தமிழ் சினிமாவின் நேற்றைய அற்புதங்களையும், நிகழ்கால சாதனைகளையும் எதிர்கால மாற்றங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இந்திய, உலகப் படங்களின் மேன்மை, நவீன தொழில்நுட்பம் பற்றி உரையாடுவதிலும் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளோம்.

பழம்பெரும் தமிழ்ப் படங்கள் உருவான வரலாறு, கலைஞர்களின் ரசனைக்குரிய வாழ்க்கை, திரைக்கதை மன்னர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய அறிவார்ந்த காணொளிகளுடன் தற்கால சினிமாவின் கொண்டாட்டங்களையும் அழகிய தருணங்களையும் வழங்கி மகிழ்கிறோம்.


OH CINEMA

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா பிரசாத் Lab அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்வின் துவக்கத்தில் " தமிழ் பிலிம் பேக்டரி " திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில் துணை, ஆலம்நாட், அரைவேக்காடு, Coffee with Avanthika, shadow, Lowgun, கடல்கொண்டான், Love Lust retro, காஞ்சனா, மீண்டும் மழை ஆகிய சிறந்த 10 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அரைவேக்காடு, கடல்கொண்டான், காஞ்சனா, நீயே யாவுமாகி ஆகிய படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்பட்டது

சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த editor, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சமுக விழிப்புணர்வு, சமுக உணர்வு, சிறப்பு நடுவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன

ஆலம்நாட் குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு ரூ 25000 வழங்கப்பட்டது, Love Lust retro- கடல்கொண்டான் படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை தலா 25000 வழங்கப்பட்டது
மீண்டும் மழை படத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், பரிசுத்தொகை ரூ 1 லட்சமும் வழங்கப்பட்டது. பரிசுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்றவர்களுடன் அனைவரும் இணைந்து கொண்டாடியது மகிழ்வான தருணமாக இருந்தது.

Firstframe- 2025 விருது விழாவில் முதல் பரிசு வாங்கும் அணியுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக Gembrio pictures MD திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அறிவித்தது மிகவும் முத்தாயப்பான விஷயமாக இருந்தது. அரைவேக்காடு படத்தையும் தயாரிக்க விரும்புகிறோம் என்று ஒரு தயாரிப்பாளர் அறிவித்தார். தயாரிப்பாளர் இமயம் கலைப்புலி S தாணு அவர்களும் படங்களை பார்த்துவிட்டு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக பேசினார்.

இயக்குநர் K பாக்யராஜ் பேசும் போது Firstframe- 2025 இளம் இயக்குனர்களுக்கும், கலைஞர்களும் மிகவும் அருமையான ஒரு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது. அதேபோல் மிகவும் திறமையான இயக்குநர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்களை காணமுடிகிறது. இந்நிகழ்வு மூலமாக இவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்

இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதிபெருமாள், இயக்குநர் குட்டிரேவதி, இயக்குநர் ராகவ் மிர்தாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததோடு இயக்குனர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திரைக்குரலின் Editor-in-chief ஆதவன் UK, அறம் மீடியாவின் நிர்வாக செயல் அதிகாரி சுகுமார் K ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்கள்.

2 days ago | [YT] | 7

OH CINEMA

சென்னை செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில், வேல்ஸ் வர்த்தகக் கூட்ட அரங்கம் மற்றும் திரைப்பட நகரம் ஆகியவற்றை,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.

வேல்ஸ் கல்விக் குழுமம் & நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஐசரி. K.கணேஷ் Ishari K Ganesh அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு Thangam Thenarasu அவர்கள், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான திரு. A.C.சண்முகம் AC. Shanmugam அவர்கள், வேல்ஸ் நிறுவன குழுமத்தின் துணைத் தலைவர் செல்வி. குஷ்மிதா கணேஷ் அவர்கள் ஆகியோருடன்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆய்வு மற்றும் கொள்கை உருவாக்கம் அணி மாநிலச் செயலாலர் திரு. S.B.அர்ஜுனர் Sb Arjun, திரைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

4 days ago | [YT] | 37

OH CINEMA

#NewsTamil24x7CinemaUpdate | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2!

கடந்த 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் - சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' படத்துக்கான கதை தயாராக உள்ளதாக இயக்குனர் பொன்ராம் உறுதி

#VaruthapadathaValibarSangam2 #Director_Ponram #Sivakarthikeyan

5 days ago | [YT] | 3

OH CINEMA

AI Galatta: இப்போ 'சச்சின் 2' எடுத்தால் எப்படி இருக்கும்?

