The brand TS Vel is under construction ......


TS Vel

வியாபாரம் சிறப்பாக நடக்க பரிகாரம்:

கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு, ஜன வசியமும், பணவசியமும் கட்டாயம் தேவை. நிறைய மனிதர்கள் கடைக்கு வந்து போனால் தான் வியாபாரம் நடக்கும். அப்போதுதான் நிறைய லாபமும் நமக்கு பெருகும். கடைவீதிகளில் பார்த்தால் உங்களுக்கு தெரியும். வரிசையாக மல்லிகை பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கும்.

எல்லா கடைகளிலும் ஒரே மாதிரியான மளிகை பொருட்கள் தான் விற்கும். சில இடங்களில் தரம் கொஞ்சம் உயர்வாக இருக்கும். சில இடங்களில் தரம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்றது போல அதற்கான விளையும் நிர்ணயிக்கப்படும். சில மளிகை கடைகளில் மட்டும் கூட்டம் அலைமோதும். ஏனென்றே தெரியாது.

கேட்டால் அந்த கடை ராசியான கடை என்று கூட சில பேர் சொல்லுவார்கள். இப்படி ஒரு குறிப்பிட்ட கடைக்கு மட்டும் பண வசியம், ஜன வசியம் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் மகாலட்சுமி கடாட்சம் தான். பணத்தை ஈர்க்கும் தன்மை அந்த கடைக்காரருக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் அந்த மளிகை கடைக்காரருக்கு நேரம் நல்லா இருக்குது அப்படின்னு சொல்லி ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். இதே போல நம்முடைய கடையிலும் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால், நாம் என்ன பரிகாரம் செய்வது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரம் இருக்கிறது. இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கடைக்கும் வியாபாரம் தேடி வரும்.

வியாபாரம் சிறப்பாக நடக்க பரிகாரம்:

ஒரே ஒரு விரலி மஞ்சள் வாங்கிக்கோங்க. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு போங்க. விசேஷ பூஜைகள் அங்கே நடைபெறும். இந்த விரலி மஞ்சள் துர்க்கை அம்மன் பாதங்களில் வைத்து அந்த ராகு கால நேரத்தில் சிறிது நேரம் துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக முட்டிப்போட்டு உங்கள் கடையில் வியாபாரம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மண்டியிட்டு வேண்டுவது என்று சொல்லுவார்கள் அல்லவா அதே போல வேண்டிக்கொண்டு, அந்த விரலில் மஞ்சளை எடுத்துக்கிட்டு வந்துடுங்க. ராகு காலத்திலேயே கடைக்கு வந்து ஒரு வெள்ளை துணியில் இந்த விரலி மஞ்சள் வைத்து முடிச்சாக கட்டி கடைக்கு உள்பக்கம் ஷட்டர் மூடுவீங்க அல்லவா, அதற்கு உள் பக்கமாக இந்த முடிச்சை ஒரு ஆணியில் தொங்கவிட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்தாலே பணவசியம் ஜனவசியம் ஏற்படும்.

இதை செய்துவிட்டு சும்மாவே இருக்க கூடாது. கடையை நேரத்துக்கு திறந்து வியாபாரத்தில் உட்காரனும். வியாபாரத்தை விரிவு படுத்த நிறைய மக்கள் வந்து உங்கள் கடைகளில் பொருட்களை வாங்க தேவையான விளம்பரங்களை செய்யணும். முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த முயற்சிகளில் வெற்றியை கொடுக்க இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

சின்னதா தள்ளு வண்டி வைத்திருப்பவர்கள் கூட இந்த மஞ்சளை உங்களுடைய தள்ளுவண்டிக்கு மேல் பக்கத்தில் வைக்கலாம். தவறு கிடையாது. காய்கறி வியாபாரம் செய்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், ஹோட்டல் வைத்திருப்பவர்கள், மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டைலர், ஆட்டோமொபைல் என்று எந்த கடை வைத்திருந்தாலும் சரி உங்கள் கடையில் வியாபாரம் சிறக்க இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்

2 years ago | [YT] | 1

TS Vel

ICC World cup 2023 Favourites to Win

2 years ago | [YT] | 0

TS Vel

புராண காலங்களில் பல்லாண்டுகள் தவமிருந்து வரம் பெற்றவர்களை கதைகளில் கேட்டிருப்போம்

இந்த கலியுகத்திலும் நாம் நினைத்ததை வரமாக பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா?

நம் வாழ்வில் நமக்கு நடக்கும் 99% நிகழ்வுகளை நம்மை அறியாமலேயே நம் ஆழ் மனம் எனப்படும் Alpha Mind தான் ஈர்ககிறது.

ஆழ் மனதில் செலுத்தப்படும் எண்ணங்களே அற்புதங்களை செய்கின்றன.ஆனால் நாம் விரும்பும் எண்ணங்களை ஆழ்மனதில் பதிய வைப்பது அவ்வளவு எளிதல்ல.

நம் மனம் உணர் நிலையில் இருக்கும் போது நம் எண்ணங்கள் Gamma Mind எனப்படும் வெளி மனதில் தங்கி விடுகின்றன. தொடர்ச்சியாக இந்த எண்ணங்கள் காமா மனதில் தங்கும் போது இவை ஆழ் மனதிற்குள் உற்செழுத்தப்படுகின்றன. இந்த தொடர் கால அளவு 48 முதல் 50 நாள்கள் என மனோ தத்துவ அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூட்சுமத்தை அறிந்த நம் சான்றோர் ஆன்றோர்கள் எந்த ஒரு நேர்மறை ஆற்றல் பரப்பும் யாகம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்த ஒரு மண்டல கால அளவை விரும்பியுள்ளனர்.

