தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

முஸ்லிம் சமூகத்தை கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் முதன்மை சமூகமாக வளர்ச்சியடைய செய்வதும் அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதும் தான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முதன்மையான இலக்கு.

இந்த இலக்கை அடைவதற்கு முஸ்லிம்களின் பாரம்பரிய கல்வி வழிமுறையான ஆரம்பக் கல்வியிலிருந்து ஆய்வுக்கல்வி வரை அரசின் பாடத்துடன் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட கல்வி முறையாக மாற்றி அமைத்திட வேண்டும்.

மார்க்கல்வி கல்வி – உலக கல்வி இணைக்கப்பட்ட கல்வி முறைக்கு முஸ்லிம் சமூகம் மீண்டும் திரும்ப வேண்டும் என்ற கருத்தியலை கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்திலும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் வாழும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வரும் சகோ.CMN சலீம் அவர்களால் 2009 இல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.

கல்வி இயக்கத்தின் சார்பில் சமூக நீதிமுரசு என்ற மாத இதழ் கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்,போன்றவை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

WhatsApp :- +919789234073
+918939198063


தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

இனிவரும் காலங்களில் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும். நம் பிள்ளைகள் எது படித்தாலும் அவர்களுக்கு AI தொழில்நுட்பம் குறித்த அறிவு கட்டாயம்.

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு அனைத்து பாடப் பிரிவுகளிலும் AI பயன்பாடு குறித்த பாடமும் பயிற்சியும் இந்த ஆண்டு முதல் இணைக்கப்படுகிறது.

பெண்களை பல்துறை அறிவுடைய கல்வியாளர்களாக உருவாக்கும் உயர்ந்த இலக்குடன் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடிஸ் பள்ளி இயங்கி வருகிறது.

8 months ago | [YT] | 46

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

பெற்றோர்களே...
பள்ளி கல்லூரிப் பாடங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தகவல்களை கொடுக்கும்.
சமூகநீதி முரசு மாதஇதழ் அவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ரீதியாக பயணிக்க வேண்டிய திசையை காட்டி பயிற்சியும் அளிக்கும்.
உம்மத்தின் அடுத்த தலைமுறையை ஆளுமைமிக்க அதிகாரமிக்க தலைமுறையாக்கும் இலக்குடன் பயணிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் மாதஇதழ்.
முஸ்லிம் உம்மத்தின் கல்வி மற்றும் வரலாறு சார்ந்த அனைத்து உண்மைகளும் உங்கள் வீடு தேடிவர இன்றே சந்தா செலுத்துங்கள்.
- CMN SALEEM

1 year ago | [YT] | 6

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் 13 ஆவது ஆண்டாக அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 44 இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக் கூடங்களும், பள்ளிப்பாடங்கள் இணைக்கப்பட்ட 3 அரபு மதரஸாக்களும் உருவாக இந்த பயிலரங்கம் பங்காற்றியுள்ளது.
பள்ளிப் பாடங்களும் இஸ்லாமியப் பாடங்களும் இணைக்கப்பட்ட ஒரு நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தை துவங்கி சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் அளிக்கிறது.
தகுதியும் அனுபவமும் வாய்ந்த கல்வித்துறை வல்லுநர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கலந்து கொள்ளவும்.

