Welcome To SSDIGITAL TINDIVANAM tv, TINDIVANAM No.1 Devotional Youtube Channel where we bring Early Morning mantras all abishegam, aartis,pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abishegam and aarti, poojas and special day function in most famous temple and their places added soul to the Devotional Bakthi Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of SSDIGITALTINDIVANAM are TINDIVANAM wide.
SSDIGITALTINDIVANAM
விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்… எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்! தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் எனவும் இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் நடிகர் விஜய் இடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என மதகுரு ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இஃப்தாவின் தலைமை முஃப்தியுமான மௌலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தவெக தலைவர் விஜய் குறித்து ஃபத்வா எனும் நோட்டீஸை வெளியிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,
விஜய் முஸ்லிம் விரோதி என்றும், அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இஃப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது மற்றும் பாவம் என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுகிறது.ப்படி இருக்கையில் சென்னையில் நடந்த இஃப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அத்தகைய நபர்களை நம்ப வேண்டாம்; நிகழ்வுகளுக்கு அவர்களை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்; அவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்கவும் என அவர் வெளியிட்டுள்ள ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் திரைப்பட தொழிலுக்குப் பிறகு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று மௌலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.
“விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மற்றும் முழு இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதம் மற்றும் வன்முறையுடன் தொடர்புப்படுத்தி காட்டியுள்ளார். இப்படியான படங்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது தவறான படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செய்துவிட்டு விஜய் இஸ்லாமியர்களின் மத உணர்வை பயன்படுத்த முயல்கிறார்” என தெரிவித்துள்ளார்.
4 months ago (edited) | [YT] | 0
View 0 replies
SSDIGITALTINDIVANAM
அண்மையில் ஒரு பழைய நூலில் கண்ட பல்லவர் காலப் படைப்பு சிற்பங்கள் இரண்டினை அன்பு நண்பர் முன்னூர் ரமேஷுக்கு Munnur Ramesh அனுப்பி அவை எங்கு இருக்கின்றன என்று தகவல் கேட்டேன். அவரும் உடனே பணிகளை விட்டுவிட்டு சென்னையில் இருந்து முன்னூர் வந்து பல்லவர் கால பொக்கிஷங்களில் இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்து அவற்றை புகைப்படமும் எடுத்து அனுப்பினார். இதை அடுத்து எதேச்சையாக புதுச்சேரி பிரெஞ்சு EFEOஇல் உள்ள ஒரு பழைய புத்தகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோவிலைச் சார்ந்த நீண்ட புடைப்புச் சிற்பம் ஒன்றின் புகைப்படம் கிடைத்தது.
முன்னூரில் கிடைத்த படைப்பு சிற்பங்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து பார்த்த பொழுது அது காஞ்சிபுரம் சிற்பத்தோடு பெரிதும் ஒன்றாக இருந்தது. கருக்கினில் அமர்ந்தாள் கோவில் சிற்பம் முழுமையாக உள்ளது. இதில் 14உருவங்கள் உள்ளன. முன்னுரில் கிடைத்த இரண்டு சிற்பங்கள் ஒரே சிற்பமாக இருந்து உடைபட்டு போயிருக்கிறது. இதில் தற்பொழுது 11 உருவங்கள் உள்ளன. காஞ்சிபுரம் சிற்பத்தில் காணப்படும் விநாயகர் முன்னூர் சிற்பத்தில் இல்லை. மேலும் துண்டு பட்ட இடத்தில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் சிற்பத்தில் முருகன் சிறுவன் வடிவில் அல்லது குழந்தை வடிவில் உள்ளார். முன்னூர் முருகன் இளைஞனாக உள்ளார்.
நண்பர் முன்னூர் ரமேஷுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
#Munnur #pallavas #PuducherryHistory #Puducherry See less
4 months ago | [YT] | 0
View 0 replies
SSDIGITALTINDIVANAM
*அன்பா்களுக்கு வணக்கம்.*
முன்னூா் தெற்கு ராஜகோபுரத்தின் இரண்டாம் நிலை கோபுரப் பணிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மீண்டும் செங்கல் தேவைப்படுகிறது. ஸ்தபதிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும். இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான முதல் செலவு ஒரு புராதனமான சிவாலயக் கட்டுமானத்திற்கு உதவியதாக இருக்கட்டும்.
ஒரு செங்கல் விலை −ரூ8.50 காசுகள்.
ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 385/
குறைந்த பட்சமாக 100 செங்கல்லுக்கும் அல்லது ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கும் உதவி செய்யலாம்.
இந்த செங்கல் ராஜகோபுரத்தில் இருக்கும் காலம் வரை உங்களது பெயரும் உங்களது குடும்பப் பெயரும் விளங்கும். சிவனருளும் கிடைக்கும்.
நன்றி அன்பா்களே!
🙏🙏🙏
7 months ago | [YT] | 4
View 0 replies
SSDIGITALTINDIVANAM
ஆண்டுக்கு 18 நாள்கள், தொடருக்கு
2 நாள்கள் மட்டுமே நடந்த சட்டமன்றம்:
ஜனநாயக நாற்றங்காலை கருகச் செய்வதா?
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. விடுதலைக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
அதேபோல், நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும் தான் பேரவைக் கூடியிருக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் மிகக்குறைந்த நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெற்ற ஆண்டும் இது தான். அதிலும், ஆளுனர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட 3 நாட்களையும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தியின் மறைவு மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்ட நாளையும் கழித்து விட்டால், மொத்தம் 14 நாட்கள் மட்டும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது.
