بسم الله الرحمن الرحيم

لا اله إلا الله محمد رسول الله

இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய தஃவா இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் இஸ்லாமிய கேள்வி-பதில் இனிய மார்க்கம் இஸ்லாம்

حسبنا الله نعم الوكيل

Islamic Question Answer Islam is Best Rules Allah Is Great Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam

لا حول ولا قوة إلا بالله العلي العظيم


FAHMI CHANNEL

*வரலாற்றில் ஓர் ஏடு-341*

*அல்லாஹ்வின் அருள் பெற்ற சீமான் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.*

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்து அம்ர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வியாபார விஷயமாக அப்து அம்ர் யமனுக்குச் சென்றிருந்தார்.

இந்த வேளையில் தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என தங்களைப் பிரகடனப்படுத்தினார்கள்.

அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, அலீ ரலியல்லாஹு அன்ஹு, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, ஜைத் ரலியல்லாஹு அன்ஹு இவர்களோடு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மூன்று பெண்மக்களும் ஏகத்துவ வசந்தத்தில் தங்களை இணைத்திருந்த தருணமது.

யமனிலிருந்து திரும்பிய அப்து அம்ர், நண்பர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து *தான் ஊரில் இல்லாத போது நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி* கேட்டுக் கொண்டிருந்தார்.

பேச்சின் ஊடாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய பேச்சும் வரவே அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டு நேராக அப்து அம்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம், வேத வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை என ஏகத்துவத்தின் உண்மை முகத்தை அப்து அம்ருக்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பேசி முடித்ததும் அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதா கூறி எட்டாவது நபராக தம்மை இணைத்துக் கொண்டார் அப்து அம்ர்.

அப்து அம்ர் - அம்ரின் அடிமை இது இஸ்லாமிய நாகரீகத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெயர் என்று கூறிய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துர்ரஹ்மான் – ரஹ்மானின் அடிமை என்று பெயர் சூட்டினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏகத்துவ வெளிச்சம் மக்காவின் பெருவெளியில் பரவத் தொடங்கிய போது அப்துர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரும், அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் எனும் செய்தியும் பரவத் தொடங்கியது.

அன்று மிகப்பிரபல்யமாக இருந்த பெரும் வியாபாரச் செல்வந்தர்களில் அப்துர்ரஹ்மான் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அப்து அம்ரும் ஒருவர்.

எப்படி தூதுத்துவத்தை கேள்விக்குரியாக்கினார்களோ?, விவாதப் பொருளாக ஆக்கினார்களோ? அதே போன்று அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரையும் விவாதப் பொருளாக மாற்றினர் குறைஷிகள்.

அப்துர்ரஹ்மான் இது அன்று வரை குறைஷிகளால் அறியப்படாத பெயர். அப்துல் கஃபா, என்றும் அப்துல் உzஸ்ஸா என்றும் அப்து அம்ர் என்றும் பெயர் சூட்டி அழைத்துப் பழகியவர்கள் அவர்கள். அபூபக்கர் அவர்களின் பெயர் கூட அப்துல் கஃபா என்று தான் இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள்.

விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அல்லாஹ் அல் இஸ்ராஃ அத்தியாயத்தின் 110 –வது (*"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு (ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்யமான வழியைக் கடைப்பிடிப்பீராக.* 17:110) வசனத்தை
இறக்கியருளி *ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும்* என்று பறை சாற்றினான்.

ஏகத்துவத்தின் வளர்ச்சி எல்லா முஸ்லிம்களையும் பாதித்தது போன்று அப்துர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பாதித்தது.

அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த முதல் குழுவில் அப்துர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இடம் பெற்றார்கள்.

பின்னர் மீண்டும் மக்கா திரும்பி அண்ணலாருடன் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் அடைந்த துன்பங்கள், பின்னடைவுகள் ஆகியவற்றிலும் பங்கு கொண்டு, ஊர் விலக்கம் செய்யப்பட்ட அணியிலும் இடம் பெற்றார்கள்.

இறுதியாக, எந்த இடமும் உலகத்தின் முடிவல்ல. அது பரந்து விரிந்த இப்பூமியின் இன்னொரு இடத்தின் எல்கை என்று உணர்த்துவது போல் அமைந்தது தான் மதீனாவை நோக்கிய அதிகாரப்பூர்வ ஹிஜ்ரத் பயணம்.

