Welcome to my channel.. I put my videos like whole day vlog with twins, and kids vlog, shopping, beauty tips, health tips and weightloss related videos i posted..more food receipes , savings related videos also there..I do my best ..thank u..


MK Twins

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்?
எப்ப குடிக்கலாம்?
காலை எழுந்ததுமே ஒரு பாட்டில் தண்ணீர் குடிப்பேன் இதனால் எதுவும் பாதகமா?

இப்படி பல கேள்விகள் வருகின்றன

உலக சிறுநீரக நலன் பேணும் நாளான இன்று சிறுநீரகங்களின் நலனைப் பேணுவதில் முக்கிய விசயமான "நீர் அருந்துதல்" பற்றி அறிவியல் ரீதியான விசயங்களை அறிவோம் வாருங்கள்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

உணவு
காற்று
போல மனிதன் உயிர்வாழ அத்தியாவசியத்தேவையாக இருப்பது "நீர்"

"நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவப் பெருந்தகையும் அதன் முக்கியத்துவம் அறிந்து சுட்டுகிறார்.

நம் உடலின் ஒவ்வொரு செல்லும் நன்றாக இயங்குவதற்கு அவற்றுக்கு உள்ளேயும் வெளியேவும் சரியான அளவு நீர் இருந்தாக வேண்டும்.

ஒவ்வொரு செல்லுக்கும் சக்தி மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டு சேர்க்கும் குருதியும் நீர் வடிவம் தான்.

உண்ணப்பட்ட உணவை செரிமானம் செய்ய வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஜீரண மண்டலத்தில் சுரக்கப்படும் நொதிகள் மற்றும் நம் உடலின் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் அனைத்து ஹார்மோன்களும் நீர் வடிவம் தான்.

கரு உருவாக பெண்ணின் முட்டையில் சேர்க்கை புரிய வேண்டிய விந்து வெளியேறுவதும் நீர் வடிவம் தான்.

நாம் தாயின் கருவறைக்குள் இருக்கும் போது நம்மை பத்து மாதங்கள் சுற்றி இருந்து காக்கும் பனிக்குடத்தில் இருப்பதும் ஆம்னியாடிக் திரவம் எனும் நீர் வடிவம் தான்.

இப்படியாக நீரை நம்பியே மனிதனின் இயங்குவியல் இருக்கிறது.

உணவின்றி முப்பது முதல் நாற்பது நாட்கள் கூட தண்ணீரை மட்டும் அருந்தி (Wet fasting) நமது உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வாழ முடியும்

ஆனால் நீரின்றி மூன்று நாட்களை கடப்பது கடினம். ( Dry fasting / starvation without water)
அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் ( நூறு மணிநேரங்களுக்குள்) மரணம் சம்பவிக்கும்.
அத்தனை இன்றியமையாதது நீர் சத்து.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நீரை தினமும் எவ்வளவு அருந்த வேண்டும்???

அவரவர் தேவைக்கு ஏற்பத் தான்.

என்ன தேவைக்கு ஏற்பவா?

ஆம்

வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, உடல் கொண்ட நோய்கள் , அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து
தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் பிறகு எதற்காக?

தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி.

சரி நமது உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது?

தண்ணீர் தேவை என்று அனிச்சையாக எழும்
"தாக உணர்வை" வைத்துத் தான்.

நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது.
இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பதாகும்.

உடலில் நீர் குறையும் போது
உப்பின் அளவு கூடும்
அப்போது தாக மையம் உந்தப்பட்டு
நீர் அருந்தத் தூண்டப்படுவோம்

உடலில் நீர் கூடும் போது
சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும்

எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்தவது சிறப்பானது சரியானதும் கூட.

வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. தாக உணர்வை ஏற்படுத்தும் இந்த நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை

அவர்களுக்கு தாங்கள் சரியாக நீர் அருந்துகிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கு இருக்கும்
வழிமுறைகள்

மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறு நீர் கழிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மூன்று முதல் நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

பகலில் விழித்திருக்கும் போது ( காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை )
ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது

இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.

ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் செல்வது நல்லதல்ல.

சரியான கழிப்பறை வசதிகள் போதாமையால்
பயணங்களின் போது சிறுநீர் வராமல் இருக்க பெண்கள் நீரை அருந்தாமல் இருப்பார்கள். இதனால் நீர்சத்து குறைபாடு ஏற்படும்.

இதற்கடுத்த படியாக
சிறுநீரின் நிறத்தை வைத்து நம்மால் நீர் சத்து உட்கொள்ளலின் அளவை அறிந்து கொள்ள முடியும்

சிறுநீர் - சுத்த வெள்ளை நிறமாக ( Clear) அல்லது வெளிர் மஞ்சள் ( Pale yellow or straw coloured) நிறத்தில் இருந்தால் நாம் நீர் குடிக்கும் அளவுகள் சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்

சிறுநீர் - அடர் மஞ்சள் ( Dark yellow) / பழுப்பு நிறம் ( Brown) / சிவப்பு ( Red) நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்

சில நேரங்களில் உட்கொள்ளப்படும் மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு நீர்க்கடுப்பு (Dysuria) உண்டாகும். இதுவே சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும் (Urinary Tract Infection)

வயது வந்த ஒரு மனிதன் - தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது.

காலை எழுந்ததும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் அருந்துவதால் பலன் பாதகம் என்ன?

இரவு பல மணிநேரங்கள் நீர் அருந்தாமல் இருப்பதால்
காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர் - அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம்.
அது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம்.

நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் - தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம்.

இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் அதை சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை.

அதிகாலை நீர் அருந்துவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுத்தன்மை (TOXINS) கொண்ட பொருட்கள் வெளியேற்றப்படுமாமே?

பல்வேறு வளர்சிதை மாற்ற விளைவுகளால்
ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால்

சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றி விடும்.

உதாரணம்
ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மிதமிஞ்சி ஏறும் போது சிறுநீர் அதிகமாக வெளியேறும்

இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை.
நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்
எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் நிர்வகிக்கும்.

எனினும் மாரத்தான் ஓட்டக்காரர்கள் அதிலும் புதிதாக ஓடுபவர்கள் நீண்ட நேரம் ஓடும் போது தொடர்ந்து தாகம் எடுத்து நீரை அளவுக்கு அதிகமாக குடித்து கொண்டே இருந்தால் அரிதாக அவர்களுக்கு
நீர்ச்சத்து மிக அதிகமாகி உடலில் உள்ள சோடியம் உப்பு குறைந்து "ஹைப்போநாட்ரீமியா" ஏற்பட்டு
வாந்தி குமட்டல் மயக்கம் ஏற்படலாம்
மூளை வீங்கி மரணம் ஏற்படலாம்.

இதை சரிசெய்ய இத்தகையோர் "நீரும் உப்பும் கலந்த கலவையான திரவங்களை" அருந்த வேண்டும்.

நாம் பருகும் நேரடியான நீர் அன்றி
ஒருநாளில் பருகும் காபி / டீ
ஊற்றிக்கொள்ளும் குழம்பு , குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய் , நீர்ப்பழம் போன்ற பழங்களில் உள்ள அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும்.

இதய செயலிழப்பு (Congestive Heart failure)
சிறுநீரக நோய் (Chronic kidney disease)
கல்லீரல் நோய் (Liver disease)
இருப்பவர்கள் அவரவர் மருத்துவர் பரிந்துரைத்த நீர் அளவுகளை உட்கொள்ள வேண்டும்

நீர் எனும் அமிர்தத்தை முறையாக அருந்தி சிறுநீரகங்களின் நலனையும் நமது உடல் நலனையும் பேணி வாழ்வோம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

2 years ago | [YT] | 1

MK Twins

சக மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்❤️ மகளிர் முன்னேற்றமே சமூக முன்னேற்றம். ஒரு பெண்ணாக என் அனுபவத்தில் கற்றதை பகிர்கிறேன்.

