ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

Thiruvennainallur shivan kovil 🔥🙏RS_edits 😊🔥🙏follow and support freinds❤👍🙏அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீகி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில் திருவெண்ணெய்நல்லூர்🙏

இறைவன் = ஸ்ரீகி௫பாபுரீஸ்வரர், வேனுபுரிஸ்வரர், அருட்கொண்டநாதர்.

இறைவி = ஸ்ரீ மங்களாம்பிகை, வேற்கன்னி நாயகி அம்மன்.

பண் = இந்தளம்

இடம் = திருவெண்ணெய்நல்லூர்

நாடு = நடுநாடு


சுந்தர மூர்த்தி சுவாமிகளள் முதல் தேவர பாடல் பெற்ற சிவாலயமாகும்


ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

#பிட்டுக்கு_மண்_சுமந்தலீலை
A divine play of swamy Sundareswarar carrying mud
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢ஆவணித்_திருவிழா 2025-9ம் திருநாள் இன்று 03.09.2025 காலை💢

#Madhurai Sri Meenakshi_Sundareswarar_temple💢Aavani Festival-9th_day-03.09.2025-Morning💢
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்- திருவாசகம்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻

#madurai

1 month ago | [YT] | 22

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

#மதுரை # ஸ்ரீ
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
#ஆவணித் திருவிழா 2025-5ம்நாள் இன்று 30.08.2025 மாலை- சுவாமி,அம்பாள் நந்திகேசுவரர்,யாழி வாகனம்💢

#Madhurai #Sri Meenakshi Sundareswarar temple💢Aavani Festival 2025-Day-5- 30.08.2025 evening-Swamy,Ambal procession in Nadhikeswarar, Yaazhi Vehicle💢
✨✨✨✨✨
கோலமாய நீள்மதிற்
கூடல் ஆலவாயிலாய்
பாலனாய தொண்டு செய்து
பண்டு மின்றும் உன்னையே
நீலமாய கண்டனே
நின்னை அன்றி நித்தலுஞ்
சீலமாய சிந்தையில்
தேர்வதில்லை தேவரே- எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்-03.52.05
✨✨✨✨✨
🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻

1 month ago | [YT] | 17

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

#தருமிக்கு_பொற்கிழி_அளித்த_லீலை
(சுவாமி கரத்தில் ஓலை)
#மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்💢ஆவணித்திருவிழா 4ம் நாள்-இன்று 28.08.2025-காலை-#முத்தங்கி_சேவை

#Madhurai Sri #Meenakshi_Sundareswarar_temple💢AavaniFestival-4th_day-28.08.2025-Muthangi(pearl dress)Seva
✨✨✨✨✨✨✨✨✨✨✨ #திருவிளையாடல்_புராணம்

வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரை ஆட்சி செய்து வந்தார். அவர் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும், மலர்ச்செடிகளையும் வைத்து பராமரித்தார். அந்த நந்தவனத்தில் செண்பகப்பூ செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தார்.அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், செண்பக சுந்தரர் என்றும், மன்னன் செண்பகப்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டார்.

செண்பகதோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான்.பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா. செயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. தன்னுடைய சந்தேகம் என்னவென்று கூறாமல், மன்னரின் சந்தேகத்தினை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்து, சபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.

மதுரை சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதி சைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். அவருக்கு திருமணம் செய்து இறைவன் அடி சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஏழையாக இருந்தமையாலும், அனாதையாக இருந்தமையாலும் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய மணவாழ்க்கைக்காக காத்திருந்தவருக்கு மன்னன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் போட்டியைப் பற்றிய செய்தி தெரிந்தது. அப்போது அங்கு வந்த சொக்கநாதர் புலவராக மாறி ஒரு ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார்.

தருமியும் மன்னரின் அவைக்கு சென்று இறைவன் கொடுத்த பாடலைப் படித்தான். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே

அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. மன்னனுக்கு தருமியின் பாடல் சந்தேகம் தீர்த்து என்று பரிசினை தருமிக்கு கொடுத்தார். ஆனால் அவையிலிருந்த புலவர் நக்கீரன் என்பவர் தனக்கே அனைத்து புலமையும் தெரியும் என்ற ஆணவத்தால் அந்தப் பாடலில் பொருட் குற்றம் இருப்பதாக கூறி பரிசினை தடுத்துவிட்டார்.

தருமி சொக்கநாதர் கோயிலில் உள்ள இறைவனிடன் நடந்ததைக் கூறி முறையிட, இறைவன் மீண்டும் புலவராக வந்து தருமியுடன் இணைந்து அவைக்குச் சென்றார். அங்கு நக்கீரனுடன் வாதம் செய்தார். நக்கீரன் இயற்கையாக கூந்தலுக்கு மனமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். அதனால் கோபம் கொண்ட சொக்கநாகப் புலவர், இறைவியின் கூந்தலுக்குமா மனமில்லை என்ற கூற, ஆம் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்றார் நக்கீரர். பிழையான செய்தியை நக்கீரர் தன்னுடைய ஆணவத்தினால் சரியானது என்றே மறுப்பு தெரிவித்துவந்தார். அதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் சுட நக்கீரர் பொற்றாமரை குளத்தில் சென்று விழுந்தார்
✨✨✨✨✨✨✨✨✨✨✨ #நக்கீரரின்_ஆணவம்_அறுத்தல்

