VEDAI360 Vedaranyam

💞SeethaMathavan💞
🎻 TN.51🎻
WhatsApp group link
chat.whatsapp.com/JACJEZfGTjoJWjZqi6tigm
Kuravappulam
💞M.S
Seethamathavan6117@gami.com
Facebook
#Seethamathavan
TikTok
@Seethamathavan7

வேதாரண்யம் எங்கள் சொர்க்கம்

கிராமத்துக்காரன் TN.51


VEDAI360 Vedaranyam

கடன் தீர்க்கும் கால பைரவர்..!!

நாட்டை ஆட்சி நடத்திய மன்னர்கள் கோயில், குளம் அமைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரை பக்தர்களின் பெருமையை போற்றும் வகையில் உள்ளது.

கர்நாடகாவில் புராண காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக சோமேஷ்வரன் கோயில், காடு மல்லேஷ்வரசுவாமி கோயில், தொட்ட கணபதி கோயில், கவிகங்காதேஷ்வரசுவாமி கோயில் என்பது உள்பட பல கோயில்கள் உள்ளது.

அந்த வரிசையில் பெலகாவி மாவட்டம், ஹுக்கேரியில் கடந்த 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலபைரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

சைவத் திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆன்மீகத் திருத்தலங்கள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ள திருத்தலங்கள் மட்டுமே ஜாதி, மத,. பேதமில்லாமல் அனைவரும் வந்து செல்லும் புண்ணிய ஸ்தலமாக உள்ளது.

அந்தப் பட்டியலில் பெல்காம் மாவட்டம் ஹுக்கேரியிலுள்ள காலபைரேஷ்வரர் கோயிலாக உள்ளது.

இந்து இஸ்லாமிய, ஜெயினர் என்று அனைத்து மதத்தினரும் கால பைரவரை தரிசித்து பலனடைந்து வருகிறார்கள்.

இவரை கடன் தீர்க்கும் கால பைரவர் என்று மக்கள் பெருமையுடன் அழைக்கிறார்கள்.

ஹுக்கேரியிலுள்ள ஹீரே மட்டம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்கும் ஆன்மீகத் திருத்தலமாக 10 நூற்றாண்டுகளாக பிரசித்தி பெற்றுள்ளது.

வரலாறு :

பெல்காம் மாவட்டம் ஹுக்கேரிக்கு தனி வரலாறு உள்ளது. பழங்காலத்தில் ஹுக்கேரியில் 36 ஏரிகள் இருந்து கண்ணோக்கி பார்க்கும் இடமெல்லாம் நீர் நிலைகளும் பூந்தோட்டங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

இந்தக் கிராமத்தில் பூந்தோட்டங்கள் அதிகம் காணப்பட்டதால் ஹுவினக்கேரி(பூந்தோட்ட கிராமம் ) என்று அழைத்தனர்.

நாளடைவில் அது ஹுக்கேரியாக தற்போது ஹுக்கேரி என்றாகியுள்ளது. ஜெகத்குரு, ரேணுகாச்சார்யா இப்பகுதியில் ஆன்மீக யாத்திரை சென்றபோது அவரால் தீட்சை பெற்ற குருஷாந்த கேசவ சுவாமி பக்தர்களின் ஆதரவுடன் ஹுக்கேரியில் தங்கினார்.

அப்பொழுது மக்கள் மிகவும் கடன் மற்றும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது நிலையைப் பார்த்த குருசாந்தேஷ்வர சாமிகள் இரவு படுக்கும்போதே மனமுருகி சிவபெருமானிடம் இந்த மக்களின் கஷ்டத்தை போக்கும்படி வணங்கினார்.

அவரின் வேண்டுதலைக் கேட்ட ஈஸ்வரன் நீ தங்கியுள்ள இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வணங்கினால் என்னைத் தேடி வரும் பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கி சுகவாழ்வு தருவார் என்று அருளினார்.

அதைதொடர்ந்து கிராம மக்களின் உதவியுடன் காலபைரவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இந்தக் கால பைரவனிடம் பக்தர்கள் கடன், குடும்பக் கஷ்டம், தொழில் விருத்தி, திருமணத்தடை, குடும்ப பிரச்சனை, குழந்தையின்மை உள்பட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கல்யாணப் பூசணியை இரண்டாகப் பிளந்து அதில் எண்ணெய் விளக்கு ஏற்றி பக்தியுடன் வேண்டிக்கொண்டால் அவர்கள் கஷ்டமெல்லாம் தீரும். இங்கு நிலைகொண்டுள்ள காலபைபைரவரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி வாரந்தோறும் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் பூஜை செய்தால் அவர் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும்.

நாட்டின் வட மாநிலத்திலுள்ள காசியில் கால பைரவர் அன்னப்பூரணி சன்னதி ஒரே இடத்திலிருந்து பக்தர்களை அருள்பாலிப்பதுபோல் ஹுக்கேரியிலுள்ள காலபைரேஷ்வரர் அன்னப்பூரணி சமேத அருள்பாலிக்கிறார்.

குறிப்பாக கடனில் உள்ளவர்கள் கால பைரவரை வேண்டினால் கடனெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கையுள்ளதால் மக்கள் கடன் தீர்க்கும் கால பைரவர் என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.

