோதிடத்தின் அடிப்படையிலிருந்து தொடங்கி கற்றுக் கொள்வதற்கு நிறைய படிக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படை அவர்களுக்கு தெரிந்திருப்பது இல்லை அஸ்ட்ரானமி அவசியம் தெரிந்து இருக்க வேண்டும் என்று சொல்லும் போது பயப்படுகிறார்கள் இருக்கட்டும்

ஓர் இளம் ஜோதிடர், அனுபவத்தின் காரணமாக evolve ஆகும் போது எந்த இடத்தில் அல்லது எந்த aspect களில் அவரிடம் அதாவது அவர் கணிக்கும் விதத்தில் evolve ஆகின்றார்

மூன்று நிலைகளில் ஒரு ஜாதகம் ஆராயப் படுகிறது

முதல் நிலை Analysis stage

எந்த விஷயத்துக்காக ஜாதகம் ஆராயப்படுகின்றதோ அந்த விஷயத்துக்கான அந்த ஜாதகத்தில் primary reason house & supporting house அதாவது எந்த பாவகம் பிரதான காரணம், அதற்கு துணை நிற்கும் பாவகம் எது. பாவகம் என்பது ராசி என புரிந்து கொள்ள வேண்டும்

அந்த பாவகங்கள் எப்படி அந்த விஷயத்தினை காட்டுகின்றன.

அந்த பாவகங்களின் தனிப்பட்ட பலம், பாவக அதிபதி கிரஹங்களின் தனிப்பட்ட பலம் ( ஷட்பலம் வழியே)

எந்த விஷயம் ஆராயப்படுகின்றதோ அந்த விஷயத்திற்கான காரக கிரஹம், ( natural significator ) ஆதிபத்திய கிரஹம் ( house significator )

மேற் சொன்ன விஷயங்களை பலப்படுத்தும் / பலவீனப்படுத்தும் யோகம், அவயோகம், தோஷம் எனும் அம்சங்கள்

இந்த கணிதம் analysis stage ல் ஜோதிடர் அதிகம் நேரம் செலவு செய்வதில் முதல் கட்ட evolution

அதாவது அந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்கு ஒரு காரணம் தெரிந்துவிட்டால் அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல் இதனை உறுதி செய்து கொள்வதற்கு மேலும் மேலும் analyse செய்வதை தொடர்வது

அடுத்தது, synthesis எனும் மிக முக்கியமான நிலை.. அதாவது

ஒவ்வொரு விஷயமும் எப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பும், influence ம் கொண்டிருக்கிறது

பாவகம் to பாவகம்
கிரஹம் to பாவகம்

கிரஹம் to கிரஹம்
கிரஹம் to வர்க்க அட்டவணைகளில் பலம்

இந்த இடத்தைக் கடப்பது தான் ஜோதிடருக்கு மிகப் பெரிய சவால்,

உதாரணம் சொல்லுவதெனில், ஒரு VIP வீட்டுப் பெண்ணின் ஜாதகம்., அவளது ஜாதகத்தின் படி ஏழாம் பாவகம் பாதிக்கப்படாமல் பத்திரமாகவும் இருந்தது ஆனால் இரண்டாம் பாவகமும் பதினோராம் பாவகமும் ஒரு சேர அவஸ்தைக்க்கு ஆளான காரணத்தினால் முதல் திருமணம் தோல்வி, இரண்டாவது திருமணமும் மிகுந்த சோகம்

synthesis எனும் இடத்தில் தான் ஜோதிடரின் application of mind இருக்கிறது

Supporting houses பார்ப்பதிலும் காரக கிரகத்தினை நிர்ணயம் செய்வதிலும் சில சூட்சமம் அவசியம்

நேரடியாக காரகத்துவம் தாண்டி சில ஜாதகங்களில் வேறொரு கிரஹமும் காரகத்துவ தொடர்பு கொண்டதாக அமையும்

இங்கே தான் ஒரு லெவலில் இருந்து அடுத்த லெவலுக்கு ஜோதிஷ நுணுக்கம், ஜோதிட அனுபவம் முன்னேறுகிறது எனச் சொல்ல வேண்டும்

building blocks for kids என்று சிறு பிள்ளைகள் வைத்து விளையாடும் பொம்மை பார்த்திருப்பீர்கள் அதுபோலத்தான் ஒரு தனி மனிதனின் ஜாதகத்தின் building blocks எவை எவை என்ன என்ன எப்படி எப்படி எவ்வளவு எவ்வளவு எவ்வாறு எவ்வாறு என்று ஒவ்வொரு நிலையிலும் பொருத்திப் பார்த்துக் கொண்டே வருவதும் அந்த பொருத்திப் பார்க்கும் சங்கதி எந்த காலங்களில் எப்படி இயங்குகிறது என்பது இந்த evolutionல் மிக மிக முக்கியம்

