News point

ஜனவரி 23 வெளியாகும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி

7 months ago | [YT] | 2

News point

*மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா*


*நடிகர் மோகன்லால் நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்தார். பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்*

1 year ago | [YT] | 3

News point

1 year ago | [YT] | 3

News point

Good bad ugly poster relese

1 year ago (edited) | [YT] | 3

News point

*சத்குரு குணமடைந்து வருகிறார்*

கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார்.

சில நாட்களுக்கு முன்பு சத்குரு *அவசர சிகிச்சைக்கு* உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது

இது பற்றி மருத்துவர்கள் *"சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்"* .என்று கூறினார்

சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார். 🙏🏽

twitter.com/ishafoundation/status/1770420752602276…


https://youtu.be/bt8efLzaBfE

1 year ago | [YT] | 8

News point

பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி

1 year ago | [YT] | 20

News point

கோவை சட்டமன்ற தொகுதிக்கு ISO தரச்சான்று

1 year ago | [YT] | 18

News point

Thickurichy mahadevar Temple Story

திக்குறிச்சி மஹாதேவர் நாமம் வாழ்க

அருள்மிகு ஸ்ரீ திக்குறிச்சி மஹாதேவர் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் (2 வது சிவாலயம் )

சரித்திர புகழ்வாய்ந்த மஹா சிவராத்திரி தினத்தன்று நடைபெறும் மஹாசிவராத்திரி ஓட்டத்தின் பன்னிரு சிவாலயங்களில் இரண்டவது திருத்தலம் திக்குறிச்சி மஹாதேவர் ஆலயம் .

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய பகுதியான மார்த்தாண்டம் நகரை ஒட்டிசுமார் 3km தொலைவில் தாமிரபரணி நதிக்கரையின் கரையில் கிழக்குமுகம் நோக்கி அமைந்துள்ளது இவ்வழகிய திருத்தலம்.

ஸ்தலபெயர் : திக்ரிஷி
திக் + ரிஷி : திக் என்றால் ஞானதிருஷ்டி
ரிஷி என்றால் முனிவர்
வ்யாக்ரபாத மகரிஷி தன்னுடைய ஞானதிருஷ்டியால் திருமலையில் இருந்து ஈசன் இவ்விடத்தில் தியானம் செய்வதை கண்டார் இதுவே திக்ரிஷி என்பதின் பொருள் .

காலபோக்கில் இதுவே மருவி திக்குறிச்சி என்றாயிற்று.

இறைவனின் திருநாமம் : மட்டால வீரியன்
பிரபஞ்சத்தின் அண்டசராசரங்களையும், ஜுவஜாலங்களையும் உருவாக்க காரணமான வீரியத்தை தன்னகத்தே தோற்றுவித்த ஈசன் என்பதே மட்டால வீரியன் என்னும் திருநாமத்தின் பொருள்.

இத்திருத்தலத்தின் ஈசனின் இதர திரு நாமங்கள்
1. ஜலருத்ரன்
2. கிராத மூர்த்தி
3. திக்குறிச்சி மகாதேவன்


ஸ்தல தீர்த்தம்
தாமிரபரணி நதி தீர்த்தம்

ஸ்தல விருட்சம்
அரசமரம்

உபதேவதைகள்

1. கணபதி (இங்கு ஏழு கணபதி சங்கல்பங்கள் உள்ளன )
2. வனசாஸ்தா
3. நாகர்
4. இசக்கி அம்மன்
5. பத்ரகாளி அம்மன்
6. ஷேத்ர பாலகன்

சங்கல்ப மூர்த்திகள்

1. விஷ்ணு
2. நரசிம்ஹ மூர்த்தி
3. வ்யோம கந்தர்வன்
4. வ்யோம யக்ஷி
5. பிரம்ம ரக்டசஸு
6. வீர ரக்டசஸு

ஸ்தல புராணம்

இத்திருக்கோவில் மஹாபாரத காலத்தோடு தொடர்புடைய பழம்பெருமை உடையது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவனாகிய அர்ஜுணன் பாசுபதாஸ்திரம் வேண்டி ஈசனை நோக்கி தவம் புரிந்தான் ஈசன் அவன்முன் காட்டளானாக (வேடன்) தோன்றி அவனை சோதிப்பதற்காக நந்தியை பன்றியாக உருமாறச்செய்து அவன் முன்னே அனுப்பினார். பன்றியை கண்ட அர்ஜுணன் வில்லை ஊன்றிய இடத்தில் இருந்து எடுத்து பன்றியை நோக்கி அம்பு எய்தான். அதே நேரம் ஈசனும் பன்றியை நோக்கி அம்பு எய்தார்; பன்றியும் வீழ்ந்தது. பன்றி யாருக்கு சொந்தம் என்பதில் அர்ஜுணனுக்கும் ஈசனுக்கும் இடையில் போர் மூண்டது அர்ஜுணன் ஈசனுடன் போர் செய்து களைப்புற்ற நிலையில் அம்புகள் தீர்ந்து விட்டதால் வில்லால் ஈசனின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு கீழே விழுந்தான். கீழே படுத்துக்கொண்டு ஒருகல்லை சிவலிங்கமாக பாவித்துஅருகில் நின்ற பூக்களை பறித்து கல்லின் மீது வைத்து மீண்டும் பலம்பெறுவதற்காக பிரார்தித்தான். அர்ஜுணன் அர்ச்சித்த பூக்கள் அனைத்தும் காட்டாளன் வடிவில் இருந்த ஈசனின் தலையில் இருப்பதை கண்டு வந்திருப்பது மஹாதேவரே என்பதை தெரிந்து கொண்டான். ஈசனிடம் அறியாது செய்த பிழையை பொறுக்கும்மாறு வேண்டினான். ஈசனும் அவனது தவத்துக்கு மெச்சி பாசுபதாஸ்திரத்தை வழங்கி அருளினார்.

