Welcome to My channel friends
Tamil story telling channel
தத்துவங்களை சிறு கதைகளாக வெளியிடும் சேனல் இது... குடும்ப கதைகள், சிறுகதைகள், தன்னம்பிக்கை ஊட்டும்விறுவிறுப்பு கதைகள், பொது நலன் போன்ற கதைகள் கூறும் சேனல்.. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.....
Welcome to my channel friends. This channel is created for people who want to listen to stories. This channel is created for you to like new short stories, philosophical stories of life, moral stories, and short stories that motivate you. This ARRCLICKZ Story channel is created for people who like to listen to the best for moral stories,family stories, motivational stories,fictional stories,short stories, and that are liked by various people.
ARR clickz
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
1 day ago | [YT] | 2
View 0 replies
ARR clickz
Hi everyone, welcome to my new YouTube Community. Now you can post on my channel too. To get started, tell me in a post what you'd like to see next on my channel.
Visit my Community: youtube.com/@ARRclickz/community
3 weeks ago | [YT] | 1
View 0 replies
ARR clickz
Happy Christmas ARR CLICKZ Friends and Families.
3 weeks ago | [YT] | 2
View 0 replies
ARR clickz
தற்கால சூழலில் சமூக வலைதளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றை மையப்படுத்தி உங்களுக்காக இந்த கதை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும்.
4 weeks ago | [YT] | 3
View 0 replies
ARR clickz
மகாகவி பாரதியின் பேத்தி யான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரது கட்டுரை இது.
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண் தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன். பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு. என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள். எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும், நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள். தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம். தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள். 1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை. “வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”. அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம். நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை. பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை. அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன. “திண்ணை வாயில் பெருக்க வந்தேன். எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்” என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள். என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.வித்தை நன்கு கல்லாதவள் என்னுளேவேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறை பாடினாள். “திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய். உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்.. “திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”அவள் மூச்சு நின்று விட்டது. அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி. புகைப்படத்தில் மகள் மீரா டி.சுந்தரராஜன் உடன் விஜயா பாரதி.
9 months ago | [YT] | 2
View 0 replies
ARR clickz
11 months ago | [YT] | 1
View 0 replies
ARR clickz
முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.
நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!
நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!
டீம்_வொர்க்
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.
முயற்சி மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!
11 months ago | [YT] | 4
View 0 replies
ARR clickz
11 months ago | [YT] | 1
View 0 replies
ARR clickz
ARR CLICKZ நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்,
யாரும் நம்பவில்லை என்பதற்காக
நீங்கள் வலிமை இழந்தவர்களாக
மாறிப்போய் இருக்கிறீர்கள்........
நிழலுக்கு தான் உருவம் வேண்டும்
நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்.....
உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,
அவர்கள் கடந்து போகட்டும் என்று
தள்ளியே இருங்கள்....
நெருப்பு தொட்டால் சுடும் என்பது
அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை....
உங்கள் உண்மை யாருடைய
இதயங்களையெல்லாம் காயப்படுத்துகிறதோ...
அங்கே நீங்கள் மருந்திட
வேண்டிய அவசியமில்லை.
சில இடங்களில் தனிமை மட்டும் தான்
தன்மானத்தோடு வாழ வைக்கும்.....
உங்கள் முன்னேற்றத்தை கண்டு
யாரெல்லாம் பழிக்கிறார்களோ,
அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்
நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தான் உண்மை.....
ஒருவரின் புறக்கணிப்பு .....
ஒருவருடைய ஏமாற்றம் .....
ஒருவருடைய தவறு ....
ஒருவரது நம்பிக்கை துரோகம் ....
என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்
கடைசியில் திரும்பிப் பார்க்கும் பொழுது
எல்லோரும் எங்கோ நின்று கொண்டிருப்பார்கள்......
கூட்டமாய் மேயும் ஆடுகளாய் வாழ்வதைவிட,
தனித்து வாழும் சிங்கமாய்
வாழ்ந்து விடுவது சிறப்பானது.....
நீங்கள் அழுவதாய் இருந்தால் அழுது விடுங்கள்.
கோபம் வந்தால் கோபப்பட்டு விடுங்கள்.
ஆத்திரம் தீரும் வரை வேண்டுமானால்
சப்தம் போட்டு விடுங்கள்......
அமைதியாய் மட்டும் இருந்து விடாதீர்கள்......
அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்
கொட்டுவதில் தான் இருக்கிறது......
நம்பிக்கை நிறைந்த மனிதர்கள்
எவரிடத்திலும் மண்டியிடுவதும் இல்லை...
பிச்சை கேட்பதும் இல்லை.....
அது உணவாக இருந்தாலும் சரி ....
உண்மையான அன்பாக இருந்தாலும் சரி......
❣️❣️❣️❣️❣️💕❣️❣️❣️❣️❣️
1 year ago | [YT] | 1
View 2 replies
ARR clickz
யாரும் பார்த்திடா வண்ணம்
கண்ணீரைத் துடைக்குமொரு நிலை
யாரும் பார்த்திடா வண்ணம்
அவமானங்களை
மறைக்க முயலுமொரு கலை
யாரும் கேட்கும் முன்னர்
விசும்பலை வேகமாய்
மறைக்குமொரு புன்னகை
யாரும் கண்டுகொள்ளும் முன்
சங்கடங்களை மறைத்திட
நகர்வதற்கான முயற்சி
யாரும் நக்கல் அடிக்கும் முன்
நகர்ந்து செல்லும் வேதனை
யாரும் உடைக்கும் முன்
அமைதியாய் உள்ளுக்குள்
உடைந்த படி நகரும் துணிவு
யாரும் கேட்கும் முன்
சட்டென முகபாவனையை
சீராக்கும் திறன்
யாருடையதேனும்
என்னாயிற்று எனும் வினவலில்
உள்ளுக்குள் ஆயிரம் அவஸ்தையை உள்ளடக்கிக் கொண்டு
ஒன்றுமில்லையெனச் சொல்லும்
உடைவு
இப்படி எத்தனை சங்கடங்களை
வேதனைகளை
சிரமங்களை
மறுப்புகளை
பிறரிடம் காட்டாது
உள்ளுக்குள் புதைத்து
உணர்வுகளைச் சிதைத்து
உண்மைகளை மறைத்து
உள்ளத்தை கட்டுப்படுத்தி
நகர்ந்தாயிற்று
இருந்தும் ஏன் இவற்றை
பிறரிடம் சொல்லத் துணிவதில்லையெனின்
தீர்த்து வைப்பார்களெனும் நம்பிக்கையில் மனிதர்களிடம் சொல்வதை விட
சில மணி நேர அழுகை
சுகமானது இதமானது
மொத்தக் கவலைகளையும்
சிரமங்களையும்
அடியோடு கழுவிச் செல்ல!
ஷப்ரா இல்முத்தீன் 🖤
1 year ago | [YT] | 1
View 2 replies
Load more