Kanimozhi Ganga2010

my state is Tamil Nadu.
நண்பர்கள் அணைவருக்கும் வணக்கம் , உங்களுக்காக நான் பயனுள்ள குறிப்புகள் மற்றும் நல்ல தகவல்கள் , எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் தொடர்ச்சியாக எனது பதிவில் இடம் பெறும் என்னுடைய பதிவை ஆதரிக்கும் நண்பர்களுக்கு நன்றிகளை இந்த பதிவில் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை தான் அணுக வேண்டும் உங்கள் நோயின் நிலையை பொறுத்து மருந்துகள்வேலை செய்யும். எந்த மருந்துகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என்பது படித்த மருத்துவர்கள்தான் அதற்குசரியான தீர்வை தர முடியும். நான் கூறும் சிறு சிறு மருத்துவ குறிப்புகள் இதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்து தான் நான் இந்த குறிப்புகளை உங்களுக்கு பதிவு செய்துள்ளேன். எளிய சமையல், சமையல் குறிப்புகள்,நல்லதகவல்கள்,விவசாயம் சார்ந்த குறிப்புகள்,பறவைகள், விலங்கினங்கள் , பொழுதுபோக்குகள்இந்தச் சேனலில் பதிவாக இருக்கும்.
Hello all friends, I have useful tips and good information for you. Simple home medical tips will be featured in my post continuously. For the friends who support my post.


Kanimozhi Ganga2010

#goodmorning #Nature
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
சூரிய அஸ்தமனத்தில் அமைதியான கிராமப்புற வயல்வெளி அழகுதரும் காட்சியை அளிக்கிறது. வயல்கள் அலை போல் அசைகின்றன. பசுமை புல்வெளியில் காற்று ஆடுகிறது. அறுவடை நேரம், மலர்கள் பூக்கின்றன. வயல்களின் அழகை யார் வர்ணிக்க முடியும்? இன்றைய பொழுது இனிதாக பூ போல் மலர வாழ்த்துக்கள்

10 hours ago | [YT] | 1

Kanimozhi Ganga2010

திருக்குறள்;#சிந்தனை #திருக்குறள்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

விளக்கம்:
ஒருவர் நமக்குத் தீமை செய்திருந்தாலும், அவருக்குத் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக, அவருடைய மனம் வெட்கப்படும் அளவுக்கு நாம் அவருக்கு நல்லதைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், அவர் தான் செய்த தவறின் தீவிரத்தை உணர்ந்து வெட்கப்படுவார். மேலும், அவர் செய்த தீமையையும், நாம் அவருக்குச் செய்த நன்மையையும் நாம் மறக்க வேண்டும். அப்போதுதான் மனம் புண்படாமலும், மீண்டும் இதே போன்ற நிகழ்வுகள் நடக்காமலும் இருக்கும். 

ஒருவர் கடுமையாகப் பேசி விட்டால் இவர்கள் பதிலுக்கு பதிலுக்கு வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அளவுக்கு அவரை கடுமையாக பேசி விடுகிறார்கள், இந்த திருக்குறள் போல் வாழ்வது என்பது?

1 day ago | [YT] | 1

Kanimozhi Ganga2010

Good morning to all friends.