மேலும் தகவல் பெற ஜாதகம் கணிக்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #ஜோதிடம் #புரோகிதம் #அருள்வாக்கு #மூலிகைமருத்துவம் #பரிகாரம் #astrology #horoscope #predictions

3 days ago | [YT] | 73

Prof T Vijay பேரா தி விஜய்

#அட்சயதிருதியை 30-04-2025

29-04-2025 செவ்வாய் இரவு..
08-48 லிருந்து...30-04-2025
புதன்.. மாலை 06-41 வரை திரிதியை திதி.. மங்கள பொருட்கள் வாங்க நல்ல நேரமாக சொல்லப்படுகிறது...

#அளவற்ற_நற்பலன்களை_
#அள்ளித்தரும்..
"#அட்சய_திருதியை."

#அட்சயம் என்றால் என்றும் தேயாது, குறையாது, வளர்தல் என்ற பொருளை தருகிறது. அதனால் தான் #அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் எல்லாம் பன்மடங்கு பெருகும். அதன் பலன்களும் நமக்கு பெருமளவு கிடைக்கும்...

முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “#அக்‌ஷய_திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது…

நவக்கிரகங்களில் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலம் தான் “#அக்‌ஷயதிருதியை”. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள்.…

பெரியோர் அனைவரையும் வாழ்த்தும் போது சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துவர். அதாவது நீண்ட காலம் நிலைத்து வாழ சூரிய, சந்திரனும் வலுப்பெற்றிருப்பது மிக முக்கியம். எனவேதான் அப்படி வாழ்த்துகிறார்கள்.…
#அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தானதர்மங்கள் அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும்.
“பிறருக்கு நாம் கொடுப்பதெல்லாம் தமக்கே தாம் கொடுத்து கொள்வது ” என்பதாகும் என்கிறார் #ரமணர்...

அதாவது நாம் பிறருக்கு கொடுக்கும் தான தர்மங்கள் மூலம் நமக்கு அதற்கேற் பொருட்களும், புண்ணியங்களும் மீண்டும் கிடைக்கிறது. அதுபோல், பிறருக்கு தருகின்ற அளவிற்கு வசதி பெருக்கமும் அதிகரிக்கிறது..

#அட்சயதிருதியை நன்னாளில் சுயநலமான பணிகளை மேற்கொள்வதை விட பிறருக்கு தேவையான தர்மத்தை வழங்குவது நல்லது.

பள்ளியில் பயில முடியாத குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், புத்தகம் வாங்கிதருதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவிடுதல், உணவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவாறு உதவிகளை செய்தல் வேண்டும். தானதர்மம் செய்ய பெரிய செல்வந்தராக தான் இருத்தல் வேண்டும் என்பது இல்லை நம்மால் இயன்ற சிறு பொருளையாவது வழங்குவது மிக நன்மை பயக்கும்...

#அக்‌ஷயதிருதியை நன்னாளில் நீர்மோர், தயிர்சாதம், பானகம் போன்றவகளை கூட மக்களுக்கு தானமாக வழங்குதல் நல்ல பலன்களை தரும்..

நாமும் நமக்காக விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதை தவிர்த்து அடிப்படை தேவைகளான மங்களப்பொருட்களான உப்பு. நாட்டுச்சர்க்கரை, அரிசி, மஞ்சள் குங்குமம் போன்றவைகளை வாங்கி வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்...

அனைவருக்கும் #அட்சயதிருதியை நன்னாள் வாழ்த்துக்கள்.…

#சரணம்_சரணம்
#மகேஷ்வரா ....

6 days ago | [YT] | 69

Prof T Vijay பேரா தி விஜய்

#செவ்வாய்_சனி_சேர்க்கை

செவ்வாய் அல்லது சனி ஏதாவது ஒரு கிரகம் ஆட்சியாகவோ உச்சமாகவோ அமர்ந்து விட்டால் அந்த இணைவு யோகமாக வேலை செய்யும் இம்மாதிரியான கிரக சேர்க்கையில் சனி திசையோ செவ்வாய் திசையோ நடந்தால் அந்த காலங்களில் ஜாதகர் மிகுந்த யோகத்தை அனுபவிப்பார்.

