மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu


We are proud to revive our tradition, culture from the past centuries with respect to nature.


மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

கோழிக்கோடு ஓடு : கோழி அரண்மனை
=====================================

70 வயதைக் கடந்த கிராமத்து வாழ் வேளாண் முதியோரின் அரண்மனை இது.

#கள்ளிக்கோட்டை ஓடு என்கிற கோழிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணால் கையில் செய்யப்பட்ட இந்த #கேரள ஓடுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனை தான் இது. இந்த அரண்மனை கோழிகளுக்கானது.

தரையில் கோழிகள் அடைந்தால் பாம்பு வரும் என்பார்கள். ஆனால் முக்கால் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மக்கள் இம்முறையில் தான் கோழி வளர்த்து வருகின்றனர்.

இம்மக்கள் வாழ்கின்ற அனைத்திற்கும் அரணான மனையைப் போன்றே கோழிகளுக்கும் #கோழிக்கோடு ஓட்டைக் கொண்டே கூண்டை உருவாக்கியுள்ளனர். தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே அனைத்து உயிர்களையும் கருதி வாழ்ந்து வருகின்றனர் என்பதை காணமுடிகிறது.

இதுபோலவே பழைய பரிக்கூடையிலும், பழைய மொடா (பெரிய மண் பானை)-ஐ மண்ணில் பாதியளவு பதித்தும் நாட்டுக்கோழி வளர்த்தினர். இன்றும் சில இடங்களில் இது தொடர்கிறது. அடுத்தடுத்த காலங்களிலும் தொடரவேண்டுமென்பது விரும்புகிறோம்.

70 வயதைக் கடந்த
அதுவும் பவானி ஆற்றுநீரை முறைப்போட்டு முறையாகப் பகிர்ந்து கொள்கிறது கீழ்பவானி வாய்க்கால். இதன் கரையோரங்களில் உள்ள மண்வாய்க்காலின் அடிவாரத்தில் #கோழிக்கோடு கோழிக்கூடு இருக்கிறது.

நம் நிகழ் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தும் நிதர்சனமாக காணும்போது நெழ்கிறோம்.

#கோழிக்கூடு #கோழிக்கோடு_ஓடு #கள்ளிக்கோட்டை #கேரளா_ஓடு #கோழிக்கூண்டு

2 days ago | [YT] | 6

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

ஊணாங்கொடி ஊஞ்சல் : #தூரி

அந்தக் காலத்தில் ஆடி நோம்பிக்கு தூரி ஆடுவதற்கு சன்னமான நீள ஊணாங்கொடிகளை இரண்டு மூன்றை ஒன்றாக முறுக்கி கயிறு போல் திரித்து அதை மரத்தில் கட்டித் தூரி (ஊஞ்சல்) ஆடுவார்களாம்‌. அவ்வளவு வலிமையானவை இந்த ஊணாங்கொடிகள் என்கின்றனர்.

இதுபோன்ற சிறு கொடிகளைக் கொண்டு கூடைகளும், கொடாப்பும் செய்யப்படுகிறது. மூங்கிலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

1 week ago | [YT] | 5

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

சமகால தமிழ்நாட்டின் அரசியல் மையம் கோபிச்செட்டிப்பாளையம்


அரை நூற்றாண்டு அனுபவம் கைமாறியது

3 weeks ago | [YT] | 2

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

செம்மண் சேறு பிணைந்து
கருங்கற்களை அடுக்கி
ஒரு முழ அகலத்தில்
கட்டமைக்கப்பட்ட
அரை நூற்றாண்டு காலச்சுவர்
வெளிப்புறமாக காரைகொண்டு
பூசப்பட்டு மிகவலுவுடன்
இந்நாள் வரையிலும்
எவ்வித வெடிப்பும்
இல்லாமல் நின்ற சுவரை
இடித்து அகற்ற முற்படுகிறோம் - நாம்
எவ்வளவு முயன்றாலும்
இவ்வளவு வலிமையான
உறுதியான சுவரை
ஒருபோதும் கட்டிட முடியாது
என்பதே எவரும் மறுக்கொணரா உண்மை.

1 month ago | [YT] | 6

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

1986 ஆம் ஆண்டு இலட்சுமண ஐயர் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்ட சங்கம்

1 month ago | [YT] | 0

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

1986 ஆம் ஆண்டு இலட்சுமண ஐயர் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்ட சங்கம்

1 month ago | [YT] | 2

மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

1920 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப்போதே உள்ளூர் நிதி மூலம் மருத்துவமனைக்கான அடிக்கல்லை மாண்புமிகு இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 25-08-1920 இல் நாட்டியுள்ளர்.

105 ஆண்டுகளைக் கடந்து மருத்துவச்சேவையில் கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனை பங்காற்றிக்கொண்டிருக்கிறது.

காந்தியின் அகிம்சை மீதும் காந்தியின் மீதும் பற்றுக்கொண்ட ராஜாஜி அவர்கள் காந்தியை பின்பற்றினார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

1920இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய வழக்குரைஞர் பணியில் செயல்படால் புறக்கணித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் தான் கோபிச்செட்டிப்பாளையம் பொது மருத்துவமனைக்கான அடிக்கல்லை காட்டியுள்ளார்.

2 months ago | [YT] | 0