1. நமக்கான முதல் அடையாளம் நம் படிப்பு. ஓவ்வொரு பெண்ணற்கும் முதன்மையானது Individual Identity. ஒருவரின் பெண், மனைவி, தாய் என்பது Secondary தான்.

2. உங்கள் படிப்பு சமூகத்தில் உங்களுக்கு மரியாதையையும், அங்கீகாரத்தையும் கொடுக்கும். அவ படிச்ச பொண்ணு அவ சொல்றதையும் கேக்கலாம் என 4 பேர் உங்களை மதிப்பார்கள்.

3. 1000 ரூயாய் என்றாலும் நீங்கள் வேலைக்கு போய் சம்பாதிப்பது என்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

4. படித்தல், சம்பாதித்தில் என்பதை தாண்டி சுயமாக முடிவுகள் எடுக்க தெரிந்திருப்பது அவசியம். அவன் என்ன நினைப்பான் இவ என்ன நினைப்பான் என கடைசி வரை யாருக்கோ பிடித்த வாழ்க்கையை வாழாதீர்கள். யாருக்கும் தொந்தரவு தராத பிடித்த வாழ்க்கையை வாழ தயங்காதீர்கள்.

5. சம்பாதித்ததை சரியான முறையல் சேமிக்க, முதலீடு செய்ய தெரிந்திருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். உங்களுக்கென்று தனிப்பட்ட சேமிப்பை வைத்திருங்கள்.

6. உங்களுக்கு பிடித்ததை செய்ய நேரத்தை ஒதுக்குவது கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் சிந்தனை ஒத்து போகக்கூடிய ஒரு தோழன்/ தோழி நட்பு வைத்திருங்கள்

7. எந்த வயதானாலும் நம்மை நேர்த்தியாக Presentable ஆக வைத்துக் கொள்வது நம் வாழ்க்கையை இன்னும் அழகாக்கும். உடல் ஆரோக்கியம் தான் முதன்மையான சொத்து.

8. வேலையையும் குடும்பத்தையும் Balance செய்ய ஆட்கள் உதவியை நாடலாம். அதெற்கெல்லாம் குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை. எல்லா வேலையையும் நீங்கள் ஒருவரே செய்து உங்களை நிரூபிக்க போராடாதீர்கள்

9. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் முதல் Role model. உங்களை தான் முதலில் உங்கள் குழந்தை பின்பற்றும். இந்த சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என உங்களிடம் இருந்து தான் முதலில் பிள்ளை கற்றுக்கொள்ளும்.

10. பெண் என்றாலே 4 பேர் 40ஆயரம் விதமாக பேசத்தான் செய்வார்கள். எல்லா இடத்திலும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தகுதியானவர்கள் உங்களை பற்றி தெரிந்து கொண்டால் போதும் .அதுவும் நீங்கள் நினைத்தால் தான்❤️

ஆண்களுக்கு ஒரே வரி தான். உனக்காக நான் இருக்கிறேன் என பெண்ணிற்கு துணை நில்லுங்கள்❤️மற்றதை அவள் பார்த்துக்கொள்வாள்😇

அன்புடன்,
ஹேமாராக்கேஷ்❤️

#hemarakesh #infowithhemarakesh #womensdayspecial

2 years ago | [YT] | 1

MK Twins

பார்க்க கேட்க பின்பற்ற சிரிப்பாகத்தான் தோன்றுகிறது

என்ன?