இருவருமே பலமாக அதாவது ஒரு கிரகம் ஆட்சியாகவும் ஒரு கிரகம் உச்சமாகவும் இருந்தால் , மகர ராசியில் இந்த இணைவு ஏற்ப்படுகிறது என்றால் சனி ஆட்சியாவும் செவ்வாய் உச்சமாகவும் இருக்கும் அல்லவா? இப்படி இணைவு இருந்து இருவரும் வக்கிரம் ஆகாமல் இருந்து திசை நடக்குமானால் அது யோகமாகவே இருக்கும்

மேஷத்தில் செவ்வாய் ஆட்சியாகவும், சனி நீசமாகவும் இருக்கும் அல்லவா, இந்த இணைவு பெற்று திசை நடக்கும்போது அது மிக யோகமாகவே செயல்படும். சனி செவ்வாய் சேர்க்கை மேஷத்தில் அமைய பெற்றவர்கள் நிறைய சொத்துக்கள் வாங்குபவர்களாக அல்லது அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களாக , உணவுப் பொருள் , பாதுகாப்பு , எரிபொருள் துறையில் வேலை பார்ப்பவராக இருப்பார்கள். சட்டென உணர்ச்சிவசப் படும் இவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால் நட்புக்காக எதையும் கொடுப்பார்கள்

சனி உச்சம் பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்று துலாம் ராசியில் இருந்தால் பேரையும் புகழையும் பெறுபவர்களாக இருப்பார்கள். சுய சம்பாத்தியதில் சொத்துக்கள் சேர்ப்பார்கள். இந்த இணைவில் இருந்து சனி திசை நடந்து சுக்கிரன் அதாவது துலாம் ராசி அதிபதியும் உச்சமாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் நிலையான சொத்துக்களை அதாவது தன்னுடைய காலத்துக்குப் பின்னும் நிலைத்து நிர்க்கக்கூடிய சொத்துக்களை உருவாக்கி விடுவார்கள். மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அரசியல் தலைவராகவோ , சமுதாய தலைவராகவோ கை நீட்டி சுட்டிக்காட்டக் கூடிய ஒரு பிரபலமான மனிதராக இருப்பார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலருக்கும் சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதை காணலாம். சேர்க்கை என்பது இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் இணைவையே குறிக்கும்.
விருச்சிகம் ராசியில் சனி செவ்வாய் இணைவது, செவ்வாய் ஆட்சியாகவும் சனி பகையாகவும் இருந்தாலும் தான் பிறந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம்மாறி சென்று சொத்துக்கள் வாங்குவது. அரசியல் பதவிகளுக்கு வருவது, பூர்வீகத்தை விட வெளி இடங்களில் நல்ல பேரையும் புகழையும் பேரையும் எளிதாக பெற்றுவிடுவார்கள். ஆனால் டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் தனது சொந்த பந்தங்கள் இடையே நல்ல பேரை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

மேலும் என்னதான் பணம் தனது கடும் முயற்சியில் சம்பாதித்திருந்தால்கூட ஊரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறான் அதனால் தான் இவ்வளவு பகட்டாக இருக்க முடிகிறது, என்றெலாம் எளிதாக தனது சொந்த பந்தங்களே பேசிவிடுவார்கள். இவர்களுக்கு விளம்பரம் செய்ய தனது சொந்தங்களே போதுமானது.

சனி செவ்வாய் சேர்க்கை என்பது மகரம் ராசியில் இருந்தால் தனது கடுமையான உழைப்பால் தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கும் வேலை கொடுக்கக் கூடிய முதலாளியாக உருவெடுத்து விடுவார்கள்.
கும்பம் ராசியில் இந்த சேர்க்கை இருந்தால் பெரிய நிறுவனங்களை வழிநடத்தக்கூடிய பொறுப்பான பதவிகளை அலங்கரிப்பார்கள்.

இவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். வேலை இல்லாமல் இருக்கும் நிலை இவர்களுக்கு வராது. புதிய புதிய உத்திகளை தனது வேலை காலங்களில் புகுத்தி கம்பெனியை ஒரு உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்வர். இவர்கள் வேலையை விட்டு விட்டு வந்து விட்டால்கூட பலகாலங்களுக்கு பெயர் நிலைத்து நிற்க்கும். நல்ல பொருளாதாரத்தை சம்பாதிக்கக் கூடிய யோகக்காரர்களாக இருப்பார்கள்.
சனி செவ்வாய் திசை நடக்கும்போது இம்மாதிரியான பலன்கள் மிக வலுவாக நடக்கும்.

