AudioBooks


sunnah truth

தமிழ்நாட்டின் இமாம் பூசிரியாம் தேங்கையாருக்கு ரஹ்மத் அறக்கட்டளை “இமாம் புஹாரி(ரஹ்) விருது” வழங்கியது.
<><><><><><><><><><><><><><><><><><><>

நேற்று 30.08.2025. சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நடத்திய இமாம் புஹாரி(ரஹ்) விருது வழங்கும் விழா மிஷ்காத் நபிமொழித் தொகுப்பு மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சென்னை மந்தைவெளி இமாம் மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை வகித்தார்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் தகைசால் தமிழர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மௌலானா தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான இமாம் புஹாரி(ரஹ்) விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தேங்கையாருக்கு மெடல் அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி மிஷ்காத் மூன்றாம் பாகம் குறித்து நூலாய்வுரை நிகழ்த்தினார்.

ரஹ்மத் அறக்கட்டளை அறங்காவலர் M.A.முஸ்தபா ஆவணியாபுரம் நாட்டாமை பஞ்சாயத்தார் ஜாமிஆ மாஹதுல் ஹைராத் அரபுக்கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மௌலானா ஏரல் பீர் முஹம்மது பாகவி அவர்கள் “கடலோர கிராமத்தின் இமாம் பூசிரி” ஆலிம் கவிஞர் வாழ்வின் ஒளிமிகுந்த பக்கங்கள் என்ற நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு காஜி செய்யித் மஸ்ஊத் ஜமாலி இமாம் புஹாரி விருதை அறிமுகம் செய்து உரையாற்றினர். மிஷ்காத் மொழிபெயர்ப்பாளர் கடையநல்லூர் மௌலவி ஃபஸ்லுர்ரஹ்மான் மிஷ்காத் நூலை அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார்.

ஒரு லட்சம் பணமுடிப்புடன் இமாம் புஹாரி(ரஹ்) விருது பெற்ற ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

விழா ஏற்பாடுகளை ஆவணியாபுரம் ஜமாஅத் நிர்வாகிகள் மத்ரசா நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து மௌலவி ஜஃபருல்லாஹ் மன்பயீ சிறப்பாகச் செய்திருந்தார்.

விருது பெற்ற தேங்கையாருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

1 month ago | [YT] | 24

sunnah truth

Alhamdulillah, the Markaz Global Pravasi Summit 2025 was a meaningful and inspiring gathering of our beloved Malayali expatriate community from the GCC countries and beyond.

The summit reflected the strength, unity, and unwavering commitment of our Pravasi brothers and sisters toward the cultural, educational, and moral progress of our society.

It was heartening to witness the enthusiasm of the delegates, hear their experiences, and reflect together on the responsibilities we share in shaping a better future for our communities.

May Allah accept our efforts and bless all those who work sincerely for the welfare of humanity.

2 months ago | [YT] | 6

sunnah truth

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!

சென்னை, பல்லாவரம் ஜாமியா மஸ்ஜித் சங்கை பொருந்திய தலைமை இமாம்

மௌலானா அஹ்மது முஹ்யித்தீன்
தாவூதி ஹழ்ரத் அவர்கள்

சென்னையில்
இன்று 9-07-2025 வஃபாத்தாகி விட்டார்கள்

ஹழ்ரத் அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்....!

إنّا لله وإنّا إليهِ رَاجعُون

ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு
சொந்த ஊர்
துலுக்கப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ.

اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه ، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار

اللهُـمِّ اغْفِـرْ لِحَيِّـنا وَمَيِّتِـنا وَشـاهِدِنا ، وَغائِبِـنا ، وَصَغيـرِنا وَكَبيـرِنا ، وَذَكَـرِنا وَأُنْثـانا . اللهُـمِّ مَنْ أَحْيَيْـتَهُ مِنّا فَأَحْيِـهِ عَلى الإِسْلام ،وَمَنْ تَوَفَّـيْتََهُ مِنّا فَتَوَفَّـهُ عَلى الإِيـمان ، اللهُـمِّ لا تَحْـرِمْنـا أَجْـرَه ، وَلا تُضِـلَّنا بَعْـدَهُ

