Seven face channel

Subscribe my channel


seven face channel

திருவுளம் என்றால் இறையின் உள்ளம் என்று பொருள். இறைவன் ஒரு முடிவை அளித்தால், அதற்கு அப்பீல் ஏதும் கிடையாது. ‘ஏத்துக்கிடுறோம்யா..’ என்று கும்பிடு போட்டுவிட்டு நகர வேண்டியதுதான்.உண்மையில் பிரபஞ்ச அளவிலான பிரம்மாண்டமான படைப்பின் நிகழ்வுகள் அனைத்தும் அவரது உள்ளக்கிடக்கையே.திருவுளம் கேட்பவன் இறைவனை முழுமையாக நம்புகிறவராக இருக்க வேண்டியது அவசியம். அப்படி நம்புகிறவருக்கு, சம்பவத்தின் விளைவு எதுவாக இருந்தாலும், அதை ஏற்கின்ற பக்குவத்தையும், சமாளிக்கின்ற திறனையும் இறை அருளும் என்பது திண்ணம்.. கடவுளிடம் உங்கள் வேண்டுதலை சொல்லி முறையிடும் போது பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனம். உங்கள் விருப்பப்படி வேண்டுதல் நிறைவேறும். ஆலயத்தில் அல்லது வெளியில் நீங்கள் சாமி கும்பிடும் பொழுது பச்சிளம் குழந்தை அழுதால் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அர்த்தம்.என் அக்காவிற்கும் எனக்கும் என் அப்பா திருவுளம் கேட்டு தான் திருமணம் செய்து வைத்தார்.வெளிநாடு செல்வதாக இருந்தாலும் கடவுளிடம் சம்மதம் கேட்பார். நீங்களும் மனம் உருகி வேண்டிப் பாருங்கள் கெவுளி சத்தமிட்டால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். ( *சீட்டு குலுக்கி போடுவதும் ஒருவகை* ) எங்கள் சித்தப்பா ,பெரியப்பா ,மாமா இப்படி அனைவரும் திருவுளம் கேட்பார்கள் .நீங்களும் கேட்டு பயனடையுங்கள் அனுபவ உண்மை 🙏🏻💐💐💐

1 month ago | [YT] | 1

seven face channel

*திருச்சி மலைக்கோட்டையில் உள்ள செவ்வந்தி நாதர் எவ்வாறு தாயுமானவரானார் என்று தெரியுமா?*
தனபுத்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி தீவிர சிவ பக்தை அவள் தனது தாயை மகப்பேறு காலத்தில் பிரசவம் பார்க்க அழைத்திருந்தாள்.காவிரி வெள்ளப்பெருக்கால் ரத்னாவதி தாயார் பிரசவம் பார்க்க வர முடியாமல் அங்கேயே நின்று விட்டார்.
அப்பொழுது ரத்னாவதி தாயாரும் செவ்வந்தி நாதரே அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டார் .அப்பொழுது இறைவன் நடத்திய அற்புத லீலையால் சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் தாயும் ஆனார் .ஆம் ரத்னாவதியின் தாயார் போல் உருவெடுத்து பிரசவம் பார்த்து ரத்னாவதியின் தாயார் வரும் வரை தாயையும், சேயையும் அன்பாக பார்த்துக் கொண்டார் .குழந்தை வரம் வேண்டி ,இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு இப்பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் .குழந்தை பிறந்தால் வேண்டுதலை நிறைவேற்ற வாழைத்தாறு வழங்குவது வழக்கம். என் தோழி மரகதமும் அக்கோயிலில் வேண்டிக் கொண்டாள். கருவுற்று குழந்தையும் பெற்றெடுத்தாள். வேண்டுதல் நிறைவேறியதால் வாழைத்தார் வழங்கச் சென்றாள்.ஆனால் அங்கு வாழைப்பழம் வழங்க ஒரு நபர் கூட கிடையாது; மனம் கலங்கி தாயுமானவரை வேண்டி நின்றாள் . என்ன ஒரு அற்புதம் அப்பொழுது, களப்பயணம் சென்ற பள்ளி மாணவர்கள் திடீரென மடை திறந்த வெள்ளம் போல் அங்கு வந்தனர் .மனமகிழ்ந்து, நெகிழ்ந்து வாழைப்பழத்தை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வீடு திரும்பினாள்.அவளும் ஒரு தீவிர சிவ பக்தை...🙏🏻🙏🏻🙏🏻💐

