அன்பார்ந்த பார்வையாளர்களே..!
நமது KARUMPULI VIEWS சேனல் ஆனது...
என்னை ஈர்த்த பலதரப்பட்ட விடயங்களை எனது புரிதலின் அடிப்படையில் பார்வையாளர்களுக்கு விளக்கி பல வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களில்... பயண வீடியோக்கள், சினிமா விமர்சன வீடியோக்கள், நான் சார்ந்த தூத்துக்குடி நெல்லை பற்றிய பெருமித வீடியோக்கள், ஷார்ட்ஸ்...etc... என கலவையாகவே பதிவேற்றம் செய்துள்ளேன். எனது வீடியோக்களை அனைவருமே காணும் வகையில் தான் பதிவிட்டு வருகிறேன்.
இன்னும் இது தொடர... பார்வையாளர்கள் ஆகிய நீங்கள் நமது சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
நன்றி...!


KARUMPULI VIEWS

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார்?_என்று ஊர் சொல்ல வேண்டும்.

உம் போல புகழ் இனி யார்க்கும் வாய்க்குமா?

எங்களுக்காகவே துடித்த உமது இதயம் இனியாவது ஆழ்ந்த அமைதி கொள்ளட்டும்.

சென்று வாருங்கள் கேப்டன்🙏💐💔

கனத்த இதயத்துடன்... புகழ் வணக்கம்💔💔😰🙏😢😥

1 year ago | [YT] | 12

KARUMPULI VIEWS

17.12.2023 அன்று இரவு கனமழை பெய்த நிலையில் 20606 எண் கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ்(திருச்செந்தூர் to சென்னை)ரயிலை இரவு ரோந்து பணியின் போது பேரழிவு நிகழாமல் காப்பாற்றி ஶ்ரீவைகுண்டத்தில் தடுத்து நிறுத்தி ஏறத்தாழ 800 உயிர்களை காத்த...எங்கள் தென்னக ரெயில்வேயின் ஹீரோ திருமிகு."செல்வக்குமார்"(TM.IV@ TTQ)❤️❤️❤️❤️.
Royal Salute மக்கா 👏👏👏💐💐💐❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🤗🤗🤗🙏🙏🙏🙏

1 year ago | [YT] | 13

KARUMPULI VIEWS

எனக்கு நெனவு தெரிஞ்சி... 1997_ல நான் ஏழாம் வகுப்பு படிக்கச்சில...
பண்ணைவிளை தக்கர் பள்ளிக்கு அவர் உடற்கல்வி ஆசிரியரா வந்ததாக ஞாபகம்.
கருத்த தேகம், சொட்டைத் தலை, கன்னியாகுமரி பேச்சு வழக்கு... என்று அந்த வயதில் எனக்கு ஆளே வித்தியாசமாக தெரிந்தவர்.
அவர் உடற்கல்வி ஆசிரியர் தான்.
ஆனால்... உடற்கல்வி வகுப்புகளில் பெரும்பாலும் அவர் எங்களை அடித்ததாக நினைவே இல்லை.
அதற்கு பதிலாக... தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்புக்கும்... காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அட்டையை வழங்கிட வரும்போது...இவரைத்தான் கையோடு அழைத்து வருவார்😩😩.
தலைமை ஆசிரியர் ஒவ்வொரு பெயராக அழைத்து மதிப்பெண் அட்டையை வழங்கும்போது...
பாடவாரியாக தேர்ச்சி, தோல்விகளின் அடிப்படையில், அவரவர்களின் மதிப்பெண் தகுதிக்கு ஏற்றார் போல்...
உடற்கல்வி ஆசிரியரின் கையில் இருக்கும் பிரம்பு கம்பால் மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்🥵🥵.
அன்னாரின் கையில் இருக்கும் பிரம்பு குச்சியின் வலிமையை ஒவ்வொரு வருடமும் நான்கைந்து முறை நான் உணர்ந்திருக்கிறேன்.
ஏனெனில்... பள்ளியில் பயிலும் போது எனது கற்றல் திறன் அப்படிப்பட்டது😜😜.

