🌷"நம்பி என்ற திருப்பதிகம் | திருமுதுகுன்றம்"🌷
—
சுந்தர சுவாமிகள் திருக்கூடலையாற்றூர் தொழுது திருமுதுகுன்ற அடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி "நஞ்சியிடை" என்னுந் திருப்பதிகம் பாடிப் பெருமானிடம் பொன் வேண்டும் குறிப்பினராய் பாடியருளியது இத்திருப்பதிகம். இப்பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர். இத்திருப்பதிகம் இறைவரைப் பலவாற்றால் ஏத்தி "நீரே எங்கட்கு எப்பிறப்பிலும் துணை" என்று குறையிரந்து அருளியது. இதன்கண் இறைவரை "நம்பி" என்னும் சிறந்த பெயரால் பலகாற் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத் தக்கது.
—
🌷"மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி
வேதம் நான்கும் விரித்து ஓதியொர் நம்பி
கையில் ஒர் வெண்மழு ஏந்தியொர் நம்பி
கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி
செய்ய நம்பி சிறு செஞ்சடை நம்பி
திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே."🌷
——(சுந்தரர் தேவாரம் : 07.063.01)
—
பொருளுரை : திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே, வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே, கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே, கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய, சிவந்த சடையை யுடைய நம்பியே, முப்புரங்களை, நெருப்பு எழுமாறு, வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.
—
பதிக குரலிசைக்கு : https://youtu.be/drg8iiuwz98 —
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள்செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசி விட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள்செய்தார்.
—
ஆலய முகவரி : அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில், விருத்தாசலம், விருத்தாசலம் அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 606 001.
—
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
—
🌷"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌷
Shaivamum Thamizhum
07.025 திருமுதுகுன்றம் | பொன்செய்த மேனியினீர் புலித்தோலை | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/lghWyV8P1Ns
—
1 hour ago | [YT] | 3
View 1 reply
Shaivamum Thamizhum
03.072 #திருமாகறல் | விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் | திருஞானசம்பந்தர் தேவாரம் | https://youtu.be/5JqvucdmXnw
—
"எலும்பு சம்பந்தமான நோய்கள் நீக்கும் திருப்பதிகம்."
—
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
11 hours ago | [YT] | 32
View 1 reply
Shaivamum Thamizhum
07.024 திருமழபாடி | பொன்னார் மேனியனே புலித்தோலை | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/ZXyYULDszy0
—
1 day ago | [YT] | 35
View 2 replies
Shaivamum Thamizhum
07.096 ஆரூர்ப்பரவையுண்மண்டளி | தூவாயா தொண்டு செய்வார் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/IweLF2AvdY4
—
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
1 day ago | [YT] | 36
View 1 reply
Shaivamum Thamizhum
07.023 திருக்கழிப்பாலை | செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/4lmsngrwJUI
—
2 days ago | [YT] | 30
View 1 reply
Shaivamum Thamizhum
02.086 திருநாரையூர் | உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் | திருஞானசம்பந்தர் தேவாரம் | https://youtu.be/SnnqskkSIoI
—
🌷"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌷
2 days ago | [YT] | 37
View 2 replies
Shaivamum Thamizhum
07.022 திருப்பழமண்ணிப்படிக்கரை | முன்னவன் எங்கள் பிரான் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/mRnUxtV3ktE
—
3 days ago | [YT] | 34
View 2 replies
Shaivamum Thamizhum
🌷"நம்பி என்ற திருப்பதிகம் | திருமுதுகுன்றம்"🌷
—
சுந்தர சுவாமிகள் திருக்கூடலையாற்றூர் தொழுது திருமுதுகுன்ற அடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி "நஞ்சியிடை" என்னுந் திருப்பதிகம் பாடிப் பெருமானிடம் பொன் வேண்டும் குறிப்பினராய் பாடியருளியது இத்திருப்பதிகம். இப்பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர். இத்திருப்பதிகம் இறைவரைப் பலவாற்றால் ஏத்தி "நீரே எங்கட்கு எப்பிறப்பிலும் துணை" என்று குறையிரந்து அருளியது. இதன்கண் இறைவரை "நம்பி" என்னும் சிறந்த பெயரால் பலகாற் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத் தக்கது.
—
🌷"மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி
வேதம் நான்கும் விரித்து ஓதியொர் நம்பி
கையில் ஒர் வெண்மழு ஏந்தியொர் நம்பி
கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி
செய்ய நம்பி சிறு செஞ்சடை நம்பி
திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே."🌷
——(சுந்தரர் தேவாரம் : 07.063.01)
—
பொருளுரை : திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே, வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே, கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே, கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய, சிவந்த சடையை யுடைய நம்பியே, முப்புரங்களை, நெருப்பு எழுமாறு, வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.
—
பதிக குரலிசைக்கு : https://youtu.be/drg8iiuwz98
—
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள்செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசி விட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள்செய்தார்.
—
ஆலய முகவரி : அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில், விருத்தாசலம், விருத்தாசலம் அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 606 001.
—
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
—
🌷"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌷
3 days ago | [YT] | 48
View 2 replies
Shaivamum Thamizhum
07.021 திருக்கச்சிமேற்றளி | நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/yugD34ivAp0
—
4 days ago | [YT] | 36
View 1 reply
Shaivamum Thamizhum
07.090 தில்லை | மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/d3cANm_ivrc | @ShaivamumThamizhum
—
4 days ago | [YT] | 37
View 0 replies
Load more