TPM ARAISE AND SHINE

Praise the lord..
WELCOME YOU TO THIS CHANNEL IN THE SWEET NAME OF JESUS ​​CHRIST..


TPM ARAISE AND SHINE

*MORNING MANNA TAMIL*

2025 NOVEMBER 15

*தேவனுடைய மனதை அறிந்துகொள்ளுவது எப்படி?*

*"தேவன்‌ தம்மில்‌ அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக்‌ கண்‌ காணவுமில்லை, காது கேட்கவில்லை, அவைகள்‌ மனுஷனுடைய இருதயத்தில்‌ தோன்றவுமில்லை" (1 கொரி 2:9)*

தேவன்‌ நமக்காக எவ்வளவு மகிமையானதும்‌, கிருபை நிறைந்ததுமான திட்டத்தை வைத்திருக்கிறார்‌! அவர்‌ நமக்காக எதைத்‌ திட்டம்பண்ணி வைத்திருக்கிறார்‌ என்பதை நம்மால்‌ அறிந்துகொள்ளக்கூடுமா? என்பதே இப்பொழுது மிக முக்கியமான கேள்வியாகும்‌. ஆம்‌, அது நம்மால்‌ கூடும்‌. ஏனெனில்‌, *"நமக்கோ தேவன்‌ அவைகளைத்‌ தமது ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கிறார்‌' (1 கொரி 2:10 Eng)* என்று அடுத்த வசனம்‌ கூறுகிறது. தேவபிள்ளைகள்‌ சிலர்‌ தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளத்‌ தவறி, பிசாசினுடைய திட்டத்துக்கு அல்லது தங்களுடைய சொந்தத்‌ திட்டங்களுக்குத்‌ தங்களை ஒப்புக்கொடுத்து தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்‌.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொண்டு, அவருடைய திட்டத்திலேயே நடக்க நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌? நாம்‌ பிறந்தபொழுது, நம்முடைய மனது களங்கமற்றதாயிருந்தது, இருப்பினும்‌, தீய எண்ணங்கள்‌ நம்முடைய மனதைக்‌ கெடுத்துத்‌ தீட்டுப்படுத்த நாம்‌ அவற்றிற்கு அனுமதியளித்தோம்‌. ஒவ்வொரு தீய எண்ணமும்‌ நம்முடைய தூய மனதைக்‌ கறைப்படுத்தும்‌ ஒரு கரும்புள்ளியைப்‌ போன்றது. நாம்‌ நம்முடைய மனதை அவ்விதமாகத்‌ தொடர்ந்து தீட்டுப்படுத்திக்கொண்டேயிருக்கும்போது, கரும்புள்ளிகள்‌ அதிகரித்து, மனதை முழுமையாகக்‌ கெடுத்துவிடுகின்றன. தேவனுடைய திட்டங்கள்‌ மகிமையானவையாக இருந்தாலும்‌, நம்முடைய மனது களங்கமற்றதாகவும்‌, கறைப்படாததாகவும்‌ இருந்தால்‌ மட்டுமே நம்மால்‌ அவைகளை அறிந்துகொள்ளக்‌கூடும்‌.

அன்பான தேவபிள்ளையே, உன்னுடைய ஜீவியத்தில்‌ தேவனுடைய திட்டம்‌ நிறைவேற்றப்பட வேண்டும்‌ என்று நீ விரும்புவது மெய்யே. ஆனால்‌ நீ தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள உனக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு - *ஆட்டுகுட்டியானவரின்‌ இரத்தத்தினாலும்‌ பரிசுத்த ஆவியின்‌ வல்லமையினாலும்‌ ஒவ்வொரு தீய எண்ணத்தையும்‌ நீ மேற்க்கொள்ளுவாயாக.* தேவன்‌ உனக்காக வகுத்திருக்கும்‌ திட்டத்தை அவர்‌ உன்னுடைய மனதில்‌ எழுதும்படியாகவும்‌, அவருடைய அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கா கிருபையை நீ கண்டடையும்‌படியாகவும்‌, *உன்‌ மனது சுத்தமாகவும்‌ தூய்மையாகவும்‌ இருப்பதாக. அப்பொழுது உன்னுடைய கிறிஸ்தவ ஜீவியமானது, 'சொல்லிமுடியாததும்‌ மகிமையால்‌ நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளதாக' இருக்கும்‌.*

1 month ago | [YT] | 47

TPM ARAISE AND SHINE

கர்த்தர் எனக்காக _________செய்துமுடிப்பார்.

