Puducherry Pradesh Congress committe

Daily new updates


Puducherry Pradesh Congress committe

*மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.வெ.வைத்திலிங்கம் அவர்கள் இன்று அரசு முறை பயணமாக காரைக்கால் வருகை புரிந்தார்கள்.*

*2022 -23-ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய வணிக வளாகம் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் கூடுதல் வகுப்பறைக்கு பூமி பூஜை ஆகிய பணிகளில் தலைமையேற்று கலந்து கொண்டார்கள்.*

*இதில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் ரூபாய் 20,90,000 மதிப்பீட்டில் வணிக வளாகத்தினை பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்கள்.*

*இதன் தொடர்ச்சியாக நேரு நகரில் அமைந்துள்ள தெளிகுளம் வீதியில் சாலைகளை மேம்படுத்துவதற்கான பூமி பூஜையினை ரூபாய் 10,65,000 மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்கள்.*

*மேலும், காரைக்கால் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட தந்தை பெரியார் நகரில் உள்ள வடிகால் வசதிகளை மேம்படுத்த ரூபாய் 10,63,000 மதிப்பீட்டிலும்,மேலும், காரைக்கால் கோவில் பத்து பட்டேல் நகரில் தார்சாலை அமைத்து மேம்படுத்த ரூபாய் 8,75,000 மதிப்பீட்டிலும் காரைக்கால் பி. கே. சாலை கோல்டன் நகரில் தார்சாலை அமைத்து சாலைகளை மேம்படுத்த ரூபாய் 13,60,000மதிப்பீட்டிலும் பூமி பூஜைகளை இன்று துவக்கி வைத்தார்கள்.*

*மேலும் நிரவி பகுதியில் அமைந்துள்ள உசேனியா அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டி 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். ஆக மொத்தம் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகளை இன்று துவக்கி வைத்தார்கள்.*

*இந்நிகழ்வுகளில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.நாக தியாகராஜன், முன்னாள் அமைச்சர் திரு . A.V.சுப்ரமணியன், துணை ஆட்சியர் திரு. ஜான்சன் நகராட்சி ஆணையர் திருமதி. சத்யா காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி திருமதி. விஜய மோகனா நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.*

1 year ago | [YT] | 2