எந்தை ஈசன்

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.

“Saivam is Eternal • Siva is Supreme”

எந்தை ஈசன் | Enthai Eesan

📿
திருமுறை ஒளி ✨ | Thirumurai Hymns ✨
நாயன்மார்கள் பாதை 📿 | Nayanmargal Devotion 📿
கோவில் தலவரலாறு | Temple History
சைவ சித்தாந்தம் 🌿 | Saiva Siddhantam 🌿

🙏
அவன் அருள்களே, அவன் தாள் வணங்கி | By His Grace, Bowing at His Sacred Feet


எந்தை ஈசன்

நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு மகா அபிஷேகங்கள்.


05.10.2025 - புராட்டாசி பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.


திருச்சிற்றம்பலம்


பொதுவாகக் கோயில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதிகாலை, 6:00 மணிக்கு, திருவனந்தல், 8:00 மணிக்கு, காலசந்தி, பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் மாலை, 6:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 8:00 மணிக்கு இரண்டாம் காலம், 9.00 மணிக்கு அர்த்தஜாமம் என்று ஆறு கால பூஜை நடைபெறும்.


தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு இரவு பகல் ஆகும். தேவராஜனான நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், ஆறு கால பூஜையாக நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள்.அதாவது, 


அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுது, மாசி மாதம் ஆகும். மதியம் – சித்திரை திருவோணம் அன்று. மாலைப்பொழுது – ஆனி ஆகும். இரவு நேரம் – ஆவணி மற்றும் அர்த்தஜாமம் – புரட்டாசி என்பது போன்றதாகும். அதன் பொருட்டே நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்.


1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம்.

2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.

3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.

5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.

6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்.


கூத்தப் பெருமானை தரிசிக்க முத்தி.

ஐந்தொழில் செய்து ஆடும் பெருமானின் அபிஷேகங்களைக் கண்டுமகிழ்தல் பெரும் பேறு தரும்.


திருச்சிற்றம்பலம்.


எந்தை ஈசன் | enthai eesan

#சிதம்பரம் #நடராஜர் #தில்லை #நடராஜர்கோவில் #நடராஜர்அபிஷேகம் #சிவசிதம்பரம் #நமசிவாய #திருமுறை
#Natarajar #chidambaram #thillai #natarajartemple

1 week ago (edited) | [YT] | 203

எந்தை ஈசன்

பஞ்ச பூத தலங்களும் அதன் சிறப்புகளும்

1. நிலத்தை (பூமி) குறிக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

இதில் பூமியை குறிக்கும் கோவிலாக இருப்பது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலிலுள்ள லிங்கத்தை "ப்ருத்வி லிங்கம்" என குறிப்பிடுகின்றனர். இக்கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவருக்கு "ஏகாம்பரேஸ்வரர்" என்பது திருப்பெயர்.

2.நீரை குறிக்கும் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்

திருச்சி அருகே திருவானைக்காவலில் (திருவானைக்கா) அமைந்துள்ளது ஜம்புகேஸ்வரர் கோவில். இக்கோவில் பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கும் அம்சமாக திகழ்கிறது. இங்கிருக்கும் மூலவருக்கு ஜம்புகேஸ்வரர் என்றும், திருவானைக்கா உடையார் என்பதும் திருப்பெயராகும். இங்கிருக்கும் லிங்கத்தை "அப்பு லிங்கம்" அல்லது "ஜம்பு லிங்கம்"

3. நெருப்பை குறிக்கும் திருவண்ணாமலை திருக்கோவில்

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பஞ்ச பூதங்களில் நெருப்பு அம்சத்தை குறிப்பதாகும். இங்கிருக்கும் லிங்கத்தை அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் என குறிப்பிடுகின்றனர். இங்கிருக்கும் மூலவருக்கு அண்ணாமலையார் அல்லது அருணாச்சலேஸ்வரர் என்பது திருப்பெயராகும்.

4. காற்றை குறிக்கும் காளத்தீஸ்வரர் கோவில்

தென்னிந்திய சிவாலயங்கள் வரிசையில் மிகவும் முக்கியமான தலமாக விளங்குவது ஆந்திராவின் திருக்காளத்தியில் (ஶ்ரீ காளஹஸ்தி) அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோவில். இந்த திருத்தலம் பஞ்சபூதங்களில் வாயுவை குறிப்பதாகும். கண்ணப்ப நாயனார் திருத்தொண்டாற்றி சிவனின் அருள் தரிசனமும் அருளும் கிடைக்கப்பெற்ற தலம் இது.

5. ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில்

பஞ்சபூதங்களில் ஆகாயத்தை குறிக்கும் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும். சமய குரவர் நால்வரும் தேவாரம் பாடிய புண்ணிய தலமிது. இக்கோவிலை சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் என்று அழைப்பது வழக்கம். இங்கிருக்கும் லிங்கத்தை "இந்திர லிங்கம் அல்லது ஆகாச லிங்கம்" என குறிப்பிடுகின்றனர். இக்கோவிலில் நடராஜர் வீற்றிருக்கும் திருச்சபை பொன்னம்பலம் என்றும் கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது.

#எந்தைஈசன் #பஞ்சபூததலம் #ஓம்நமசிவாய #shivan #enthaieesan
#pachaboothamstalam #tamildevotionalstatus #tamil #shivanstatustamil

2 weeks ago | [YT] | 361