அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹூ 🤲
كل نفس ذاءقة الموت.
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீரும். என்று வல்லோன் அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கின்ற மிகச் சொற்பமான இவ்வுலக வாழ்வை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் நம் உயிரினும் மேலான முஹம்மது முஸ்தபா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய நற்பாக்கியங்களை அல்லாஹ் தந்தருள்புரிவானாக 🤲
ஜனாஸா அறிவிப்பு
*_வைகறை_* *_வேண்டுதல்_* துஆ (பிரார்த்தனை)
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
ஹிஜ்ரி *_1447_* , ரபீஉல்ஆகிர் பிறை 🌙 *10*
*03-10-2025*~ , வெள்ளிக்கிழமை
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...
அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.
(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)
*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*
*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*
*வகீனா அதாபல் கப்ரி*
யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஹஸ்ர்*
யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபக்ர்*
யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மீஸான்*
யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் கர்ழ்*
யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மர்ழ்*
யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஆfபாத்*
யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் சக்ராத்*
யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபல் மௌத்*
யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*
யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபந் நார்*
யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
யா அல்லாஹ் மேன்மைமிக்க ஜும்மாநாளின் பஃஜர்தொழுகையை இமாம் ஜமாத்தோடு தொழ அருள் செய்த நீயே சர்வபுகழுக்கும் அதிபதியானவன்! இன்றைய நாளில் நாங்கள்! உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார்! ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகமதிகமாக! சலவாத் சொல்லும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தந்தருள்! செய்வாயாக!
யா அல்லாஹ் கிருபையாளனே உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! இஸ்லாமிய நாடுகளில் தங்களின் கயமைதனத்தால் ஊடுருவி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்! யூத இலுமிநாட்டிகளின் சதிகளில் இருந்தும்! குழப்பங்களில் இருந்தும் இஸ்லாமிய நாடுகளை நீ காப்பாற்றுவாயாக! குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! அவர்களின் பசியை நீ போக்குவாயாக! நீயே புகழுக்குரியவன்!
யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்! பாலஸ்தீனத்தில் கொடிய யூத இலுமிநாட்டிகளால்
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்குவயாக!
யா அல்லாஹ்!
மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தையும் விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்
யா அல்லாஹ்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்
யா அல்லாஹ்!
கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் ﷺ அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..
யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய ஜும்மா நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
1 day ago | [YT] | 1
View 0 replies
ஜனாஸா அறிவிப்பு
04:04:1447(ஹி)
27:09:2025(ஆ)
நாள்:சனி
عَنْ اَبِيْ اُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَقُوْلُ اللهُ سُبْحَانَهُ: اِبْنَ آدَمَ اِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدَمَةِ اْلاُوْلي، لَمْ اَرْضَ لَكَ ثَوَابًا دُوْنَ الْجَنَّةِ.
رواه ابن ماجه
ஆதமுடைய மகனே! ஆரம்ப நிலையிலேயே நீ பொறுமை கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தால், சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலனை உனக்குக் கொடுப்பதை நான் பொருந்திக் கொள்ளமாட்டேன்'' என அல்லாஹ் கூறியதாக (ஹதீஸ் குத்ஸியில்) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:இப்னுமாஜா).
1 week ago | [YT] | 2
View 0 replies
ஜனாஸா அறிவிப்பு
*சில சமயம் நாம் அழுத நாட்களை நினைத்து சிரிப்போம்.*
*சில சமயம் நாம் சிரித்த நாட்களை நினைத்து அழுகிறோம்.*
*நினைவுகள் எப்போதும் சிறப்பு.*
*அது தான் வாழ்க்கை.*
*"ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."*
`[அல்-குர்ஆன் 94:5]`
┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈
1 month ago | [YT] | 1
View 0 replies
ஜனாஸா அறிவிப்பு
வார்த்தை வெல்லும் கொல்லும்
6 months ago | [YT] | 2
View 1 reply