மோட்டார் பைக்கில் முன்னால் வண்டியை இயக்குபவர் மட்டுமல்ல பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினால் கொஞ்சம் மெத்தனமாகத்தான் இருக்கிறது
ஆனால் நடக்கும் சாலை விபத்துகளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் இறப்பதற்கு அதிக வாய்ப்புண்டு எனும் உண்மை தெரியும் போது

நமது உயிரும் உடலும்
நாம் சேர்த்து வைத்துள்ள அனைத்தையும் விட மிக முக்கியமானவை ஆயிற்றே
என்ற எண்ணம் தலை தூக்குகிறது

மனிதன் ஈருருளியில் செல்லும் போது மைய விசையை நிர்வகித்து சமநிலைப்படுத்தி வண்டியை செலுத்தக் கற்றுக் கொள்கிறான்

ஆனால் அசம்பாவிதங்கள் நிகழும் போது இந்த மைய விசை சமநிலை மாறும் போது தீடீரென வண்டியில் இருந்து கீழே விழும் நிலை வருகிறது

அதில் முன் பின் அமர்ந்திருப்பவர் இருவருமே பாதிப்புக்குள்ளாவார்கள்

ஆயினும் ஏன் பின்னால் அமர்ந்து செல்பவர் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார் என்றால்

இங்கு நம்மிள் பலரும் பின்னால் அமர்ந்து செல்லும் போது இருக்கைக்கு அருகில் இருக்கும் கைப்பிடியை பற்றிக் கொள்வதில்லை

பல புதிய வகை பைக்குகளில் அந்த கைப்பிடியே இருப்பதில்லை

சேலை சர்க்கரத்தில் சுற்றிக் கொள்ளாமல் இருக்க உதவும் தடுப்பான் இருப்பதில்லை

பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பல நேரங்களில் எதையும் பிடிக்காமல் முன்னால் வண்டி ஓட்டி செல்பவரை இருகப்பிடித்துக் கொள்வார்கள்
இப்படி செய்யும் போது விபத்து நேரும் போது ஓட்டுபவருடன் சேர்ந்து இவரும் அதே விசையில் கீழே விழுவார்

இன்னும் பலர் இரண்டு கைகளையும் விட்டு செல்போன் பேசிக் கொண்டு செல்வார்கள்

நான் மருத்துவமனையில் பணிபுரிந்த நேரம்
எனது பணி நாளின் காலை வேலையில்
சாலை விபத்தில் இறந்த ஒருவரை தூக்கிக் கொண்டு வந்தார்கள்

வண்டியை ஓட்டியவர் நன்றாக இருக்கிறார்
பின்னால் அமர்ந்து வந்தவர் இறந்திருக்கிறார்

வண்டியை வேகமாக இயக்கி வரும் போது ஒரு ஸ்பீடு ப்ரேக்கரில் வண்டியை ஏற்றி இறக்கி இருக்கிறார்

பின்னால் அமர்ந்து வந்தவர் தலைக்கவசம் அணியவில்லை

கைப்பிடியை பிடிக்க வில்லை

செல்போன் பேசிக்கொண்டே வந்திருக்கிறார்

ஸ்பீடு ப்ரேக்கரில் வண்டி ஏறி இறங்கும் போது பின்னால் அமர்ந்திருந்தவரை தூக்கிப் போட்டு விட்டது

நேராக தரையில் அவரது தலை மோதி அவரது மண்டை ஓடு உடையும் சத்தத்தை கேட்டதாக சுற்றி இருந்த கடை வியாபாரிகள் கூறினர்.

அன்றிலிருந்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் போது கைப்பிடியை கெட்டியாகப் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்

குழந்தைகளை பலரும் முன்னால் பெட்ரோல் டேங்கில் அமர வைத்து அதில் உறங்க வைத்தும் செல்வதை பார்க்கும் போது அச்சமாக இருக்கும்.

இரு சக்கர வாகனங்களை இயக்கும்
போது
முன்னால் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் குழந்தைகள் உட்பட தலைக்கவசம் அணிவது சிறந்த நடைமுறை ( GOOD PRACTICE)

வண்டியை மெதுவாக செலுத்துவது நல்லது

மது போதையில் வண்டி ஓட்டக்கூடாது

பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் கைப்பிடியை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

சேலை அணிந்து
ஒரு பக்கமாக அமரும் போது வண்டி லேசாக சாயும் போது பின்னந்தலையில் அடிபட வாய்ப்பு அதிகமாகிறது. எனவே ஹெல்மெட் உயிர் காக்கும்.

