Just doing what my mind says , and heart allows !!!

A common star from the " republic of world !!

Tamilan !
Indian !
Human !

Thanks everyone
Waranth ⭐


WARANTH STAR

❤️

11 months ago | [YT] | 4

WARANTH STAR

Next video ??

1 year ago | [YT] | 2

WARANTH STAR

இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் பிஸியாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் , வெட்டியா இருக்கும்போது பாருங்க !!!!

1 year ago | [YT] | 0

WARANTH STAR

யுக வீரன் யுவராஜ் :
தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக விளையாட ஆரம்பித்தவர் பல கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றினார் . ஒரு ஐசிசி கோப்பையாவது வென்று விட மாட்டமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு 1 இல்லை 2 கோப்பைகளை வென்று கொடுத்து ஆனந்த கூத்தாட வைத்தவர் .
தான் யாரை பார்த்து இன்சிப்ரஷன் ஆகி கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்தாரோ, அவருக்காகவே உலகக்கோப்பை போட்டிகளில் ரத்த வாந்தி எடுத்தபோதும் கூட விளையாண்டார். அவர் சொன்ன மாதிரியே தன் வாத்தியாருக்கு (சச்சின்) கோப்பையை வாங்கி கொடுத்து அழகு பார்த்தார் இந்த மாமனிதர் .
2000 - 2011 periodல இந்தியாவுக்கு கிடைச்ச சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் , விக்கெட் டேக்கிங் பார்ட்டைம் ஸ்பின்னர் , தலைசிறந்த பீல்டர் எல்லாமே யுவி தான் அந்த இடத்தை 8 வருஷம் ஆகியும் நம்மளால நிரப்ப முடியல . அந்த இடத்துக்கு மியூசிக்கல் சேர் மாதிரி ஆள்கள் மாரி மாரி வந்துகிட்டு இருக்காங்களே தவிர யுவி பண்ணதுல யாரும் பாதி கூட பண்ணல .
கங்குலியின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் சோடை போனதில்லை சிலவற்றை தவிர . ஆழ்கடலில் சென்று முத்து எடுக்கும் மீனவர்கள் போல் இந்தியாவிற்கு பல்வேறு திசைகளில் இருந்து மாபெரும் முத்துக்களை கண்டு எடுத்தார் ஒவ்வொன்று ஒவ்வொரு விதமாக ஜொலித்தன.
அன்னிக்கு அவர் ஊன்றிய விதைகள் பின் மரமாக வளர்ந்து இந்தியாவிற்கு கனிகளை (உலககோப்பை) பெற்று தந்தன . அதில் உயர்ரக விதை இந்த யுவி விதை . விதை விருச்சகமாக வளர போகிறது என்று விதைத்த உடனே தெரிந்து விட்டது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ரோபி போட்டியில் அடித்த 84 ரன்கள் 80 பந்துகளில் முலம் .
நாட்வ்ஸ்ட் ட்ரோபி பைனல் போட்டியில் அடித்த 69 ரன்கள் முலம் செடியாக முளைக்க ஆரம்பித்தது .
2002 சாம்பியன்ஸ் ட்ரோபி செமிபைனல் போட்டியில் 2 மறக்க முடியாத கேட்ச்களை பிடித்து மேட்சை இந்தியா பக்கம் திருப்பியபோது இந்த செடி நிறைய கிளைகள் (ஆல்ரவுண்டு performance ) கொண்ட மரமாக வளர போகிறது என்று உணர்த்தியது .
கங்குலி , சச்சின் , டிராவிட் ஊற்றிய சிறுவாணி தண்ணீர் காரணமாக செடி மடமடவேண வளர்ந்து குட்டி மரமானது (2003 டு 2006 ) . செய்யாத சாதனைகள் இல்லை, அடாத ஆட்டங்கள் இல்லை.
பாகிஸ்தானில் போய் 5 போட்டிகளில் ஆடி 344 ரன்கள் அடித்து மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரிஸ் வாங்கி பங்காளிகளை பதம் பார்த்ததுக்கே உன்னை பல ஜென்மங்கள் கொண்டாட வேண்டும் .
இந்தியாவின் மும்முர்த்திகள் 2007 T20 உலகக்கோப்பைக்கு இந்த குட்டி மரத்தை நம்பி தான் புது வீரர்களை தேர்வு செய்த்து அனுப்புங்கள் என்று தேர்வாளர்களிடம் கூறினார்கள் அவன் எல்லாத்தையும் பாத்துக்கிருவானு சொன்னாங்க . குட்டி மரம் இவர்கள் நம்பிகையை பொய்யாக்கவில்லை தனது அனைத்து திறைமைகளையும் உபயோகித்து 2 மாபெரும் ஆட்டங்களை ஆடியது இங்கிலாந்துக்கு எதிராகவும் , ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் .
அந்த ஆட்டங்கள் ஒவ்வொரு இந்திய ரசிகன் இதயத்திலும் சிம்மாசனம் இட்டு யுவியை அமர்த்தியது .
கங்குலியின் வளர்ப்பு பிள்ளை என்பதை அறியாத flintoff யுவியை வம்புழுக்க அதற்கு அடுத்த ஓவரில் நடந்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் தனி இடம் பிடித்தது 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் .
டெஸ்ட் , ஒன்டே , T20 என்று ஒவ்வொரு பார்மட்க்கும் சிறந்த இன்னிங்ஸ் எது என்று வரிசைபடுத்தினால் T20 பார்மட்டில் யுவியின் இந்த இன்னிங்ஸ் தான் முதல் இடம் பிடிக்கும் .