தமிழ்நாடு அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன. அவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது வெறும் 8 நாட்களில் விவாதம் நடத்தப்பட்டால், அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? ஆண்டுக்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே விவாதம் நடத்தப்பட்டால் 234 தொகுதிகளின் உறுப்பினர்களும் தங்கள் தொகுதியின் பிரச்சினைகள் குறித்தும் எந்த அளவுக்கு பேச முடியும்? என்ற அக்கறை திமுக அரசுக்கு சிறிதும் கிடையாது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப் பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை நடத்துகிறது.
பேரவைக் கூட்டங்களை மிகக்குறைந்த நாட்களுக்கு மட்டுமே நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு புதிதல்ல. 2021&ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு, 2021&ஆம் ஆண்டில் 27 நாட்கள், 2022 ஆம் ஆண்டில் 34 நாட்கள், 2023 ஆம் ஆண்டில் 29 நாட்கள் மட்டுமே அவை நடந்திருக்கிறது. ஆண்டுக்கு 100 நாட்கள் அவையை நடத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில். மொத்தமாக நான்காண்டுகளில் சேர்த்தும் கூட 108 நாட்களுக்கு மட்டும் தான் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது நான்காண்டுகளில் மொத்தம் 400 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டிய அவையை, அதில் 27% அளவுக்கு மட்டுமே நடத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. உறுதியளிக்கப்பட்டதில், நான்கில் மூன்று பங்கு நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த மறுப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளும், ஆட்சியாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளும் விவாதிக்கப்படுவதை திமுக அரசு தடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சில துறைகளைத் தவிர, மற்றத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது ஒரு நாளைக்கு ஒரு மானியக் கோரிக்கை என்ற அளவில் விவாதம் நடைபெறும். ஒரே அமைச்சரிடம் இரு பெரிய துறைகள் இருந்தால், அவர் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இரு நாட்கள் விவாதம் நடக்கும். உள்துறை மானியக் கோரிக்கை மீது இரு நாட்களுக்கு விவாதம் நடைபெறும். பின்னர், இந்த வழக்கம் ஓர் அமைச்சரின் துறைகளுக்கு ஒரு நாள் என்ற அளவில் சுருங்கியது. ஆனால், நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 துறைகளின் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, அதில் சராசரியாக 7 பேரைக் கூட பேச விடாமல் விவாதம் நடத்தும் அளவுக்கு பேரவை அலுவல் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.
2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 375-ஆம் வாக்குறுதியாக நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் கூட்ட நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதைப் போன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. வினா&விடை நேரம் மட்டுமே முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், மற்ற தருணங்களில் ஆளுங்கட்சியினரின் உரைகளும், அவர்களை புகழ்ந்து பாடுபவர்களின் உரைகளும் மட்டும் தான் நேரலை செய்யப்படுகின்றன. அரசுக்கு எதிராக எவரேனும் பேசினால் உடனடியாக நேரலை ரத்து செய்யப்படுகிறது. எதிர்க் கட்சிகளைக் கண்டு ஆளுங்கட்சி ஏன் இந்த அளவுக்கு அஞ்சி நடுங்குகிறது? என்பது தெரியவில்லை.
சட்டப்பேரவைகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள். அங்கிருந்து தான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத் தான் திமுக அரசு செய்கிறது. அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான தண்டனையை அவர்கள் தருவார்கள்.
8 months ago | [YT] | 0
View 0 replies
SSDIGITALTINDIVANAM
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது.
இப்படிக்கு
என். ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
9 months ago | [YT] | 1
View 0 replies
SSDIGITALTINDIVANAM
முன்னூா் ஶ்ரீஆடவல்லீஸ்வரா் திருக்கோயிலில் அன்னாபிஷேகம்
9 months ago | [YT] | 4
View 0 replies
SSDIGITALTINDIVANAM
இரட்டணை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உடனுறை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலய அன்னாபிஷேகம்
9 months ago | [YT] | 10
View 0 replies
SSDIGITALTINDIVANAM
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர்,
திருக்கோயில் அன்னாபிஷேகம்
9 months ago | [YT] | 7
View 0 replies
SSDIGITALTINDIVANAM
செய்யூர் கந்தசாமி கோவில் 27 நட்சத்திர வேதாளங்கள் புடைசூழ எழுந்தருளி இருக்கும் அபூர்வ முருகன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் இருந்து 26 கி மீ தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம், செய்யூர் கந்தசுவாமி கோவில். கர்ப்ப கிரகத்தில் கந்தசாமி, வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வெளிப் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள், தனிச் சன்னதியில் கோவிலைச் சுற்றி எழுந்தருளி இருக்கிறார்கள்.
வழக்கமாக சிவதலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். . இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். இப்படி கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்பிரமணிய ரூபங்களாய் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்
இக்கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள, நட்சத்திர வேதாளங்களாகும். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக, அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரை, மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
இவ்வேதாளங்கள் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. எனவேதான், இக்கோவிலில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் காணப்படுகின்றார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் அவரவர் நட்சத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு தம் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள், பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து, அவை நிறைவேற்றப்படுவதாக ஐதீகம். இப்பூஜை மூலம் பயனடைந்தோர் ஏராளம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பல மக்கள் இக்கோவிலை நாடி வருவதே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.
தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 'வேதாள பூஜை' விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.
9 months ago | [YT] | 4
View 0 replies
SSDIGITALTINDIVANAM
கந்த சஷ்டி பெருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு இருக்கும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
9 months ago | [YT] | 3
View 1 reply
Load more