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர்த்து வேறெவரும் தங்களுடைய முழு பொருட்செல்வத்துடன் ஹிஜ்ரத் செய்யவில்லை.

அணிய ஒரு ஆடை கூட இல்லாத ஏழை முஸ்லிம்களும், வாழ்வாங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் எல்லாவற்றையும் துறந்து ஒன்றுமில்லாமல் அகதிகளாக, ஈமான் எனும் உயரிய செல்வத்தை மட்டுமே உடன் எடுத்துக் கொண்டு மதீனா நோக்கி ஒவ்வொருவராக, சில குழுக்களாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

அந்த அணியில் அப்துர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

ஆம்! மக்காவின் பெரும் செல்வந்தராக, செல்வாக்கு மிக்க தலைவர்களான உத்பா, ஷைபா ஆகியோரின் மருமகனாக ( உத்பாவின் மகள் *உம்மு குல்ஸூமையும்*, ஷைபாவின் மகள் *காரிழை* யும் மணம் முடித்திருந்தார்கள் ) வலம் வந்த அப்துர்ரஹ்மான் ஒரு சில திர்ஹத்தோடு, உடுத்திய ஆடையோடு, செல்வாக்கு, செல்வம் என அத்துனையையும் துறந்து ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவற்றையும் துறந்து வந்த முஹாஜிர்களை அன்ஸார்களிடம் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

அன்ஸாரிகளும் அவ்வாறே மனமுவந்து முஹாஜிர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொண்டனர்.

அப்படி ஏற்படுத்தப் பட்ட சகோதர உறவின் மூலம் சகோதரர்களானார்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸஅத் இப்னு ரபீஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்.

இங்கே தான் தியாகத்திற்கும், உயர்ந்த எண்ணத்திற்குமான போட்டி ஏற்பட்டது. ஆம்! தம் சகோதரர் அப்துர்ரஹ்மானை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்ற ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், *"சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களே! இதோ இது என் வீடு இதில் நீங்கள் சரிபாதியை எடுத்துக் கொள்ளுங்கள்! அதோ என் இரு தோட்டங்கள் அதில் நீங்கள் விரும்பும் ஒரு தோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதோ நான் மணம் முடித்திருக்கின்ற என் இரு துணைவியர்கள், இருவரில் எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்! நான் விவாக விலக்கு தந்து இத்தா காலம் முடிந்ததும் நானே உங்களுக்கு மணம் முடித்து தருகின்றேன்!"* என்று அகம் மகிழ கூறினார்கள்.

எல்லாவற்றையும் சரி பாதியாகத் தரத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னத ஆத்மாவை, மரியாதை கலந்த பார்வையோடு, புன்னகை பூத்த முகத்தோடு அக மகிழ்வோடு ஏறிட்டுப் பார்த்து, *"ஸஅதே! என் சகோதரரே! அல்லாஹ் உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உம் செல்வத்திற்கும் அபிவிருத்தியை நல்கட்டும்!*

*உம்முடைய எதையும் நிராகரிக்கும் எண்ணம் எமக்கில்லை, ஆனாலும், இந்த நோக்கத்திற்காக நான் இஸ்லாத்திற்கு வரவில்லை.*

*எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு மதீனாவின் கடை வீதிக்குச் செல்லும் வழியை மட்டும் காட்டுங்கள்! அது போதும்!"* என்றார்கள்.

எதை வேண்டுமானாலும் தர முன்வந்து நின்ற ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தியாகத்தின் முன்பு எதுவுமே வேண்டாம் என்கிற பெருந்தன்மையும், அதன் பின்னணியில் இருந்த உயர்ந்த இலட்சியமும் வென்றது.

*வரலாற்றில் முதன் முதலாக இங்கு தான் தியாகம் தோற்றுப் போனது.*

மதீனாவின் புகழ்பெற்ற கடை வீதியான பனூகைனுகா கடை வீதிக்கு வழிகாட்டப்பட்டார்.

அல்லாஹ்வின் திருப்பெயரை முன் மொழிந்து கடை வீதிக்குள் நுழைந்த அவர் மாவு, நெய், பாலாடைக்கட்டி என சிறு வணிகம் செய்து லாபம் ஈட்டினார்.

உயர்ந்த எண்ணங்களோடும், இலட்சியத்தோடும் அவர்கள் சில திர்ஹத்தோடு வாழ்வைத் துவங்கிய போது அவர்களுக்கு வயது 37 அல்லது 40 தான். அவர்கள் இப்பூவுலகைப் பிரியும் போது 75 வயது.