அர்ஜுணனுடன் போர் புரிந்த பிறகு இறைவன் தன்னுடைய கோபத்தை தணிப்பதற்காக இவ்விடத்தில் தாமிரபரணி ஜலத்தின் மீது ஜலருத்திரனாக தியானத்தில் அமர்ந்தார்.

யாஹம் நடத்துவதற்காக கிருஷ்ணன் அறிவுரைப்படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவராகிய பீமன் புருஷாமிருகம் (வ்யாக்ரபாத மகரிஷி) பால் வேண்டி திருமலைக்கு வந்தான். புருஷாமிருகம் (வ்யாக்ரபாத மகரிஷி) திருமலையில் இருந்து தன்னுடைய ஞானதிருஷ்டியால் ஈசன் இவ்விடத்தில் இருப்பதை கண்டுகொண்டு பால் எடுக்க வந்த பீமனை இவ்விடம் நோக்கி துரத்தி கொண்டு வந்தார். பீமனும் திக்குறிச்சி மஹாதேவரை தரிசித்து விட்டு திற்பரப்பு நோக்கி ஓட துவங்கினான். வ்யாக்ரபாத மகரிஷியும் பீமனை துரத்த துவங்கினார்.
இதுவே இத்திருத்தல வரலாறும், சிவாலய ஓட்டத்தின் வரலாறு என்பது ஜதீகம்.

* அர்ஜுணன் ஈசனின் தலையில் வில்லால் அடித்ததால் உண்டான வடு இன்றளவும் சிவலிங்கத்தின் மீது காணப்படுகிறது.
* வ்யாக்ரபாத மகரிஷியின் சிற்பங்கள் இன்றளவும் ஆலயத்தின் தூண்களில் காணபடுகிறது.
* அர்ஜுணன் வில்லை ஊன்றிய இடத்தில் இருந்து எடுத்த இடம் வில்லூன்றி கோணம் ஆகும். இவ்விடம் இத்திருத்தலத்தில் இருந்து 3 Km தொலைவில் அமைந்துள்ளது.
* அர்ஜுணன் பன்றியின் மீது அம்பு எய்த இடம் பன்நிபாகம் . இது 6 வது சிவாலயம் ஆகும்.
ஆலயத்தின் அமைப்பு மற்றும் வரலாறு:

தாமிரபரணி நதியின் மீது ஈசன் சுயம்புவாக அவதரித்ததால் முன்னோர்கள் நதியின் திசையை திருப்பி இவ்வாலயத்தை நதியின்மீது எழுப்பியுள்ளனர். ஆலயத்தின் மதிற்சுவரை ஓட்டியே நதியும் பாய்ந்து கொண்டிருகின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரதான வாசல் கிழக்கு வாசல் ஆகும். மேலும் வடக்குவாசல் யானை கதவுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ஆலயத்தின் ஸ்தல வரலாறின்படி இறைவன் தனது முழு உருவத்தில் சுயம்புவாக இருப்பதாகவும், ஈசனின் சடைமுடியே இங்கு நாம் வழிப்படும் சிவலிங்கமாக காட்சி தருகிறது, எனவும் கூறப்படுகிறது. மேலும் ஆலயம் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளதாகவும் மேல்நிலையில் தற்போது உள்ள ஆலையமும், கீழ்நிலையில் தண்ணீர் நிறைந்த பகுதியாகவும், இறைவனை சுற்றியே இவ்வாலயம் எழுப்பபட்டுள்ளது எனவும் முன்னோர்கள் கூறுகின்றனர். இதற்கான பல்வேறு அதாரங்கள் இங்கு காணப்டுகின்றன.
தற்போது உள்ள கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் அரசர்களால் சீரமைக்கபட்டதாகும். இவ்வாலயத்தின் பழைய கட்டிடபாகங்கள் மற்றும் இங்கு பாரம்பரியமாக காணப்பட்ட கல்கொடிமரம் ஆகியன ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கல்கொடிமரத்தின் எஞ்சிய பாகங்கள் இன்றளவும் ஆலய வளாகத்தில் கானப்படுகின்றன.
இத்திருகோவிலில் காணப்பட்ட நந்தியானது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாய நிலங்களை அழித்ததின் காரணமாக முன்னோர்களால் ஆற்றில் தூக்கி வீசப்பட்டது. இதனால் நந்தி இல்லா சிவாலயம் என சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பெயர் பெற்று வந்தது.
தற்போது ஆகமவிதிகளின்படி நந்தி மீண்டும் புனர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நந்தியானது ஆலயத்தின் கீழ் நிலையில் மஹாதேவரின் முன்பாக வீற்றிருப்தாக ஐதீகம். இங்கிருந்த நந்தியின் வரலாறு இன்றளவும் இங்குள்ள மக்களால் நினைவுகூரப்படுகிறது.
இத்திருக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவெண்றால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜகுருவாக இருந்த தரணநல்லூர் நம்பூதிரிபாடு அவர்களின் தந்திரஸ்தானத்தில் அமைந்த முதல் கோவில் இதுவாகும் இத்திருக்கோவிலின் கர்த்தாவும் கர்மியும் அவரே ஆவார்.

