பைந்தமிழ்-paindhamizh

Tamils ​​traveling on the path of Tamil nationalism


பைந்தமிழ்-paindhamizh

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விலைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத் திட்டங்களை எதிர்த்தும்,

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 07ஆம் நாள் (23.08.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில்,

‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

‪@paindhamizh2.0‬ ‪@paindhamizh‬

3 weeks ago | [YT] | 125

பைந்தமிழ்-paindhamizh

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17.08.2025) மாலை 03 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

‪@paindhamizh2.0‬ ‪@paindhamizh‬

3 weeks ago | [YT] | 80

பைந்தமிழ்-paindhamizh

*கிங்டம் திரைப்படம் திரையிடல் நிறுத்தப்பட்டது*
🇰🇬✊🏻💪🏻🇰🇬✊🏻💪🏻✊🏻💪🏻
இன உணர்வுக்கான வெற்றி

🇰🇬✊🏻🇰🇬💪🏻🇰🇬✊🏻💪🏻

தமிழீழ சொந்தங்களை இழிவுபடுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் திரைக்கதை அமைத்து திரையிடப்பட்ட *கிங்டம்* திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து திரையிடலை எதிர்த்து வந்தது,

இந்நிலையில் செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட *ராஜா திரையரங்கு, முருகன் திரையரங்கு மற்றும் காவேரிப்பட்டினம் சரோஜினி திரையரங்கு* ஆகிய மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருந்தது,

இம்முன்று திரையரங்குகளிலும் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி கடிதம் மூலமாகவும் திரையரங்கு முற்றுகை ஆர்ப்பாட்ட அறிவிப்பு மூலமாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது,

இன்றைய தினம் 6/8/25 முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன மேலும் இனி திரைப்படம் எந்த நோக்கம் கொண்டும் திரையிட படாது என்ற உறுதியை பெற்றுக் கொண்டோம்,

காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதையும் அனைத்து திரையரங்குகளிலும் உறுதி செய்தோம்,

*இந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் தோளோடு துணை நின்று தங்களது மான இன உணர்வை வெளிப்படுத்திய தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்*

*எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு!!!!*


‪@paindhamizh2.0‬ ‪@paindhamizh‬

1 month ago | [YT] | 56

பைந்தமிழ்-paindhamizh

*இன்று ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஊத்தங்கரை சாந்தி திரையரங்கத்தில் திரையிடப்பட இருந்த கிங்டம் திரைப்படத்தை நிறுத்த கோரி ஊத்தங்கரை காவல்நிலையத்திக்கும் சாந்தி திரையரங்கத்திர்க்கும் சென்று திரைப்படத்தை நிறுத்த கோரியதை ஏற்று திரைப்படத்தை திரையிடாமல் காவல் துறையும் சாந்தி திரையரங்கம் நிர்வாகமும் திரைப்படத்தை நிறுத்தி உள்ளது.*

*களத்தில் ஒருங்கிணைத்து சென்று திரைப்படத்தை நிறுத்திய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியின் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.*
❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️
---------------------------------------
செய்தி வெளியீடு :-
*ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி செய்தி பிரிவு*

‪@paindhamizh‬ ‪@paindhamizh2.0‬

1 month ago | [YT] | 44

பைந்தமிழ்-paindhamizh

*பத்து மாதம் கழித்து மீண்டும் களத்திற்கு*
பர்கூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் பற்றாக்குறையால் அனுமதிகப்பட்டிருந்த நோயாளி தேன்மொழி அவர்களுக்கு குருதி தேவை என்ற செய்தியறிந்து இன்று அவர்களுக்கு குருதி வழங்கப்பட்டது

30/07/2025

1 month ago | [YT] | 56

பைந்தமிழ்-paindhamizh

*மரச்செக்கு கடலை எண்ணெய்*
ஒரு லிட்டர் 200 மட்டுமே தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும் தேவைப்படும் உறவுகள் அழைக்கவும் - 9940730336

எண்ணெய் வியாபாரம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் நிரந்திர மாதாந்திர வருமானம் ஈட்டும் வாய்ப்பு ...

**கலப்படமில்லாத எண்ணெய்** உங்கள் ஆரோக்கியத்தை மேலும் பாதுகாக்கும்

1 month ago | [YT] | 3

பைந்தமிழ்-paindhamizh

அறிக்கை: *நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத்தொகை வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2013ஆம் ஆண்டு நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அதனை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்காதது உழைக்கும் தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயலாகும்.

இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும் 1956ஆம் ஆண்டு, தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற ஈகத்தாலும் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காக, தங்கள் சொந்த நிலங்களை முழுவதுமாக விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடித் தமிழர்களின் நிலை மட்டும் இன்றுவரை பரிதாபகரமாக உள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் தற்போது அடிமாட்டுக்கூலிகளாக, ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, வடவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் வடவர்களே நியமிக்கப்பட்டு, மண்ணின் மைந்தர்கள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. நிலக்கரி எடுக்க நிலம் வழங்கிய தமிழ்க் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், ஒப்பந்தப்படி இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களைப் பணியில் சேர்க்காமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்ற என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடுமிக்கச் செயல்பாடானது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய நிலக்கரி நிறுவன நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறது. ஒரு தொழிலாளி, ஒரு ஆண்டில் 240 நாட்கள் பணியாற்றினாலே அவரை நிரந்தரப் பணியாளராக்க வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் கூறும் நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு வழங்கி 11 ஆண்டுகளைக் கடந்த பிறகும்கூட, நீதிமன்றத் தீரப்பையே மதிக்காமல் ஒப்பந்த தொழிலாளர்களை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஏமாற்றி வருகிறது. 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஒப்பந்த முறையைக் கேடயமாகப் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பினைச் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்த ஒரு நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது கிடையாது” என்றும் தீர்ப்பளித்துள்ளது

அதுமட்டுமின்றி தற்போது 20℅ தீபாவளி ஊக்கத்தொகை கேட்டும், உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச்சேர்ந்த தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற நிலக்கரி நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தொழிலாளர்களின் போராட்டம் மிக நியாயமானது என்பதை உறுதி செய்துள்ளது.

ஆகவே, தமிழர்களின் நிலத்தையும், வளத்தையும், உடல் உழைப்பையும் உறிஞ்சி ஆண்டிற்கு 2378 கோடி நிகர இலாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இந்திய ஒன்றிய அரசும், நெய்வேலி நிறுவனத்தில் 5% விழுக்காடு பங்கினைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசும் தீபாவளியை முன்னிட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% ஊக்கத்தொகையைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் மிக நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டங்கள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1847516817754910816?t=AjezzaWncfXOElwF5oWxHA&s=19

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

‪@paindhamizh‬

10 months ago | [YT] | 668

பைந்தமிழ்-paindhamizh

*மனிதகுல விரோதிகளால் பலியாகும் மனித உரிமைப் போராளிகள்!*

கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்துள்ளதை இந்துத்துவவாதிகள் வரவேற்று கொண்டாடியுள்ளது அருவருக்கத்தக்கது.

கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ளும் திறனற்று, பெண் என்றும் பாராமல் ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ் அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அதனைக் கொண்டாடவும் செய்கிறார்கள் என்றால் மனம் முழுவதும் மதவெறி நிரம்பிய சிறிதும் மனச்சான்றற்ற மனிதகுல விரோதிகள்தான் இவர்கள் என்பது இத்தகைய இழிசெயல் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்திய ஒன்றிய அரசால் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊஃபா கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறைக்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைப்போராளி, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஐயா ஜி.என்.சாய்பாபா அவர்கள் சிறைக்கொடுமைகளால் உடல்நலிவுற்று மரணிக்கும் அளவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

நீதி, சனநாயகம், அடிப்படை மனித உரிமை என்பதெல்லாம் இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் வெற்று எழுத்துகளாக மட்டுமே உள்ளன. நடைமுறையில் உரிமைக்காகப் போராடும் போராளிகள் மீதும், பொதுமக்கள் மீதும், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் இயக்கத்தினர், சனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள் மீதும் கொடும் அடக்குமுறையை ஏவி, சட்டத்தினை முறைகேடாகப் பயன்படுத்தி கடுமையாகத் தண்டிக்கிறது அரசு!

தங்கள் கருத்தினை ஏற்காதவர்களை, கொள்கைகளை எதிர்ப்பவர்களை, திட்டங்களுக்கு உடன்படாதவர்களை, நீதியின் பக்கம் நிற்பவர்களை சமூகவிரோதிகள் சட்டத்திற்குப் புறம்பாக கொல்கின்றனர். ஆட்சியாளர்களோ சட்டப்படி கொல்கின்றனர் என்றால் இருதரப்புக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்க முடியும்?

நிகழும் இக்கொடுமைகள் பொறுக்காது பொதுமக்கள் பொங்கி எழுந்து போராடும் நாள் வரும்போது கொடுங்கோன்மை ஆட்சியாளர்களின் அதிகாரமும், ஆணவமும் உறுதியாகத் தூக்கியெறியப்படும்!

https://x.com/Seeman4TN/status/1846410804578447869

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


‪@paindhamizh‬

10 months ago | [YT] | 479

பைந்தமிழ்-paindhamizh

அறிக்கை: *மழைநீரில் தத்தளிக்கும் கோவை, மதுரை, சிவகங்கை நகரங்கள்; திராவிட மாடல் அரசின் நிர்வாகத் தோல்வி! - சீமான் கண்டனம்* | நாம் தமிழர் கட்சி

முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.

மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால் தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.

இயற்கைச்சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.

2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காது இருந்துவிட்டு திமுக அரசும் தொடர்ச்சியாக மக்களை வெள்ளப் பாதிப்பிற்குச் சிக்கித்தவிக்க விட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் முதன்மை காரணம்.

சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல நூறுகோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? அல்லது அக்கறை இல்லையா?

இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், மழைவெள்ள பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தலைநகர் சென்னைக்குத் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1846034724290003186

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

‪@paindhamizh‬

10 months ago | [YT] | 607

பைந்தமிழ்-paindhamizh

எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து, தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயலைக் கண்டிக்கும் விதமாகவும், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாகவும், இன்று 10-10-2024 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

‪@paindhamizh‬

11 months ago | [YT] | 938