1 year ago | [YT] | 16

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

தப்லீக் ஜமாஅத்
------------------------
இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் இப்படி ஒரு ஆன்மிக இயக்கம் உருவானதும் நிலைநின்றதும் இதுவரை கிடையாது.
==================
கட்டுரை கொஞ்சம் நீளம் தான்.
கட்டாயம் படித்து விடுங்கள்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இடித்து நாசமாக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் அதிகார பெருமைகளையும், சிதிலமடைந்து போன முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டுகால அறிவுப் பாரம்பரியத்தையும் மீள்கட்டமைப்பு செய்யும் பெருங்கனவுடன் 1865 ஆம் ஆண்டு ஒரு மாதுளை மரத்தின் நிழலில் தாருல் உலூம் தேவ்பந்த் அரபு மதரஸா மெளலானா காசிம் நானூத்வி,மெளலானா ரஷீத் அகமது கங்கோஹி ஆகிய இரண்டு இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
தாருல் உலூம் தேவ்பந்த் மதராஸாவை உருவாக்கிய இருவரில் மெளலானா ரஷீத் அஹமது கங்கோஹி அவர்களிடம் குழந்தை பருவத்திலேயை சீடராக சேர்ந்து 10 ஆண்டுகள் ஆன்மிகப் பயிற்சி பெற்றவர் தான் மெளலானா இலியாஸ் காந்தளவி. தாருல் உலூம் தேவ்பந்தின் மாணவர்.
அல்லாஹ்வுடைய பாதையில் தூய்மையான எண்ணமும் தீனைப்பற்றிய கவலையும் நிறைந்த சில நல்ல மனிதர்களின் முயற்சிகள் அடுத்தடுத்த காலங்களில் பல நல்ல மனிதர்களை உருவாக்கும். அவர்களை சங்கிலித் தொடராக இணைத்து பல சரித்திர சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு தாருல் உலூம் தேவ்பந்தத் மதரஸா ஒரு உன்னதமான உதாரணம்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அதாவது அன்றைய வடஇந்திய (பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட ) கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் ஈமானிய நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. பள்ளிவாசல் மிம்பருக்கு அருகில் பிள்ளையார் சிலையை வைத்து பூஜிப்பது சர்வசாதாரணமான நிகழ்வாக இருந்தது.
1875 இல் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் என்ற இந்துத்துவ அமைப்பினர் ஷுத்தி இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி முஸ்லிம்களின் ஏழ்மையை அறியாமையை அதிகாரமின்மையை பயன்படுத்தி ஆரிய மதத்துக்கு மதம் மாற்றுவதை முதன்மை திட்டமாக செயல்படுத்தினர்.
1923 இல் ஆரிய சமாஜத்தின் ஷ்ரத்தானந்தா என்ற இந்துத்துவ துறவி பாரதீய ஹிந்து ஷுத்தி மகாசபா என்ற அமைப்பை துவங்கி உ.பி. யின் மால்கானா பகுதி ரஜபுத் குஜ்ஜார் ஜாட் இன முஸ்லிம்களை மதம் மாற்றுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்தார்.
1923 முதல் 1927 வரையிலான 4 ஆண்டு காலத்தில் ஒரு இலட்சத்து அறுபத்து மூன்றாயிரம் முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டனர்.இந்த ஷுத்தி இயக்கம் வட இந்திய முஸ்லிம் சமூகத்தில் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியது.
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய பயிற்சியும் பள்ளிவாசல் தொடர்பும் இல்லாததே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்பதை மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்கள் உணர்ந்தார்கள்.கவலையோடும் கண்ணீரோடும் இதற்கான நிரந்தர தீர்வை தேடினார்கள். அல்லாஹ்வின் பெருங்கருணையினால் மௌலானா அவர்களின் உள்ளத்தில் உதித்த நிரந்தர தீர்வு தான் தப்லீக் ஜமாஅத்.
மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களால் "முஸ்லிம்களே இஸ்லாத்திற்கு திரும்புங்கள் " என்ற முழக்கத்தை முன்னிறுத்தி 1926 ஆம் ஆண்டு டெல்லி நிஸாமுத்தீனில் வைத்து தப்லீக் ஜமாஅத் அமைப்பு துவங்கப்பட்டது.
ஒரு முஸ்லிமுடைய அனைத்து வெற்றிக்கும் ஐங்காலத் தொழுகையை தீர்வாக பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னிறுத்தியுள்ளதை அப்படியே பின்பற்றத் துவங்கியது தப்லீக் ஜமாஅத்.
முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கும் அல்லாஹ்வுடைய பாதையில் 1926 முதல் பயணிக்கத் துவங்கி ஒரு நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்யப் போகிறது இந்த மகத்தான ஆன்மிக இயக்கம்.
தப்லீக் ஜமாஅத்துக்கு கொடி கிடையாது.அரசியல் கோஷங்கள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் கிடையாது.உறுப்பினர் அட்டை கிடையாது.IT Wing கிடையாது.ஆனால் தப்லீக் இஜ்திமா என்றால் பல்லாயிரம் - பல இலட்சம் முஸ்லிம்கள் கூடுகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 8 கோடி ஆதரவாளர்களுடன் 150 நாடுகளில் தப்லீக் ஜமாஅத் இயங்கி வருகிறது. பிரிட்டனில் உள்ள 1350 பள்ளிவாசல்களில் 600 பள்ளிவாசல்களில் தப்லீக் ஜமாஅத்தின் தினசரி நடவடிக்கைகள் நடக்கிறது.
