தினசரி நடப்பு நிகழ்வுகள் வழங்கி வருகிறோம்.
தினமணி, இந்து தமிழ் திசை, தினகரன், தினத்தந்தி, தினமலர் செய்தித்தாள்கள் & Press Information Bureau ( PIB) வலைதளம் ஆகியவற்றிலிருந்து தினசரி நடப்பு நிகழ்வுகள் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறோம்.
செய்தித்தாள் படிக்க முடியவில்லை என்றாலும், செய்தித்தாள்கள் கிடைக்கவில்லை என்றாலும், செய்தித்தாள்கள் எப்படி படிப்பது என்று தெரியவில்லை என்றாலும் நமது சேனல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எங்களை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ்அப் செய்யுங்கள் : 9597636409
ARIVU PORTAL
TNPSC குரூப் -4 HallTicket வெளியீடு!
👇👇👇👇
apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
🤞🤞🤞🤞
3 years ago | [YT] | 0
View 0 replies
ARIVU PORTAL
2020-ம் ஆண்டு முதல் மே 10,2022 வரை Tnpsc நடத்திய தேர்வு வினாத்தாள்கள் உங்களின் நலனுக்காக
Subscribe our YouTube Channel for daily current affairs in tamil
*Arivu Portal*
👇👇👇👇👇👇
*மொத்தம் - 17 தேர்வு வினாத்தாள் அடக்கம்*
drive.google.com/drive/folders/1rCx0c2nfgN7vS1XjBm…
3 years ago | [YT] | 3
View 0 replies
ARIVU PORTAL
3 years ago | [YT] | 3
View 0 replies
ARIVU PORTAL
WHERE to study
3 years ago | [YT] | 1
View 0 replies
ARIVU PORTAL
Where to study 👍
3 years ago | [YT] | 0
View 0 replies
ARIVU PORTAL
@arivuportal4270
3 years ago | [YT] | 0
View 0 replies
ARIVU PORTAL
WHERE To Study...? Unit 9
3 years ago | [YT] | 0
View 0 replies
ARIVU PORTAL
3 years ago | [YT] | 2
View 0 replies
ARIVU PORTAL
TNPSC- எக்ஸாம்க்கு அப்ளை பண்ண போறீங்களா?
--------------------------------------------------------
அரசு வேலை என்பது அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய கனவு. அந்த கனவை நோக்கி அவர்கள் அனுதினமும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். பல பேரின் கடும் முயற்சிகள், விட்டுக்கொடுத்த பல்வேறு சந்தோசங்கள், பட்ட அவமானங்கள், செலவில்லாத நேரங்கள் என்று ஏராளமாக உள்ளன.
ஆனால், அவர்களின் அதனை முயற்சிகளும், செலவழித்த நேரங்களும், வீட்டுக் கொடுத்த சந்தோஷங்களும் பூஜியமாக எங்கு மாறுகின்றது என்று அவர்கள் அறிவது இல்லை. எங்கு தெரியுமா? நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது பிரவுசிங் சென்டர்களில் உள்ளவர்களிடம் கொடுத்து உங்களது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யச் சொல்கிறீர்களே, அங்குதான். ஏன் அவர்கள் நமக்கு நன்மைதானே செய்கிறார்கள்?, இதில் என்ன தவறு என்போர் தொடர்ந்து படியுங்கள்:
1. பிரவுசிங் சென்டரில் விண்ணப்பிக்க ஏராளமானோர் வருவார்கள், அவர்களால் உங்களை போன்று உங்களது தகவல்களை சரியாக விண்ணப்பத்தில் பதிவு செய்ய இயலாது.
2. நிறைய பேருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உங்கள் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, மதம், சாதி தொடர்பான தகவல்களை அவர்கள் தவறாக பதிவிட வாய்ப்பு உண்டு. இதனால் தேர்வில் வெற்றி பெற்றும் கலந்தாய்வின்போது பிரச்சினை வரலாம்.
