SRI SORNA KALIAMMAN

🌿அருள்மிகு சொர்ண காளியம்மன் திருக்கோவில்,🐯🔱🐓
பொருள்வைத்தச்சேரி(பொரவச்சேரி),
நாகப்பட்டினம் மாவட்டம்.

●‌‌பொன்னழகியின் பெயர் காரணம்🪷💫:

ஆடல்வல்லானுக்கு ஈடாகத் தன்னாலும் ஆடமுடியும் எனச் சவால் விடுத்த சங்கரி,உக்ரமான ஆட்டத்தில் காளியாக வடிவெடுத்தும் தாள் உயர்த்தித் திருநடனம் புரிந்தாள் அல்லவா? அப்படி ஆடிய சமயத்தில் பொன்னார் மேனியரான ஈசனின் வண்ணம் அம்பிகை மேல் எதிரொளிக்க, தங்கமாக சொக்கச் செய்யும் சொர்ணத் திருமேனியாக தகதக என்று மின்னியபடி தாண்டவம் புரிந்தாள் அன்னை,அந்த வடிவமே சொர்ண காளி!

●‌திருவிழா🪔✨:

வருடந்தொரும் வரும் ஆடி மாதம் முதல் செவ்வாய் அம்மாள் தன் கால் சலங்கைகள் முழங்க திருநடனம் புரிந்து வல்லானை வதம் செய்து தனது பொன் சிரிப்பால் அனைவருக்கும் காட்சி தருகிறாள்.

முந்தைய நாள் திங்கள் இரவு துர்க்கையம்மன் புறப்பட்டு அருள்பாலிக்கிறாள்.

அதனை தொடர்ந்து அம்மாள் ஐந்து நாள் வீதிஉலா வந்து அருள்புரிகிறாள்.

ஐந்தாம் நாள் சனிக்கிழமை இரவு அம்மாள் நடைப்பாவாடை திருநடனத்துடன், வென் பட்டு உடுத்தி வென் மலர் சூடி அழகிய திருநடனத்துடன் ஆலயம் சென்று, ஊஞ்சல் உற்சவத்துடன் அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள்.



1:00

Shared 55 years ago

1.4K views

1:00

Shared 55 years ago

1.7K views

1:00

Shared 55 years ago

1.5K views

1:00

Shared 55 years ago

319 views

1:00

Shared 55 years ago

710 views