சல்வார் உடை அணியும் பெண்கள் பின்னால் அமர்ந்து செல்லும் போது அதை அணிந்து இரு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்வது பாதுகாப்பு

சேலை மற்றும் ஷால் (SHAWL) போன்றவை சர்க்கரத்தில் சிக்கிக் கொள்ளாமல் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்

18 வயது தாண்டாத வளர் இளம் பருவத்தினருக்கு பைக்குகளை வாங்கித் தருவது தவறு.
அவர்கள் வண்டிகளை இயக்குவதை பெற்றோர் தடுக்க வேண்டும்.
பிறகு நொந்து பயன் இல்லை.

ஓட்டுநர் உரிமம் / வாகன மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு போன்றவை இல்லாமல் வாகனத்தை இயக்குவது தவறு. நாளை விபத்து நேர்ந்தால் குற்றம் நம் பக்கமே இல்லை என்றாலும் சட்டப்படி மேற்சொன்ன ஆவணங்கள் இன்றி வண்டியை இயக்கிய தவறு நம்மைச் சேர்ந்து விடும்.

இரு சக்கர வாகன விபத்தில் இறந்த சிலருக்கு நான் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறேன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன்

வாகன விபத்துகள் அனைத்துமே மனித அலட்சியங்களால் நடக்கின்றன
வாகன விபத்துகள் துளியும் எதிர்பாராமல் நடக்கக்கூடியவை
கோரமானவை
வலிமிகுந்தவை

வாகன விபத்துகளைக் கண்டால் உடனே 108 க்கு அழைத்து
அவசர ஊர்தி மூலம் விபத்துக்குள்ளானோர் மருத்துவனைகளுக்குச் செல்வதை உறுதி செய்வோம்.

இன்னுயிர் காப்போம் எனும் திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு தனியார் மருத்துவமனைகளில்
முதல் 48 மணிநேரத்திற்கு உயிரைக்காக்கும் ஆகும் மொத்த செலவினத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்கிறது. இதைப்பற்றியும் அறிந்து கொள்வோம்

அலட்சியங்களைக் குறைத்து
உயிர்களைக் காப்போம்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

2 years ago | [YT] | 1

MK Twins

Happy children's day ❤️

3 years ago | [YT] | 3

MK Twins

எங்க எங்கயோ எவ்ளோ variety ah சாப்பிட்டாலும் வீட்ல இந்த கூழும், வெங்காயமும் சாப்பிடற சுகமே தனி தான்... 😍😍😍

One of my fav ❤️

யாருக்கெல்லாம் கூழ் பிடிக்கும்.... 😊😊

3 years ago | [YT] | 2

MK Twins

இசை அரக்கனுக்கு பிறந்தநாள் ❤️❤️

HBD illayaraja 😍😍

3 years ago | [YT] | 2

MK Twins

களப்பணிக்காக அலைந்த சமயம் வருஷநாடு பக்கமா ஒரு கிராமத்தில் மெக்கானிக் ஷாப்'ல வேலை பாத்திட்டிருந்த ஒரு பையனை சந்தித்தேன். 16,17 வயசு இருக்கும். அது ரொம்ப உட்கிராமம். அவனுக்கு ஸ்கூல் முடித்ததும் என்ன செய்றதுன்னே தெரில.மெக்கானிக் வேலைக்கு வந்துட்டான்.

மார்க் ஷீட் வாங்கி பார்த்தப்போ 1000க்கும் மேல இருந்தது. தெரிந்தவர்கள் மூலமா அங்கிருந்தே போன் பண்ணி ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் விசாரித்தால், BSc பிஸிக்ஸ், சேருவதற்கு ஆட்கள் வரலைன்னு பிரின்ஸிபால் குறை சொல்லிட்டிருக்கார். இத்தனைக்கும் ஹாஸ்டல் பீஸ் கூட இல்லை. முழுவதும் இலவச படிப்பு. அவனுக்கு பஸ்ஸுக்கு காசு குடுத்து அனுப்பி வைத்தோம். நிச்சயமா எங்கேயோ இப்போ நல்லாருப்பான்.