3. சில பிரவுசிங் சென்டர்களில், போட்டியாளர்களுக்கு உண்டான, மின்-அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை போடாமல் பிரவுசிங் சென்டருக்கு உண்டான மின்-அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை போட்டு விண்ணப்பித்து விடுகிறார்கள். இதனால் நீங்கள், நாளை TNPSC- அலுவலகத்திலிருந்து வர வேண்டிய முக்கியமான தகவல்களை தவற நேரிடலாம். TNPSC- யிலிருந்து வீட்டு முகவரிக்கும் கடிதம் வரும், இருப்பினும் முகவரி,மெயில், போன் நம்பர் அனைத்தும் நமக்கு சொந்தமானதாக இருந்தால் மிக நன்று.
4. பலர் பிரவுசிங் சென்டரில் விண்ணப்பிக்கச் செல்லும் பொழுது அவர்களின் கல்விச் சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்கிறார்கள் (Xerox). சென்டர்காரர்களும் அதனை வைத்து விண்ணப்பித்து விடுகிறார்கள். பின்னர் கலந்தாய்வின் போதுதான் தங்களிடம் அதன் ஒரிஜினல் இல்லை என்பதனை பலர் உணர்கிறார்கள். உதாரணமாக, சென்டர்காரர், ஒருவரது இளநிலை பட்ட படிப்பிற்கான, புரவிசனல் சர்டிபிகேட்டை வைத்து விண்ணப்பம் செய்து விட்டார் என்றால், விண்ணப்ப தாரரிடம், அதன் ஒரிஜினல் இருக்காது. இளநிலை கான்வோகேஷன் சர்டிபிகேட் ஒரிஜினல் மட்டுமே இருக்கும். தனது இளநிலை புரவிசனல் சான்றிதழை முதுநிலை படிப்பதற்காக கல்லூரியில் கொடுத்து இருப்பார். இது அவருக்கு விண்ணப்பம் செய்யும் அவசரத்தில் தெரியாது. எனவே எந்த எந்த ஒரிஜினல்கள் உங்களிடம் உள்ளன என்பதனை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இல்லை என்றால், தேவை இல்லாத மன உளைச்சல்தான்.
5. உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும் பொழுது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர சென்டர் காரர் அல்ல. தற்போது TNPSC -விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பையும் கொடுப்பதில்லை.
6.பல சென்டர்களில், உங்கள் தகவல்களை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் நாங்கள் விண்ணப்பித்து விடுகிறோம். தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது அல்லது இணையம் மெதுவாக உள்ளது என்று நீங்கள் இல்லாமல் விண்ணப்பம் செய்வார்கள், அப்பொழுது அவர்கள் தவறு செய்ய அதிக வாய்ப்புண்டு. ஆனால் உங்களிடம் அவர்கள் " அதெல்லாம் கரெக்ட்டா போட்ருவோம் பாஸ், எத்தனை பேருக்கு அப்ளை பண்ணிக்கிட்டு இருக்கோம், நீங்க போயி உங்க வேலைய முடிச்சுட்டு வாங்க" என்றுதான் சொல்வார்கள். ஆனால் கரெக்ட்டா தவறாக விண்ணப்பித்து இருப்பார்கள்.
7. அடுத்து முக்கியமான பிரச்சினை என்னவென்றால், பணம் கட்டுவது. சில போட்டியாளர்கள், நான் மூன்று முறை கட்டண சலுகையை உபயோகித்து விட்டேன் என்று கூறியும், சரியான புரிதல் இல்லாமல் சில சென்டர்களில் கட்டண சலுகையில் விண்ணப்பித்து விடுகிறார்கள். நீங்கள் தெரியப்படுத்தவில்லை என்றால் அவர்கள் கட்டணத்தைப் பற்றி கேட்பதே இல்லை. நேரடியாக கட்டண சலுகை தான். இதனால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் அபாயம் உண்டு.
8. சில சென்டர்களில், கட்டணத்திற்கு என்று ரூ.100 என்று தனியாக வாங்கிக் கொண்டு, விண்ணப்பிக்கும் போது போட்டியாளர் அருகில் இல்லை என்றால், சலுகை முறையில் போட்டு விண்ணப்பித்து ஏமாற்றி விடுகிறார்கள். இவர்களிடம் கவனம் தேவை. போட்டியாளர்களும் என் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு விட்டது, ஹால் டிக்கெட் வரவில்லை என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள்.