ஆலிம்கள் படித்தவர்கள் பணக்காரர்கள் அரசு ஊழியர்கள் என எல்லோரும் கலந்த ஜமாஅத்தாக தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அல்லாஹ்வுடைய பாதையில் சட்டிபொட்டியை தூக்கிக் கொண்டு பல நாட்கள் பல மாதங்கள் நகரங்கள் கிராமங்கள் மலைப்பகுதிகள் பாலைவனங்கள் என்று மிகவும் சிரமமான பாதைகளில் பயணித்து முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கின்றனர்.
இந்த நூறு ஆண்டுகளில் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சகித்துக்கொண்டு பலகோடி முஸ்லிம்களை பள்ளிவாசல்களுக்கு அழைத்து வந்து ஐங்காலத் தொழுகையோடு இணைத்துள்ளனர்.கல்நெஞ்சக்காரர்களுக்கும் கரடுமுரடான முஸ்லிம்களுக்கும் மரணத்தை நினைவூட்டி பயபக்தியுடைவர்களாக மாற்றி காட்டியுள்ளனர்.
கோடிக்கணக்கான முஸ்லிம்களை மூஃமின்களாக தரம் உயர்த்தி ஷரிஅத் சட்ட வரையறைக்குள் கொண்டு வந்துள்ளனர். துஆ எப்படி செய்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தவர்களுக்கு துஆவின் முறைகளையும் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைத்துள்ளனர்.
கருணையாளன் அல்லாஹ்விடம் தங்களது கஷ்ட நஷ்டங்களை கூறி மன ஆறுதல் அடைவது எப்படி என்பதை மிக இலகுவாக கற்றுத் தந்துள்ளனர். ரிஸ்க் அளப்பவனிடம் தங்களுக்கான தேவைகளை கேட்டுப்பெறுதல் எப்படி என்பதை பாமரனுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகின்றனர்.
தங்களது ஆழ் மனதை உறுதிக் கொண்டிருக்கும் பெரும்பாவங்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமினிடம் அழுது மன்றாடி பாவமண்ணிப்பு கேட்பது எப்படி என்பதை கற்றுத் தந்துள்ளனர்.
மார்க்க ரீதியான எந்த கருத்து வேறுபாடுகளிலும் சிக்குவதில்லை. உம்மத்தில் பிளவுகளை உண்டாக்கும் கருத்துக்கள் எதையும் பரப்புவதில்லை. யாரையும் எதற்காகவும் விமர்சிப்பதில்லை. அரைகுறை மேட்டிமைத்தனத்தை யாரிடமும் காட்டுவதில்லை. யாருக்கும் காஃபிர் பத்வா கொடுப்பதில்லை.யாருடைய மானத்துக்கும் சேதம் ஏற்படுத்துவதில்லை.
1947 இல் தாருல் உலூம் தேவ்பந்த் உலமாக்களுடன் பிரிவினைக்கு எதிராக கைகோர்த்து நின்று தங்கள் உயிரை பணையம் வைத்து பல்லாயிரம் மனித உயிர்களை பாதுகாத்துள்ளனர்.
பிரிவினையின் போது எல்லையோர கிராம முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து விட்டதால் அங்கிருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் மாட்டுத் தொழுவங்களாக பன்றி கொட்டகைகளாக மாற்றப்பட்டுவிட்டன.அப்படிப்பட்ட பல கிராம பள்ளிவாசல்களை கண்டறிந்து அவற்றை புதுப்பித்து அங்கே மீண்டும் நகரா அடித்து பாங்கு ஒலித்து ஐங்காலத் தொழுகை நடைபெறச் செய்துள்ளனர்.
அதேபோல எல்லையோர கிராமங்களில் கேட்பாரற்று விடப்பட்ட பல்லாயிரம் கோடிகள் மதிப்புடைய வஃக்ப் சொத்துக்களை கண்டறிந்து பாதுகாத்திடும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தப்லீக் ஜமாஅத்துடன் சித்தாந்த தொடர்புடைய அமைப்புகள் அறக்கட்டளைகள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மதரஸாக்களை நடத்தி வருகின்றனர்.
தப்லீக்கை உருவாக்கிய மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களும் அவர்களுக்குப் பிறகு இந்த ஜமாஅத்தை வழி நடத்தியவர்களும் அல்லாஹ்வின் நேசத்தையும் நெருக்கத்தையும் பெறுவதற்கு இதற்குமேல் என்ன செய்ய வேண்டும் என்பது சாதாரண மனித அறிவின் கேள்வியாக இருக்கிறது.
மனிதர்கள் முன்னெடுக்கும் எல்லா செயல்களிலும் காலப்போக்கில் சில குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும். அதற்கு எந்த ஒரு மனிதனும் ஜமாஅத்தும் அமைப்பும் விதிவிலக்கல்ல. அதையெல்லாம் அலசவேண்டிய அவசியமும் தகுதியும் எந்த மனிதனுக்கும் இல்லை.
இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமான காலம்தொட்டு இன்று வரை இவ்வளவு ஆழமான ஆன்மிகப் புரட்சிக்கு வித்திட்ட ஒரு ஜமாஅத் ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத்தை தவிர வேறு எதுவும் கிடையாது.
மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களின் தூய்மையான எண்ணத்துக்கும் கவலைகளுக்கும் முஸ்லிம்களின் ஈமானை பாதுகாக்க அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கும் அல்லாஹ் வழங்கியுள்ள அங்கீகாரமும் கண்ணியமும் தான் தப்லீக் ஜமாஅத் இவ்வளவு பெரிய அமைப்பாக உலகம் முழுவதும் வியாபித்து உம்மத்துக்கு ஆன்மிகச் சேவையாற்றுகிறது.
இது கியாமத் நாள் வரை நிச்சயம் தொடரும்.
1440 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் ஆன்மிகப் புனரமைப்பின் மாபெரும் அடையாளம் தப்லீக் ஜமாஅத் என்றால் அது மிகையில்லை.
அதனால் தான், ஜனநாயக அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ÇIA - MOSSAD போன்ற சதிகார உளவு நிறுவனங்களுக்கு தப்லீக் ஜமாஅத்தும் தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவும் பெரும் மண்டை குடைச்சலாக இருக்கிறது.
அல்லாஹ் இந்த ஜமாஅத்தை பெருந்திக் கொள்வானாக, அவர்களது குறைகளை மறைத்து மன்னித்து கண்ணியப்படுத்துவானாக...ஆமீன்.
- CMN SALEEM

