சற்குருவே சரணம் 🙏🏻 கணக்கன்பட்டி சற்குரு பகவானின் மகிமைகளை சொல்வது மட்டுமே இந்த பதிவுகளின் நோக்கம். இந்த சிறு பணியே திருப்பணி என்று நம்புகிறேன்.


Rishikesh P.M.

பகவானின் பிள்ளைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏.
இனி மதுரை ஞானசபையின் அனைத்து நிகழ்வுகள் பூஜைகள் மற்றும் விழாக்கள் அனைத்தும்
இந்த புதிய சேனலில் மட்டுமே பதிவு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

youtube.com/shorts/RjuHSgUhof...

எல்லாம் நீயே 🙏
மகா ஸ்ரீ சற்குரு பகவானின் அருளாசிகளோடு புதிய பொலிவுடன் #மதுரைஞானசபை youtube சேனல்...
• மதுரை ஞானசபையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் பகவானின் தரிசனம்
• பகவானின் குரல்
• தினமும் பகவானின் அருள் நிறைந்த வார்த்தைகள்
• பகவானின் பாடல்கள்
• மதுரை ஞானசபையின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் இவைகள் அனைத்தையும் தரிசிக்கவும் பகவானின் அருளில் நிறைந்திருக்கவும் நீங்கள் காண வேண்டியது
#மதுரைஞானசபை youtube channel...
#சற்குருவேசரணம் 🙏
#maduraignanasabai #sargurubagawan #சற்குருபகவான்

1 year ago | [YT] | 7

Rishikesh P.M.

சற்குரு அப்பா சரணம் 🙏

மதுரையில் மாபெரும் திருவிழா மகா ஸ்ரீ சற்குரு பகவானின் 10ஆம் ஆண்டு குருமங்களப் பெருவிழா மற்றும் மதுரை ஞானசபையின் 20ஆம் ஆண்டு துவக்கவிழா பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், அங்கே வீடியோ செய்யும் பணியில் இருப்பதால் தொடர்ந்து காணொளிகள் பதிவு செய்ய இயலவில்லை... ஆனால் பல அற்புதங்கள் மற்றும் பல்வேறு விஷயங்களை சேகரித்து வருகிறேன். அவை அனைத்தும் சற்குரு அப்பாவின் அன்புப் பிள்ளைகளான உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு காணொளிகளாக கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் சற்குரு அப்பாவின் கருணையால் செய்வோம் என்று நம்புகிறேன்... அதுவரை நாம் காத்திருப்போம்.

சற்குரு அப்பாவின் தெய்வீகத் திருவடிகளில் யாவும் சமர்ப்பணம் 🙏

1 year ago | [YT] | 22

Rishikesh P.M.

சற்குரு அப்பாவின் அருளாசிகளுடன் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பேரன்பும், மனநிறைவும்,
பெரும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும். பேரொளியில் சங்கமம்.
சற்குருவே சரணம் 🙏

1 year ago | [YT] | 39

Rishikesh P.M.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சற்குரு அப்பாவின் கருணையால் அனைவரும் நலமாக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கடந்த ஒரு வருடமாக வீடியோ எதுவும் upload செய்யவில்லை. காரணம் சொந்த வேலைகள் மற்றும் சற்குரு அப்பா உருவாக்கிய மதுரை ஞானசபையை அனைத்து மக்களுக்கும் சென்று சேர்க்கும் பணியை சிறிய அளவில் செய்து கொண்டு இருந்ததால் வீடியோ எதுவும் ரெடி பண்ண நேரம் கிடைக்கவில்லை. இனி இதுவரை மதுரை ஞானசபையில் நடைபெற்ற சத்சங்கம், ஞான மற்றும் யோக வகுப்புகளில் பெற்ற விஷயங்கள், சற்குரு அப்பாவின் பிள்ளைகள் பலரின் வாழ்வில் நடைபெற்ற விஷயங்களை மறுபடியும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பலருக்கும் நிறைய்ய விஷயங்கள் பயன்படலாம் என்று நம்புகிறேன்... புதிய வருடத்தில் சற்குரு அப்பா வழங்கிய அனைத்து பொக்கிஷங்களையும் பகிர்ந்து கொள்ளலாமா...?

ஆரம்பிக்கலாமா...

என் சர்வமும் சகலமும் யாவுமான சற்குரு அப்பாவின் தெய்வீகத் திருவடிகளில் யாவும் சமர்ப்பணம்.
சற்குருவே சரணம் 🙏.

