Arasuraan kalaikkoodam

என்னுடைய 'அரசுரான் கலைக்கூடம்' YouTube சேனலை பார்த்தமைக்கு மிக்க நன்றி .

என் பெயர் செல்வகந்தான் , நான் ஒரு கலைஞன் .

நடிப்பு, தெருக்கூத்து , மேடை நாடகம் , நடனம் , தற்காப்பு கலை , கதை எழுதுதல் , கவிதை எழுதுதல் என்று என் மனம் விரும்பும் கலைகளை கற்று அதை பயிற்சி செய்வதிலும் , மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதிலும் பெரும் நாட்டம் கொண்டவன் .

எல்லாவற்றிற்கும் மேலாக , நான் ஒரு சமூக கோவம் கொண்ட நேர்மையான கலைஞனாக வாழவும் , அப்படியே இந்த சமூகம் கட்டமையவும் வேண்டுமாய் என்னால் முடிந்த எல்லா வகையான முன்னெடுப்புகளையும் செய்து கொண்டு இருக்கிறேன் . அதன் நீட்சி தான் இந்த YOUTUBE சேனல் .

நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், அப்படியே கடந்து போகாமல் சேனலை SUBSCRIBE செய்து , BELL பட்டனையும் அழுத்தி விடவும் .

என்னை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் artist.arasuran@gmail.com email அட்ட்ரஸ்க்கு மெயில் அனுப்புங்கள் , நிச்சயம் பதில் கூறுவேன் .

உங்கள் பேரன்பும் , பெரும் ஆதரவும் இருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன் .

#arasuraankalaikkoodam #actorselvakanthan


Arasuraan kalaikkoodam

நடிகர்கள் பலகீனமானவர்கள்

முடி நடிகர்களின் வாழ்க்கையோடு எப்படி எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நேற்று பார்த்தோம்.

இன்று கட்டுமஸ்தான உடல்.

நல்ல கட்டு மஸ்தான உடல் தோற்றம் அமையப் பெற்றவர்கள் இயல்பிலேயே தங்களை இயல்புக்கு மாறானவர்களாக, அசாதாரணமானவர்களாக எண்ணுவது என்பதை தவிர்க்க முடியாது.

இதில் உள்ள முரண் என்னவென்றால், பயந்த சுபாவம் உள்ளவர்களே தங்களை பலசாலிகளாக காட்ட முற்படுகிறார்கள் என்றுஉளவியல் சொல்கிறது.

சரி நம் தலைப்பிற்கு வருவோம்.

ஒன்று நல்ல உடல் தோற்றம் அமையப்பெற்றவர்கள் நாம் ஏன் நடிக்க கூடாது என்ற எண்ணத்தை பெறுகிறார்களா, அல்லது நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாக நல்ல உடல் தோற்றத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தை பெறுகிறார்களா என்பதை நம்மால் பிரித்தெரியவே முடியாது.

தலை மயிர், தாடியை போலவே.. கட்டு மஸ்தான உடல்தான் நடிகன் ஆவதற்கான தகுதி என்ற நம்பிக்கையும், ஆரம்பகால நடிகர்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

உடல் ஆரோக்கியம் என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் நடிகர்கள் தங்களை இயல்புக்கு மாறானவர்களாக இயல்பை மீறியவர்களாக கருதுவதாலோ என்னவோ தங்களுடைய உடல் தோற்றமும் அவ்வண்ணமே அமைய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் தலைப்பில் " நடிகர்கள் பலகீனமானவர்கள்" என்று குறிப்பிட்டதன் அர்த்தம்.. நடிகர்களோ அல்லது நடிகர்கள் என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர்களோ.. மனரீதியாக இயல்பிலேயே நிலைத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள்.

உண்மையை சொல்லப் போனால் நடிகர்களாக இருப்பதற்கு இந்த நிலையற்ற தன்மை மிக முக்கியமான ஒரு தகுதியாகவும், திறனாகவுமே இருந்து உதவுகிறது.

அதாவது சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமேயானால், தன்னைவிட நல்ல ஆடை அணிந்து இருப்பவரை பார்த்தால் அவரைப் போலவே நாம் ஆடை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக, தன்னைவிட நல்ல உடல்வாகு பெற்றவர்களை பார்த்தால் அவர்களைப் போல கட்டுமஸ்தான உடலை நாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக, தன்னைவிட நன்கு ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்தால் அவரை போல் நாமும் ஏன் ஆங்கிலம் பேசக்கூடாது என்று எண்ணுபவர்களாக, இப்படி தன்னைவிட சிறந்த எது ஒன்றையும் பார்த்து அதை அப்படியே பின்பற்றுபவர்களாக அல்லது பிரதி எடுப்பவர்களாகத் தான் பெரும்பான்மையான நடிகர்கள் இருக்கிறார்கள். அதுவே அவர்களின் மிக முக்கியமான திறனாகவும் தகுதியாகவும் அமைகிறது.
அதுவே அவர்கள் ஒரு கதாபாத்திரத்தில் இருந்து இன்னொரு கதாபாத்திரத்திற்கு கூடு விட்டு கூடு பாய்வதற்கான வித்தையை உத்தியை எளிதாக்கி கொடுக்கிறது.

