The Bharat Beings

Spirituality, Politics, Movies, Cricket & Trends..


The Bharat Beings

எங்கள் பதிவுகளுக்கு உங்கள் மதிப்பீடு?

4 months ago | [YT] | 4

The Bharat Beings

கஜபானு ஒரு நாட்டுல நிறைய ஊருக இருந்துச்சாம்.

அதுல ஒரு ஊருக்கு பேரு கழமித கஜபாவாம். அந்த ஊரு அந்த நாட்டோட எல்லைல இருந்ததால அந்த நாட்டு மன்னன் அந்த கிராமத்தை பெருசா கண்டுக்கலயாம்.

அதனால அந்த கிராமத்துக்கு பக்கத்துல இருந்த கமுதி, கமுதியானு இரண்டு நாட்டுக்காரங்க, இவங்க கிராமத்துக்குள்ள அத்துமீறி நுழைஞ்சு அட்டுழியம் பண்ணுவாங்கலாம். அவமரியாதையா நடத்துவாங்கலாம்.

அந்த ஊர்த் தலைவர்களும் நமக்கு எதுக்கு வம்புனு பக்கத்து நாட்டு மன்னர்கள் கூட ரகசிய கூட்டணி வைச்சிக்கிட்டா நமக்கு பிரச்சனை இல்லைனு அந்த ஊர் வளர்ச்சிய பத்தியும், மக்களை பத்தியும் கவலை படாம இருந்தாங்கலாம்.

ஒரு நாள் அந்த நாட்டு மன்னன் எல்லா ஊரும் வளர்ந்திருக்கு ஆனா இந்த கழமித காஜப ஊரு மட்டும் வளராம இருக்கேனு அந்த ஊருல பெஞ்ச தேய்ச்சுக்கிட்டு இருந்த பழைய ஊர் தலைவர்கள ஓரங்கட்டிட்டு, அந்த கிராமத்துல இருந்து பக்கத்து கிராமத்துக்கு காவல்காரனா போயிருந்த ஒரு நேர்மையான, துடிப்பான இளைஞன அந்த ஊர் தலைவரா போட்டாராம்.

அந்த புது தலைவர் வந்ததும் ஊரு முழுக்க சுத்தி அந்த ஊர வளர்க்க ராத்திரி பகல் பாக்காம உழைச்சாராம். பக்கத்து நாட்டு கிட்ட இவங்க அடி வாங்கிட்டு இருந்த நிலைமை மாறி, இவங்க அவங்கள தினமும் அடிச்சி விரட்ட ஆரம்பிச்சாங்களாம். ஊரே அந்த புதுத் தலைவர கொண்டாடுச்சாம்.

இதை பாத்து பொறாமை பட்ட அந்த ஊரு பெருசுக சதித்திட்டம் தீட்டி அந்த நாட்டு மன்னன்கிட்ட போய் தலைவர பத்தி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர் தலைவர் பதவியை பறிச்சிட்டாங்களாம்.

தலைவர் மாறுனதும் அந்த ஊரும் பழைய அடிதாங்கி நிலைமைக்கு போயிடிச்சாம். என்னைக்காவது ஒரு நாள் மறுபடியும் அந்த காவலன் திரும்ப தலைவனா வந்து அவங்க ஊரை மீட்டெடுப்பானு அந்த ஊரே காத்திருந்துச்சாம்..

6 months ago | [YT] | 12