1 month ago | [YT] | 171

TPM ARAISE AND SHINE

*MORNING MANNA TAMIL*

2025 NOVEMBER 07

*பெரிய விசுவாசம்‌*

*"உனக்கும்‌ அவைகளுக்கும்‌ ஆகாரமாகச்‌ சகலவித போஜனபதார்த்தங்ளையும்‌ சேர்த்து, உன்னிடத்தில்‌ வைத்துக்கொள்‌. (ஆதி. 6:21)*

முழு உலகத்தையும்‌ குறித்த பாரத்தை - ஒவ்வொரு ஜீவராசியும்‌ பாதுகாக்கப்பட வேண்டுமென்ற பாரத்தை - தேவன்‌ நோவாவில்‌ வைத்தார்‌. ஆத்துமாக்கள்‌ இரட்சிக்கப்படவும்‌ புதிய எருசலேமுக்கும்‌ சீயோனுக்கும்‌ ஆயத்தமாக்கப்பட வேண்டும்‌ என்ற ஒரு பாரம்‌ நம்மில்‌ இருக்க வேண்டும்‌. எல்லா ஜீவஜந்துக்களுக்கு நோவா ஆகாரம்‌ கொடுக்க வேண்டியதாயிருந்தது. அழிந்துபோகிற ஆத்துமாக்களுடைய இரட்சிப்பைக்‌ குறித்த பாரமுடையவர்களுக்கு கர்த்தர்‌ ஆவிக்குரிய ஆகாரத்தை அல்லது வெளிப்படுத்தல்களை கொடுக்கிறார்‌.

*"உனக்கும்‌ அவைகளுக்கும்‌ அது ஆகாரமாக இருக்கும்‌." - நீ ஆவிக்குரிய ஆகாரத்தைப்‌ புசிக்கும்போது, நீ மற்றவர்களையும்‌ போஷிக்க வேண்டியவனாயிருக்கிறாய்‌ என்பதை மறந்துவிடாதே. அதே சமயத்தில்‌ மற்றவர்களுக்காக நீ ஆவிக்குரிய ஆகாரத்தைச்‌ சேகரிக்கும்‌போது, அது உனக்கும்‌ அவசியம்‌ என்பதையும்‌ மறந்துவிடாதே.*

*"நோவா அப்படியே செய்தான்‌"* - நோவாவுக்கு எவ்வளவு பணமும்‌, பொருட்களும்‌, மற்றும்‌ பல ஏதுக்களும்‌ தேவைப்பட்டிருக்கும்‌! ஆபிரகாமைப்‌ போலவோ அல்லது யோபைப்‌ போலவோ அவன்‌ மிகுந்த ஐசுவரியமுள்ளவனாயிருந்ததாக நாம்‌ வேதத்தில் எங்கும் வாசிப்பதில்லை. ஆயினும்‌ அவ்வேலை செய்வதற்கான பாரத்தைத்‌ தேவன்‌ அவனுக்குக்‌ கொடுத்தபோது, அவர்‌ அவனுடைய தேவைகளையும்‌ சந்தித்தார்‌. பேழையைக்‌ கட்டுவதற்குத்‌ தேவையானவற்றை மட்டுமல்லாமல்‌, ஒவ்வொருவருக்கும்‌ தேவையான ஆகாரத்துக்கும்‌ அவசியமானவற்றையெல்லாம்‌ அவர்‌ அவனுக்கு அளித்தார்‌. இந்த விஷயத்தில்‌ விசுவாசத்தினால்‌ ஜீவித்த முதல்‌ மனிதன்‌ நோவா ஆவான்‌.