எது ஒன்றிலும் பிடிவாதமாக இருந்து சமரசம் இன்றி பின்பற்றுபவர்களால், மிகத் தெளிவான உள்ளம் கொண்டவர்களால் நிச்சயமாக நல்ல நடிகர்களாக ஆக முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

அல்லது குறைந்தபட்சம் அவர்களால் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களாக பரிணமிக்க முடியாமல் போகலாம். அதற்கு நம் திரைத்துறையிலேயே பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

நம் முன்னோடி நடிகர்களும் சரி, நமக்கு முன் நடிகர்களாக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களும் சரி கட்டு மஸ்தான உடல்வாகு என்பது ஒரு மிக முக்கியமான தகுதி என்பதை கட்டமைத்ததாலோ என்னவோ.. நடிகர்களாக வேண்டுமென்று நினைப்பவர்கள் அத்தனை பேரும் இயல்புக்கு மீறிய உடல்வாகை பெற இயல்பாகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் இருப்பது போல், இந்த பிம்பங்களையும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களே உடைத்தெறிந்து இருக்கிறார்கள். அது வேறு விஷயம்.

அப்படி கட்டுமஸ்தான உடல் தான் நடிகன் ஆவதற்கான தகுதி என்று நம்பியவர்களில் நானும் ஒருவன்.. அதன் விளைவு தான் அதன் வெளிப்பாடு தான் அதன் முடிவுதான் நீங்கள் மேலே பார்க்கின்ற புகைப்படம்.

இன்னும் பகிர்வதற்கு எத்தனையோ இருக்கிறது படிப்பதற்கு தயாராக இருங்கள் நன்றி வணக்கம்.

பின்குறிப்பு: இந்தப் புகைப்படம் எடுத்தும் ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகின்றன.

#actors #bodybuilding #actorselvakanthan

5 months ago | [YT] | 1

Arasuraan kalaikkoodam

புண் | குறும்படம் | Pun | Shortfilm | Tamil | Releasing @arasuraankalaikkoodam #youtubechannel
#watch and #support #malarodumalaringu @mani_bala_m @mani_rajendran100 @highoctave_studio @highoctavestudioram @santhoshrammusicdirector
Santhosh Ram High Octave Studio குறும்படம் இயக்குநர்கள் /நடிகர்கள் சங்கம். Short Film Director's/Actors. குறும்படங்கள் Shortfilm Chamber Great Indian Short Film FestivaI - Gisffa Tamil Shortfilm Makers Tamil Short Films Free Short film promotion Short film chamber Short Film Factory SHORT FILM CLUB Short Film Making in Chennai அரசுரான் கலைக்கூடம் Ra2 Studioz Viji Bala

10 months ago | [YT] | 4

Arasuraan kalaikkoodam

புண் | குறும்படம் | Pun | Shortfilm | Tamil | Releasing @arasuraankalaikkoodam #youtubechannel
#watch and #support

10 months ago | [YT] | 3

Arasuraan kalaikkoodam

We are so happy and Excited to Release the #FirstLookPoster of Our promising #pilotfilm #Aaram on this #specialday.

I would like to thank our Director and comrade Mr. @jagatheesan Rajendran and My Firiend Sathya Srinivasan who was the key organizer to unite me with the Director and My Heartfelt thanks and Wishes for the whole Team of AARAM.

Please @followers Support and wish us for the great success ahead.

Thank you again 🥰🙏
Tamil Cinema Director's Club #actorselvakanthan #kollywoodcinema #kollywoodupdates #cinemalovers

1 year ago | [YT] | 4

Arasuraan kalaikkoodam

எங்க திரும்பினாலும் பிகாரி | Episode - 01 | #parattamani | #episode | #webseries #arasuraankalaikoodam #youtube #trending #drama #politicalsattire #actorselvakanthan @mani_bala_m @rashyamayan #releasingsoon

1 year ago | [YT] | 2

Arasuraan kalaikkoodam

கடவுள் - கவிதை
புதுக்கவிதை #கவிதை #தத்துவம் #god #philosophy #tamil #ActorSelvakanthan

2 years ago | [YT] | 3

Arasuraan kalaikkoodam

அழகு என்பது அகத்திலும் இல்லை முகத்திலும் இல்லை.. Lighting ல தான் இருக்கு.😂🤪

A random click.. #click #picture #portrait #selfie #ActorSelvakanthan

2 years ago | [YT] | 4