Khavins Natural Home

Nature 🌿is our best💯👍 mother👩Nature is God Embracing Nature🌾 😍🥰🥳
First Change your Food Definitely Change your Life💐
Give Importance For Healthy Not For Appearance and colour
Avoid white sugar, Refined flour, Refined oil, Iodised salt, Preservatives,Food colours,junk Food& packed Food
Hungry is your Eating Time don't eat otherwise Enjoy Your Meal in good mood
don't waste 🍲Food
Think positive 😎
Give it away and it won't go bad
Respect Each other & Made For Each other
All is well 👍🏻👍🏻
Om shanti 🙏🏻vazha valamudan💐💐
Support💪 KHAVIN'S NATURAL HOME
If you like subscribe and share your friends and family
🇮🇳 Jaihind
"Khavins Natural Home" appears to be a YouTube channel focused on natural living, home remedies,Cooking, speech,Karnatic Music,comedy, Channels like these often provide information on natural ingredients, DIY solutions, eco-friendly practices, and wellness tips. If you're interested in natural living or home remedies, exploring the channel might offer valuable insights and ideas.


Khavins Natural Home

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெநெல் ஊடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக்

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம் பாவாய்.

4 weeks ago | [YT] | 2

Khavins Natural Home

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே, நமக்கே பறை தருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய். (1)

4 weeks ago | [YT] | 3

Khavins Natural Home

பொறியாளர்கள் கனவுகளை வடிவமைக்கின்ற கலைஞர்கள். அவர்கள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கிறார்கள். "இஞ்சினியர்கள் என்பது சவால்களைச் சமாளிப்பதில் சாதாரண மனிதர்களைத் தாண்டி செல்லும் வல்லுனர்கள்."

4 months ago | [YT] | 4

Khavins Natural Home

உலகம் உள்ள வரை போற்றும் மாபெரும் மனிதன், புனிதன், தலைவன் 🙏🏻🙏🏻
*விண்ணுலகம் சென்ற கேப்டன் விஜயகாந்த் அண்ணா க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊

*உத்தமராய் ஊர் போற்ற உழைத்தவர்;

*விளம்பரங்கள் இல்லாமல் தொண்டு பல செய்த கர்ணன்;

*அன்பை வாரி வழங்குவதில் அன்னை தெரசா;

*நல்ல பண்பாளர், சாதனைகளை சாமான்யனும் செய்துகாட்ட முடியும் என்று நிறுப்பித்துக்காட்டியவர்;

*ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத மனிதன் அவர்;
இன்று அவரைப் போன்ற மனிதர்களை காண்பது அதிசயமே;

* பல லட்சங்களை நினைக்காமல் லட்சிய நெறியுடன் இலக்கணமாய் வாழ்ந்தவர்;

*பல பேர்கள் பசி போக்கிய பாரி வள்ளல்;

*தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வாழ்ந்து காட்டிய நம் கேப்டன்

*அதர்மங்கள் அதிகரிக்க அவதாரம் உண்மையென்றால் அது
கேப்டன் விஜயகாந்த் மறுபிறவி;

*பல தெய்வம் இருந்தாலும் குலதெய்வம் போல உன்னை வணங்குவதில் குறை ஏதும் இல்லை;

"வாழ்க கேப்டன் விஜயகாந்த்"
"வளர்க கேப்டன் புகழ்"🙏🙏

4 months ago | [YT] | 14

Khavins Natural Home

ஆடிப்பூரம்

அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம்.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்

5 months ago | [YT] | 11

Khavins Natural Home

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது.

ஆடி மாதம், அம்மன் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல சிறப்பு வழிபாடுகள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகியவை இந்த மாதத்தின் முக்கிய தினங்களாகும். மேலும், ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம் என்பதால், புனித நதிகளில் நீராடுவதும், இறை வழிபாடு செய்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

6 months ago | [YT] | 11

Khavins Natural Home

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான்-அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? -அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ? -ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் சென்று கனிந்து நிற்போம்!

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் தண்டாயுத மல்லவோ -அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம்

11 months ago | [YT] | 6

Khavins Natural Home

Parveena sulthana super speech

1 year ago | [YT] | 2

Khavins Natural Home

அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா முருகா
முருகா முருகா

அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

என்னை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உன்னை பாட அருள்வாய் ஐயா

முருகா முருகா
முருகா முருகா

அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்

உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதான் ஐயா

அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா முருகா
முருகா முருகா

Watch &subscribe KHAVIN'S NATURAL HOME

1 year ago | [YT] | 9

Khavins Natural Home

*சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம்*
*ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம்*
*கந்தன் என்று சொன்னால் நான்கு எழுத்து மந்திரம்*
*முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம்*
*வேல் என்று சொன்னால் இரண்டுஎழுத்து மந்திரம்*
*ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்*

ஓம் என்ற சொல்லுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு.

அ – சூரியன்

உ – சந்திரன்

ம – அக்கினி

“ஓம்” எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன. இந்த பிரணவமாம் சுய வடிவில் இருந்துதான் எல்லா ஒலி, ஒளிகளும் உண்டாயின.

ஓம் சரவண பவ 🙏🏻

1 year ago | [YT] | 7