சற்றேறக்குறைய 35 ஆண்டுகளில் மிகப் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார்கள். *அல்லாஹ்வின் வணிகர்* என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

எந்தளவு அவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால், அவர்களே சொல்கிறார்கள், *"ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியது!"* என்று

எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் நிறைந்த வாயால் உலகிலேயே சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றையும் பெற்றார்கள்.

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பத்துப்பேரில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

அவர்கள் சத்திய சன்மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அவர்கள் பெற்றிருந்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்வத்தில் மதீனாவாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில், *"என் செல்வத்தில் ஐம்பதாயிரம் தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் நானூறு தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்!"* என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள்.

ஒரு போரின் போது ஐநூறு வாகனங்களையும், இன்னொரு போரின் போது ஆயிரத்து ஐநூறு வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் முப்பதாயிரம் வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

ஒரு தடவை எழுநூறு ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை ஐநூறு குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த நாற்பதாயிரம் தீனார்களை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

*ரலியல்லாஹு அன்ஹும் வ ரலூ அன்ஹு*

(நூல்: இஸ்தீஆப்,
தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா,
உஸ்துல் காபா,
ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..)

17 hours ago | [YT] | 6

FAHMI CHANNEL

*الحمدلله رب العالمين اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبارِكْ عَلیٰ سَيِّدِنا مُحَمَّدٍ وَّعَلیٰ اٰلِهٖ عَدَدَ کَمالِ اللّٰهِ وَکَما يَلِيْقُ بِکَمالِهٖ*

*அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.. அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வ பாரிக் அலா ஸய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி அதத கமாலில்லாஹி வ கமா எலீக்கு பி கமாலிஹீ*

*"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!*

*எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!*

*எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!*

*எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!*

*எங்களை மன்னித்தருள் புரிவாயாக!*

*எங்கள் மீது கருணை காட்டுவாயாக!*

*நீயே எங்கள் பாதுகாவலன்;*

*ஏக இறைவனை நிராகரிக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" 2:286*

*حَسْبِىَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ*

*"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.*

*(வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன்*

*அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" 9:129*

*عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏*

*"நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம்.*

*எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" (10:85)*

*எங்களின் மார்க்கத்தைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களின் இவ்வுலக விஷயங்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களைக் கவலையில் ஆழ்த்தும் விஷயங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களின் மீது வரம்புகடந்தவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களின் மீது பொறாமை கொண்டவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களை தீய எண்ணத்துடன் நெருங்குபவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.*

*எங்களின் மரண நேரத்திலும் அல்லாஹ்வே போதுமானவன்.*

*رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏*

*'எங்கள் இரட்சகனே!! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; எதற்கும் நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது".*


*எங்கள் இறைவா! இறை நிராகரிப்பாளர்களுக்கு எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே!*

*எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்". (60:04-05)*

*رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏*

*"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக;*

*மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (2:201)*

*துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இந்த ஜுமுஆவுடைய நன்நாளில் இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம் யா அல்லாஹ் ஏற்றுக்கொள்வாயாக!..*

*அல்லாஹும்ம ஸல்லி அலா கைரி கல்(க்)கிக ஸய்யிதினா முஹம்மதின் வபாரிக் வ ஸல்லிம் அலைஹி.*

*ஆமீன்.. ஆமீன்... யா ரப்பல் ஆலமீன்...!*

*வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.*

17 hours ago | [YT] | 8

FAHMI CHANNEL

*________﷽________*

*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*

*இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......*

*بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان*
*امين امين يارب العالمين!*

💖💖💖💖💖💖💖💖💖

*இனிய இரவு வாழ்த்துகள்!*

*╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗*

*காகமும் கிளியும்!*                 

பங்களா முகப்பில் இருந்தது தங்கக் கூண்டு.
அதில், அழகான கிளி அடைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு அழகு என்ற கர்வம் மிகுந்திருந்தது.

கூண்டில், தினை, நெல், மிளகாய் பழம் என உணவுகள் இருந்தன; சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் நிரம்பியிருந்தது; அருகில் அழகிய ஊஞ்சலும் இருந்தது.

அந்த பங்களா அருகில் வேப்ப மரத்தில் கூடு கட்டிய காகம், குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.