9. முதலில் உங்களது நிரந்தரப் பதிவு பயனாளர் குறியீடு, மற்றும் கடவுச் சொற்களை அடுத்தவரிடம் பகிர்வதே தவறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள். அதில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றத்திற்கும் பொறுப்பாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவ்வாறே உங்களுக்கு கணினியை சரியாக இயக்குவதில் தயக்கம் இருப்பின், அருகில் நீங்கள் இருந்து தகுந்த தகவல்களுடன் கூறி மற்றவரை விண்ணப்பிக்கச் சொல்லலாம்.
ஏனெனில் உங்களைப் பற்றிய விபரங்கள் உங்களை விட அடுத்தவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.
இனி உங்கள் விண்ணப்பித்தினை நீங்கள்தானே பூர்த்தி செய்வீர்கள்.
நன்றி.
அருள் ஜோதி இணையத் தேர்வுக் கூடம், சென்னை.
3 years ago | [YT] | 1
View 1 reply
ARIVU PORTAL
திருக்குறளும் ஈர்ப்பு விதியும்
--------------------------------------------------------
குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
- திருக்குறள்.
--------------------------------------------------------
நாம் எதைப்பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதைப்பற்றிய உணர்வுகளே ( feelings ) மேலோங்கி இருக்கும். அதுவே நம் வாழ்வின் உண்மையாக ( reality ), அனுபவமாக ( experience ) பரிமளிக்கும்.
நம் அன்றாட வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களின் ஊடே பயணிக்கிறோம்.
சில இனிக்கிறது. சில கசக்கிறது.
இது எப்படி என்று யோசித்து இருக்கிறோமா?
நம் வாழ்வின் அனுபவங்கள் எல்லாமே நம் விரும்பி ஈர்ப்பது தான்...
இதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடம் இல்லை.
இது இயற்கையின் விதி. ( LAW OF NATURE )
இது பிரபஞ்ச விதி. ( LAW OF UNIVERSE )
புவிஈர்ப்பு விதி போல. ( LAW OFGRAVITY )
புவிஈர்ப்பு விதி பணக்காரனுக்கு ஒரு வகையிலும் ஏழைக்கு ஒரு வகையிலும் செயல்படுவது இல்லை.
விதிகளில் எந்த வேறுபாடும் கிடையாது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு அனுபவமும் நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் நாம் விரும்பி ஈர்ப்பது தான்.
எப்படி?
பிரபஞ்ச விதிக்கு நல்லது, கெட்டது, சரி, தவறு,மிகை, குறை, போன்ற வேறுபாடுகள் கிடையாது.
நம் எண்ணங்கள் எப்படியோ அவற்றை சார்ந்த எண்ணங்களை, உணர்வுகளை அனுபவங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதே அதன் வேலை.
ஆகவே தான் "எண்ணம் போல் வாழ்வு அமையும்" என்று சொல்லப்படுகிறது.
"என் உடல்நிலை சரி இல்லை" என்ற எண்ணும் பொழுது அது இன்னும் மோசமாவதை உணர்ந்து இருக்கிறீர்களா ?
ஆனால், " நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன் " என்ற எண்ணம் நம் சக்தியை (ENERGY) அதிகப்படுத்துவதை உணர்ந்து இருக்கிறீர்களா ?
நாம் குறைகளை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தால் அவையே இன்னும் அதிகமாக நம்மிடம் வந்து சேரும்.
நாம் நிறைகளை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தால் அவையே இன்னும் அதிகமாக நம்மிடம் வந்து சேரும்.
இப்படிப்பட்ட ஒரு பேருண்மையை 2 வரிகளில் எத்தனை அழகாக சொல்லிவிட்டார் திருவள்ளுவர் !
இன்று நாம் படிக்கும் LAW OF ATTRACTION, LAW OF INTENTION போன்ற பல கோட்பாடுகளை அன்றே எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கிறார் !
நல்ல எண்ணங்களை நம்முள் விதைப்போம் !
வாழ்வின் உன்னதத்தை, அபிரிமிதத்தை உணர்வோம் !
எது வேண்டுமோ அதை கொடுத்து பெறுவோம் !
3 years ago | [YT] | 2
View 0 replies
Load more