எளிதாக வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
முக்கியமான விஷயம் திருமணம் சற்று கால தாமதமாகத்தான் நடக்கும்.
சனி செவ்வாய் என்றவுடன் தெறித்து ஓட வேண்டியது இல்லை. ஆனால் சற்று நிதானமாக ஆராய்ச்சி செய்தால் உண்மைகள் எளிதில் பிடிபடும்.

மேலும் தகவல் பெற ஜாதகம் பார்க்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
Whatsapp number
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #ஜோதிடம் #astrology #horoscope

6 days ago | [YT] | 62

Prof T Vijay பேரா தி விஜய்

முதல் தர கோடீஸ்வர யோகத்தை
விருச்சிக லக்னத்திற்கு தரும்..

குரு கேது இணைவு கேளயோகம்
அதாவது கோடீஸ்வர யோகம்.

இந்த இணைவு

விருச்சிக லக்னத்திற்கு
2 மற்றும் 5 க்குடைய
தன காரகன் மற்றும் பாக்கியாதிபதியான
குரு பகவானுடன் கேது
சூட்சம வலுவில்
கேள யோகத்தில் அமர
கோடீஸ்வர யோகத்தை தருவார்.

விருச்சிக லக்னத்திற்கு இந்த இணைவு இருக்க வேண்டிய இடம்.

லக்கினத்திலேயே இருக்கலாம்..

இரண்டாம் பாவகமான தனுசு பாவகத்தில் இடம்பெற்று இருக்கலாம்.

ஐந்தாம் பாவகமான மீனத்தில் இடம்பெற்றிருக்கலாம்.

பாக்கியஸ்தானத்திலும் இடம்பெற்றிருக்கலாம்
அதாவது விருச்சிக லக்னத்திற்கு
ஒன்பதாம் இடமான கடகத்தில்.

இருப்பினும்
இதில் சந்திரனின் நிலையையும் கவனிக்க வேண்டிய ஒன்றாகிவிடும்.

ஏன் விருச்சிக லக்னத்திற்கு
முதல் தர யோகம்
என குறிப்பிடுகிறோம்.

ஏனெனில் விருச்சிக லக்னத்திற்கு குருபகவான்
2, 5 எனும் இரு சுப ஆதிபத்தியத்திற்கு உரியவர்.

இதுவே மேஷ லக்னத்திற்கு
குரு 9 க்குடைய பாக்யதிபதியாக இருந்தாலும்.
அவரே விரையாதிபதியாக இருப்பதால்.

மேலும் கடக லக்னத்திற்கு குரு 9 க்குடைய பாக்கிய அதிபதியாக இருந்தாலும்.
அவரே ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி எனும் 6 க்குடையவராகவும்
இருப்பதால்.

அதேபோல..

சிம்ம லக்னத்திற்கு குரு 5 க்குடைய பாக்யாதிபதியாக இருந்தாலும்.
அவரே அட்டமாதிபதி எனும்
8 க்குடையவராகவும் இருப்பதால்.

குறிப்பாக...

மீனத்திற்கு குருபகவான் லக்னாதிபதியாகவும்
பத்தாம் அதிபதியாக இருப்பதாலும்.

தனுஷிற்கு குரு பகவான்
லக்னாதிபதியாகவும்
நான்காம் அதிபதியாக இருப்பதாலும்.

முதல் தர யோகத்தை
விருச்சிக லக்னத்திற்கும்

இரண்டாம் தர யோகத்தை
தனுசு லக்னத்திற்கும்

மூன்றாம் தர யோகத்தை
மீன லக்னத்திற்கும்

நான்காம் தர யோகத்தை
மேஷ லக்னத்திற்கும்

ஐந்தாம் தர யோகத்தை
கடக லக்னத்திற்கும்

ஆறாம் தர யோகத்தை
சிம்ம லக்னத்திற்கும்

என்கிறவாறு..

பிற ஜாதக அமைப்பான
பிற கிரகங்களின் பார்வை
சேர்க்கை மற்றும்
குரு கேதுவிற்கு இருக்கும் இடைவெளி

மற்றும் அதற்குரிய தசா புத்தி
அனைத்தும் சரியாக இருப்பின்.

