LOVE ALL SERVE ALL
Welcome to Sri Sathya Sai Yugam! This channel lovingly shares the divine glories, teachings, and boundless love of Bhagawan Sri Sathya Sai Baba in the Tamil language. It is dedicated to serving Sai devotees and aims to reach every Tamil speaking heart with Baba's message. Specifically, we serve with the primary responsibility of presenting Baba’s glory through video content in a way that appeals to today’s younger generation and suits their preferences.
This is an independent devotional channel and is not officially affiliated with or authorized by any Sathya Sai Institutions or organisations.
We do not generate any income from YouTube videos or any other revenue sources. 'Sri Sathya Sai Yugam' is a purely service oriented, collective Seva initiative, not the work of any one individual.
For any video issues or feedback, kindly email us at: SathyaSaiYugam@gmail.com
Sri Sathya Sai Yugam
https://youtu.be/AagpnM_bMPo
👆🏻👆🏻
6 hours ago | [YT] | 53
View 1 reply
Sri Sathya Sai Yugam
🌼 சம்பவாமி யுகே யுகே!!!
திரேதாயுகத்தில் தர்மம், துவாபரத்தில் கீதை, கலியில் சத்தியப் பிரேமையை உபதேசிக்கும் பிரபஞ்ச குரு ஸ்ரீ சத்யசாயி பற்றிய கவிதை...
இருள் நீக்கி ஒளி சேர்க்க
இதயம் வந்தாயே
அருள் மழையை அமுதமென
பொழிந்து நின்றாயே
எத்தனையோ உபதேசம்
ஏற்றமுறக் கூறி
சத்குருவாய் ஆசானாய்
அரவணைத்தாயே
சங்கரரும் மத்துவரும்
புத்தருமாய் தோன்றி
இத்தரையில் ஏசுவென
நாயகமாய் நின்று
புனித ராமாநுஜராய்
சமய நால்வ ராகி
சத்தான உபதேசம்
அன்றே நீ செய்தாய்
இத்தனைக்கும் மேலாக
நீ வாழ்ந்த வாழ்க்கை
ஒப்பிட இயலாததொரு
உயர் பாடமன்றோ
செப்பரிய உயர்ஞான
சத்குருவாம் சாயி
தப்பாமல் உன் பதமே
சார்வோம் இத்தினமே.
✍🏻கவிஞர் குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
*ஸ்ரீ சத்யசாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்ஸ்*
linktr.ee/SriSathyaSaiYugam
6 hours ago | [YT] | 14
View 0 replies
Sri Sathya Sai Yugam
sathyasaiyugam.blogspot.com/2022/12/blog-post_25.h…
6 hours ago | [YT] | 16
View 0 replies
Sri Sathya Sai Yugam
அந்த மெழுகுவர்த்தி அழுகிறது!
அது பிறருக்காக அழுகிறது
அது பரவசம் தேடி அழுகிறது
அகில அறியாமையை நினைத்தும்
அகண்ட அன்பினைக் குறித்தும்
அந்த மெழுகுவர்த்தி அழுகிறது!
முள் கிரீடம் அணிந்திருந்தும்
மனிதனால்
ஏசுவாக முடியவில்லை
அவன் அணிந்த
முள் கிரீடமோ
ஆணவத்தால் பின்னப்பட்டிருக்கிறது!
சத்தமில்லா சவுக்கடிகள் பட்டும்
இன்னும் பிரக்ஞை இல்லை
அந்த சவுக்கு இன்னும்
ஆசையின் கையில் தான்
அசைக்கப்படுகிறது!
அந்த திராட்சை
ரசக் கோப்பையில்
யுத்த ரத்தம் வழிகிறது
அதைக் காணும்
அந்த மெழுகுவர்த்தியின் கண்ணீரும் கலந்து போகிறது
அந்த மெழுகுவர்த்தி அழுகிறது!
அதன் மெழுகுத் துளிகள்
மேனியில் விழுந்து கொதிக்கிறது!
ஆயினும்
அகிலத் துயில் கலையவில்லை!
மாட்டுத் தொழுவம்
மங்களகரமாக இருக்கிறது
இதயத் தொழுவத்தில் தான்
நீ இன்னும்
பிறக்கவில்லை!
இயேசுவே
உன்னை வழிபடுவதற்கு
எழுப்பும் பிரச்சாரத்தில்
பரஸ்பர அன்பின் குரல்
காதுகளிலேயே விழவில்லை!
பதமாக நினைத்து
உன் அறநெறியை
அரவணைக்க முடியாமல்
மதமாக நினைத்து உன்னை
மறுதலிக்கும் மனம்
ஒவ்வொரு நாளும்
சிலுவை சுமக்கிறது!
அந்தச் சிலுவை மரங்கள்
அன்பை அறையாதீர்கள் என
தனது வேருக்கு
விண்ணப்ப மனு தருகிறது!
மனதிற்கு மலர் கிரீடம்
மனசாட்சிக்கு முள்கிரீடம்
ஆக்ரோஷத்திற்கு சிறகு
அமைதிக்குச் சிலுவை
ஆகவே தான் உன்
எந்தை வரவிற்காக
உள்ளமே உருகிக் கிடக்கிறது!
அந்த உருகுதலில்
அந்த மெழுகுவர்த்தியும்
அழுகிறது!
கிறிஸ்துவே
நீ பிறந்தாய்
இவர்கள் திருந்தவில்லை
உன் தந்தையை அனுப்பினாய்
இவர்கள் உணரவில்லை
இன்னும் ஒரே ஒருமுறை
இவர்களை மன்னித்துவிடு
பிரேம இறை இறங்கட்டும் என
அந்த மெழுகுவர்த்தி
அழுது கொண்டே இருக்கிறது!
பக்தியுடன்
#வைரபாரதி💎✍🏻
6 hours ago | [YT] | 31
View 0 replies
Sri Sathya Sai Yugam
🌼 எனக்கு வயதென்பதே இல்லை (வயதிற்கப்பாற்பட்டவன் நான்).
🌼 என்னுடைய விளையாட்டிற்காக (லீலைக்காக) இந்த பிரபஞ்சத்தை நான்படைத்ததற்கு முன் என்னை புரிந்துகொள்ள எவரும் இல்லை.
🌼 “ஏகோஹம் பஹுஸ்யாம்” - நான் ஒருவனே பற்பல தோற்றங்களில் காணப்படுகிறேன்.
-ஸ்ரீ சத்ய சாயிபாபா
🎅அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!
*ஸ்ரீ சத்யசாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்ஸ்*
linktr.ee/SriSathyaSaiYugam
12 hours ago (edited) | [YT] | 178
View 6 replies
Sri Sathya Sai Yugam
🎅🏻Happy Christmas ~ அன்பும் அமைதியும் அனைவரின் இல்லங்களில் நிலவட்டும்.!
#SriSathyaSaiYugam
18 hours ago (edited) | [YT] | 112
View 2 replies
Sri Sathya Sai Yugam
sathyasaiyugam.blogspot.com/2022/10/blog-post.html…
1 day ago | [YT] | 173
View 4 replies
Sri Sathya Sai Yugam
பொன்னான புதன் வணக்கம்!
#SriSathyaSaiYugam
1 day ago | [YT] | 300
View 8 replies
Sri Sathya Sai Yugam
sathyasaiyugam.blogspot.com/2020/12/blog-post_25.h…
1 day ago | [YT] | 145
View 1 reply
Sri Sathya Sai Yugam
https://youtu.be/ZSeJUxTElsg
2 days ago | [YT] | 78
View 0 replies
Load more