onetamilnews / ஒன் தமிழ் நியூஸ்

எங்களது ஒன் தமிழ் நியூஸ் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க அடுத்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க தமிழர் கலைகளை வளர்ப்பதற்கு தமிழன்டா கலைக்குழு சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க தமிழ் வாழட்டும் தமிழர் வாழட்டும் தமிழர் பண்பாடு வளரட்டும்..................தமிழ் நாட்டுப்புறக்கலைகள்,உணவுகள்,உடைகள் போன்றவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க புறப்படுங்கள்,பச்சைத் தமிழனாக வாழுவோம் - தமிழன்டா செ.ஜெகஜீவன்


onetamilnews / ஒன் தமிழ் நியூஸ்

youtube.com/live/snahaz8tGy0?feature=share

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்*

*திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (06.02.2025) வியாழக்கிழமை காலை 11.00 மணி முதல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்*

*(1) ரூ.3,800 கோடி முதலீட்டில் 2,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான TP சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை துவக்கி வைக்கிறார்கள்.*

*(2) ரூ.2574 கோடி முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW Solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.*

*மேற்கண்ட நிறுவனங்களில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.*

youtube.com/live/snahaz8tGy0?feature=share

2 months ago | [YT] | 0

onetamilnews / ஒன் தமிழ் நியூஸ்

எந்த வித முன் அறிவிப்பும் நோட்டீஸ் வழங்காமல் , வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது தூத்துக்குடி சிதம்பரநகர் மார்க்கெட் சீல் வைப்பு ;வியாபாரிகள் போராட்டம்

தூத்துக்குடி 2020 அக்டோபர் 9 ;தூத்துக்குடி சிதம்பரநகர்-யில் மாநகராட்சிக்கு சொந்தமான டீ கடை,ஓட்டல்கள்,மீன் மற்றும் இறைச்சி,மண்பானைச்சட்டி கடை,பிரியாணி கடை,சேர் மார்க்கெட்,உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட மார்க்கெட் உள்ளது. இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இங்குள்ள கடைகள் அனைத்தும் கடையில் உள்ள வியாபாரிகளே சொந்தமாக கட்டித்தான் ,மின்சாரம் எடுத்தும்,மாநகராட்சிக்கு வாடகை பணம் குத்தகைதார் மூலம் வழங்கியுள்ளனர்.இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் ,நோட்டீஸ் வழங்காமல் இன்று அதிகாலையில் மாநகராட்சி அதிகாரிகள் நசரேன் ,வீரக்குமார் போன்ற 6 பேர் கொண்ட குழுவினரால் நேற்று சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மின் இணைப்புகளை கட் செய்ய வந்தார்கள். ஆகையால் வியாபாரிகள் மார்க்கெட் வாசலில் அமர்திருந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் 60 கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மார்க்கெட் குத்தகைதாரர் திருமணிராஜா கூறுகையில் எனக்கு 2022 வரை குத்தகை காலம் நிலுவையில் இருக்கிறது.நான் கட்டிய பணம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ளது.தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பகுதியில் மிகப்பெரிய கட்டிடம் கட்ட உள்ளார்கள்,நாங்கள் அவற்றை வரவேற்கிறோம்.ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் எந்த வித முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்காமல்,, சட்ட விரோதமாக ,அதிகார துஸ்பிரயோகம் செய்து நேற்று வியாபாரிகள் இல்லாத அதிகாலை வேளையில் சீல் வைத்துள்ளனர்.இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவ்வாறு கூறினார்.

4 years ago | [YT] | 2