-09-07-2025

3 months ago | [YT] | 10

sunnah truth

🌍 International Peace Conference | World Ijtema 2025 | Chicago, USA

📍 Donald E. Stephens Convention Center | 🗓 June 24–29, 2025

Alhamdulillah! The winds of peace and guidance have begun to blow across America as the International Peace Conference (World Ijtema) takes center stage at the prestigious Donald E. Stephens Convention Center in Chicago, USA. This historic event, set to unfold from June 27–29, 2025, is already witnessing a moment of spiritual triumph as the World Ameer Hazrat Ji Maulana Muhammad Saad Sahab DB has arrived in Chicago ahead of the Ijtema, marking his first blessed visit to the USA.

Thousands of hearts have already started gathering—filled with love, Imaan, and the yearning for Haq (truth). The atmosphere is electric, the spiritual preparations are complete, and the believers from every corner of the world are converging for this monumental gathering of unity, dawat, and peace.

This is not just a conference, but a global revival of prophetic teachings and brotherhood—a beacon of noor in the West. As the Aalami Ameer graces the land of America, his arrival becomes a sign of divine mercy and a herald of global awakening.

✨ Key Highlights:

Historic First Visit of Hazrat Ji Maulana Saad Sahab DB to the USA

World-renowned Donald E. Stephens Convention Center chosen for this sacred gathering

Thousands of Muslims expected from across America and the world

Massive preparations already completed by the local and international Tablighi teams

Unifying message of Peace, Imaan, and Da’wah to echo across the Globe

Let the world witness the unity of believers and the revival of Deen in the heart of the West. Let the Ijtema in Chicago 2025 be remembered as a turning point for humanity.

🌟 Ready to begin June 27–29, 2025, InshaAllah.
May Allah accept, spread peace, and guide the entire Ummah. Ameen.

#americaijtema2025 #chicagoijtema #ijtema #maulanasaadsahab #tabligh #america #chicagoijtema2025 #tableegh #TablighiJamaat #tablighakbar #dawah #NizamuddinMarkaz #raiwindmarkaz #ijtema2024 #ijtema2025 #hazratji #tariqjamilofficial #tariqjameel #deeneislam #LOSANGELES #canadaijtema #Ameer

Mufti Usama

3 months ago | [YT] | 5

sunnah truth

விசிக விருதுகள் வழங்கும் விழா 2025
~~~~~~~~
இன்று(25.6.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விசிக விருதுகள் வழங்கும் விழாவில்

தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் திரு.பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி அவர்களுக்கு #காயிதேமில்லத்_பிறை விருது வழங்கப்பட்டது.

3 months ago | [YT] | 13

sunnah truth

2024, 2025 ஆகிய ஈராண்டுகளில் தமிழகத்து அரபுக்கல்லூரிகளில் பட்டம்பெற்ற புதிய மௌலவிகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா இன்று (24.06.2025) இளையான்குடி, அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இந்நிகழ்வுக்கு சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார். பொதுச்செயலாளர் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி நெறியாளுகை செய்தார். பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி வரவேற்புரையாற்றினார்.

இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது ராசூக் மன்பயீ ஹழ்ரத் ஆசியுரை வழங்கினார்.

சிந்தாமணிப்பட்டி, சவூதிய்யா கல்விக்குழுமத்தின் நிறுவனர் மௌலானா சிராஜுத்தீன் அஹ்மத் ரஷாதி, S.P. பட்டினம் அன்வாருல் குத்சிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா அப்துல்கய்யூம் பாகவி ஆகியோர் வழிகாட்டுரை வழங்கினர்.

மௌலானா T.K. சுல்தான் ஸலாஹுத்தீன் நூரி, சிவகங்கை மௌலானா முஹம்மது ஃபாரூக் மன்பயீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலானா முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி நன்றியுரையாற்றினார்.

மாநில துணைத்தலைவர்கள் கம்பம் மௌலானா அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத், திருச்சி மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி, துணைப்பொதுச்செயலாளர்கள் சென்னை மௌலானா இல்யாஸ் ரியாஜி, சென்னை மௌலானா Dr. காஜா முயீனுத்தீன் ஜமாலி, திருச்சி மௌலானா இன்ஆமுல் ஹசன் காஷிஃபி ஆகிய மாநில நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாநிலம் முழுவதிலுமிருந்து முன்பதிவு செய்திருந்த இளம் மௌலவிகள் ஏராளமாகப் பங்கேற்று பயன் பெற்றனர்.

Source:
#nowshuupdates | #nowshuposts

3 months ago | [YT] | 8

sunnah truth

*கூட்டுக்குர்பானி கவனம் தேவை..*
~~~~~~~~~~~~~~~

ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டாலே கூட்டுக்குர்பானி நோட்டீஸ்கள் களைகட்டும்.
ஆரம்பத்தில் பெரிய மதரஸாக்கள் மட்டுமே செய்த வேலையை சில இயக்கங்கள் கையில் எடுக்க அதையும் தாண்டி இப்போது சில தனிநபர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டுக் குர்பானி "வணக்கம் " என்கிற நிலையிலிருந்து மாறி வியாபார மயமாகிவிட்டது. மாடு ஒரு கூட்டு 1500 ரூபாயாம். ஆடு 1600 ரூபாயாம். யார் காதில் இவர்கள் பூ சுற்றுகிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்.? கூட்டில் சேர்ந்த நபரையா.? அல்லது அல்லாஹ்வையா.?

சம்பந்தப்பட்ட நபரிடம் போன் செய்து 7000 ரூபாய்க்கு எங்களுக்கு பத்து ஆடு வேண்டும் என்று கேட்டால் இல்லை அதெல்லாம் எங்களுக்கு மட்டும்தான். விற்பனைக்கு இல்லை என்றார்கள். சரி 6100 ரூபாய் ஆட்டை போட்டோ புடித்து அனுப்புங்களேன் என்று சொன்னால் இல்லை... இல்லை... அரசாங்க சிக்கல் வரும் என்று கதை அளந்தார்கள். குர்பானி எங்கு வைத்துக் கொடுக்கிறீர்கள் நாங்கள் பார்க்க வருகிறோம் என்று கேட்டால் அசாமில் வைத்து அறுத்து அங்கேயே ஏழைகளுக்கு கொடுத்து விடுவோம் என்று நாகூசாமல் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். இது போன்ற ஃபிராடு கூட்டத்திற்கு யார் மணி கட்டுவது என்று தெரியவில்லை.

குர்பானியை இறைவனுக்காக செய்யும் நோக்கம் மாறி இன்று கடமைக்காக, வியாபார நோக்கில் செய்யப்படுபவது வேதனை.

ஒரு காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆடு அல்லது மாடுகளை வாங்கி அதை வளர்த்து அதனுடன் நாமும் நம் குழந்தைகளும் நெருக்கமாக பழகி பிறகு அதை தன் கையாலேயே அறுத்து பலியிடும்போது மனதில் ஒரு வலி ஏற்படும். அந்த வழியைத்தான் இறைவன் "தக்வா" என்று அருள்மறையில் கூறுகிறான்.

நமக்காவது பரவாயில்லை. நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்துப்பாருங்கள்.
தன் மகனை அறுத்துப்பலியிட அழைத்து சென்று கழுத்தில் கத்தியை வைத்த போது எவ்வளவு வலி இருந்திருக்கும்.
அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ஆட்டைப்பலியிட வைத்தான்.
அதையே நமக்கு சட்டமாகவும் மாற்றினான் .

ஆனால் இன்று நமக்கு அந்த வலியில் கொஞ்சமாவது இருக்கிறதா..?

*"நீங்கள் கொடுக்கும் குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை . மாறாக இறையச்சமே இறைவனை சென்றடைகிறது".. என அல்லாஹ் கூறுகிறான்.*

கூட்டுக் குர்பானியில் நமக்காக கொடுக்கப்போகும் மாடு எதுவென தெரியாது.
அதை யார் அறுக்கப் போகிறார்கள்..? நமக்கு தெரியாது.
குர்பானி கொடுப்பதற்கு அது தகுதியான மாடா..? நமக்கு தெரியாது.