நம்முடைய ஆவிக்குரிய தேவைகளுக்கு மட்டுமல்லாமல்‌, பொருள்‌ சம்பந்தமான, சரீரப்பிரகாரமான தேவைகள்‌ அனைத்திற்கும் கூட நாம்‌ விசுவாசம்‌ உள்ளவர்களாயிருக்க வேண்டும்‌ என்று தேவன்‌ விரும்புகிறார்‌. நம்முடைய சொந்த ஆவிக்குரிய தேவைகளுக்காகவும்‌, மற்றவர்களுடைய தேவைகளுக்காகவும் கூட நம்மில்‌ விசுவாசம்‌ இருக்க வேண்டும்‌ என்று அவர்‌ விரும்புகிறார்‌. *"விசுவாசமில்லாமல்‌ தேவனுக்குப்‌ பிரியமாயிருப்பது கூடாதகாரியம்‌". (எபி. 11:6)*

2 months ago | [YT] | 26

TPM ARAISE AND SHINE

*MORNING MANNA TAMIL*

2025 OCTOBER 22

*அதைரியத்திற்கு எதிர்த்து நில்லுங்கள்‌*

*"ஆகையால்‌ நீங்கள்‌ இளைப்புள்ளவர்களாய் உங்கள்‌ ஆத்துமாக்களில்‌ சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப்‌ பாவிகளால்‌ செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச்‌ சகித்த அவரையே நினைத்துக்‌ கொள்ளுங்கள்‌". (எபி. 12 : 3)*

அதைரியத்தை மேற்கொள்ளும்படி, அது எவ்விதம்‌ வருகிறது என்பதை நாம்‌ முதலாவது அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்‌. தேவனையும்‌ அவருடைய வார்த்தையையும்‌ நோக்கிப்‌ பார்ப்பதற்குப்‌ பதிலாக, நம்முடைய சுற்றுச்சூழலையும்‌, நாம்‌ வைக்கப்பட்டுள்ள சூழ்‌நிலைகளையும்‌ பார்க்கும்போது நமக்கு அதைரியம்‌ உண்டாகிறது. அப்போது நம்‌ கண்கள்‌ நம்முடைய பிரச்சனைகளின்‌ மேல்‌ வைக்கப்பட்டிருக்கின்றனவேயன்றி, அவைகளைப்‌ பரிகரிப்பவரின்‌ மேல்‌ பதிக்கப்பட்டிருப்பதில்லை. ஆகவே, அதைரியத்தை மேற்கொள்ளும்படி நாம்‌ நம்முடைய கண்களைப்‌ பிரச்சனைகளின்‌ மேலிருந்து எடுத்து, கர்த்தர்‌மேல்‌ அவைகளைப்‌ பதிக்க வேண்டும்‌. ஆகவே தான்‌ எபிரெயர்‌ 12 : 1 - இல்‌ *"இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில்‌ பொறுமையோடே ஓடக்கடவோம்‌"* என்று நாம்‌ வாசிக்கிறோம்‌. *"இவ்விதமான்‌ விபரீதங்களைச்‌ சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்‌"* என்று 3 -ஆம்‌ வசனம்‌ கூறுகிறது. 'கர்த்தராகிய இயேசுவை நோக்கி' என்பது, அவர்‌ நமக்கு அளித்திருக்கும்‌ வாக்குத்தத்தங்களை நோக்கிப்‌ பார்ப்பதாகும்‌. *"நம்முடைய தேவன்‌ சகலவிதமான ஆறுதலின்‌ தேவன்‌* என்று 2 கொரிந்தியர்‌ 1 : 3 கூறுகிறது. *மூல பாஷையில்‌ இது, 'சகலவித திடமளித்தலின்‌ தேவன்‌' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*

சிக்லாகில்‌ சகலமும்‌ தாவீதுக்கும்‌ அவனோடிருந்தவர்களுக்கும்‌ விரோதமாகச்‌ சம்பவித்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய வீடுகளெல்லாம்‌ சுட்டெரிக்கப்பட்டு, ஸ்திரீகளும்‌, பிள்ளைகளும்‌ சிறைபிடிக்கப்பட்டு, ஜனங்களெல்லாரும்‌ மிகவும்‌ நெருக்கப்பட்டபோது - தாவீது கர்த்தருக்குள்ளே தன்னைத்‌ திடப்படுத்திக்கொண்டான்‌. அவன்‌, இருண்ட பாதையினூடாகக்‌ கடந்து செல்லும்‌ ஒரு சந்தர்ப்பத்தில்‌, தன்னுடைய துன்பத்தை அறிக்கையிடுவதற்குப்‌ பதிலாக *"கர்த்தர்‌ என்‌ வெளிச்சமும்‌ என்‌ இரட்சிப்புமானவர்‌, யாருக்குப்‌ பயப்படுவேன்‌?"* என்று கூறுகிறான்‌.