தக்கர் பள்ளியில் நான் படித்த போது...
பத்தாம் வகுப்பு கணக்கு டீச்சருக்கு பிறகு...
நான் அதிகமாக பயந்து நடுங்கியது இவரது பிரம்படிக்குதான்.
அக்காலத்தில் கனவில் கூட வந்து மிரட்டும் வில்லன்கள் உண்டென்றால்...
என்னைப் பொறுத்தவரை அவர்கள்...
பத்தாம் வகுப்பு கணக்கு டீச்சரும், பி.டி.மாஸ்டர் ஃபிலிப் சாரும் தான்.
"எனக்கு பயப்படலை_ன்னாலும் என் பிரம்புக்கு பயந்துதான்டே ஆகணும்.
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுவானா?" என்று அவர் உதிர்த்த வசனங்களை கூட...
இரட்டை அர்த்த வசனங்களாக்கி எங்களுக்குள் நாங்கள் கலாய்த்து மகிழ்ந்த காலம் அது.
அவரது பணி ஓய்வுக்குப் பிறகு எதேச்சையாக ஒரு நாள் சந்திக்கையில்...எங்களது இந்த பள்ளிப் பருவ சில்லறைத்தனங்களை அவரிடம் சொன்ன போது...
"நீங்க அப்படியெல்லாம் பண்ணலைன்னா தான்டா ஆச்சரியம்... படுக்காளிப் பயலுவளா!"என்று அவருக்கே உரிய பேச்சு வழக்கில் நகைச்சுவையாக சொன்னபோது...
பள்ளிப் பருவத்தில் வாங்கிய பிரம்படிகளின் வலி நீர்த்துப்போனது.

தக்கர் பள்ளியில் பதினோராம் வகுப்பு பெயிலாகி...
அந்தப் பள்ளியிலிருந்து டி.சி வாங்கிக் கிட்டு கருங்குளம் அரசுப் பள்ளிக்கு சென்ற போது... நான் அதிகம் மகிழ்ந்தது... இவரிடமிருந்து "தப்பித்து விட்டோம்"என்கிற நினைவில் தான்.

சில காலம் கழித்து... சொந்த ஊரில் இவரை சந்திக்க நேர்ந்த போது..."அய்யய்யோ இவரா?"என்று தோன்றியது நிஜம்.
ஆனால்... அதற்குப் பிறகுதான் இவரது உண்மையான குணங்களை புரிந்து கொள்ள முடிந்தது.
அதுவரை பள்ளி காலத்தில் இவரிடம் கிடைத்த அனுபவங்களை மட்டுமே வைத்து இவரை எடை போட்டிருந்தேன்.
உண்மையில்....காலம் ஒருவருடன் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து மட்டுமே அவரை எடை போட வைக்கிறது.
நாமாக தெரிந்து கொள்ளாத வரை அவரது மறுபக்கங்களை நமக்கு உணர்த்துவதில்லை.
தன்னால் ஒருவருக்கு உதவ முடியும் என்றால்... அந்த உதவியை எவ்வித மறுப்பும் இன்றி தயங்காமல் செய்பவர்.
நான் மத்திய அரசு பணியில் சேர்ந்த பிறகு...
திடீரென ஒருநாள் எல்ஐசி முகவராக வந்து... "ஒரு பாலிசி போடு மக்கா!"என்று என் முன் நின்ற போது...
பள்ளிப் பருவத்துக்கு பிறகு மீண்டும் ஒருமுறை "வில்லனாக" தெரிந்தார்.
ஏனெனில்... எல்ஐசி முகவர்கள் நம்மைப்படுத்தும் பாடு அப்படி🥵🥵.
ஆனால்....
ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு... அவர் அப்ரோச் செய்த விதம் மிகவும் ஈர்த்ததால்...
அவருக்காகவே எனது வருமானத்துக்கு உட்பட்டு ஒரு எல்ஐசி பாலிசி எடுத்தேன்.
எனக்குத் தெரிந்து...
விடுமுறை நாட்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஊழியக்காரராக மாறி சொற்பொழிவாற்றுவார்.
ஆனால்...
வெளியில் நண்பர்களுடன் பழகும் போது ஒரு முறை கூட... ஊழியக்காரர் போலவோ... அவரது மதம் சார்ந்தோ... வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வந்ததில்லை.
அவரிடம் பயின்ற எந்த மாணவ மாணவியாவது அவர்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை வைத்தால்...
தவறாமல் கண்டிப்பாக கலந்து கொள்ளும் மாண்பாளர்.
மார்த்தாண்டத்துக்காரர் பண்ணைவிளையில் வீடு கட்டி குடியேறி... தூத்துக்குடிக்காரராகவே மாறிப்போனார்.
ஓய்வு பெற்ற நாள் முதல்... அக்கம் பக்கத்து ஊர்களுக்கு சைக்கிளிலேயே தான் பயணம்.
கொஞ்சம் தூரத்து ஊர் என்றால் பேருந்து பயணம்.
அப்படி ஆரோக்கியத்தை கட்டிக் காத்தவருக்கு "நெஞ்சுவலி" என்ற போது பக்கென்றுதான் இருந்தது.
"ஏன்? பி.டி.வாத்தியார்னா நெஞ்சுவலி வரக்கூடாதா என்ன?" என்று அதையும் நகைச்சுவையோடு எதிர்கொண்டவர்.
இன்று அவர் மரண செய்தியை அறிந்த மாணவ மாணவியர் அனேகமானோர் துக்க அனுசரிப்பாக...
வாட்ஸ் அப், பேஸ்புக், x வலைதளம் மற்றும் பல சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸாக வைத்து துக்க அனுசரிப்பு செய்ததை பார்க்கும்போது தான்...
பள்ளியில் படிக்கும் போது என் கண்களுக்கு கண்டிப்பான பி.டி வாத்தியாராக தெரிந்தவர்... எத்தனை பேருக்கு "மனிதனாக" தெரிந்திருக்கிறார்?_ என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஊரில் துக்க வீடுகளில் "கடவுளுக்கு கண் இல்லையா?" என்று பெண்கள் அழுது அரற்றுவதுண்டு.
கண் இருக்க போய் தான்... தனக்குப் பிரியமானவர்களை இனம் கண்டு இறைவன் மிக விரைவாகவே தன்னிடம் அழைத்துக் கொள்கிறான்.