அதை எப்போதும் ஏளனமாக பார்த்தது கூண்டுக்குள் இருந்த கிளி.

ஒரு நாள் -

நிறத்தை கூறி கிண்டலாக அழைத்தது கிளி.

திரும்பிய காகத்திடம், 'என்ன பிழைப்பு உன்னுடையது; உன்னை கண்டால் மக்கள் முகத்தை சுளிக்கின்றனர்; கல்லை விட்டு எறிகின்றனர்.
என்ன அருவெறுப்பான நிறம்;

என்னைப் பார்...
பச்சை நிறம், சிவந்த மூக்கு;
எவ்வளவு அழகாக உள்ளேன்...' என, பெருமை பேசியது கிளி.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தது காகம்.

பெருமை பேசுவதை நிறுத்தவில்லை கிளி.

சரியான பாடம் புகட்ட நினைத்த காகம்,
'நீ அழகுதான்;
மக்கள் உன்னை நேசிக்கின்றனர் என்பதும் உண்மை தான்; அதனால் உனக்கு என்ன பயன்...

நீ இருப்பது சிறை தானே;
என்னைப் போல், சுதந்திரமாக பறக்க முடியுமா...
எனக்கு மக்கள் மரியாதை செய்கின்றனர்; உணவை, தினமும் எனக்கு வைத்த பின் தான் உண்கின்றனர்...

'முன்னோர் சடங்கில் கூட, எனக்கு உணவு படைத்தபின் தான், பந்தியில் அமர்கின்றனர்.
நல்ல காற்று,
பரந்த ஆகாயம் என, விருப்பம் போல் வாழ்கிறேன்.

உன் நிலையை பார்; உன் எஜமான் வைத்தால் தான் சாப்பாடு;
அழகாக இருந்து,
என்ன பயன்...
நீ அடிமை...
உன்னிடம் பேச நேரம் இல்லை...' என பறந்தது காகம்.

திடீரென்று கூண்டருகே தாவியது பூனை.

பயத்தில் நடுங்கிய கிளி, அடிமை என்பதை உணர்ந்தது.
ஆதலால்
அனைவரையும் மதித்து நடக்க வேண்டும்.

💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்...

*இந்த இரவு இனிதாகட்டும்*

தொகுப்பு...

*S.S.ஷேக் ஆதம் தாவூதி*

*No : 02 கடலங் குடி*

*மயிலாடு துறை*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

18 hours ago | [YT] | 2

FAHMI CHANNEL

🕋
*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்*

இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*

*அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*

*(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).*

🗣 *அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *

💙 *நூல் : புகாரி 4797*

🌹 *பலன்கள்*

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

🗣 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*

🪶 ➖ ☝🏻 ➖ 🪶

❤️ *நூல் : நஸாயீ*

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

1 day ago | [YT] | 74

FAHMI CHANNEL

*✨ அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம். ✨*

*🌟 ஸூரா அல்-அஃலா (மிக உயர்ந்தவன்) 🌟*

*அத்தியாயம் 87 | வசனங்கள் 19*

*சிறு குறிப்பு:*

⭐ இது அல்குர்ஆனின் எண்பத்தி ஏழாவது அத்தியாயம். இந்த அத்தியாயம், மிக உயர்ந்தவனாகிய (அல்-அஃலா) உமது இரட்சகனின் திருநாமத்தைத் துதிப்பீராக! என்று கட்டளையிடுவதன் மூலம் தொடங்குகிறது. (வசனம் 1)

⭐ அல்லாஹ்வே அனைத்தையும் படைத்து, சீரமைத்து, எல்லாப் பொருட்களுக்கும் அதன் தக்க அளவை நிர்ணயம் செய்தான் என்று இது விவரிக்கிறது. (வசனம் 2-3)

⭐ இந்த அத்தியாயம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. நாம் உமக்கு ஓதிக் காண்பிப்போம்; எனவே, நீர் மறக்க மாட்டீர்; அல்லாஹ் நாடியதைத் தவிர என்று உறுதி அளிக்கிறது. (வசனம் 6-7)

⭐ இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கம், மறுமை நாளில் தூய்மையானவர்களும், பயபக்தியுடையவர்களும் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று விவரிப்பதாகும். அவர்கள் தவறான வார்த்தைகளைப் புறக்கணித்து, அல்லாஹ்வின் நாட்டை அடைந்தவர்கள். (வசனம் 14-15)