இங்கிலாந்தை அடித்த சூட்டோடு சூட்டாக அடுத்த சம்பவம் செய்ய தயாரானார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
சச்சினின் சிஷ்யபிள்ளை ஆஸியை எந்த இடத்தில் எப்படி அடிக்க வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்து இருந்தது . பிரெட் லீ பந்தில் 119மீ சிக்ஸ்ர் அடித்து இன்னைக்கு மேட்ச்ல உங்களை அடிக்க வரலடா போட்டு புல்லக்க வந்துருக்கேன் என்று சொல்லாமல் சொல்லியது . 30 பந்துகளில் 70 ரன்கள் அடித்த போதே மேட்ச் நம்ம கைய விட்டு போய்டுச்சுடா பரமா என்று பாண்டிங்கை புலம்ப வைத்தது .
2008 இந்திய பயணம் வந்த இங்கிலாந்தை மீண்டும் வெறிகொண்டு அடித்து 66 பந்துகளில் சதம் அடித்த போது யுவி என்னும் கங்குலி விதைத்த விதை பெரிய மரமாக வளர்ந்து நின்றது . யுவி மட்டும் இல்லை சேவாக் , ஷாகிர் , தோனி ,ஹர்பஜன் என அனைவரும் வளர்ந்துவிட, தன் விதைகள் மரமாக வளர்ந்து நிர்ப்பதை பார்த்து சந்தோசபட்டு இனிமே இவனுக பார்த்துகிவானவுக நான் போய்ட்டுவரேன் என்று சொல்லி ஓய்வு பெற்று சென்றார் கங்குலி
2011 உலககோப்பையில் அனைவரும் கங்குலியின் நம்பிக்கையை காப்பாற்றினார்கள் . கங்குலியின் வளர்ப்பு பிள்ளை என்பதை நிருபித்தாகிவிட்டது , சச்சினின் சிஷ்யபிள்ளை என்று சிக்னல் கொடுத்தாகிவிட்டது , மும்முர்த்தியில் முன்றாவது முர்த்தியான டிராவிட்டின் செல்லபிள்ளை என்று காட்டவேண்டாமா அப்படி காட்டாமல் விட்டால் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெறுமா!!!! நிரூபித்தார் 2011 உலககோப்பையில் . கப்பலை தாங்கி நிற்கும் anchor போல் இந்திய அணிக்கு தொடர் முழுவதும் அச்சராமாக இருந்து இந்திய அணியை வழி நடத்தி சென்றார் . 4 அரை சதங்கள் , 1 சதம் , 15 விக்கெட்கள் என தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி 38 வருட உலகக்கோப்பை கனவை நினைவாக்கினார் .
யுவியின் பெயர் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் .
அளவில்லாத சந்தோசத்தை கொடுத்த கடவுள் , அளவில்லாத அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்தான் யுவிக்கு லங் கேன்சர் என்று செய்தியின் முலம் . ஒட்டுமொத்த இந்தியாவும் உறைந்தது அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, கனவிலும் நினைத்து பார்க்காத காட்சிகள் நடந்தேறின கீமோதெரபி ட்ரீட்மென்ட் முலம் .
நான் திரும்ப வருவேனானு தெரியாது. சிகிச்சைக்குப் பிறகு எப்படி என் உடல்நிலை இருக்கும்னும் தெரியாது. ஒருவேளை நான் உயிரோடு வந்தால், நிச்சயம் இந்தியாவுக்காக ஆடுவேன். என் கிரிக்கெட் வாழ்வை ஒரு நோய் முடிவுக்குக் கொண்டுவரக் கூடாது' - 2011-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பாக யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் இது.
ஒரு வீரன் தன் உயிருக்கு போராடும் நிலைமையில் கூட திரும்ப கிரிக்கெட் ஆட வருவேன் தன் நாட்டுக்காக என்று நினைத்த தருணத்திலயே அந்த கேன்சரை வென்று விட்டார் என்றே சொல்லலாம் .
களத்திற்க்கு திரும்பிய பிறகு சில தோல்விகள் , புறக்கணிப்புகள் , ஏமாற்றங்கள் இருந்தது . இருந்தால் என்ன
போராளி ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை தொடர்ந்து போராடினார் . கடைசியாக பழைய யுவி ஆட்டத்தை இங்கிலாந்து கூட அடித்த தனது வாழ்நாள் பெஸ்ட்டான 150 ரன்கள் முலம் காட்டி விட்டு தான் சென்றார் இந்த இந்தியாவின் செல்லபிள்ளை .
இவருக்கு சிறப்பான farewell மேட்ச் இந்தியாவில் வைத்து நடத்தி கொண்டாடிருக்க வேண்டும் . ஆனால் யுவி மட்டும் இல்லாமால் சேவாக் , ஷாகிர் , காம்பிர் ,ஹர்பஜன் என பல உலகக்கோப்பை நாயகர்களுக்கு மாற்றான் தாய் மாதிரி தான் நடந்து கொண்டது பிசிசிஐ .
எப்போது எல்லாம் உலகக்கோப்பை வருகிறோதோ அப்போது எல்லாம் உங்கள் நினைவு வந்து கொண்டே தான் இருக்கும் யுவி இந்த யுகத்திற்கான வீரர் நீங்கள் .
#HappayBirthdayyuvi #HBD Yuvraj Singh sir❤️
#repost
#repostfromsomeone
#yuvrajsingh #happybirthdayyuvipaaji
‪@yuvisofficial12‬

2 years ago | [YT] | 1

WARANTH STAR

Because the stars know best.................

2 years ago | [YT] | 15

WARANTH STAR

My first pizza ever !!

2 years ago | [YT] | 3

WARANTH STAR

best ??

2 years ago | [YT] | 3

WARANTH STAR

2 years ago | [YT] | 11