2 years ago | [YT] | 24

Rishikesh P.M.

எல்லாம் நீயே 🙏
கணக்கன்பட்டி தாயுமானவரின் தெய்வீகத் திருவடிகளில் யாவும் சமர்ப்பணம் 🙏

குரு யார்?
குரு என்ற சொல்லுக்கு உண்மையான விளக்கம் என்ன என்று அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்...
நேற்று மதுரை ஞானசபையில் கிடைப்பதற்கரிய இந்த பொக்கிஷம் கிடைத்தது...

சற்குருவே சரணம் 🙏🏻

2 years ago | [YT] | 30

Rishikesh P.M.

மதுரை ஞானசபையில் இன்று மாலை மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழநிசுவாமிகள் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் 🙏. இந்த சிறப்பு நிகழ்ச்சி உங்கள் #ஞானசபைமதுரை# சேனலில் நேரலையில் பக்தர்கள் கண்டு சற்குரு பகவானின் அருள் பெறுக 🙏

2 years ago | [YT] | 35

Rishikesh P.M.

fb.me/e/2FA0MRuDz?mibextid=N4tvPT

எல்லாம் நீயே 🙏
மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழநிசுவாமிகளின் 9ஆம் ஆண்டு குரு மங்களப் பெருவிழாவை முன்னிட்டு
மதுரை ஞானசபையில் 02.03.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை 🙏
அனைவரும் வருக 🙏 சற்குரு பகவானின் அருள் பெறுக 🙏.

மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனி சுவாமிகள் ஞானசபை, வில்லா புரம் ஹவுஸிங் போர்டு காலனி, மதுரை-11.

#எல்லாம்நீயே# #ஞானசபைமதுரை# #சற்குருபகவான்# #பழநிசுவாமிகள்#
#குருமங்களப்பெருவிழா# #பொங்கல்விழா# #திருவிளக்குபூஜை# #தேரோட்டம்# #மாசிமாதம்# #சொற்பொழிவு# #யாகசாலைபூஜை# #அன்னதானம்# #26.02.2023# #03.03.2023# #04.03.2023# #05.03.2023# #குருவோடுசங்கமம்# #11.03.2023#

சற்குருவே சரணம் 🙏🏻

2 years ago (edited) | [YT] | 91

Rishikesh P.M.

www.facebook.com/groups/1318087042294700/?mibextid…

எல்லாம் நீயே
சற்குரு மகா ஸ்ரீ பகவான் பழநிசுவாமிகள் ஞானசபை மதுரை

பகவானின் பக்தர்கள் விரும்பினால் மதுரை ஞானசபை முகநூல் பக்கத்தில் இணைந்து கொண்டு,

• ஒவ்வொரு நாளும் மதுரை ஞானசபையில் பகவானுக்கு நடக்கும் அலங்காரம் மற்றும் திருஉருவ தரிசனைத்தையும்....

• மதுரை ஞானசபையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும்...

• சற்குரு பகவானின் பாடல்கள் மற்றும் சற்குரு பகவானின் ஞான பொக்கிஷங்களையும் கண்டு பகவானின் பரிபூரண அருள் கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள் 🙏.

முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் 🙏

சற்குருவே சரணம் 🙏🏻

2 years ago | [YT] | 7

Rishikesh P.M.

எல்லாம் நீயே 🙏
மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனி சுவாமிகள் ஞானசபை மதுரை.

சற்குரு பகவானின் ஒன்பதாம் ஆண்டு குரு மங்களப் பெருவிழாவின்
துவக்கமாக வரும் ஞாயிறு அன்று அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நமது பகவானுக்கு தாய்மார்கள் இனிய பொங்கல் படைக்கும் விழா நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே பொங்கல் வைக்க விரும்பும் தாய்மார்கள் 2023 பிப்ரவரி 22ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து மதுரை ஞானசபையில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். ஞாயிறன்று பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் போது பொங்கல் பானை, கரண்டி மற்றும் பொங்கல் வைக்க உதவும் பாத்திரங்களை மட்டும் பக்தர்கள் கொண்டு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மற்ற உபகரணங்களான அடுப்பு, விறகு மற்றும் பொங்கல் பொருட்கள் ஞான சபையில் இருந்து வழங்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏.

சற்குருவே சரணம் 🙏🏻

2 years ago | [YT] | 132