இரவில் உறங்கச்செல்லும் போதும் காலையில் விழித்த உடனும் நம் மனம் ஆல்பா காமா இடையேயான பீட்டா நிலையில் இருக்கும். இந்த நிலையில் நாம் எண்ணும் எண்ணங்கள் வேகமாக ஆழ்மனதை சென்றடைகிறது.இதனால் தான் மனோ தத்துவ மருத்துவர்கள் இந்த நேரங்களில் Auto Suggestion எனும் சுய பரிந்துரைகளை வழங்க பரிந்திரைக்கின்றனர்.

அடுத்தடுத்த பதிவுகளில் இதன் ஆற்றலை நிகழ் கால வாழும் உதாரணங்களோடு காணலாம்.

2 years ago (edited) | [YT] | 3

TS Vel

ஆடி மாதம் பிறந்துவிட்டால் இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம் எங்கும் பலவிதமான அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். தென்மாவட்டம் எங்கும் இருக்கும் கிராமியப் பாடகர்கள் கூடி இருக்கன்குடி மாரியை பாடல்களால் அழைத்து வழிபடுவது வழக்கம். சங்கீதப் பிரியை என்ற பெயர் கொண்ட தேவியும் அவர்களின் பாடலுக்கு மனமிரங்கி வந்து அருள் மழை பொழிவாள். தன்னை அண்டிய சகல ஜீவன்களுக்கும் கருணை வரம் அளிப்பாள்.

அர்ச்சுனா, வைப்பாறு எனும் இரு புண்ணிய நதிகளுக்கு இடையே அமர்ந்திருப்பவள் அன்னை மாரி. வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், மகாலிங்க மலையடிவாரத்துக்கு வந்து போது நீராட விரும்பினார்கள். ஆனால் அங்கு நீராடுவதற்கு நதியோ குளமோ இல்லை. இதனால் அர்ச்சுனன் பூமி தேவியையும், கங்கையையும் வணங்கி தன் அம்பால் பூமியைப் பிளந்து அர்ச்சுனா நதியை உருவாக்கினார் என்கிறது தலவரலாறு. இதேபோல் ராமபிரான் இங்கு வந்தபோது, அகத்தியர் அடக்கி வைத்திருந்த ஒரு புண்ணிய நதியை தனது அம்பால் விடுவித்து வைப்பாறை உண்டாக்கினாராம். வைப்பு என்றால் புதையல் என்று பொருள். இந்த இரு ஆறுகளும் கங்கைக்கு நிகரானவை என்பதால் 'இரு கங்கைக் குடி' என்று இந்த ஊருக்கு பெயராகி அதுவே இருக்கன்குடி என்றானதாக பெரியோர்கள் சொல்வார்கள்

சதுரகிரியில் தவம் இருந்த ஒரு சித்தருக்கு அம்மன் திருக்காட்சி அளித்து அவரை இருக்கன்குடிக்கு வரச்சொன்னாளாம். அதன்படி இங்கு வந்த சித்தர் அம்மனை ஒளஷதப் பொருள்களால் வடிவமைத்து வழிபட்டாராம். காலப்போக்கில் அந்த திருவுருவம் புதைந்து போக, பின்னாளில் மாடு மேய்க்கும் சிறுமிக்கு காட்சி தந்த மாரியம்மன் நிலையாக இங்கு கோயில் கொண்டாளாம். சிறுமிக்கு அருள் செய்த அம்மன் எழுந்தருளிய இடத்தில் இப்போது ஆதிஅம்மன் கோயில் உள்ளது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இருக்கன்குடி மாரி, அந்த ஆதி கோயிலுக்கு எழுந்தருளுவாள். மாரியம்மன் இங்கு சிவ அம்சமாகவே காட்சி தருவதால், அம்மனுக்கு முன்னால் நந்தி அமர்ந்துள்ளது.

கருவறையில் ஜகன்மாதாவான மாரியம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். காண்பவரெல்லாம் உயிர் சிலிர்த்துப் போகும் அளவுக்கு அழகும் கம்பீரமும் கருணையும் கொண்ட மகாமாரி இவள். இவளை வழிபட்டு சரண் அடைந்தவர்களுக்கு எந்தவித அச்சமும் வாழ்வில் ஏற்படவே ஏற்படாது என்கிறார்கள் இவளின் பக்தர்கள். இவள் திருக்கோயிலில் காவல் தெய்வங்களான வெயிலுகந்த அம்மன், வடக்கு வாசல் செல்வி, முப்பிடாதி அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன் ஆகியோரும் எழுந்தருளி உள்ளார்கள்.

அண்டமெல்லாம் காத்தருளும் இந்த மகாமாரியம்மன் குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை வரம் தேவி என்கிறார்கள். இங்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்ளும் அன்பர்களுக்கு இந்த தாய் கருணை கொண்டு வரம் அளிக்கிறாள். அதேபோல் குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வந்து நேர்த்திக்கடனையும் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

2 years ago | [YT] | 4