5 days ago | [YT] | 17

OH CINEMA

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

5 days ago | [YT] | 7

OH CINEMA

*நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்*

*மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை 'படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது*

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற 'எண்டே நாராயணனுக்கு' எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார்.

மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பார் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் எழுதியிருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இதய பூர்வமான இசையமைப்பின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டார். வாரணாசியில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம்- 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு : ஃபைஸ் சித்திக்

இசை : கோவிந்த் வசந்தா

படத்தொகுப்பு : ரெக்சன் ஜோசப்

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : பிரசாந்த் நாராயணன்

கலை இயக்குநர் : சாபு மோகன்

ஆடை வடிவமைப்பு : சமீரா சனீஷ்

ஒப்பனை : ரஞ்சித் அம்பாடி

ஒலி வடிவமைப்பாளர் : ரங்கநாத் ரவீ

நடன இயக்குநர் : பிருந்தா மாஸ்டர்

தலைமை துணை இயக்குநர் : நவநீத் கிருஷ்ணா

லைன் புரொடியுசர் : பிஜு பி. கோஷி

டி.ஐ : சாலசித்திரம் ஃபிலிம் ஸ்டுடியோ

வி எஃப் எக்ஸ் : பிக்டோரியல் எஃப் எக்ஸ்

கலரிஸ்ட் : சன்முக்த பாண்டியன்

டைட்டில் டிசைன் : ஜெர்ரி

பப்ளிசிட்டி டிசைன்ஸ் : இல்லுமனரிஸ்ட்

ட்ரெய்லர் கட்ஸ் : மகேஷ் பூவனேந்த்

பாடலாசிரியர்கள் : அன்வர் அலி, உமா தேவி, வருண் குரோவர், கஜனன் மித்கே.

பின்னணி பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபிரதா - கபில் கபிலன் - ஸ்ருதி சிவ தாஸ் - ஷிக்கா ஜோஷி- கோவிந்த் வசந்தா .

ஸ்டில்ஸ் : நவீன் முரளி

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் ( S2 மீடியா )

டிஜிட்டல் மார்க்கெட்டிங் : அனூப் சுந்தரன்.

1 week ago | [YT] | 4

OH CINEMA

*நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’*

*‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்*

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

இயக்கம் ; ஷாம்

ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல்

இசை ; அம்ரீஷ்

படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர்

நடனம் ; ஸ்ரீதர்

பாடல் ; ஜெகன்

கலை ; வி.ஆர் ராஜவேல்

ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ்

ஆடை வடிவமைப்பு ; நிரா

ஒப்பனை ; வீரசேகர்

விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

1 week ago | [YT] | 9

OH CINEMA

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் இயக்குநர் சு. அருண்குமார், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை நடிப்பில் கொண்ட புதிய பிரம்மாண்ட திரைப்படம் குறித்த புதுப்பான தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளன.

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் புதுமையான உள்ளடக்கம் கொண்ட தரமான படங்களை நாடிப்பவர்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கமல் – அருண்குமார் – விஜய் சேதுபதி எனும் சக்திவாய்ந்த கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. யதார்த்தமான கதை சொல்லும் திறனுக்குப் பெயர் பெற்ற அருண்குமார், கமல்ஹாசனின் RKFI தயாரிப்பில் விஜய் சேதுபதியை இயக்குவது, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால், இக்கூட்டணி மீண்டும் ஒன்று சேர்வது ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக அருண்குமாரின் கடைசி படமான ‘சித்தா’ விமர்சன ரீதியாகவும் வசூல் தரப்பிலும் வெற்றி கண்டதால், இந்த புதிய திட்டத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இது ஒரு யதார்த்தமான, அதே நேரத்தில் ரசனையை தூண்டும் திரைக்கதை கொண்ட படம் என ஆரம்பத்திலேயே தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதிக்கு ஏற்றாற்போல கனமும் கத்தும் நிறைந்த கதாபாத்திரம் ஒன்றை அருண்குமார் இந்த படத்தில் வடிவமைத்துள்ளாராம்.

கமல்ஹாசனின் தயாரிப்பு திறன், சு. அருண்குமாரின் நுணுக்கமான கதையமைப்பு, விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பு — இந்த மூன்றும் ஒன்றாக இணையும் இந்த புதிய படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும், அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

1 week ago | [YT] | 18

OH CINEMA

*இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!*

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.

🔗https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kP...

2 weeks ago | [YT] | 1

OH CINEMA

மலேசியாவில் 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்துமலை குகை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் நடிகரும், ரேஸருமான அஜித்குமார்

#AK #AjithKumarRacing #AjithKumar

2 weeks ago | [YT] | 28