MAHENDRAN சிவவாக்கியர்

ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க 🙏🌙🔥
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
ஓம் குருவே வாழ்க 🔥
ஓம் குலதெய்வமே வாழ்க 🔥
எல்லாம் சிவமயம் 🙏
சர்வம் சிவார்ப்பணம்🙏🔥❤️
சித்தர் சிவவாக்கியம்

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே.

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

சிவன் ஒன்றில் அனைத்து அடங்கும் 🔥💫✨💐♥️


MAHENDRAN சிவவாக்கியர்

எதை நீ கொடுக்கிறாயோ அதையே நீ திரும்ப பெறுவாய் 💯💐🙏

3 weeks ago | [YT] | 6

MAHENDRAN சிவவாக்கியர்

ஆசன பயன்பாடுகள் 🙏💐💯

1 month ago | [YT] | 4

MAHENDRAN சிவவாக்கியர்

"பிரபு" ஆத்மா என்றால் என்ன?!

1 month ago | [YT] | 7

MAHENDRAN சிவவாக்கியர்

உங்கள் குருவிடம் நீங்கள் எதிர்பார்ப்பது 🙏🔥🌙

3 months ago | [YT] | 3

MAHENDRAN சிவவாக்கியர்

Golden words 💐💯
#Think positive 💯
#belive your self 💯

3 months ago | [YT] | 3

MAHENDRAN சிவவாக்கியர்

கோயில் விவரம்🙏🔥🌙


பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த இறைவனின் திருமேனியில் பட்டு இரத்தம் வரக்கண்டு வருந்திற்று, இறைவன் அச்சுவடுகளைத் தமக்கு அடையாளமாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தை கருவூரிலே முற்றுவிக்கச் செய்வதாக அருளினார். காமதேனு தங்கி வழிபட்டதால் திருவான்பட்டியுடையார் என்ற திருப்பெயரோடு, இறைவன் இங்கே வழிபடும் ஆன்மாக்கட்கு முக்தியின்பத்தை அருள் செய்து விளங்குகிறார். இன்றும் இவ்வடையாளங்கள் திருமேனியில் காணப்படுகின்றன.

புராதனமான இக்கருவறை கரிகாலசோழரால் அமைக்கப்பெற்றது. இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, அதிமூர்க்கம்மன் (காளி), காலவமுனிவர் ஆகியோரின் தவத்திற்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆனந்த திருநடனம் ஆடி காட்சி கொடுத்தது பங்குனி உத்திரத் திருநாள் ஆகும். மூர்த்தி இங்கு அருள்மிகு பட்டீசுவரர் தானே தோன்றி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். சிவலிங்கம் சதுர வடிவில் அமைந்து ஆவுடையாருடன் கூடியதாக கொண்டது. இத்திருமேனியில் இறைவன் எழுந்தருளி காமதேனுவிற்கு அருள்பாலித்துள்ளார். இது மாடு அடைக்கும் பட்டியாக இருந்தது. கொங்கு நாட்டில் மாட்டு கொட்டகை என்பதை பட்டி என அழைப்பர். எனவே பட்டீசுவரர் எனும் சிறப்பு பெயர் பெற்றார். தலம் இத்தலம் பல சிறப்பு பெயர்கள் பெற்றதாக உள்ளது. அவை 1) ஆதிபுரி, 2) பட்டிபுரி, 3) தேனுபுரம், 4) தவசித்திபுரம், 5) பிப்பிலாரண்யம், 6) மேலைச்சிதம்பரம், 7) மேலைசிவபுரி, 8) தட்சிணகாசி, 9) பிறவாநெறித்தலம், 10)பத்திபுரம், 11) ஞானபுரம், 12)வன்னீகபுரம், 13) மேருபுரம், 14)பசுபதிபுரம், 15) குருஷேத்திரம், 16) தற்காலம் பேரூர் என அழைக்கப்படுகிறது.

