Magilam poo Audio Novels

Hello! my game changers!
Magilam poo audio novels prepare you to listen to exciting love stories that will sweep your mind like a peacock and horror and thriller stories that will make you cringe.


Magilam Poo Audio Novels

அதிசயப் பிறவி: மர்மம், காதல், அமானுஷ்யத்தின் சங்கமம்!

பழங்காலக் கோவிலின் இருண்ட ரகசியங்கள், மூச்சுத்திணற வைக்கும் மர்மங்கள், மற்றும் எதிர்பாராத ஒரு காதல் அத்தியாயம்!

முகிலன், ஒரு துப்பறியும் நிபுணனைப் போல கடந்த காலத்தின் புதிர்களை அவிழ்க்கும் தீராத ஆர்வம் கொண்டவன். அவனது அசாத்தியக் கூர்மை, காலத்தால் சிதைந்த ஒரு மர்மப் புதையலைக் கண்டெடுக்கிறது. அந்தப் புதையலில் இருந்து வெளிப்படும் ஒரு விசித்திரமான சக்தி, நூற்றாண்டுகளின் திரையை கிழித்து, நிகழ்காலத்தை உலுப்புகிறது.

ஒரு மின்னல் கீற்று போல அவன் வாழ்வில் நுழைகிறாள் மேகவாணி - காலத்தால் உறைந்த ஒரு அமானுஷ்யப் பெண். யார் அவள்? எங்கே இருந்து வந்தாள்? அவளது மர்மமான கடந்தகாலம், முகிலனின் எதிர்காலத்தை எப்படிப் பின்னும்?

மர்மமும் காதலும் பின்னிப் பிணைந்த இந்த அமானுஷ்ய நாவல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களை திகிலின் உச்சத்துக்கும், எதிர்பாராத திருப்பங்களுக்கும் அழைத்துச் செல்லும். ஒரு அமானுஷ்யப் பயணத்திற்குத் தயாராகுங்கள்!

அதிசயப் பிறவி - காலத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு அமானுஷ்யக் காவியம்!

3 months ago | [YT] | 7

Magilam Poo Audio Novels

காதல் பரவசம்

உன் நெஞ்சம் தொட்டு,

ஒரு சொல்லில்லாமல்

நின்றாலே போதும்,

என் உலகம் முழுமையாகும்.

உன் கண்கள் பேசும் கதைகள்,

என் காதில் விழும் ரகசியமாக,

மீட்டும் காமத்தின் இசை,

அது மெல்ல மெல்ல

உயிரில் கலக்கும் ஜாலம்

வித்தைகள் தரும் காதலின் போதை.

முழுகவிதையையும் வாசிக்க கிளிக் செய்யவும்:- 👇🏻

writermagilampoo.blogspot.com/kathal.kamam.kavitha… -👈

4 months ago (edited) | [YT] | 7

Magilam Poo Audio Novels

அதிகம் பேசப்படாத வீரர்களின்/வீராங்கனைகளின் உண்மைக் கதைகள் – Magilam Poo Audio Novels 🔥

இவர்கள் யுத்தத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையோடும், விதியோடும், வலியோடும் தினமும் போராடிய மறைந்த நாயகர்கள். கண்ணுக்கு புலப்படாத அந்த போராட்டங்கள், ஒவ்வொரு காயத்திலும் பதியப்பட்ட கதைகள். வெளிக்கொணரப்படாத உண்மைகள்… சொல்லப்படாத சோகங்கள்… இது வெறும் கதையல்ல… இது ஒரு மௌன அஞ்சலி – அதிகம் பேசப்படாத வீரர்களுக்களின்/ வீராங்கனைகளின் நினைவேந்தும் தருணம்.

🎧 "MAGILAM POO AUDIO NOVELS" proudly presents

மகியின் பேசும் கதைகள்

5 months ago | [YT] | 3

Magilam Poo Audio Novels

காலம் நதி போல், கரை
தொடும் நொடி அறியாத
பயணங்கள் சுவரசியம்.
பழைய இலைகள் உதிர,
புது தளிர்கள் சிரிக்கும்.
சித்திரை வெயிலில் காய்ந்த
நிலம், முதல் மழையின்
சாரலில் புது வாசனை பூக்கும்.