1 month ago | [YT] | 1

seven face channel

தேவகோட்டை சிவன் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சிலை

2 months ago | [YT] | 2

seven face channel

அனைவருக்கும் வணக்கம்
இன்றைய பதிவில்
இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பங்கள் குலைந்து சிறு குடும்பம் சிதைந்து தனியாக வாழ்வோம் என்று தனித்து வந்த குடும்பங்கள் (தனி குடும்பம்) தள்ளாடுகிறது . விசேஷம் என்று அம்மா வீட்டிற்குச் சென்றாலே ஒரே ஆனந்தம் தான் ,; அக்கா ,அப்பா ,அண்ணா, அத்தை ,மாமா ,சித்தப்பா ,சித்தி, என்று உறவுகளைப் பார்க்கும் பொழுது ஆனந்தத்தில் அல்லல் பாராது அயர்வு இல்லாமல் அரட்டை அடிக்கும் போது அதில் இருக்கும் சுகமே அளவில்லாதது. அப்படி நாங்கள் எப்பொழுதும் உரையாடுவது தெய்வக் கதைகள் தான் அதைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன் . இது தற்பொழுது நடந்த சூடான கதை; கந்த சஷ்டி விழாவில் நடந்த முருகன் கதை; எங்கள் சித்தியும் ஒரு ஆன்மீகவாதி அவர்கள் தேவகோட்டையில் உள்ள சிவன் கோவிலுக்குச் செல்கிறார் .கூட்டமோ மடை திறந்த வெள்ளம் போல உங்களுக்குத் தெரியாதது இல்லை முகநூலில் கூட வெளியிட்டுள்ளார்கள் போய் பாருங்கள். அப்பொழுது அழகான பன்னீர் ரோஜா மாலை ஒன்று வாங்குகிறார்.வாங்கும் பொழுது அவர் நினைக்கிறார் கந்தா இந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேர் எவ்வளவு பூக்கள் கொண்டு வந்துள்ளார்கள். இந்த சிறிய மாலையவா நீ ஏற்றுக் கொள்ளப் போகிறாய் ? நடக்கிற காரியமா என்று நினைத்துள்ளார்.ஆனால் அங்கு உள்ளவர்களிடம் இவர் வாங்கிய பொருட்கள் எல்லாத்தையும் தாம்பூலத்தில் வைத்து கொடுத்துள்ளார் கூட்டம் அதிகம். எல்லோரும் அப்படி தான் கொடுத்துள்ளார்கள் அங்கு பணி புரியும் தொண்டர்களிடம் ஆனால் பாலதண்டாயுதபாணி விபூதி அபிஷேகம் நடக்கும்பொழுது இந்த அழகிய சிறிய மாலையை அணிவித்துள்ளார்கள் அப்பா என்னே அழகு காண கண் கோடி வேண்டும். இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் அவ்வளவு கூட்டத்திலும் என் சித்தி அதைப் பார்த்துள்ளார்கள் .அந்தப் புகைப்படம் ஒன்றையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். காணுங்கள் ....

2 months ago | [YT] | 5

seven face channel

பெரியப்பா அண்ணன்

2 months ago | [YT] | 3

seven face channel

*ஒரு வருடம் /12 மாதங்கள்* பௌர்ணமி தினங்களில் சிவனுக்கு பூஜை செய்து வந்தேன்.
சித்திரை -
மரிக்கொழுந்து
வைகாசி -சந்தனம்
ஆனி- முக்கனி
ஆடி -பால்
ஆவணி- நாட்டுச் சக்கரை
புரட்டாசி- அப்பம்
ஐப்பசி -அன்னம்
கார்த்திகை-
திருவிளக்கு
மார்கழி -நெய்
தை- கரும்புச்சாறு
மாசி - பட்டுத் துணியை நெய்யில் நனைத்து கட்டுதல்
பங்குனி- தயிர்

ஒவ்வொரு மாதமும் எந்த தடங்கலும் இன்றி அபிஷேகம் செய்து வந்தேன்.மாசி மாதம் மறந்து அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன் .இருந்தாலும் மாலை 6:00 மணி போல் ஞாபகம் வந்து குமார வேலூரில் உள்ள சிவன் கோயிலில் பட்டுத் துணி நெய்யில் நனைத்துக் கட்டி அன்று பூஜையை நிறைவு செய்தேன் .

பங்குனி மாதம் தயிர் அபிஷேகம் செய்து சாமி கும்பிட்டு வெளியில் வரும் பொழுது பலத்த காற்று ஒரு பழமையான பேப்பர் பறந்து வருகிறது. பறந்து வந்து என் மேல் ஒட்டிக்கொண்டது நாம என்ன செய்வோம் அத கீழே தானே எடுத்துப் போடுவோம்.ஆனால் என்னுடைய உள் மனது அதை எடுத்துப் படி ,படி என்று சொன்னது. அதை நான் எடுத்துப்படித்தேன் . அதில் என் வேண்டுதலுக்கான பதிலும் இருந்தது. அறிவுரையும் இருந்தது. கடவுளை கையெடுத்து கும்பிட்டால் போதும் எனக்கு இதை செய் நான் உனக்கு அதை செய்றேன்னு கடவுளிடம் பேரம் பேச வேண்டாம். நீ கையெடுத்து கும்பிட்டால் உனக்கு என்ன தேவை என்று நான் அறிவேன். இருந்தாலும் என் அப்பன் ஈசனுக்கு ரொம்ப குசும்பு தான் இடையில் சொல்ல வேண்டியதுதானே 12 மாதங்களும் முடிந்த பின்பு சொல்கிறார்.
குயவனுக்குத் தேவை வெயில் ,உழவனுக்குத்தேவை மழை நான் இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுக்க முடியும். அப்படி கொடுத்தால் ஒருவர் பாதிக்கப்படுவார். கொடுக்காதவருக்கும் நான் ஏதாவது ஒரு வழியில் நன்மை மட்டுமே செய்வேன். என்று அந்த தாளில் இருந்தது. கீழே உள்ள இந்தச் செய்தியை வைத்து நான் என்ன வேண்டுதல் வைத்திருப்பேன் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் .அதிலிருந்து நான் எதுவுமே கேட்டதில்லை.எல்லாம் அவன் செயல்.உண்மைதான் நீங்களும் கடவுளிடம் பேசலாம். மனதார நினைத்து வேண்டினோம் என்றால் அதற்கான பதில் கண்டிப்பாக கிடைக்கும். கடவுளே வந்து நேரில் பேசுவாரா என்றால் இல்லை. நீங்கள் நினைத்ததற்கான பதில் ஒரு தாளின் மூலமாகவோ, ஒரு மனிதரின் மூலமாகவோ, அல்லது புலனம் மூலமாக கிடைத்துவிடும்.
ஆனால் உண்மையாக மனதார வேண்ட வேண்டும். முயற்சி செய்யுங்கள் .யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெற உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் ராமானுஜம் போல

4 months ago | [YT] | 5