தீர்த்தம்

இங்கு விளங்கக்கூடிய தீர்த்தங்கள் 1) சிருங்கத் தீர்த்தம், 2) பிரம்ம தீர்த்தம், 3) சக்கர தீர்த்தம், 4) குண்டிகை தீர்த்தம், 5) காஞ்சிமாநதி, ஆகியவையாகும். தல புராணம் இத்தலபுராணம் வடமொழியில் ஆதிபுரி மகாத்மியம் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதினத்தை சேர்ந்த கச்சியப்ப முனிவர் என்பவரால் இத்தல புராணத்தை பேரூர் புராணம் என்னும் திருப்பெயரால் எழுதியுள்ளார். இப்புராணம் 36 படலங்களுடன் இறைவனின் திருவிளையாடல்கள் விளக்குகின்றது.


அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District

பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த இறைவனின்...

திருக்கோவில் நிலங்கள்நன்கொடையாளர் பதிவுதிருக்கோயில் நிலம் மீட்பு விவரம்
கூடுதல் சேவை
அறிக்கை பலகை
ஆறாம் திருமுறை
இணைப்புகள்
அழைப்புகள்
அறிக்கை பலகை
ஆறாம் திருமுறை
இணைப்புகள்
அழைப்புகள்
அறிக்கை பலகை
ஆறாம் திருமுறை
இணைப்புகள்
அழைப்புகள்🌙🌙🌙🌙

நடை திறக்கும் நேரம்
நடை திறக்கும் நேரம்
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.
🙏🔥🌙💐💯

3 months ago | [YT] | 14

MAHENDRAN சிவவாக்கியர்

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:🔥🔥🔥

"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே, பாசஹஸ்தாய தீமஹி, தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்" 🌙🌙🌙

இதனுடன்,

"ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்"

என்ற மந்திரத்தையும் கூறலாம் 🙏🔥🌙💐💯

இந்த மந்திரங்களை தினமும் காலையில் சூரியனை நோக்கி நின்று ஜெபித்தால் சூரிய பகவானின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும், சூரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால், ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் எதிர்மறை தாக்கங்கள் நீங்கும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது💯💯💯


youtube.com/shorts/zksq0s-aka...

4 months ago | [YT] | 19

MAHENDRAN சிவவாக்கியர்

திருவண்ணாமலையில் ஜுவசமாதி ஆன சித்தர் ?

4 months ago | [YT] | 4

MAHENDRAN சிவவாக்கியர்

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌ பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..

கெஜ்ஜெ கல்களா த்வனிய தொருத்த
ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட..
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே..

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா..

கனக வ்ருஷ்டியா கரேயுத பாரே
மன காமநய சித்தியா டோரி..
தினக்கர கோடி தேஜதி ஹோலுவ
ஜனகராயண குமாரி பேக..

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா..

அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ நித்ய சுமங்கல..
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே..

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா..

சங்கியே இல்லாத பாக்யாவா கொட்டு
கங்கனா கைய திருவுட பாரே..
குங்குமாங்கிதே பங்கஜ லோசன
வெங்கடரமணன பட்டத ராணி..

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா..

சக்கரே துப்பட காழுவே அரிசி
ஷூக்ரவாரத புஜய வெலகே..
அக்கரேயுள்ள அழகிரி ரங்கன
சொக்க புரந்தர விடடல ராணி..

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா..!

4 months ago | [YT] | 6

MAHENDRAN சிவவாக்கியர்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து:

ராகவேந்திரர், அனைத்து உயிர்களிடத்திலும் இரக்கமும், அன்பும் காட்டினார். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் பறவைகள் மீதும் அவர் கருணை காட்டினார். எனவே, இந்த பொன்மொழி, அன்பு மற்றும் கருணையின் அவசியத்தை உணர்த்துகிறது.

கடவுளை நம்பு, அவர் உனக்கு உதவுவார்:

ராகவேந்திரர், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் தனது பக்தர்களுக்கு, கடவுளை நம்பினால் எல்லா கஷ்டங்களையும் கடந்து விடலாம் என்று போதித்தார். இந்த பொன்மொழி, நம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

சாதனை செய்ய நேரமில்லை:

ராகவேந்திரர், தனது வாழ்க்கையில் எப்போதுமே மற்றவர்களுக்கு சேவை செய்வதிலேயே ஈடுபட்டிருந்தார். அவர், தனது நேரத்தை வீணாக்காமல், மக்களுக்கு உதவினார். இந்த பொன்மொழி, நேரத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. 🙏🔥🌙💐💯

4 months ago | [YT] | 16