Kailasapathi (கைலாசபதி)

வேண்டேன் பிறப்பு இறப்புச் சிவம் வேண்டாா் தமை நாளும்...


Kailasapathi (கைலாசபதி)

மூன்று தனம் கொண்ட தடாதகைப் பிராட்டி யார் தெரியுமா?
மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியனும், மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு
வேண்டி ‘புத்திரகாமேஷ்டி’ என்றொரு யாகம் நடத்தினர்.
அப்போது யாக
குண்டத்திலிருந்து மூன்று தனங்களுடைய ஒரு பெண் குழந்தையாக உமாதேவியார்
தோன்றினாள்.
குழந்தையின் உருவத்தைக் கண்டு அரசனும் அரசியும் கலங்கிப் போக, இக்குழந்தை தனக்கேற்ற கணவரைக் காணும்போது ஒரு தனம் மறைந்து போகும் என்ற பெருமானின் அசரீரி வாக்கு கேட்டது.
தடாதகை எனப் பெயரிட்டு வளர்ந்த
குழந்தை பாண்டிய நாட்டு அரசியாக முடிசூட்டி உலகையே தன் ஆட்சியின் கீழ்
கொண்டு வந்தது,.
இந்திரலோகத்தையும் கைப்பற்றி,நால்வகைபடைகளுடன்
திருக்கயிலையம்மபதி அடைந்தார்.
அங்கே தடாதகைப் பிராட்டி கண்ணில் சிவபெருமான் பட்டதும் மூன்று தனங்களில்
ஒன்று மறைந்ததாக புராணம் பேசுகிறது.
மீனை ஒத்த கண்களைக் கொண்ட இந்த தடாதகைப் பிராட்டியே நம் மதுரை மீனாட்சியம்மை ஆனார்.
இன்றும் இந்த மூன்று
தனங்களுடனான தடாதகைப் பிராட்டியின் சிலை மதுரை மீனாட்சி கோயில் எதிரே
புதுமண்டபத்திற்குள் இருக்கிறது.

1 year ago | [YT] | 12

Kailasapathi (கைலாசபதி)

மனோன்மணி அம்பாள் (போக சக்தி)

1 year ago | [YT] | 12

Kailasapathi (கைலாசபதி)

இலங்கை நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்!
மார்கழி ௧.[16 -12 -2021]

"மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’' என்று மாணிக்கவாசகர்

1 year ago | [YT] | 11

Kailasapathi (கைலாசபதி)

கயிலாய மலை

1 year ago | [YT] | 13

Kailasapathi (கைலாசபதி)

*சிவ வடிவம்-27*. *கங்காளமுர்த்தி*

ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப் பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி.

அதன் பலனாக அந்த எலிக்கு மூன்று லோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான்.

அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி என்ற மன்னனாக அசுர குலத்தில் பிறந்தான்.

மகாபலி அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும் யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான்.

மகாபலியின் தவப் பயனால் அசுர குலத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது.

இதனைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர்.

போரில் அசுர குலம் வெற்றி பெறவே தேவர்கள் பயந்து திருமாலிடம் முறையிட்டனர்.

அந்த நேரம் திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்டாள்.

அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்துப் பிறந்தார் திருமால்.

மகாபலி மிகப்பெரிய யாகம் ஒன்றை செய்தான்.

யாகத்தின் போது செய்யப்படும் தானத்தின் போது வாமன அவதாரத்தில் இருந்த திருமால் யாகம் நடைபெறும் இடத்திற்கு சென்று மூன்றடி மண் கேட்டார்.

இதனைக் கண்ட அசுர குலத்தின் குருவான சுக்ராச்சாரியார் மகாபலியிடம் சென்று வந்திருப்பது திருமால் எனவே தானம் தர ஒப்புக் கொள்ள வேண்டாம் என தடுத்தார்.

இறைவனுக்காக செய்யப்படும் மிகப்பெரிய யாகத்தின் போது யார் என்ன தானம் கேட்டாலும் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன்.