ஏன் இதை சொல்ல வந்தேன்னா..பல நேரம் அறியாமையே பலரை முடக்கி வைத்திருக்கும். எல்லோரும் டாக்டர், எஞ்சினியர்ன்னு ஓடுறோம். அது கிடைக்கலைன்னா சோர்ந்து நிக்கிறோம். வேறு திசைகள் தெரிவதில்லை. நம்மோட அடிப்படை தேவை என்ன, குறைந்த பட்ச முதலீடு, விரைவில் வருமானம் தரும் படிப்பு எதுன்னு யோசிக்க இன்னும் யாரும் சொல்லி தருவதில்லை.

எனக்கு தெரிந்து பல திட்டங்கள், படிப்புகள் இலவசமாகவே கிடைக்குது. ரோட்ல சும்மா சுத்திட்டிருக்கிற ஒருத்தனை 40 நாள் ட்ரைவிங் ஸ்கூலில் படிக்க வைத்தால். 41வது நாள் வேலை கிடைக்கும். குறைந்தது 6000 வருமானம் உறுதி. படிப்படியாக வளர்ச்சி இருக்கும். ஒழுக்கமா முயற்சி செய்தால் ஒரு லோன் போட்டு சீக்கிரம் முதலாளி ஆகலாம்.

ரொம்ப எளிமையான டிப்ளமோ நர்சிங் பயிற்சிகள். ஒரு வருடம் அல்லது இர்ண்டு வருட படிப்புகள். உடனடி வேலை. குறைந்தது 4-6000 மாத வருமானம்.

கூலி வேலை பார்க்கும் ஒரு அம்மா, தன்னுடைய வருமானம் ஒரு நாளைக்கு 150 என்றும், மாதத்தில் 10-12 நாள் தான் வேலை கிடைக்கும்ன்னு சொன்னாங்க. 35 வயதாகும் அவங்களுக்கு 17 வயதில் பெண் குழந்தை. 10-12 க்கு பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கும் திருமணத்திற்கும் தயார் செய்வது வழக்கம். ஆனால் நர்ஸிங் படிக்க வைத்ததால் அவரோட பெண். தன்னை விட அதிகம் சம்பாதிப்பதாக பெருமையா சொன்னாங்க. முக்கியமான விஷயம். காடு, வெயில்ன்னு அலைய வேண்டியது இல்லை. உத்திரவாதமான வருமானம். இன்னும் முக்கியமா 10 வருஷம் கழித்து கூட அந்த சான்றிதழை எடுத்துக்கிட்டு எந்த மருத்துவமனை போனாலும் வேலை உறுதி.

ப்ளம்பர், எலெட்ரீஷியன், மேசன் என்று பல தொழில் வகுப்புகள் மிக குறைந்த முதலீட்டிலும் அரசு கல்லூரியில் இலவசமாகவும் கிடைக்கிறது. அவங்களே ஆள் கிடைக்கலன்னு அலையறாய்ங்க... உங்களுக்கு யாராவது தெரிஞ்சவங்க இருந்தால் கொஞ்சம் கையை புடிச்சு வழிகாட்டுங்க... இங்கே தேவை ஒரு பாலம் மட்டுமே....!

By
Doctor sarav😊

3 years ago | [YT] | 3

MK Twins

ஒரு தாயின் வெற்றி ❤️❤️❤️

3 years ago (edited) | [YT] | 2

MK Twins

Happy mother's day friends❤️❤️❤️

3 years ago | [YT] | 5

MK Twins

Where There are books, there is knowledge, there is learning ❤️

#worldbookday2022

3 years ago | [YT] | 8