நீங்களும்
கோடீஸ்வரனாகலாம்.

மேலும் தகவல் பெற ஜாதகம் கணிக்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #astrology #அருள்வாக்கு #புரோகிதம் #ஜோதிடம் #ஜாதகம் #மூலிகைமருத்துவம் #நவகோடிசித்தர்கள்ஹோமம்

1 week ago | [YT] | 71

Prof T Vijay பேரா தி விஜய்

சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை இன்று சித்திரை பரணி 28/4/2025

#திருச்செங்காட்டங்குடி
இன்று பிள்ளைக்கறி அமுது உண்ணுவதற்க்கு #சிறுதொண்டர்_நாயனார் திருமனைக்கு #உத்திராபதியார் வருகை !!

1 week ago | [YT] | 10

Prof T Vijay பேரா தி விஜய்

அனுபவ ஜோதிட குறிப்புகள்

1.சுய ஜாதகத்தில் எட்டாம் பாவகம் சுபகிரகங்களின் தொடர்பிலிருந்து புதனும் வலுக் குறையாத பட்சத்தில் ஜாதகர் ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் ஆர்வமுடையவராக இருப்பார்.

2. திருமண வாழ்க்கைக்கு காரக கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் பாபர்களின் தொடர்பின்றி இருப்பது மண வாழ்க்கைக்கு நல்ல அமைப்பாகும்.

3. சனியுடன் மிக நெருங்கி இருக்கக்கூடிய கிரகத்தின் தசா புத்தி காலகட்டங்களில் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.

4. சனி, ராகுவுடன் மிக நெருங்கி எவ்வித சுப கிரகங்களின் தொடர்பின்றி இருக்கும் பொழுது சனியின் காரகம் சார்ந்த தொழில்களான விவசாயம், கால்நடை வளர்ப்பு, இரும்பு, இயந்திரம் சார்ந்த துறைகள் ஜாதகருக்கு பெரியளவு சிறப்புகளை தருவதில்லை.

5 . புத்திரக் காரகனான குரு பகவான், சூரியன் செவ்வாய் போன்ற ஆண் கிரகங்களுடன் சேர்ந்து ஐந்தாம் பாதத்தோடு தொடர்பு கொண்ட தசா புத்தி நடத்தும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான பாக்யமுண்டு.

6. சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு சுபகிரகங்களின் தொடர்பற்ற சனியின் தொடர்பு இருந்து, சூரியனும் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நின்று அவயோக கிரகத்தின் தசாவும் நடப்பில் இருக்கக் கூடிய பட்சத்தில் போது அரசு வேலை சார்ந்த முயற்சிகள் பலனளிக்காது இதுபோன்ற நிலையில் தனியார் துறைகள் அல்லது சுய தொழில் சிறப்பு தருவதாக இருக்கக்கூடும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நிலைகளில் அவயோக கிரகத்தின் தசா காலங்களில் ஜாதகர் வீண் முயற்சி செய்தாக வேண்டும் என்பதன் அடிப்படையில் ஜாதகர் யார் சொன்னாலும் கேட்காமல் தொடர்ந்து தேவையற்ற முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்.

7. பௌர்ணமி சந்திரன் இரண்டு அல்லது 11ஆம் பாவகத்தில் இருப்பது தனம், பொருளாதார அமைப்புகளுக்கு நல்லதாகும்.

8. களத்திரக்காரகனான சுக்கிரன், சந்திர அதியோகத்தில் இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு நல்ல மணவாழ்க்கை எதிர்பாலின ரீதியாக நல்ல ஆதரவு, சுக்கிரனுடைய ஜட காரகத்துவங்களான வாகன வசதிகள், நல்ல வீடு மற்றும் சொகுசான வாழ்க்கை போன்ற வசதிகள் உண்டு.

9. கோச்சார ரீதியாக அஷ்டம சனி அல்லது ஜென்ம சனி நடைபெறக்கூடிய பட்சத்தில் சுய ஜாதக ரீதியாக ஆறு, எட்டாம் அதிபதிகளின் தசா புக்திகள் நடப்பில் இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகர் உடல் நலம் சார்ந்த விஷயங்கள் சற்று கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லதாகும்.

10. சுய ஜாதகத்தில் சனியால் அதிகப்படியான தடை, தாமதங்கள் மற்றும் சவால்களை சந்திப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் பழமையான சிவாலயங்களில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவதை வழக்கப்படுத்தி கொள்ளும்போது தடை, தாமதங்கள் படிப்படியாக முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்...
நன்றிகள்..