பூஜை விபரங்கள்

இங்கு அகமவிதிகளின்படி ஆறுகால பூஜைகளான நிர்மால்யபூஜை, உஷபூஜை, பந்திரடிபூஜை, கலசபூஜை, கலசாபிஷேகம், உச்சபூஜை, அத்தாழபூஜை, மற்றும் சிவேலிபூஜைகள் போன்றவை நித்திய பூஜைகளாக நடைபெருகின்றன.

விசேஷஷமான பூஜை நாட்கள்:

1. பிரதோஷ பூஜை
2. ஆயில்யம்
3. அஷ்டமி
4. திருவாதிரை
5. சங்கராந்தி
6. நிறைபுத்தரிசி பூஜை
7. சதுர்த்தி, உத்திரம்

திருவிழாக்கள்

1. மார்கழி திருவாதிர திருவிழா
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முதன்மையாக கொண்டு மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. பிரதோஷ தினத்தன்று மஹாதேவர் காளைவகனத்தின் மீது எழுந்தருளல் மற்றும் திருவாதிரை தினத்தன்று மஹாதேவர் யானை மேல் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி சிறப்பு நிகழ்வாகும். (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பகவான் பள்ளி வேட்டைக்கு குழித்துறை தாமிரபரணி நதிக்கரையோரம் எழுந்தருளுவார், அதேநேரம் அவிடதிற்க்கு குழித்துறை மகாதேவர் ஆறாட்டுக்கு எழுந்தருளுவார்., இரண்டு மூர்த்திகளும் எதிரெதிரே சந்திக்கும் சிறப்பான நிகழ்வானது பாரம்பரியமாக பல நுற்றாண்டுகளாக நடைப்பெற்று வந்துள்ளது.)மேலும் திருவிழாவின் 10 ஆம் நாளான புனர்தம் நட்சத்திரத்தன்று மஹாதேவர் யானை மீது வலம் வந்து தாமிரபரணி நதி தீர்த்தத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளுவது மற்றுமொரு சிறப்பான நிகழ்வாகும்.

2. மஹாசிவராத்திரி பெருவிழா
மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி நாளன்று வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இங்கு நடைபெறுகிறது. இத்திருவிழாவின் போது லட்சகணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு நடைபயனமாக வந்தும் வாகனங்களில் வந்தும் மஹாதேவரை தரிசித்து கோடி புண்ணியம் பெருகின்றனர். இத்திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.


நித்திய வழிபாடுகள்
நித்திய நிவேத்தியமாக வெள்ளசோறு, சிறுபயறுபாயசம், பால்பாயசம், அப்பம் முதலியன மஹாதேவருக்கு நிவேதிக்கபடுகிறது.
பிரதான வழிபாடு
பரிகார தாரை

v இங்கு தாரை வழிபாடு நடத்துபவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், தோஷங்கள் விலகி காரிய சாத்தியம், குழந்தை பேறு பெற்று நன்மை அடைகின்றனர்.
v இங்கு இறைவனுக்கு பின்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஜதிகம்.
v மேலும் மஹாதேவருக்கு பிரதான நேர்ச்சையாக விளக்கும், மாலையும் நடைக்கு வைக்கபடுகிறது.
v இவ்வாலயத்தின் பவிழமல்லி பூக்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டால்எண்ணிய காரியம் ஈடேறும்.
v இத்திருத்தலத்தில் 41 நாட்கள் பஜனம் இருந்து மஹாதேவரை தரிசித்தால் மனநோய் மாறுபடும் என்பது ஐதீகம்.
v புகழ்மிக்க மார்கழி திருவாதிரை தினத்தன்று பள்ளிவேட்டை நடைபெறும் ஒரே ஆலயம் இவ்வாலயம் ஆகும்.
வழிபாடு நேரம்
காலை 5.00 மணி முதல் 12.00 வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 வரை

1 year ago (edited) | [YT] | 4

News point

அனாதை ஆசிரமத்தில் வசிக்கும் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

1 year ago | [YT] | 7

News point

தலைவன் இல்லை மக்கள் சேவகன்

1 year ago | [YT] | 7