Hello Everyone,Hearty Welcome to Mekan recipes
This Channel is Mainly intended to Share all about the delicious and Tasty recipes which can be made easily using the available ingredients and with simple Method. Subscribe and Follow us.
YouTube : youtube.com/c/MekanRecipes
Facebook group : www.facebook.com/saimekala.kitchen
Instagram page :www.instagram.com/mekalasa/
Twitter : SkitchenMek
For Business enquiries Mail id : saimekalaskitchen@gmail.com
Copyright Disclaimer: Under Section 107 Disclaimer: Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned." All rights reserved to the respective copyright owners."
Music courtesy :www.Bensound.com, www.noncopyrightmusic.com,www.beatbysahid.com www.youtubemusic.com
 incompetech.com/music/royalty-free/index.html?isrc…
Artist: incompetech.com/



Mekan Recipes

2 years ago | [YT] | 1

Mekan Recipes

🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏

🔥#திருப்பதியில் வீற்றிருக்கும்
பஞ்ச ஸ்ரீவேங்கடவன்.
#திருப்பதி_திருமலையில்,

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🍎1.த்ருவ ஸ்ரீநிவாசர்,

🍎2. போக ஸ்ரீநிவாசர்,

🍎3. கொலுவு ஸ்ரீநிவாசர்,

🍎4. உக்ர ஸ்ரீ நிவாசர்,

🍎5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

🌿 1. *த்ருவ_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~
🌹இவர்தான் மூலவர்.
ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர்.
சாளக்ராமத்தால் ஆனவர்.
இவரை ஸ்தானக மூர்த்தி,
த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர்.
சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன்.
இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

🌹 2. *போக_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~~~
🍒இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர்.

🍒 கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது.

புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு
ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

🌹3. #*கொலுவு_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~~~~~
🔥கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள்.

🔥 தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார்.

🔥 இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌹 4. #*உக்ர_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~
🦐 இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு.

🦐இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர்.

🦐இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார்.

🦐ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர்.