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்.

ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #மூலிகைமருத்துவம் #புரோகிதம் #அருள்வாக்கு #ஜோதிடம் #ஜாதகம் #astrology #நவகோடிசித்தர்கள்ஹோமம்

1 week ago | [YT] | 67

Prof T Vijay பேரா தி விஜய்

#12_வீடுகளில்_சனீஸ்வரர்_நின்ற_பலன்கள்

#1_ம்வீடு

ஒருவர் தம் ஜாதகத்தில் முதல் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர் ,உயரமான உடலமைப்பு, குறைவான ஆயுளும் கொண்டவராய் இருப்பார்.இவர் மந்த புத்தியும், மதப்பற்று இல்லாதவர்.மனதில் நிம்மதி இல்லாமல் ,வாழ்வில் விரக்தி ஏற்படும்.உடல் நலம் பாதிக்கப்பட்டு உறவினர்களை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படும். துலாம் ,மகரம், கும்பம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமைந்தால் வாழ்க்கை வசதிகள், அரசாங்க ஆதரவு, மிகுந்த வருமானம், பதவிகள், ஆகியன அமையும். இதனால் மகிழ்ச்சியுடனும் ,செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டு.இருப்பினும் லக்கினத்தில் சனி அமையப் பெற்றவர் கிரக வழிபாடு செய்வது நலம் தரும்.

#2_ம்வீடு

இரண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்க்கு மாமிச உணவுகளில், அடிக்கடி மது அருந்துவதில் ஈடுபாடு உண்டாகும்.இவருக்கு பற்கள் விகாரமாய் அமைந்திருக்கும்.கல்வி கற்பதில் தடங்கல் ஏற்படும் .இவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களிடம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருப்பர்.இவர் கண்பார்வையில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.நோயாளியான மனைவியை பெற்று துன்பம் அடையக்கூடும்.

#3_ம்வீடு

மூன்றாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,இளமையில் துன்பம், முதுமையில் யோகம் உள்ளவராய் இருப்பார்.எப்போதும் எவரிடமாவது சண்டையிடும் குணம் அமைந்திருக்கும்.இவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.குறைவான உணவு உட்கொள்வர்.வாழ்வில் அவ்வளவு மகிழ்ச்சி இராது.உறவினர் சகோதரர் ஆகியோரால் தொல்லை ஏற்படலாம்.இவருக்கு ஜோதிடம், வைத்தியம் ,மாந்திரீகம் ஆகியவற்றோடு தொடர்பு அவற்றில் அறிவும் ஏற்படும்.சகோதரரை பிரிந்து வாழ நேரிடும்.பயணம் செய்கையில் விழிப்பாய் இருக்க வேண்டும்.இயற்கையோடு அனுசரித்து செல்லாமல் ஏறுக்குமாறாக நடந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

#4_ம்வீடு

நான்காம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,தம் தந்தையின் சொத்துக்களை இழக்க நேர்வதாலும் , தாயாரின் வலிமை குறைவதாலும் துன்பப்படுவான்.உறவினர் விரோதத்தை தவிர்க்க வேண்டும்.மந்தபுத்தியாலும் ,முன் கோபத்தாலும் வறுமை சூழாதவாறு தம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

#5_ம்வீடு

ஐந்தாம் பாவத்தில் சனி கிரகம் இருக்கப் பெற்றவருக்கு,குழந்தைபேறு வாய்க்காமல் போகலாம் அல்லது பெற்ற குழந்தைகளால் மன நிம்மதி இழக்க நேரும்.திருட்டுத்தனமான குணங்களும் வாழ்வில் விரக்தி மனப்பான்மையும் ஏற்படாதவாறு விழிப்பாய் இருக்க வேண்டும்.இவர் தேவதை வழிபாடு செய்வார்.வறுமை, நோய் ஆகியவற்றால் துன்பம்முறா வண்ணம்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவர் சுபர் கிரக பார்வை பெற்றால் சிறிதளவு நலம் பெறலாம்.