⭐ மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மறுமை வாழ்வைப் புறக்கணிக்கிறார்கள் என்று இந்த அத்தியாயம் கண்டிக்கிறது. மறுமை வாழ்வோ மிகச் சிறந்தது மற்றும் நிரந்தரமானது ஆகும். (வசனம் 16-17)

⭐ இந்த அறிவுரைகள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் ஏடுகளிலும் இருந்தன என்று கூறி இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.
(வசனம் 18-19)

1 day ago | [YT] | 6

FAHMI CHANNEL

ஒவ்வொரு வெள்ளி இரவில் இதை ஓதவும்👇
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
❤️அல்லாஹூம்ம ஸல்லி அலா ஸெய்யதினா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யில் ஹபீபில் ஆலிம். கத்ரில் அலீமில் ஜாஹி. பி கத்ரி வ அலமதிக வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லிம். ❤️

ஆதி_முதல்_ஒளிவான அகிலங்களின் ஒளியே யா ரஹ்மத்துல் லில் ஆலமீன்.🌹
💚💚💚💚💚💚💚

யா_ராஹத்துல் ஆஷிகீன் அண்ணலே யா ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்*🌹

கண்மணி நாயகம் ஸெய்யதினா ஹபீப் நூரே முஹம்மது ரஸூல்லல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள்...🌹

அழகான நூரானவர்கள்...!!
மணம்பெற்றவர்கள்..🌹

மதுரமானவர்கள்..!!
மேன்மையானவர்கள்..!!இறையச்சமுடையவர்கள்..!!🌹

பெருமைக்குரியவர்கள்..!!
நாகரீகமுடையவர்கள்..!!
கொடையுடையவர்கள்..!!
அழகானவர்கள் ..!!🌹

ஒழுங்கானவர்கள்..!!
உதவிபுரிபவர்கள்..!!
வெற்றிவுடையவர்கள்..!!
உயர்வானவர்கள்...!!🌹

தலைமைதனமுடையவர்கள்..!!
வணக்கமுடையவர்கள்..!!
புகழுக்குரியவர்கள்..!!
மார்க்கமுடையவர்கள்..!!🌹

சத்தியசீலமுடையவர்கள்..!!
நேர்வழியுடையவர்கள்..!!
சீதேவிதனமுடையவர்கள்..!!
துப்புரவானவர்கள்..!!🌹

உதவியுடையவர்கள்..!!
நூரும் ஒளியுமானவர்கள்..!!
பிரகாசமானவர்கள்...!!
பிரசித்திபெற்றவர்கள்....!!!🌹

தெளிவானவர்கள்...!!!
தூய்மையானவர்கள்..!!
கூர்மையானவர்கள்..!!
சிறப்பானவர்கள்...!!🌹

அறிந்தவர்கள்...!!
இரக்கமுடையவர்கள்..!!
கிருபையுடையவர்கள்..!!
உயர்வானவர்கள்...!!🌹

பிரயோசனமுடையவர்கள்...!!
சுத்த வீரமுடையவர்கள்...!!
பேணுதலுடையவர்கள்..!!
உள்ளதை போதுமாக்கிகொள்பவர்கள்..!!🌹

தயாளமுடையவர்கள்..!!
பயனுள்ளவர்கள்...!!
வரிசையானவர்கள்...!!
விளக்கமுள்ளவர்கள்.. !!🌹

பூரணமுடையவர்கள்..!!
பொறுமையுடையவர்கள்..!
நேர்மையும் நீதியுமுடையவர்கள்...!!
நன்மையுடையவர்கள்...!!🌹

மஹா மேன்மையுடையவர்கள்...!!
அன்புள்ளவர்கள்...!!
மிக சங்கையானவர்கள்..!!🌹

ஸெய்யதினா அஹமது , ஹாமிது , மஹ்மூது...!! ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்
மக்களுக்கு மன்றாட்டம் புரிபவர்கள்...!!🌹

ஹவ்லுல் கவ்தர் தடாகத்திற்கும்..
லிவாவுல் ஹம்து எனும்
கொடிக்கும் உடைமையுடையோராகவும்
இருக்கிறார்கள்.....🌹

யா ரஹ்மத்துன் லில் ஆலமீன்...🌹
அகில உலகிற்கும் அருட்கொடையானவர்கள்...!!!🌹

🌹ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 🌕

1 day ago | [YT] | 4

FAHMI CHANNEL

*ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்-204*

*உஹுத் போர்*

*குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்*

பத்ருப் போரில் தோல்வியைத் தழுவியது ஒருபுறம்; தங்களின் மாபெரும் தலைவர்கள் கொல்லப்பட்டது மறுபுறம் என கோபத்தில் கொதித்துப் போயிருந்த குறைஷிகள் பழிதீர்க்கும் வெறியோடு காத்திருந்தனர்.