1 year ago | [YT] | 23

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் ஒருநாள் பயிலரங்கம் சென்னையில் பிப்.10 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
சட்டக்கல்வி என்பது தொழில்முறை படிப்பு (Professional Course) மட்டுமல்ல.இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் அறிவுப் போர்களமாக சட்டக் கல்வியை கருதவேண்டும்.
நுண்ணறிவுடைய வழக்கறிஞர் - முனைவர் பட்டம் (Ph.D in LAW) பெற்ற சட்டத்துறை ஆராய்ச்சியாளர். சட்டம் படிக்கும் உம்மத்தின் பிள்ளைகளுக்கான வாழ்வியல் இலக்கு இது.
இந்த இலக்கை பயிற்றுவித்து அதை அடைவதற்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்பதே இந்த ஒருநாள் பயிலரங்கம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முதன்மை நோக்கம்.
முன்பதிவு கட்டாயம் :
forms.gle/VPGmEeBK6Rim2Yiq8

1 year ago | [YT] | 5

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

நமது பிள்ளைகள் கட்டணம் இல்லாமல் படிப்பதற்கு தமிழகத்தில் வாழ்ந்து மறைந்துள்ள நமது மூத்த தலைமுறை தனது சொந்த சொத்துக்களை வக்ஃபு செய்தும் அரும்பாடுபட்டு நிதி திரட்டியும் சுமார் 11 கலை அறிவியல் அரசு உதவிபெறும் கல்லூரிளை தமிழகம் முழுவதும் உருவாக்கித் தந்துள்ளனர்.
பட்டப்படிப்பு துவங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணம் இல்லாமல் படிப்பதற்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு வேறு எந்த சமூகத்துக்கும் இல்லை.
இந்த மாநாட்டின் செய்திகளும்,உயர்கல்வி குறித்த தனித்துவமான வழிகாட்டுதல்களும், குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு தகுதிபெறும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளும் கல்வி இயக்கத்தின் திட்டமும், முஸ்லிம் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் வசந்தங்களை நிச்சயம் கொண்டுவரும்.
உங்கள் மஹல்லாவில் வாழும் ஏழை எளிய மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோருடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

2 years ago | [YT] | 19

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

அறிவுக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாக உம்மத்தின் பெண் பிள்ளைகள் உருவாகட்டும். அவர்கள் தமிழகத்தின் கல்வித் துறையில் ஆளுமை செலுத்தட்டும்.
ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் இலக்குடன் இயங்கும் மகளிர் கல்லூரி.

2 years ago | [YT] | 15