#6_ம்வீடு

ஆறாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்க்கு,வாதநோய் ,வயிற்றுக்கோளாறு, கடன் தொல்லைகள், வழக்குகள் ,பொருளாதார பிரச்சனைகள் ஆகியன ஏற்படலாம்,உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.இத்தனையும் மீறி ஆறாம் பாவம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகியராசிகளாக இருந்தால் இந்தப் பலன்கள் யோகபலன்களாக மாறி விடும். வாழ்க்கை,வசதி ஆகியன அமையலாம்

#7_ம்வீடு

ஏழாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,திருமணத்திற்குப் பிறகு மனைவியாலும், மனைவியின் உறவினராலும் பல தொல்லைகள் அனுபவிக்க நேரிடும்.இவர் இரண்டாவது மணம் செய்ய நேரிடும்.அந்த இரண்டாவது மனைவியும் குணம் கெட்டவளாக இருக்க வாய்ப்புண்டு.மனைவி ,குடும்பம் ஆகியவற்றைக் பிரிந்து வாழ நேரிடலாம்.எப்போதும் ஏழாம் பாவத்தில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது ஏழாம் பாவத்தை சுபகிரகங்கள் பார்ப்பதும் ஏழாம் பாவத்தில் உச்ச ஆட்சி ஸ்தானங்களில் இருப்பதும் நன்மை தரும்.ஏழாம் பாவம் ஏறுக்குமாறாக அமைந்தால் ஏகாந்த வாழ்க்கைதான் ஏற்படும்.

#8_ம்வீடு

எட்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,பயனற்ற நீண்ட ஆயுள் கொண்டவர்.இவர் தீராத நோய்கள், மூல நோய், வாயுத் தொல்லை ஆகியன ஏற்படா வண்ணம் , தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.தரித்திரம், நோய் ஆகியவற்றால் குடும்பத்தை கவனிக்க இயலாத நிலை ஏற்படும்.எந்த வழியிலும் துன்பத்தை தரும் அமைப்பு இது.இப்படி எட்டாவது பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர் சனி கிரக தோஷ பரிகார பூஜைகள் செய்து சனி பகவானை வழிபாடு செய்தால் நலம் பெறலாம்.

#9_ம்வீடு

ஒன்பதாவது பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,கடற்பயணத்தால் ஆபத்தை அடைய வாய்ப்பு உண்டு.நோயாளியான தந்தையை காப்பாற்றும் நிலை ஏற்படும்.இவர் கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவார்.சோதிட சாஸ்திரத்தில் விருப்பம் உள்ளவராக இருப்பார்.ஒன்பதாம் பாவம் யோகபாவம் என்றாலும் இந்த பாவத்தில் பாவ கிரகங்கள் தீய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல,இந்த ஒன்பதாம் பாவம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனமாக இருந்து அதில் சனி அமர்ந்து இருந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்,இந்த ஒன்பதாம் பாவத்தை பலம் பெற்ற கிரகங்களில் ஏதாவது ஒன்று உச்சத்தில் அல்லது ஆட்சியில் உள்ள கிரகங்களின் பார்வைகள் பட்டால் நன்றாக இருக்கும்

#10_ம்வீடு

சனி கிரகங்கள் பத்தாம் பாவத்தில் அமர்ந்து இருந்தால் அதற்குரிய பலன்கள்.தீயவர்கள் அல்லது தீய காரியங்களுக்கு உதவும் தேவதைகளை வழிபடுவார்.கூட்டத்தின் தலைவராக இருப்பார்.இவருக்கு தொடக்க காலத்தில் மகத்தான வெற்றிகரமான வாழ்க்கையும் பிற்காலத்தில் சரிவான வாழ்க்கையும் அமையும்.முன்னோர் சொத்துக்களை இழக்கும் அவயோகம் ஏற்படும்.திருமண வாழ்வில் தகராறு ஏற்பட்டு மனைவியை பிரியும் நிலை ஏற்படும்.ஊரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊருக்குச் சென்று பணியாற்றி வாழ வேண்டிய நிலை ஏற்படும்,

#11_ம்வீடு

பதினோராம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்,அரசாங்க வேளையில் பொருள் ஈட்டுவார்.ஞானமாய் இருப்பார், மிகுந்த சொத்துக்கள் சேர்ப்பார்.சமுதாயத்தில் மதிப்பு உள்ளவராய் இருப்பார்.இவருக்கு மனைவி மக்களுடன் மகிழ்ச்சிகரமாக வாழும் வாழ்க்கை அமையும்.இவருக்கு வீடு, வாகனம்,ஆடு, மாடு ஆகியவற்றுடன் வசதியான வாழ்க்கை அமையும்.