*இன்னும் கொடுமை என்னவென்றால் மாட்டில் கண்டிப்பாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்கிற சட்டம் இருக்க ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத கன்றுக்குட்டியை கூட சிலர்கள் கூட்டு குர்பானியாக கொடுக்கும் அவலமும் உண்டு.*

இதையும் தாண்டி சிலர் கூட்டுக் குர்பானியில் சேர்ந்தவர்களை குர்பானி கொடுக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில்லை. "உங்களுக்கு எதுக்கு வீன் சிரமம்.. கறி வீடு தேடி வரும் ".. என்று வீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார்கள்.

அழகிய முறையில் நமக்கான குர்பானியை நிறைவேற்றுவார்கள்.. என்று நம்பி அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அமானித மோசடி செய்வதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு பங்கீடு செய்வதில் கூட நாம் பங்கு பெறுவதில்லை.

12 மணிக்கு நமது பங்கென்று சொல்லி நான்கு அல்லது ஐந்து கிலோ கறி வந்துவிட்டால் போதும் .
நம் கடமை முடிந்துவிட்டது..

இன்னும் சில இடங்களில்.. தான் கூட்டாக சேர்ந்து இருக்கும் மாடு அறுக்கப்படாத நிலையில் அதற்கு முன்பே அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை அவசரம் கருதி சிலர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

*குர்பானியின் ஏற்பாட்டாளர்கள் அடுத்தவர்களுடைய மாட்டிலிருந்து நம் அவசரம் கருதி குர்பானி இறைச்சியின் பங்கை அதன் பங்குதாரர் ஏழு பேரின் அனுமதியின்றி கொடுப்பதும் நமக்கான பங்கை அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது மிகப் பெரும் மோசடியாகும்.* என்பதை கொடுப்பவரும் வாங்குபவரும் புரிந்து கொள்வதில்லை.

அதே போல் குர்பானிக்கு பங்கு கேட்கும் இயக்கமோ, தனி நபரோ எதனடிப்படையில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்..?
ஒரு மாடு 15 ஆயிரம் இருக்கலாம் 18 ஆயிரம் இருக்கலாம் ஏன் 20 ஆயிரம்கூட இருக்கலாம்.
அனைத்து மாடுகளையும் ஒரே விலையில் நிச்சயம் வாங்கப் போவதுமில்லை.

அனைத்து பங்கிற்கும் ஒரே விலை என்றால் எவ்வாறு ஏற்றுக்கொள்வது..?
அல்லது குர்பானி கொடுத்தபின் கணக்கு பார்த்து "இதில் இவ்வளவு குறைவு வந்திருக்கிறது . இன்னும் நீங்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்".. என்று குர்பானி ஏற்பாடு செய்பவர்கள் இதுவரை அப்படி யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா?
அல்லது "பணம் அதிகமாக வாங்கிவிட்டோம் . உங்கள் மாட்டிற்கான குர்பானி செலவு போக மிச்சம் இந்தாருங்கள் ".. என சம்பந்தப்பட்டவர்களிடம் என்றாவது திருப்பி கொடுத்திருக்கிறார்களா..? அப்படி எங்கும் இப்படி நடந்ததாக தெரியவில்லை.

குர்பானிக்கு என்று வாங்கப்பட்ட தொகையை "நாங்கள் மீதமிருந்தால் பள்ளிவாசலுக்கு வைத்துக் கொள்கிறோம்.. மதரஸாவுக்கு வைத்துக் கொள்கிறோம்.." என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

எனவே கூட்டுக் குர்பானி கொடுக்கும் அன்பர்கள் இந்த விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்தி உங்களுக்காக வாங்கப்பட்ட மாடு எது..? அதன் விலை என்ன..? அதை யார் அறுக்கிறார்கள்..?யாருக்கு பங்கு வைக்கிறார்கள்..? என கவனித்து செயல்படவும்.

கூட்டுக் குர்பானியான மாடு குர்பானி கொடுக்கிற போது ஏழு நபர்களில் ஒருவரின் பணம் ஹராமானதாக இருந்தாலும் ஏழு நபரின் குர்பானியும் கூடாமல் போய்விடும்.
எனவே ஆடு வாங்குவதற்கான வசதி வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தால் ஆட்டையே குர்பானி கொடுப்பதற்கு முன் வாருங்கள். ஏனென்று சொன்னால் அதன் நன்மை தீமைகள் அனைத்திற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு.

