Welcome to official Youtube channel of Panuvalum Penavum!
We post vedios featuring Book review on literature, life lessons, science and Agriculture.
புத்தகம் விமர்சனம், அறநெறி கதைகள், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை என உங்களுக்கு சுட சுட சுவைமிக்க நிகழ்ச்சிகள்.
புத்தக விமர்சனம் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி நிறைய அரிய தகவல்களை தெரிந்துக்கொள்ள இணைந்திருங்கள்.
Stay connected with us for the updates. Let's have a great time here.
Panuvalum Penavum
வாசகர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து இலக்கிய ஆர்வலர்களுக்கும் முதற்கண் வணக்கங்கள்.
பனுவலும் பேனாவும் வலையொலிக்கு தாங்கள் நல்கி வரும் ஆதவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வலையொலியை தொடங்குவதற்கு முன் தற்போது உள்ள எண்ணற்ற வலையொலிகளுக்கு மத்தியில் புதிதாக ஒன்று தேவைதானா என்கிற கேள்வியே முதலில் தோன்றியது.
"கல்வி கரையில கற்பவர் நாள் சில"
"கற்றது கை மண் அளவு"
என்ற தமிழ் வரிகளே முன்நின்று முடிவுகள் எடுக்க உதவின.
எத்தனை எத்தனை நல்ல வலையொலிகள் இருப்பினும் இன்னும் பகிர வேண்டிய செய்திகளும் கடல் போல் இருக்கவே செய்கின்றன. அவற்றில் கையளவேனும் கற்று உங்களுடன் சுவைமிக்கவற்றை பகிர ஆவலாக இருக்கவே, பிறந்தது பனுவலும் பேனாவும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப்பதிவில் (blog) எழுதிய வண்ணம் "Siddarth's kanthaka" (siddarthmurugan.blogspot.com) வை உங்கள் ஆதரவின் மூலம் தொடர்ந்து ஓட வைத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது வலையொலியில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இயல் இசை நாடகம் என்ற தமிழில் இயலே எங்களது இப்பயணத்தின் அடி நாதம். அறிவு + இயல் சார்ந்த சுவை மிக்க செய்திகளும் இவ்வலையொலியில் பகிரப்படும்.
நீங்களும் எங்களுடன் உரையாற்றிட இந்த பனுவலும் பேனாவும் Youtube Community வுடன் இணைந்திருங்கள்.
என்றும் அன்புடன்,
நிர்வாக குழு,
பனுவலும் பேனாவும் குழுமம்.
#தமிழ் #தமிழ்புத்தகம் #புத்தகம் #புத்தகவிமர்சனம் #நூல் #தமிழ்இலக்கியம் #இலக்கியம் #bookreview #tamilbooks #writers #readers
3 months ago | [YT] | 1
View 0 replies
Panuvalum Penavum
படைத்தல் காத்தல் அழித்தல் என இம்மூன்றில், அழித்தல் வேலையை அதிவேகமாய் மனிதன் செய்து காட்டியதன் விளைவே இன்று நாம் சந்தித்து வரும் பருவநிலை மாற்றம். மனதளவில் மாற்றம் எழ வேண்டும் எனும் நம்பிக்கையுடன் காலை வணக்கங்கள்!
1 year ago | [YT] | 2
View 0 replies