பணிக்காலத்தில் கண்டிப்பான வாத்தியாராகவும்,
ஓய்வு காலத்தில் உற்ற தோழனாகவும் இருந்து எங்களை நல்வழிப்படுத்திய குருவானவர்...
இறைவனின் மடியில் இளைப்பாறட்டும்.
.
.
கனத்த இதயத்துடன்...
பிரிவால் துயருறும்...நாங்கள்🙏💔💔💔

1 year ago | [YT] | 2

KARUMPULI VIEWS

பத்து தல திரை விமர்சனம்👇

https://youtu.be/rSTiJIh1zw0

வீடியோ புடிச்சா ஒரு லைக் செய்து நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி மக்களே 🙏💐❤️

2 years ago | [YT] | 6

KARUMPULI VIEWS

செங்களம்/வெப் சீரிஸ் விமர்சனம்👇

https://youtu.be/t5ZSElQMKGc

#எஸ்ஆர்பிரபாகரன்
#கலையரசன்
#வாணிபோஜன்
#ஷாலிநிவேகாஸ்

வீடியோ புடிச்சா... ஒரு லைக் கமெண்ட் ஷேர் பண்ணுங்க மக்களே 🙏💐❤️

2 years ago | [YT] | 3

KARUMPULI VIEWS

குடிமகான் திரை விமர்சனம் 👇

https://youtu.be/P6oF4vacqn4

#kudimahaan
#PrakashN
#vijaysivan
#chandini

Please...like comment share & support 🙏💐❤️😇

2 years ago | [YT] | 0

KARUMPULI VIEWS

கண்ணை நம்பாதே திரைவிமர்சனம் 👇

https://youtu.be/9SchnQYKxEo

Please... Like Comment Share & Support 🙏💐❤️

#kannainambathey
#udhayanidhistalin
#aathmika
#prasanna

2 years ago | [YT] | 2

KARUMPULI VIEWS

கப்ஜா திரை விமர்சனம் 👇

https://youtu.be/CY73xK9KqSA

Please...like... Comment... Share 🙏💐❤️🥰

#Kabzaa
#upendra
#Sudeep

2 years ago | [YT] | 5

KARUMPULI VIEWS

கொன்றால் பாவம் விமர்சனம் 👇

https://youtu.be/esD58SM8EbU

#kondraalpaavamreview
#varalaxmisarathkumar
#santhoshprathab
#dayalpadmanabhan
#samcs

வீடியோ புடிச்சா ஒரு like பண்ணி share பண்ணுங்க...🙏💐❤️😇

2 years ago | [YT] | 3