எங்கே நாம் படும் இன்னல்களும் துன்பங்களும் முஸ்லிம்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அவமானத்தில், கொல்லப்பட்டவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுவதோ, அப்போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க முயற்சிப்பதோ கூடாது என தடையும் விதித்து இருந்தனர்.

கோபம் தணியும் அளவிற்கு, பழிவாங்கும் வெறியின் தாகத்தைத் தீர்த்துகொள்ள, பெரிய அளவில் ஒரு போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று குறைஷிகள் அனைவரும் ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் இறங்கினர்.

இப்போரைச் சந்திப்பதற்கு மிகுந்த உற்சாகத்துடனும், ஆவேசத்துடனும் இருந்த குறைஷித் தலைவர்களில் இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமையா, அபூஸுஃப்யான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதற்காக அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை: அபூஸுஃப்யான் பத்திரமாக பாதுகாத்து அழைத்து வந்த வியாபார கூட்டத்தில் இருந்த பொருட்களை அப்படியே வைத்துக் கொண்டனர். இந்த வியாபார கூட்டம்தான் பத்ருப்போருக்கான காரணமாக இருந்தது. எனவே, அந்த செல்வங்களுக்குரியவர்களிடம் சென்று, "குறைஷிகளே! நிச்சயமாக முஹம்மது உங்களுக்கு அநியாயம் செய்திருக்கிறார். உங்களில் சிறந்தவர்களைக் கொன்றிருக்கிறார். எனவே, அவரிடம் சண்டை செய்வதற்காக எங்களுக்கு இந்தப் பொருட்களை கொடுத்துதவுங்கள். அதன் மூலம் நாம் அவர்களிடத்தில் பழி தீர்த்துக் கொள்ளலாம்" என்று கூறினர். அதற்கு அதன் உரிமையாளர்களும் இணங்கி அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றனர். அந்த வியாபார பொருட்களில் 1,000 ஒட்டகங்களும், 50,000 தங்க நாணயங்களுக்குரிய பொருட்களும் இருந்தன. இது குறித்து அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:
*"நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மென்மேலும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்."* (அல்குர்ஆன் 08:36)

இதற்குப் பின் மக்காவைச் சுற்றியுள்ள பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்கள், கினானா மற்றும் திஹாமாவாசிகள் ஆகியோரிடம், "முஸ்லிம்களுடன் நடக்க இருக்கும் போரில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்" என்று அறிவித்தனர்.

மக்களைப் போருக்குத் தூண்ட மேலும் பல வழிகளைக் கையாண்டனர். *அபூ இzஸ்ஸா* என்ற கவிஞனை ஸஃப்வான் இப்னு உமையா இதற்காகத் தயார் செய்தான். இக்கவிஞன் பத்ருப்போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவனை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்து, *இஸ்லாமிற்கெதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது* என்று அவனிடம் வாக்குறுதி வாங்கினார்கள். ஆனால், ஸஃப்வானின் ஆசை வார்த்தைகளுக்கு அபூஇஸ்ஸா வசப்பட்டான். "நீ போரிலிருந்து உயிருடன் திரும்பினால் உனக்கு பெரும் செல்வத்தைக் கொடுப்பேன். இல்லை நீ கொல்லப்பட்டால், உனது பெண் பிள்ளைகளை நான் என் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறேன்" என்று ஸஃப்வான் வாக்குறுதி கொடுத்தான்.

அபூ இஸ்ஸா உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தனது கவியால் குறைஷியரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான்.
இதுபோல் மக்களைப் போருக்கு ஆர்வமூட்ட முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்ற மற்றொரு கவிஞனையும் நியமித்தார்கள்.
அபூ ஸுஃப்யானால் சென்றமுறை (ஸவீக் போரில்) தனது மனதிலுள்ள பழிவாங்கும் ஆசையை சரிவர நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் பொருட்களில் பெரும்பாலானவற்றையும் அவர் இழந்தார். ஆகவே, முஸ்லிம்கள் மீது மிகுந்த எரிச்சலுடன் இருந்தார்.

