❣️ உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் ❣️
❣️ RK health tips ❣️


Kamala Rk

1 month ago | [YT] | 4

Kamala Rk

1 month ago | [YT] | 2

Kamala Rk

10 months ago | [YT] | 4

Kamala Rk

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.... கம்பு வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்யனும் தெரியுமா உங்களுக்கு.... ?


* தேவையான பொருட்கள்
* கம்பு வேக வைப்பதற்கு...
* * கம்பு _ 1 கப்
* * தண்ணீர் _ 3 கப்
* * உப்பு _ 1/4 டீஸ்பூன்

* கஞ்சிக்கு
* * எண்ணெய் _ 3 டீஸ்பூன்
* * கடுகு _ 1/2 டீஸ்பூன்
* * உளுத்தம்பருப்பு _ 1/2 டீஸ்பூன்
* * சீரகம் _ 1/4 டீஸ்பூன்
* * பச்சை மிளகாய் _ 2
* * கறிவேப்பிலை சிறிதளவு
* * வெங்காயம் _ 1 ( பொடியாக நறுக்கியது )
* * கேரட் _ 1 கப் ( பொடியாக நறுக்கியது )
* * பீன்ஸ் _ 1 கப் ( பொடியாக நறுக்கியது )
* * இஞ்சி பூண்டு பேஸ்ட் _ 1/2 டீஸ்பூன்
* * தண்ணீர் தேவையான அளவு
* * உப்பு _ 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு
* * துருவிய தேங்காய் _ 1/2 கப்
* * சீரகம் _ 1/2 டீஸ்பூன்
* * கொத்தமல்லி இலை



செய்முறை
# முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும் .

# பின் கழுவிய கம்பை மிக்சிர் ஜாரில் போட்டு லேசாக அரைத்து கொள்ள வேண்டும் .

# பின்பு அரைத்த கம்பை குக்கரில் போட்டு , அதனுடன் 3 கப் நீரை ஊற்றி , 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும் .

# விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும் .

# அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு , உளுத்தம்பருப்பு , சீரகம் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் .

# பின் அதில் 2 பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி , வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .

# பிறகு கேரட் , பீன்ஸ் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் .

# பின்பு கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி , 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி , மூடி வைத்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் .

# பின் அதில் வேக வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி , 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் .

# அதற்கு மிக்சிர் ஜாரில் துருவிய தேங்காய் , சீரகம் , கொத்தமல்லி இலையை சேர்த்து , சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து ,
கொதித்துக் கொண்டிருக்கும் கம்புடன் சேர்த்து நன்கு கிளறி , 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் , சுவையான , ஆரோக்கியமான கம்பு வெஜிடேபிள் கஞ்சி தயார் ....


* இந்த கஞ்சியை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும் மேலும் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் 🙏🙏🙏#health #healthy #sammer #trending #கிச்சன்டிப்ஸ் #tips #food

1 year ago | [YT] | 6