நவராத்ரி விசேஷம்: நவராத்ரி பண்டிகையை நாட்டில் ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு பெயரில் அவரவர் பண்பாடு கலாச்சாரத்தின்படி கொண்டாடுகிறார்கள்.

அதன்படி ஹுக்கேரி காலபைரேஷ்வவரரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக தருமம் தேசப்பற்றை எடுத்துக்கூறும் வகையில் இளைஞர் தசரா, வேளாண்தசரா,
விவசாய தசரா, ஒற்றுமை தசரா, ஆத்ம பரிபூரண தசரா, கிராமின தசரா, நாட்டுப்புறக்கலை தசரா, இலக்கிய தசரா என்ற பெயரில் 10 நாட்கள் விமர்சையாக நடத்துகிறார்கள்.

ஒவ்வொருநாள் தசரா விழாவின் போதும் அந்த நாளுக்குரிய துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து அவர்கள் மூலம் சொற்பொழிவு ,கலாச்சார விழா நடத்தி அத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்கள்.

இத்திருத்தலம் பெங்களூரில் இருந்து சுமார் 550 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பஸ் மூலம் பெலகாவி நகரம் சென்று அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.

ஓம் நம சிவாய.......

1 year ago | [YT] | 15

VEDAI360 Vedaranyam

காஞ்சீபுரத்தின் காமாட்சி அம்மன் அறிய தகவல்கள் பற்றி அறிவோம்..!!

எத்தலத்துமில்லா காமாட்சி

காஞ்சீபுரத்தின் காமாட்சி அம்மன், தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள்.

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய நவசித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும்.

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல.

ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

1 year ago | [YT] | 55

VEDAI360 Vedaranyam

#Sri_Varahi_Amman🔥🙏🙏🙏🔥

1 year ago | [YT] | 60

VEDAI360 Vedaranyam

குற்றாலம் மலை மீதுள்ள அகத்தியர் பாதம் தீபம் தரிசனம்

அகத்தியர் பெருமானின் பூரண ஆசீர்வாதங்கள் உங்களுக்கு இன்று கிடைக்கட்டும்.

1 year ago | [YT] | 15

VEDAI360 Vedaranyam

#ஆயக்காரன்புலம் | அ/மி சுயம்பு ஶ்ரீ கலிதீர்த்த ஐயனார் ஆலய தங்க குதிரை திருவிழா🙏🎆🎆💥

#வேதாரண்யம் | #நாகை | #திருவிழா

2 years ago | [YT] | 37

VEDAI360 Vedaranyam

ராமேசுவரம் கோவில் உருவான கதை..!!

ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார்.

மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.

அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார்.

அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை.

இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது.

அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.

அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார்.

வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார்.

ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது.

இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.

சிவன் தாமதமாக தரிசனம் தந்தார்.

ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.

ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார்.

அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார்.

ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது.

அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார்.

ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.

ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார்.

ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார்.

அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார்.

ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.

ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார்.

அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும்.

நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும்.

அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார்.

ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

ஓம் நம சிவாய.......

2 years ago | [YT] | 48

VEDAI360 Vedaranyam

#மக்கள் வெள்ளத்தில் மகேஸ்வரன் #திருமறைக்காடர் திருத்தேர் பவனி..!
🕉️🙏🙏🙏🕉️

2 years ago | [YT] | 108

VEDAI360 Vedaranyam

ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா...

எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான்..

சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார்

சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்.

பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்.

அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார்.

அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை.

அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார்.

அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.

அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார்.

சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான்.

அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார்.

முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார்.

அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள்.

அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான்.

இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள்.

மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.

தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது,

அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார்.

மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

அன்பே கடவுள்....

படித்ததில் பிடித்தது...

2 years ago | [YT] | 272

VEDAI360 Vedaranyam

தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻

DATE: 09/02/2023 - வியாழக்கிழமை காலை பூஜை அலங்காரம் 🔯🦚⚜️

நினைத்தது நடக்கும், கேட்டதும் கிடைக்கும்
வாழ்க்கை இனிக்கும், ஆறுபடை அழகன் முருகன் அவனே நம் சொந்தம், கவலைகள் தீரும் காலங்கள் மாறும் வெற்றி வந்து சேரும் இனி நல்ல காலம்!

சிந்தனையில் கந்தனை வை கந்தனையே வந்தனை செய் கந்தனன்றி சொந்தமில்லை பந்தமுமில்லை! அவன் கஞ்ச மலர்ப் பாதமன்றி தஞ்சமுமில்லை!

கவலைகளை விட்டு விடு கந்தனடி பற்றி விடு ஆறெழுத்து மந்திரத்தை நாளும் சொல்லிடு! அந்த ஆறுமுகன் துணையிருப்பான் நீயும் நம்பிடு!

தண்ணீர்மலை அப்பன் துனை 🔯🦚⚜️

முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! 🔯🦚⚜️

♥️♥️♥️ ஓம் சரவண பவ ஓம் ♥️♥️♥️

2 years ago | [YT] | 161