ஜைது இப்னு ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹுவுடைய தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டம் குறைஷிகளது பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து அளவிட முடியாத கவலையை அவர்களுக்கு அளித்திருந்தது. ஏற்கனவே பத்ரில் தங்கள் தலைவர்களை இழந்து துக்கக் கடலில் மூழ்கியிருந்த இவர்களுக்கு இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது. எனவே, முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் மத்தியில் தீர்வாக அமையும் ஒரு போரைச் சந்திப்பதற்காக குறைஷிகள் முழு வேகத்துடன் செயல்பட்டனர்.

*குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்..*


*(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*

1 day ago | [YT] | 11

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு...

கண்ணியத்துக்குரிய உலமாப்பெருந்தகைகளே!!!...

" ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு
பதம் " எனச்சொல்வார்களல்லவா... அந்தத் தத்துவத்தின் பார்வையில் தான்,,
அமீருல்முஃமினீன் ஹழ்ரத் உமர் இப்னுல்
ஃகத்தாப் ரலியல்லாஹு அன்ஹு-அவர்கள்,,,
"உள்ளத்தை ஆட்சி செய்யக்கூடிய உன்னதமான ஆளுமைகளை உருவாக்கிட வேண்டும்" என்று சிறந்த தலைமுறையினருக்கான வியூகத்தை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தார்கள்...!

கடல் நுரையைப்போல
அலையலையாக
அதிவேகமாக புறப்பட்டு வந்து
ஒன்றும் செய்யாமல்
அடங்கிடக்கூடிய
"வெற்று மனிதர்களாக"
நாம்,, இருந்துவிடக்கூடாது..!

நீண்ட இலக்குடன்
திடமான மனதோடு
தரமான நற்செயல்களால்
தகுதிமிக்க வல்லமை பெற்ற சமுதாயத்தை வழிநடத்திச் சென்றிடும் முன்னோடியாகத் திகழ வேண்டும்...!.

அப்படியானால்,,
நம் நாளைய இளைய
சமுதாயமான சிறுவர்களுக்கு...
இன்றே "எது முதலில்
வேண்டும்???" என்பதை
கற்பிக்க வேண்டும்..

இந்தக் கேள்விக்கான
பதிலையே விரிவான
விளக்கங்களோடு
"فقه الاوليات"
"ஃபிக்ஹுல் அவ்வலிய்யாத்" எனும்
புத்தகத்திலே எழுதியுள்ளேன் என
டாக்டர் யூசுப் கர்ளாவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்,
முன்னுரைக் குறிப்பிலே சொல்லி உள்ளார்கள்...!

ஆக,, மார்க்கக்கல்வி -
உலகக்கல்வி எதுவாயினும் முதலில்
நம் பிள்ளைகளை
ஒழுக்கத்துடன் கூடிய
கல்வியை கற்பிக்கச் செய்ய வேண்டும்.
பிறகு, கூடுதலான
அறிவு தெளிவிற்காக
மற்ற கல்வி அகமியங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதில்,
முதல் லட்சியமாக
"இறைவனை அடைகிற நேரிய பாதையை (الهداية الي الله)கண்டறிந்து
செயல்பட வேண்டுமென " ஆக்கிக் கொள்ள வேண்டும்..

எப்போது இந்த லட்சியத்தை முதலில்
ஆக்கப்படுகிறதோ...
அதிலிருந்தே வாழ்வினில் வெற்றிதான்"" என்று
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டின் முஜத்திது அல்லாமா இமாம் கஸ்ஸாலீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள், தங்களின்
"பிதாயத்துல் ஹிதாயா'
என்ற அற்புதமான புத்தகத்தில் கூறியுள்ளார்கள்...!

வாருங்கள், படிப்போமா????.

இன்ஷா அல்லாஹ்
நாளை பார்க்கலாம்...

வஸ்ஸலாம்...
என்றும் உங்களில் ஒருவன்,,
"எஸ்டேட் மைந்தர் ஆலிம்"
M.Y.அப்துர்ரஹ்மான் பாகவி பாஜில்மழாஹிரி.
நிறுவனர்.
புஷ்ரா இஸ்லாமிய நூல்கள் பதிப்பகம்.இராயபுரம்.
சென்னை.
தலைமை இமாம்.
ஜாமிஆ மஸ்ஜிது.
சீர்காழி V வடகால்.1-1-2026.