1 day ago | [YT] | 2

Kanimozhi Ganga2010

தெரு நாய்கள்
ஒருவன் காட்டில் வாழும் மிருகத்தை (நாய்) கொண்டு வந்து அதனை வளர்க்கிறார், அதற்கு முறையான சாப்பாடு கொடுக்க முடியாது, ஏனென்றால் ஒரு மிருகம் எந்த உணவு அதற்கு பிடிக்குமோ அதைத்தான் விரும்பும், மனிதர்கள் அந்த மிருகத்தை கொண்டு வந்து இவர்கள் சாப்பிடும் உணவை கொடுக்கிறார்கள், அந்த நாய்கள் வேறு வழியில்லாமல் அதை சாப்பிடுகிறது, சிறிது காலம் அதையே உணவாக உண்ணுகின்றது, அந்த மிருகத்தின் குணம் தன்னை வளர்த்தவர்களை ஒன்றுமே செய்யாது, முன் பின் பார்க்காத ஒருவர் சென்றால் தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அதன் கோபத்தை காட்டுகிறது, ஒரு வேளை வளர்த்தவர்கள் இல்லாமல் இருந்தால், அந்த முன்பின் தெரியாத மனிதரை கோபத்தால் அந்த நாய் கடிக்கலாம், அல்லது விரட்டலாம், அந்த மிருகம் (நாய்)கடித்தாலோ அல்லது நகத்தினால் பரண்டி விட்டாலோ நாய் உடம்பில் வளரும் ரேபிஸ் வைரஸால் மனிதருக்கு ரேபிஸ் நோய் வரலாம், அந்த நோயின் தீவிரத்தால் மனிதருக்கு இறப்பு நேரிடலாம் , குறிப்பாக சிறிது நாள் சாப்பாடு போட்டு வளர்க்கும் அடித்தட்டு மக்கள் பின்பு அந்த நாயை கவனிக்காமல் விட்டு விடுவார்கள், அதனால் அந்த நாய் தெரு நாயாக மறுக்கிறது, அந்த நாய் பெண் நாயாக இருந்தால் பல குட்டிகளை போட்டு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகும், அந்த தெரு நாய் அதற்கு பசிக்கும்போது அதன் பிடித்த உணவு கிடைக்கும் பொழுது மனிதர்கள் வளர்க்கும், கோழி ,ஆடு இவற்றை பிடித்து சாப்பிடும், மற்றும் அதன் கண்ணில் தென்படும் காட்டு விலங்குகளையும், பறவைகளையும் பிடித்து சாப்பிடும், அதன் பசி இன்னும் அதிகமானால் மனிதரையே பிடித்து சாப்பிடும் அதுதான் அதன் குணம், காட்டில் இருக்கும் மிருகத்தை கொண்டு வந்து அதை கொடுமை செய்து, அதனை பசியால் துன்புறுத்தி, மனிதன் சுயநலத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், நாய் தடுப்பூசி எதற்காக நாம் போட வேண்டும், காட்டில் வாழும் நாய் கூட்டத்திற்கு ஒரு மனிதன் சென்று அங்கு கடித்து விட்டால் மனித உயிரை காப்பாற்ற நாய் ஊசி போடலாம், ஆனால் இங்கு அந்த வைரஸ் வளராமல் இருக்க நாய்க்கும் ஊசி போட வேண்டும், பின்பு அந்த நாய் கடித்தால் அந்த மனிதனும் ஊசி போட வேண்டும், அந்த நாய் ஒரு ஆட்டையோ, அல்லது ஒரு மாட்டையோ, ஒரு கோழியையோ, மற்ற விலங்குகள் பறவைகளையும் கடித்தால் அந்த விலங்குக்கும், பறவைக்கும், காப்பாற்ற மனிதரிடம் மருந்துகள் இல்லை, நாய் கடித்து ஒரு பறவை மிருகம்,செத்துப்போனால் பரவாயில்லை, அதற்கெல்லாம் இவர்கள் நாய்க்கு சாதகமாக பேச மாட்டார்கள், பிரச்சனைகளை கொடுக்கும் ஒரு நாயை ஒரு மனிதர் அடித்தாலோ, அல்லது வேறு ஏதும் துன்புறுத்தல் செய்தாலோ, அந்த மனிதருக்கு தண்டனையாம், மனிதனே இந்த பிரச்சினைகளை கொண்டு வருவார்களாம், அந்த மிருகம் நாய் என்ன தப்பு இருக்கிறது, எல்லாருக்கும் காரணம் இந்த மனிதன் தான், காட்டில் வாழும் மிருகத்தை மனிதர்கள் வாழும் இடத்திற்கு கொண்டு வருவது மிக தப்பு, அது இயற்கையாக வாழ விடாமல், கூட்டில் அடைத்து செயற்கையாக வாழ வைப்பது மனிதனின் தப்பு, என்னுடைய கருத்து என்னவென்றால், மனிதன் மனிதனாக வாழ வேண்டும், மிருகம் மிருகமாக வாழ வேண்டும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் மனிதர்கள் மட்டுமே இதற்கு காரணம், அந்த மிருகத்திற்கு இதில் எந்த பங்கும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சுயநலம் பிடித்த மனிதர்கள் இன்னும் எத்தனை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கொடுமைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள், எனக்கு ஒரு கேள்வி மனிதர் பெற்றெடுத்த குழந்தையை ஒரு நாயை நம்பி விடுவார்களா? ஏன் ஒரு நாயின் குட்டியை அந்த நாயின் விருப்பம் இல்லாமல் கொண்டு வந்து ஏன் வளர்க்கிறீர்கள்? உங்கள் ஆசைக்குஒரு நாய் கொடுமை அனுபவிக்க வேண்டுமா?தயவுசெய்து தெரு நாய்கள் எல்லாத்தையும் கொண்டு போய் காட்டில் விட்டு விடுங்கள், அதற்கு என்ன தேவையோ அதுவே பார்த்துக் கொள்ளும் நீங்கள் கருணை காட்ட வேண்டாம், ஒரு நாய் கடித்தால் மருத்துவ செலவுக்கு அவர்கள் என்ன பண்ணுவார்கள், சில நேரம் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை, நீங்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் என்ன பண்ணும், அரசாங்கத்தின் மேல் பழி போடுவது மிக தவறு, நாய் வளர்ப்பவர்களிடம் ஒன்று கேட்கிறேன் உங்களால் நாயின் கோபத்தை குறைக்க முடியாது உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அதற்கு எந்த அவசியமும் இல்லை , ஏனென்றால் நாய் உங்கள் குழந்தை இல்லை, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு அப்பா ,அம்மா, பிள்ளைகள் இருந்தால் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
நன்றி நண்பர்களே

1 day ago (edited) | [YT] | 2

Kanimozhi Ganga2010

குமட்டிக்காயின் மருத்துவ குணங்கள்#குமட்டிக்காய்#சித்த மருத்துவம்
youtube.com/shorts/7OQfOzuF5E...

2 days ago | [YT] | 2

Kanimozhi Ganga2010

நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்#Goodevening #Nature

4 days ago | [YT] | 2

Kanimozhi Ganga2010

ஒரு பாகற்காய் செடியில் நிறைய பாகற்காய் காய்த்து தொங்கின, அதில் ஒரு பழம் இருந்தது, அந்தப் பழத்தை பிடுங்கி நான் உடைத்து பார்த்தேன் கண்களைக் கவரும் நிறத்தில் விதைகள் இருந்தன, அதன் விதை எந்த நிறத்தில் இருந்திருக்கும்?

2 weeks ago | [YT] | 2

Kanimozhi Ganga2010

Thanks bro

2 weeks ago | [YT] | 1