கஷ்டப்படாமல் நன்மைகள் எளிதில் கிடைத்து விடுவதில்லை. உங்களின் குர்பானி விஷயத்திலும் வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு குர்பானியை நிறைவேற்ற முயலுங்கள்.

*காரணம்.. குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடையப்போவதில்லை. இறைவன் பார்ப்பது நமது தக்வா எனும் இறையச்சத்தைத்தான்.*

*இது இறைவனின் வாக்கு..*

**செய்யது அஹமது அலி. பாகவி**

4 months ago | [YT] | 7

sunnah truth

Assalamu alaikum.

The Chief Kazi of Tamilnadu *Mufti Salahuddin Mohammad Ayub* passed away.
Inna lillahi wa inna ilaihi rajiun.
(( pray for his Maghfirah. ))

اَللّٰھُمَّ اغْفِرْلَهُ وَ ارْحَمْهُ وَ عَافِهِ وَ اعْفُ عَنْهُ وَ اَکْرِمْ نُزُلَهُ وَ وَسِّعْ مُدْخَلَهُ وَ اغْسِلْهُ بِالْمَاءِ وَ الثَّلْجِ وَ الْبَرَدِ وَ نَقِّهِ مِنَ الْخَطَایَا کَمَا نَقَّیْتَ الثَّوْبَ الْاَبْیَضَ مِنَ الدَّنَسِ وَ اَبْدِلْهُ دَارًا خَیْرًا مِّنْ دَارِهِ وَ اَھْلًا خَیْرًا مِّنْ اَھْلِهِ وَ زَوْجًا خَیْرًا مِنْ زَوْجِهِ وَ اَدْخِلْهُ الْجَنَّةَ وَ اَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ مِنْ عَذَابِ النَّارِ۔

O Allah, forgive him and have mercy on him and grant him peace and pardon him. Receive him with honour and make his place of entry (in grave) spacious. Wash him with water, snow, and ice and cleanse him of his faults like a white garment is cleansed of stains. O Allah, substitute for him an abode better than his abode, a family better than his family and a spouse better than his spouse. Admit him into Paradise and protect him from the torment of the grave and the torment of the Fire.
Aameen yarabbal aalameen!

4 months ago | [YT] | 6

sunnah truth

👇👇 கீழ்க்கண்ட கூகுள் மீட் லின்கை கிளிக் செய்யவும்
meet.google.com/fzm-ywff-xuz

✨அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ✨

🌺துல் ஹத் மாதத்தை முன்னிட்டு நம் 🛡️ *The Truth Academy* நடத்தும் இணைய வழி பயான் நிகழ்ச்சி & கேள்வி பதில் நிகழ்ச்சி


🎙️ *சொற்பொழிவாளர்*
🌸 உஸ்தாத் முஹம்மத் அப்துல்லாஹ் அஸ்ஸித்தீக்கி அவர்கள்.


🌸 *கேள்விகளுக்கு பதிலளிப்பவர்*

முஃப்தி முஹம்மத் முஷஃரப் அதாயி.,மஷாஹிரி அவர்கள்.

⏱️ *நேரம்* : இரவு 9:00 - 9:40

🗓️ *தேதி* : 25/05/2025 -ஞாயிறு

🖇️ `கூகுள் மீட் வாயிலாக நடைபெறும் இன்ஷா அல்லாஹ்`

இன்ஷா அல்லாஹ் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

✍🏻 இப்படிக்கு
🛡️TTA குழுமம்

4 months ago | [YT] | 4

sunnah truth

குர்பானி தொடர்பாக இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான சட்டங்களையும், அதன் தாத்பரியங்களையும் பற்றி இந்நூல் பேசுகிறது. குறிப்பாக குர்பானி எனும் அமலை நெறிப்படுத்த வேண்டிய ஒழுங்குகள், மற்றும் அதில் பேணவேண்டிய விஷயங்களை கவனப்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல இன்றைய பொருளாதாயச் சூழலில் கூட்டுக் குர்பானி எனும் பெயரில் வலம் வருகிற மோசடிப் பேர்வழிகளின் தகிடு தத்தங்களை நம்பி ஏமாந்து போகாமல் கூட்டுக் குர்பானி விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டியவைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

நூல் விலை 100₹
தொடர்பு எண்: +91 85082 82801

4 months ago | [YT] | 3