அருமையான தேவப்பிள்ளையே, நீ ஒருவேளை வியாதியினூடாகக்‌ கடந்து சென்றுகொண்டிருக்கக்‌ கூடும்‌. வியாதியின்‌ அறிகுறிகளையும்‌ உன்னுடைய பெலவீனத்தையும்‌, வேதனையையும்‌ பற்றிப்‌ பேசுவதற்குப்‌ பதிலாக, *'அவருடைய தழும்புகளால்‌ நான்‌ குணமானேன்‌'* என்று அறிக்கையிடுவாயாக. உன்னுடைய வறுமையில்‌, *'என்‌ தேவன்‌ என்‌ குறைவையெல்லாம்‌ நிறைவாக்குவார்‌'* என்று அறிக்கையிடுவாயாக. உனக்கு உதவி செய்ய உன்‌ அருகில்‌ ஒருவரும்‌ இல்லாத சந்தர்ப்பங்களில்‌, *'தேவன்‌ எனக்கு அடைக்கலமும்‌ பெலனும்‌, ஆபத்துக்காலத்தில்‌ அனுகூலமான துணையுமானவர்‌'* என்று முழங்குவாயாக. உன்‌ வாழ்வில்‌ துயர சம்பவங்கள்‌ நிகழும்போது, *'தேவன்‌ என்‌ ஆனந்த மகிழ்ச்சி'* என்று கூறுவாயாக. நீ பெலவீனமாயிருக்கும்போது, *'கர்த்தர்‌ என்‌ பெலன்‌'* என்று சொல்லுவாயாக. நீ பசியாயிருக்கும்போது *'இயேசு என்‌ ஜீவ அப்பம்‌'* என்று சொல்லுவாயாக. நீ தாகமாயிருக்கும்போது, *'அவர்‌ எனக்கு ஜீவத்தண்ணீருள்ள நீரூற்று'* என்று கூறுவாயாக. சகலமும்‌ இருளாகவும்‌, மந்தாரமாகவும்‌ இருக்கும்போது, *'அவர்‌ என்‌ வெளிச்சம்‌'* என்றும்‌, குழப்பத்தின்‌ மத்தியில்‌, *'அவர்‌ என்‌ சமாதானம்‌'* என்றும்‌, நீ எல்லாவற்றையும்‌ இழந்துவிட்டதுபோல்‌ உனக்குத்‌ தோன்றுகையில்‌, *'அவர்‌ எனக்கு எல்லாவற்றுக்கும்‌ எல்லாமானவர்‌'* என்றும்‌ கூறுவாயாக. *அப்பொழுது நீ திடப்படுத்தப்படுவதோடல்லாமல்‌, மற்றவர்களையுங்கூட தைரியப்படுத்தக்‌ கூடியவனாயிருப்பாய்‌.

2 months ago | [YT] | 27

TPM ARAISE AND SHINE

காரணமில்லாமல் இட்ட __________ தங்காது.

3 months ago | [YT] | 345

TPM ARAISE AND SHINE

கர்த்தாவே,நீர் நீதிமானை ஆசீர்வதித்து,__________என்னுங்கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.

3 months ago | [YT] | 335

TPM ARAISE AND SHINE

சர்வலோக____________நீதிசெய்யாதிருப்பாரோ? என்றான்.

3 months ago | [YT] | 299

TPM ARAISE AND SHINE

யாருடைய வாய் ஜீவ ஊற்று

3 months ago | [YT] | 308

TPM ARAISE AND SHINE

வருஷத்தை உம்முடைய __________முடிசூட்டுகிறீர்.

4 months ago | [YT] | 424

TPM ARAISE AND SHINE

பொய் பேச்சை வெறுக்கிறவன் யார்?

4 months ago | [YT] | 288