மொழிபெயர்ப்பு ஆசிரியர் ஒரு நூலினை மொழி பெயர்ப்பு செய்யும் போது கலாச்சார பண்பாட்டிற்காக
கதையில் தனக்கு பிடித்த கதாபாத்திரத்தின் தன்மைகளை உயர்வாகவும், தனக்கு பிடிக்காத கதாபாத்திரத்தின் தன்மைகளை குறைத்தும் எழுதிட வாய்ப்பு உண்டு. இதனால் நாம் பல கதாபாத்திரங்களின் உண்மை தன்மையை அறியாது போகலாம்.
ஆனால் மூல நூலான வியாசர் எழுதிய மகாபாரதத்தில் உள்ளபடியே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்பதை மட்டுமே முதன்மையான நோக்கமாகக் கொண்டு…
‘கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் ஸ்ரீநிவாஸாசாரியர்’ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு..
‘கும்பகோணம் கல்லூரி தமிழ் பண்டிதர் இராமானுஜசாரியர்’ அவர்களால் பதிப்பிக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்
“ஸ்ரீ மகாபாரதம்”
இந்த நூலானது வடமொழியில் வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரத நூலுக்கு சமமானது மற்றும் மிகச்சரியான மொழிபெயர்ப்பை கொண்டது. ஆதலாலே இந்த நூலை நான் தேர்ந்தெடுத்தேன்.
உண்மையான மகாபாரதத்தை மூல நூலில் உள்ளபடியே அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் என்னை தொடருங்கள்.
நன்றி வணக்கம்.
இப்படிக்கு,
~ உங்களில் ஒருவன் 😊