#12_ம்வீடு

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்.எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நெருங்கிய இவர் உறவினர்களே இவருக்கு எதிரிகளாக மாறி விடக்கூடிய வாய்ப்பு உண்டு.இவர் பணம் ஈட்டுவதில் குறிக்கோளாய் இருப்பவர்.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.தாம் விரும்பிய செயலை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என வெறி உள்ளவர்.பிரச்சனைகளால் மனைவி குழந்தைகள் உறவினர் நண்பர் ஆகியோருடன் பகை ஏற்படலாம்.

ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் மட்டுமே

மேலும் தகவல் பெற ஜாதகம் கணிக்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #astrology #அருள்வாக்கு #புரோகிதம் #ஜாதகம் #ஜோதிடம் #மூலிகைமருத்துவம் #நவகோடிசித்தர்கள்ஹோமம்

1 week ago | [YT] | 71

Prof T Vijay பேரா தி விஜய்

வேலையும் செய்ய முடியாமல் தொழிலும் பார்க்க முடியாமல் இருக்கக்கூடிய அவஸ்தை எந்த அளவிற்கு என்பது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

பொதுவாக..

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எனும் ரீதியில் ஒருவர்..
கைத்தொழிலை கற்றுக் கொண்டு.
வேலை செய்ய முடியாமலும்.

கையில் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று இருக்கக்கூடிய இந்த காலகட்டத்திலும் கூட ...

சொந்தமாக தொழிலும் செய்ய முடியாமல் தவிப்பவர்கள்..

கோடிக்கணக்கான நபர்கள் இன்றளவும் உண்டு.

இவர்களுடைய ஜாதகத்தில்..

வேலை செய்யக்கூடிய அமைப்பான
ஆறாம் பாவகத்திற்கு உண்டான
கிரகம்
பாவத்துவம் பெற்றிருந்தாலும்.
அல்லது
ஆறாம் பாவகத்தில்...
நீச்சகிரகம் அமர்ந்திருந்தாலும்.
அல்லது
சனி பகை வீட்டில் அமர்ந்திருந்தாலும்
சனி நீச்சம் அடைந்து இருந்தாலும்
வேலையில் இடர்பாடுகளும்
வேலையில் துன்பங்களும்
வேலையில்லா திண்டாட்டமும்
அதிகமாக காணப்படும்.

அதேபோல..

சொந்தத் தொழில்
என்றாலே
பத்தாம் பாவகம் மற்றும் அதற்குரிய அதிபதி மேலும் சனி இவை அனைத்தும்
சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக தன காரகனான
குரு பகவானும் கெடாமல் இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்..
தனாதிபதியும்
லாபாதிபதியும்
கெடவோ மறையவோ கூடாது.

இப்படி இருந்தால் மட்டுமே..
சொந்தமாக தொழில் செய்வார்
லாபத்தை ஈட்டுவார்
லாபம் கிடைக்கும்
கிடைத்த லாபம் தங்கும்.

ஒருவேளை
அப்படி
இல்லாத பட்சத்தில்...

அவ்வளவு எளிதாக யாராலும் எந்த தொழில் செய்ய முடியாது
எனும் விதியின் கீழ் வந்து விடுவார்கள்.

அனைத்தும் சரியாக இருந்து.

ஒருவருக்கு
நிரந்தர வேலையோ
நிரந்தர தொழிலோ
அமையவில்லை என்றால்..

அதற்கு காரணம்..

ஜாதகருக்கு அவயோக தசா புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்..

இந்த கால கட்டத்தில் தான்
எதைத் தொட்டாலும்
நஷ்டம் அவமானம் கடன் சோம்பேறித்தனம்
போன்ற அனைத்தும் ஒன்று கூடிவிடும்.

பெரும்பாலும்

கர்மாவும் காலனான சனி பகவானும்
இணைந்து தரக்கூடிய பலனாகவே
ஒருவருடைய
அவ யோக தசா புத்தி இருக்கும்.

முற்பகலில் செய்வதே
பிற்பகலில் விளையும்

என்பதற்கு ஏற்ப
ஒருவரை
வேலை தொழில் விஷயங்களில்
ஆட்டிப் படைக்கும்.

மேலும் தகவல் பெற ஜாதகம் கணிக்க
ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #புரோகிதம் #அருள்வாக்கு #ஜோதிடம் #Astrology #ஜாதகம் #மூலிகைமருத்துவம் #நவகோடிசித்தர்கள்ஹோமம்

1 week ago | [YT] | 75