🦐உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅


🌹 5*உற்சவ_ஸ்ரீநிவாசர்_எனும்_
மலையப்ப #சுவாமி* :
~~~~~~~~~~~~~~~~~~~
🍎இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு.

🍎நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

🍎சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு.

🍎 திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.

🙏 ஸ்ரீவேங்கடவன் அருள்பாலிக்கும் திருமலையின் அதிசியங்களைத் தெரிந்துக் கொள்ள இந்த ஜன்மம் போதுமோ !

ஸ்ரீமத் ஆச்சார்யன் திருவடிகளேச் சரணம்.

ஓம் நமோ பகவதே
ஸ்ரீ வாசுதேவாய நம:


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

2 years ago | [YT] | 2

Mekan Recipes

*மகிழ்ச்சி.*

ஒவ்வொருவருக்கும் எப்போதும் வேண்டுவது.
சின்ன சின்ன விஷயங்களிலும் எளிதாக கிடைப்பது.
ஆனால் அது புரியாமல் பெரிய அளவில் தேடுவது மகிழ்ச்சி அல்ல. அது எதிர்பார்ப்பு.

நாம் அறியாமல், நம்மை கேட்காமலேயே, நமக்கு பிடித்தமானதை நமக்காக செய்யும் அன்பு மனம் கொண்டவர்களின் செயல்களில் மகிழ்ச்சி நமக்கு இரட்டிப்பாகும்.

எதையும் விரும்பாததும், பிரதிபலன் எதிர் பார்க்காததும், அன்பால் அடுத்தவர்களுக்கு கொடுக்க விரும்பவதுமே உண்மையான மகிழ்ச்சி.

பகிர்தல் எங்கே தொடங்குகிறதோ, அங்கே ஆசைகள் முடிவடைந்து மகிழ்ச்சி சரியாக பிரவேசிக்கும் தருணமாகும்.

நினைவுதள் என்பது மகிழ்ச்சியைக் குறிப்பதல்ல.

அது ஏக்கம், இனம் புரியாத சுகம்.

கோபமும்/சோகமும்/பொறாமையும் திருப்தியற்ற மனமும் மகிழ்ச்சியின் எதிரிகள்.

மற்ற நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து அந்த நொடியில் நடைபெறுவதை மட்டுமே உணர்வது மகிழ்ச்சியாகும்.

இதை தக்கவைத்துக் கொள்ள முடியாது.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் புதிது புதிதாக நீர்க்குமிழியாக தோன்றி,
உணர்ந்து
உற்பத்தியாகி பிறப்பது ஆகும்.

தானமாக அளிக்கும் உணவோ, உடையோ, பொருளோ, அது மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயலைக் குறிப்பதால், எந்த தானத்திலும் பிறப்பது மிகச் சிறப்பான மகிழ்ச்சியாகும்.

பெறுபவருக்கும், அளிப்பவர்க்குமே அது நிறைவின் வெளிப்பாடாக அமையும் மகிழ்ச்சி.

நம்மால் இயன்றவரை, நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்கள் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம்.

நன்றி🙏
🙌💕🤝👍🏼

2 years ago | [YT] | 0

Mekan Recipes

உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

"படிச்சதில் பிடிச்சது "

யார் உலகில் மிகவும்
மகிழ்ச்சியா இருக்கிறாங்கன்னு ஒரு சிறிய கதை மூலம் தெரிந்து கொள்வோமா?

ஒரு ஊர்ல ஒரு காக்கா
இருந்துச்சாம் .

அது ரொம்ப
மகிழ்ச்சியா இருந்துச்சு,
ஒரு கொக்கை பார்க்கும்
வரை.

அது கொக்கை பார்த்து
சொல்லிச்சாம். நீ
வெள்ளைய எவ்வளவு
அழகா இருக்கே ..கருப்பா
இருக்கும் என்னை எனக்கு
பிடிக்கலை என்றது.

கொக்கு சொன்னது.
நானும் அப்படிதான்
நினைத்தேன் , கிளியை
பார்க்கும் வரை. அது
இரண்டு நிறங்களில்
எவ்வள்வு அழகா இருக்கு
தெரியுமா ? என்றது.

காகமும் கிளியிடம்
சென்று,கொக்கு சொன்னதை கேட்டவுடன் கிளி
சொன்னது. உண்மைதான்
நான் மகிழ்ச்சியாத்தான்
இருந்தேன் ,ஆனால் ஒரு
மயிலை பார்க்கும் வரை.
அது பல நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு
தெரியுமா ? என்றது.

உடனே காகமும் மயில்
இருக்கும் ஒரு மிருக
காட்சி சாலை சென்று
மயிலை பார்க்க , அங்கு
ஆயிரக்கணக்கான
ஜனங்கள் மயிலை பார்க்க
காத்திருக்க , காகம்
நினைத்தது
..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி
என்று.

அழகு மயிலே , உன்னை
காண இவ்வளவு பேர் ..
என்னை பார்த்தாலே
இவர்கள் முகத்தை
திருப்பிகொள்கிறார்கள்.
என்னை
பொறுத்தவரை
உலகிலேயே நீதான்
அதிக மகிழ்ச்சியானவர்
என்றது.

மயில் சொன்னது. அன்பு
காகமே , நான் எப்பவும்
நினைத்து
கொண்டிருந்தேன் நான்
தான் அழகு மேலும்
மகிழ்ச்சியான பறவை
என்று.

ஆனால் எனது இந்த
அழகு தான் என்னை ஒரு
சிறையில் பூட்டி
வைத்திருக்க செய்கிறது.

இந்த மிருக காட்சி சாலை
முழுதும் நான் பார்த்ததில் ,
காகம் மட்டுமே பூட்டி
வைக்கப்படவில்லை .

எனவே நான் யோசித்தது ,
நானும் காகமாக
இருந்தால், உலகம் முழுதும்
ஜாலியாக சுற்றி
வரலாமே ..என்றது.

நண்பர்களே , இதுதான்
நமது பிரச்சினையும் .

நாம் தேவை இல்லாமல்
நம்மை மற்றவர்களுடன்
ஒப்பிட்டு நம்மை நாமே
கவலை கொள்ள
செய்கிறோம்.

நாம் எப்பவும் கடவுள்
கொடுப்பதை வைத்து
சந்தோசம் கொள்வது
இல்லை.

அவர்கொடுத்ததை மதிப்பதும்
இல்லை.இது நம்மை ஒரு பெரும்
துயருக்கு இழுத்து
செல்கிறது.

ஒப்பீடுகளால் யாதொரு
பயனும் இல்லை.

உன்னை முதலில் நேசிக்க
கற்றுக்கொள்.

உன்னை விட யாரும் உன்னை
நேசிக்க முடியாது.

மகிழ்ச்சி என்பது நமக்குள்தான் இருக்கிறது. அதை வெளியே தேடி அலைய வேண்டியதில்லை.

2 years ago | [YT] | 0

Mekan Recipes

🌞🍀☸️தர்ம சாஸ்திரம் ☸️🍀🌞


1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிய கூடாது ஏக வஸ்திரம் கார்ய தாமதம். வேட்டி துண்டு இரண்டையும் ஒரு சேர அணிய வேண்டும்.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.



🪷🍀 *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்* 🍀🪷

2 years ago | [YT] | 1

Mekan Recipes

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!

மருத்துவம், வாழ்க்கைமுறை

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது?

அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா?

ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இதையும் படிங்க: நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க…

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…

உண்மை #1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும்.

இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை #2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள்.

மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை #3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ள இயலும்

உண்மை #4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உண்மை #5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீலம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

உண்மை #6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை #7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

உண்மை #8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை #9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை #10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

உண்மை #11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

உண்மை #12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

உண்மை #14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

உண்மை #15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

2 years ago | [YT] | 0

Mekan Recipes

பால. ரமேஷ்.



*தினம் ஒரு குட்டிக்கதை* .

கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத் தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும்...

ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான் என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள்.

அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார்.

அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பிரின்சிபால்,
ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு.

இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

#கணவனை_அதிகம்_நேசியுங்கள்...
அ"ன்பானவன் எதற்கும்,
ஆ"சைப் படாதவன், துன்பத்திலும்
இ"ன்பம் தருபவன், மனதில்
ஈ" கோ இல்லாதவன் எப்போதும்,
உ"ண்மையானவன் என்றும்,
ஊ" ரில் வாழ்ந்தாலும்
எ" ப்போதும் யாரையும்
ஏ" மாற்றத் தெரியாதவன்,
ஐ" ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ" வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ" டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ" வையார் போல் தன்னுடைய ஆசைகளைத் துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்...

*எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி* *வரையிலும் உங்கள் கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்...*

*இது இருபாலருக்கும் பொதுவானதே!*

2 years ago | [YT] | 0