1 day ago | [YT] | 7

FAHMI CHANNEL

*மஹான்களின்*
*மணிமொழிகள்*
✨✨✨✨✨✨✨✨
*தொழுகையாளிகள் பலவிதம்*

•┈•✿❁ ﷽ ❁✿•┈•

*ஹஜ்ரத்* *இப்னுல்* *கைய்யிம்* *ரஹ்மதுல்லாஹி* *அலைஹி* அவர்கள் கூறுகிறார்கள் : தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள்.

1 - தண்டனைக்குரியவர்.

2 - விசாரணை செய்யப்படுபவர்.

3 - பாவங்கள் மன்னிக்கப்படுபவர்.

4 - நற்கூலி வழங்கப்படுபவர்.

5 - இறை நெருக்கத்தைப பெறுபவர்.


1 : சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.

2 : மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் நினைவின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் இறைவனிடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.

3 : தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இவரின் பாவங்களை அந்த தொழுகை இல்லாமல் ஆக்கி விடும்.

4 : தொழுகையின்
முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். இவர் கூலி வழங்கப்படுபவர்.

5 : மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர்.
✨✨✨✨✨✨✨✨
நூல் : - *அல்* *வாபிலுஸ்ஸய்யிப்* *மினல்* *கலிமித்தய்யிப்*
✨✨✨✨✨✨✨✨
தொழுகையை இஸ்லாம் கடையாக்கியிருக்கிறது.ஆனால் நம்மில் அதிகமானோர் தொழுவதே கடமைக்காகத்தான், இன்னும் அதிகமானோர் அது கடுமை என்பதைக்கூட உணராமல் சிந்திக்காமல் வாரந்திர தொழுகையாளியாக துன்ப துயர நேர தொழுகையாளியாக பெருநாள் தொழுகையாளியாக இருப்பது வேதனை தரும் செய்தி 😔
✨✨✨✨✨✨✨✨✨

1 day ago | [YT] | 5

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* துஆ (பிரார்த்தனை)
💚💚💚💚💚💚💚💚💚

ஹிஜ்ரி *_1447_* , ரஜப் பிறை 🌙 *11*

*01-01-2026*~ , வியாழக்கிழமை

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* .....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

அருளாளனே! அல்லாஹ்வே!
எங்களின் நேரங்களிலும்,
வாழ்நாட்களிலும் பரக்கத் செய்து இம்மை,மறுமைக்கு பலனுள்ள காரியங்களில் எங்களை ஈடுபடுத்துவாயாக! உன்னுடைய நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகமதிகமாக ஸலவாத் ஓதும் நஸிபை தருவாயாக! அந்த மகத்துவ மிக்க! ஸலவாத்தின் பொருட்டால்!
எங்களின் வாழ்வாதரங்களில் பரக்கத் செய்வாயாக!

யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! யா அல்லாஹ்! அப்பாவி பாலஸ்தீன மக்களை நீ காப்பாற்று! அவர்களுக்கு நீ வெற்றியை கொடு! கெடுகெட்ட யூத நாடோடிகளை அந்த பாலஸ்தீன மண்ணைவிட்டும் நீ துடைத்தெறி! பைத்துல் முஹத்தஸை முழுமையாக இஸ்லாத்தின் கீழ் நீ கொண்டு தாருவாயாக! இஸ்ரேலுக்கும் அவர்களுக்கு ஆதரவான கேடுகெட்ட நாய்களுக்கும் எதிரான போரில் நீ பாலஸ்தீனத்திற்க்கு! நீ வெற்றியை கொடு! நீயே புகழுக்குரியவன்!

யா அல்லாஹ்!
எங்களுக்கு எவைகள் பலனளிக்குமோ அவைகளைக் கற்றுக் கொடுப்பாயாக!
எவைகளைக் கற்றுக் கொடுத்தாயோ அவற்றை எங்களுக்கு பலன் தருபவைகளாக ஆக்குவாயாக!
எங்களை உந்தன் நல்லடியார்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!
நீ எவற்றை விரும்புகிறோயோ, திருப்திகொள்கிறாயோ அவற்றை செயல்படுத்த தவ்பீக் செய்வாயாக!

யா அல்லாஹ்!
நேர்வழி பெற்றோர்கள் கூட்டத்தில்
எங்களை ஆக்குவாயாக!

‎رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
“ரப்பனா! எங்கள் இறைவனே!

எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் ﷺ அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கின்றோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
💚💚💚💚💚💚💚💚💚

1 day ago | [YT] | 9