அரசனான நான் வாக்கு
தவற மாட்டேன் என்று சுக்ராச்சாரியார் சொல்லை கேட்காமல் மூன்றடி மண் தானமாக தர ஒப்புக் கொண்டார் மகாபலி.

திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து ஓரடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் மேலோகத்தையும் அளந்தார்.

மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று திருமால் கூற மகாபலி தன் தலை மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான்.

அதன்படி மகாபலியின் தலை மீது வாமனன் தன் திருவடியை வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான்.

தான் திருமாலின் அவதாரம் என்ற எண்ணம் திருமாலுக்கு மறைந்து வாமனனாகிய தான்
சிறு வயதிலேயே அசுரனை அழித்து விட்டேன் என்று வாமனனுக்கு கர்வம் வந்தது.

சிவபெருமான் வாமனரை அமைதி கொள்ள வேண்டினார்.

ஆனால் கர்வம் அடங்காத வாமனனின் கர்வத்தை
அடக்க சிவபெருமான் தன் திருக்கையில் உள்ள வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார்.

வாமனன் நிலம் வீழ்ந்தார்.

வாமன அவதாரத்தில் இருந்த உடம்பின் தோலை உறித்து மேல் ஆடையாக்கி முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார்.

கர்வம் அடங்கியதும் தான் அவதாரம் என்பதை உணர்ந்த திருமால் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வைகுண்டம் சென்றார்.

கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள்.

சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும்.

கங்காளமூர்த்தி சீர்காழியில் கோயிலில் சட்டைநாதர் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலை நாயகியாகும்.

கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும்.

*திருநெல்வேலி* *நெல்லையப்பர் கோவிலில்* *உள்ள கங்காளநாதர் சிறப்பு*

அடல்மேவு கடைநாளில்
அழிவுற்ற நெடுமால்

சடம் நால விடுதண்டு தளிர்ஒண்கை மிசைகொண்டு

இடர்தீர அடியேனை இனிதுஆள அருளினன்

கடல்போல் வருகின்ற கங்காள சரணம்.

- வேணுவன புராணம்.

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் உள்ள கங்காளநாதர் தனது கைகளில் ஏந்தியிருக்கும் தண்டில் மகாவிஷ்ணு தலைகீழாக தொங்கியபடி காட்சியளிப்பார்.

இந்த கங்காளநாதர் வேறு எங்குமே காணமுடியாத சிறப்பான வடிவமாகும்.
(படம் கீழே!👇🏻👇🏻)

இத்தகு சிறப்பு பெற்ற மூர்த்தியாக விளங்கும் திருநெல்வேலி கங்காளநாதர் வருடத்தில் ஒருநாள் ஆனிப்பெருந்திருவிழாவின் எட்டாம் நாளில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.

1 year ago | [YT] | 6

Kailasapathi (கைலாசபதி)

#காணக் #கிடைக்காத #அதிசயம்
#அண்ணாமலை

#கார்த்திகை மாதம் #தீபத் #திருவிழா பத்தாம் திருநாள் #பரணி தீபம் கொண்டு ஏற்றப்படும் #மகா_தீபம் ஆனது தொடர்ந்து பதினொரு நாட்கள் ஏற்றப்படும்... நேற்று நிறைவு நாள்(பதினொன்றாம் நாள்) தீபம் ஏற்றப்பட்டு இரவில் அண்ணாமலையின் மேல் மேகக்கூட்டங்கள் #அண்ணாமலை🔥 ரூபத்திலும், #சந்திரனை_அணிந்த (#அருணாச்சலேஸ்வரர்❤) #சிவலிங்க_திருவுருவாகவும் காட்சியளித்தது...

#அண்ணாமலை_வெண்பா-100

பெற்றம் தனில்தோன்றிப் பெய்வளையும் தானும்என்தன்
குற்றம் களைந்துஅருளிக் கொண்டமலை - நித்தம்
புதியமலை கங்கைஅணி பொற்சடைமேல் வைத்த
மதியமலை அண்ணாமலை🔥

#அண்ணாமலை🔥
#அருணாச்சலம்

#கைலாசபதி

1 year ago | [YT] | 3