Welcome to Divine Light Channel, meets powerful motivation for everyday life ,
explore inspiring stories, teachings and mantras from the great gods and goddesses.
Through their divine guidance offering you uplifting and motivational content that helps to
overcome challenges, stay focused and find inner peace.
Join my channel ...live a life filled with positivity and purpose . Om Namah Shivaya *
Divine Light / தெய்வீக ஒளி
When we invest 100 percent of our energy in any action, there will be no regrets, and when there are no regrets there is no fear or anxiety 🌟🪔❤️🌹🌞
5 months ago | [YT] | 10
View 1 reply
Divine Light / தெய்வீக ஒளி
Namah Shivaya! ...
Shiva is infinite, beyond time, beyond space—embrace the eternal energy
6 months ago | [YT] | 3
View 0 replies
Divine Light / தெய்வீக ஒளி
*இல்லக விளக்கது விருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே *
8 months ago | [YT] | 9
View 0 replies
Divine Light / தெய்வீக ஒளி
நான்காம் கால பூஜை (அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை )
சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும். இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டால் இனி வாழ்வில் துன்பங்கள் இல்லை என்கிற நிலை உண்டாகும். சௌபாக்கியம் கிட்டும். பிறவியில்லாப் பெருவாழ்வும் வாய்க்கும் என்கின்றன ஞான நூல்கள். இல்லறத்தில் இருந்து ஓர் ஆன்மா எப்படிப் படிப்படியாக உயர்ந்து சிவ நிலை அடைய வேண்டும் என்பதை விளக்கும் அற்புத விளக்கமே மகா சிவராத்திரி வழிபாடு.
இத்தகைய அற்புதமான வழிபாட்டைத் தவறாமல் செய்து அனைவரும் ஈசனின் அருளைப் பெறலாம் 🙏🙏🎊🎊💫💫
10 months ago | [YT] | 30
View 1 reply
Divine Light / தெய்வீக ஒளி
மூன்றாம் கால பூஜை ( இரவு 12 மணி முதல் 3 மணி வரை )
‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். ஆலயங்களில் கருவறைக்குப் பின் கோஷ்டத்தில் இந்தத் திருமேனியை தரிசிக்கலாம். லிங்கபாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவராவார். அடிமுடி காண முடியாத புராணத்தை சித்தரிக்கும் இந்தத் திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையில் தரிசனம் செய்து வழிபடும்போது ஈசனே இந்த பிரபஞ்ச வடிவானவன் என்கிற தன்மை புரியும். சகலமும் அவனே என்று உணர்ந்து தரிசனம் செய்யும் போது மாயைகள் விலகும். ஈசன் அக்னி வடிவமாக இந்தக் காலத்தில் தோன்றி அருள்வதால் நம் பாவங்களைப் போக்குவார். முன்வினைகள் தீரும். பாவங்களும் வினைகளும் நீங்கிவிட்டால் இவ்வாழ்வில் தொல்லைகள் தீரும். வாழ்வில் உயர்நிலைகளை அடைய இருந்த தடைகள் தன்னால் விலகும். 🎊🙏🙏🎊
10 months ago (edited) | [YT] | 35
View 1 reply
Divine Light / தெய்வீக ஒளி
இரண்டாம் கால பூஜை (மாலை 9 மணி முதல் 12 மணி வரை )
இந்தக் கால பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது.
கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியத் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம். ‘தட்சிணம்’ என்பதற்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். இல்லறத்தில் இருந்து ஞானத்தை நோக்கி நகர வேண்டியதை உணர்த்தும் திருக்கோலம். இவரே பிரபஞ்ச குரு. எனவே இவரை வழிபட்டால் மெய்ஞ்ஞானம் ஸித்திக்கும். கல்வி கேள்விகளில் ஞானம் உண்டாகும். கலைகளில் ஈடுபாடு உடையவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய காலம் இது. படிப்பில் இருந்த தடைகள் நீங்கி வல்லுநர்களாகத் திகழ வழிபட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தட்சிணாமூர்த்தியாவார் 🙏🙏
10 months ago | [YT] | 60
View 1 reply
Divine Light / தெய்வீக ஒளி
மகா சிவராத்திரி
முதல் காலம் ( மாலை 6 மணி முதல் 9 மணி வரை )
இந்தக் காலத்தில் சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இல்லறமே நல்லறம் என்று ஈசன் விளக்கும் திருக்கோலம் இது. இந்தக் கோலத்தில் தரிசனம் செய்தால் நம் வினைகள் அகலும். ஞானம் பெருகும். சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் என சச்சிதானத்தத் திருக்கோலமாகத் திகழ்வது சோமாஸ்கந்தர் திருக்கோலம். இந்தக் கோலத்தில் இறைவனை தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். குழந்தைகளின் ஆரோக்கியமும் கல்வி அறிவும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். சிலர் வீடுகளில் எப்போதும் சண்டை சச்சரவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வழிபட வேண்டியது முதற்காலத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியையே 🙏🙏🎊🎊
10 months ago | [YT] | 26
View 0 replies
Divine Light / தெய்வீக ஒளி
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி! சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 🙏🙏♥️♥️
10 months ago (edited) | [YT] | 43
View 2 replies
Divine Light / தெய்வீக ஒளி
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
11 months ago | [YT] | 12
View 0 replies
Divine Light / தெய்வீக ஒளி
Om Namah Shivaya 🙏🎊💫♥️
11 months ago (edited) | [YT] | 12
View 0 replies
Load more