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும்,
ஐந்தொழிலைச் செய்பவன் அப்பரமன்.
வரம்பில் ஆற்றலுடைமை கொண்ட அப்பரமன்,
எப்பொருளையும் எப்படியும் படைக்க வல்லான்.
தமிழைத் தெளிவுறக் கற்று,
தமிழ்ச்சங்கத் தலைமை ஏற்ற நக்கீரர்,தமிழ் நூல்கள் கூறும்,மேற்சொன்ன கருத்துக்களை அறியாதவர் அல்லர்.
இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து தன்னை இனங்காட்டுகிறான்.
வந்தது பரமன் எனத் தெரிந்த பின்பும்,
அவனே இவ்வுலகைப் படைத்தவன் என்பதை அறிந்த பின்பும்,
அவன் நினைத்தால்,
எப்பொருளையும் எப்படியும் படைக்க முடியும் என்பதறிந்த பின்பும்,அவன் படைத்த உலகியல்பை,அவனை மறுத்துத் தானுரைப்பது தவறென்றுணராது,
நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே,
எனக்கூறி நின்ற நக்கீரர் செயல்,
அறிவாணவத்தின் உச்சநிலை மட்டுமன்றி,
அறியாமையின் உச்சநிலையுமாம்
✨✨✨✨✨✨✨✨✨✨✨ இச்சம்பவம் நடந்தது மதுரையில்.
மதுரை முழுதாண்டு மாண்புடன் நிற்கும் மீனாட்சி அருகிருக்க,
நக்கீரரிடம் கேள்வியெழுப்பும் சிவனார்,
அவ்வன்னை கூந்தலுக்கு வாசனையுண்டோ எனக் கேளாது,
எங்கோ இருக்கும்,
காளத்தியான்தேவி ஞானப்பூங்கோதையின் பெயர் சொல்லி,
அவள் கூந்தலுக்கு மணம் உண்டோ எனக் கேட்டது எதனால்?
ஞானமே வடிவான செறிந்த கூந்தலைக் கொண்டவள் என்பது,
ஞானப்பூங்கோதை எனும் பெயரின் விளக்கமாம்.
ஞான வடிவத்தில் புறப்பொருள்கள் கலத்தல் கூடுமோ?
கூடாதென்பது திண்ணம்.
கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை ஒப்பும் நக்கீரர்,
அம்மணம் புறப்பொருள்களின் கலப்பால்,
செயற்கையாய் அமைந்தது என்றே வாதம் செய்கிறார்.
அது உண்மையாயின்,
புறப்பொருள்களின் கலப்பு சாத்தியமாகாத,ஞானமே வடிவான அன்னை கூந்தலில்,
வாசனை,
செயற்கையால் அமைவது எங்ஙனம்?
இக்கேள்வி பிறக்க,
அன்னை கூந்தலுக்கு,
இயற்கை மணம் உண்டென்பது தெற்றெனப் புலனாகிறது ✨✨✨✨✨✨✨✨✨✨✨
🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻

1 month ago | [YT] | 15

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

இன்று பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது 🙏 அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஶ்ரீ கிருபாபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் திருவெண்ணெய்நல்லூர் 🙌🙏

1 month ago | [YT] | 36

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் குரு பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது 🙏 மாலை முதலை சாப்பிட்ட பிள்ளையை தேவர பாடல் பாடி பிள்ளையை எடுத்தல் ஐதிக நிகழ்வு 🚩🙏 இரவு சுந்தர் 🐘 அவர் நன்பர் 👑 சேரமான் பெருமான் 🐎 திருக் கைலாயம் 🏔️ செல்லும் ஐதிக நிகழ்வு நடைபெற்ற உள்ளது 🚩🙏 அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஶ்ரீ கிருபாபுரீஸ்வர சுவாமி திருக்கோவில் திருவெண்ணெய்நல்லூர் 🙏
Follow:@thiruvennainallur_temples
Photo shoot:@mr_rishith_sivam
Photo editor:@its_rs_edits_tvn

2 months ago | [YT] | 19

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் தடுத்தாட்கொண்ட விழா சிறப்பாக நடைபெற்றது 🙏 அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஶ்ரீ கிருபாபுரீஸ்வர சுவாமி சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருக்கைலாய காட்சி கொடுத்த ஐதிக நிகழ்வு 🚩🙏

2 months ago | [YT] | 43

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பாள் உடனுறை ஶ்ரீ வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோவில் ஏமப்பூர் 🙏 மண்டல பூஜை மற்றும் பிரதோஷ வழிபாடு 🙏 சிறப்பாக நடைபெற்றது 🙏🔥

2 months ago | [YT] | 40

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

நேற்று பிரதோஷதை மூன்னிட்டு நந்தி தேவர் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது 🙏 அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஶ்ரீ கிருபாபுரீஸ்வர சுவாமி திருக்கோவில் திருவெண்ணெய்நல்லூர் 🙏

2 months ago | [YT] | 37

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

*திரு ஈங்கோய்மலை திருக்குட நன்னீராட்டு பெருவிழா*
🌞🔱🛕🦟🌙
*ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி*
*பாங்கோர் பழனத்து அழகா போற்றி*
🙏👣💐👏

2 months ago | [YT] | 32

ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ கி௫பாபுரீஸ்வரர் திருக்கோயில்

🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
விழுப்புரம்_மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம்,#பனையபுரம் அருள்மிகு-#பனங்காட்டீஸ்வரர்_திருக்கோயில்💢#மகாகும்பாபிஷேகம்-14-07-2025-காலை💢

#Panayapuram Sri #Panagaateeswarar Temple💢#Mahakumbabisekham on 14.07.2025💢
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
விண்ணமர்ந்தன மும்மதில்களை
வீழ வெங்கணை யாலெய் தாய் விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய
பிஞ்ஞகா பிறை சேர்நுதலிடைக்
கண்ணமர்ந்தவனே கலந்தார்க்கருளாயே-எம்பிரான்
திருஞானசம்பந்தர்
பெருமான்
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
வழி-சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.பண்ருட்டியிலிருந்தும்,விக்ரவாண்டியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்சிற்றம்பலம்..

2 months ago | [YT] | 22