நேற்று போனது கனவாய்
இருக்கட்டும், நாளை வருவது
நம் கையில் இல்லையே.!
இன்று இந்த நொடியில்,
சின்னதாய் ஒரு புன்னகை
பூக்கட்டும். வாழ்க்கை ஒரு
பயணம், வலிகளும் இருக்கும்,
வரங்களும் இருக்கும். புது
வருடத்தின் வாசலில்
நம்பிக்கையோடு நுழைவோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

6 months ago | [YT] | 8

Magilam Poo Audio Novels

"நூறு ஆண்டுகளாக தழை வளர்ந்திருந்த புளியமரம்...
இப்போது உயிர் பெற்று,
ஒரு பெண்ணாக மாறி...
அந்த வீட்டை ஆட்டிப்படைக்கப் போகிறது!

அமானுஷ்ய சக்திகளால் சூழப்பட்ட அந்த வீடு…
அதற்குள் ஒரு மர்ம வாசல்...

மர்ம வாசல் – ஒரு திகில் ஆடியோ நாவல், விரைவில்
'மகிழம் பூ ஆடியோ நாவல்ஸ்'-ல்..."

6 months ago | [YT] | 6

Magilam Poo Audio Novels

இறை அருள் பொழியும் இந்த மாதம்,
இன்பத்தையும் அமைதியையும் தரட்டும்,
நம் மனதில் அன்பு மலரட்டும்,
நல்லெண்ணம் நம் பாதையில் நிறையட்டும்!
அல்லாஹ்வின் அருள் நம்மது இல்லத்தையும்
உள்ளத்தையும் வளமாக ஆக்கட்டும்- முக்பாரக்!

6 months ago | [YT] | 2

Magilam Poo Audio Novels

🌸 Magilam poo Blog – எழுத்தின் மெல்லிசை, மனத்தின் மழைதுளி!

📖 வார்த்தைகள் பூத்து மலரும் ஒரு இனிய பயணம்!

✨ எண்ணங்கள் எதிரொலிக்கும் உணர்வுப் பேழை!

6 months ago | [YT] | 4

Magilam Poo Audio Novels

உறங்காத விழிகள்- முழு நாவல்

வேதாச்சலத்தின் பெரிய நம்பிக்கையாக இருந்த போலீஸ் ஸ்டேஷன் அவரை கைவிட்டு விட்டதாக அவருக்கு ஒரு எண்ணம் எழுந்து சோகத்தைக் கொடுத்தது அவர் பொங்கி வளைந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். காமாட்சி, மார்பில் கை வைத்து ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாத தன்னுடைய அவல நிலையையும் மகன் தொலைந்து போன துப்பத்தையும் எப்படி சமாளிப்பது அதுவும் போக பூஜா என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்ட சாபமும் பாவமும் தங்களுக்கு வந்து விடுமோ என்று ஏதேதோ யோசித்து குழம்பிய மனநிலையில் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தாள்.

கணவனின் வருகையும் அவர் முகத்தில் இருந்த குழப்ப ரோகைகளும் காமாட்சியை பெரிய அளவில் ஏமாற்றம் அடைய செய்தது. அவள் கண்ணீரோடு கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"காமாட்சி நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். தைரியமா இரு. நம்ம பையன் கிடச்சிடுவான். ஆமா நீ சாப்டியா?" என்று முயன்று அவர் நடிக்க காமாட்சி மறுப்பாக தலையாட்டிவிட்டு அவருடைய மார்பில் சாய்ந்து விம்மி அழ தொடங்கினாள்.

7 months ago | [YT] | 4

Magilam Poo Audio Novels

வணக்கம் மக்களே!


நம்ம channel-ல்ல podcasting பண்ணலாமா? பண்ணலாம் என்றால் என்ன Topic ல பண்ணலாமுன்னு சொல்லுங்க நன்றி

8 months ago | [YT] | 7